தமிழக சட்டபேரவை தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்ததையடுத்து பல அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் சையத் இப்ரஹிம்(தி.மு.க). நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அ.தி.மு.க வுக்கு அதிகளவு ஓட்டுகள் கிடைத்துள்ளன.
இவர் தேர்தல் தோல்விக்கு தார்மீக தேர்வுக்கு பொறுப்பேற்று தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி உதவி ஆணையரிடம் கொடுக்க வந்தார்.
ஆனால் அவர் ராஜினாமா கடிதம் பெற மறுக்கவே ஆணையரிடம் சென்றார். ஆனால் ஆணயரும் ராஜினாமா கடிதத்தை பெற மறுத்துவிட்டார்.
முறைப்படி மேயரிடம் தான் ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை மேயரிடம் கொடுப்பதற்காக கவுன்சிலர் அலைந்து திரிகிறார்.
மேலும் மதுரை மாவட்ட குற்றவியல் மற்றும் பொது அரசு வக்கீல்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டர், மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் உள்துறை செயலருக்கு அனுப்பி வைத்தனர்.
home



Home
கருத்துரையிடுக