
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மட்டும் காணிகளை திடீரென மீள்பதிவு செய்யும் நடவடிக்கையானது இனவாத செயற்பாடாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளனர். சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நிறைவடையாத நிலையில் உள்ள மீள்குடியேற்றம், திடீரென மேற்கொள்ளப்படும் காணிப்பதிவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உருவாக்க முயற்சி போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்துள்ளதாகவும் இப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக மாத்தாய் கூறியதாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது
கருத்துரையிடுக