News Update :

யாழ். மாநகரசபையின் ஆளும் தரப்பில் பிளவு!- ஊழல்களுக்கு ஈ.பி.டி.பியினரே காரணம் என குற்றஞ்சாட்டினர்

Penulis : Antony on செவ்வாய், 5 ஏப்ரல், 2011 | 2:46 AM

செவ்வாய், 5 ஏப்ரல், 2011


யாழ்.மாநகர சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினுள் பிளவு ஏற்பட்டுள்ளது. சபையில் இடம்பெறும் ஊழல்களுக்கு ஈ.பி.டி.பியினரே காரணம் என்று குற்றஞ்சாட்டும் அதன் பங்காளிக் கட்சியினரான சுதந்திரக் கட்சியினர் தாம் இனிமேல் தனித்துச் செயற்படப் போவதாக அறிவித்துள்ளனர்.இன்று நடைபெற இருக்கும் சபைக் கூட்டத்தில் இது தொடர்பில் அறிவிக்கப்பட உள்ளது.

யாழ். மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றிய போது அதில் ஈ.பி.டி.பி., முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன முக்கிய பங்காளிகளாக இருந்தன.

சுதந்திரக் கட்சி சார்பில் 4 உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்களும் சபையில் அங்கம் வகிக்கின்றனர். ஈபிடிபியினர் சார்பில் 6 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

முதல்வரும் அவர் சார்ந்த கட்சியினரும் அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால் மாநகர சபைக்கு வருமானமாகக் கிடைக்க வேண்டிய கோடிக்கணக்கான பணம் கைவிட்டுப் போனது என்று அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து ஆளும் முன்னணிக்குள் கருத்து முரண்பாடுகள் வலுத்து அது இரு பிரிவுகளாக உடைந்துள்ளது.

முன்னணியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியினர் இனிமேல் தனித்துச் செயல்பட முடிவெடுத்துள்ளதாகவும், சபையில் ஊழல்கள் மலிந்துள்ளதால் இந்த முடிவை எடுப்பதற்கு தாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் எ சுதந்திரக் கட்சியின் மாநகர சபை உறுப்பினரான நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.

ஈபிடிபியினர் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியதால் அக்கட்சியினர் செய்யும் ஊழல்கள் அனைத்துக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்தே கெட்ட பெயர் கேட்க வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலைப்பட்டார்.

இதனால் இன்றைய கூட்டம் கடும் காரசாரங்களுக்கு மத்தியிலேயே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவை ஏற்பட்டால் முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றவும் தயங்கப்போவதில்லை என்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ். நகரின் மத்தியில் மாநகர சபை இடத்தில் 5 மாடிகள் கொண்ட வர்த்தக சந்தை ஒன்றை அமைப்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்று கூறப்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் இன்றைய கூட்டத்தில் சர்ச்சையைக் கிளப்பும் என்றும் தெரிகிறது
கருத்துகள் | | Read More...

ராஜபக்சவுடன் காங்., வேட்பாளர் போஸ்டர் ஒட்டப்பட்ட கார் பறிமுதல்


இலங்கை அதிபர் ராஜபக்சவுடன், ராமநாதபுரம் காங்., வேட்பாளர் ஹசன் அலி இருப்பது போன்று, போஸ்டர் ஒட்டப்பட்ட காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் டொமினிக் ரவி, இளங்கோ மற்றும் ஜெரோன்குமார் ஆகியோர், நேற்று ராமேஸ்வரம் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் ஜவஹிருல்லாவை ஆதரித்து, பாம்பன் பகுதியில் பிரசாரம் செய்தனர்.

இவர்கள் சென்ற காரில், காங்., வேட்பாளர் ஹசன் அலி இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் இருந்து கேடயம் வாங்குவது போன்ற படத்துடன், "கொலைகார கை சின்னத்திற்கு வாக்களிக்காதீர்" என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வேட்பாளர் ஹசன் அலி, தன்னை பற்றி நாம் தமிழர் கட்சியினர் அவதூறு பிரசாரம் செய்வதாக போலீசில் புகார் செய்தார்.

பிரசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட இண்டிகா காரை, பாம்பன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் | | Read More...

டிவி குட்டி போடுமா? ஆடு குட்டிபோடுமா?: சிங்கமுத்து


கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டா ண்ட், அரவக்குறிச்சி தொகுதியில் விஸ்வநாதபுரி, தண்ணீர்பந்தல், பவுத்திரம், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா ஆகிய இடங்களில் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கமுத்து பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசியதாவது: தமிழகத்தில் மின்வெட்டு, விலைவாசி உயர்வு ஆகியவையே தி.மு.க., ஆட்சியை அகற்ற போதுமான ஆதாரம். தி.மு.க., அறிக்கையில் மிக்ஸி அல்லது கிரைண்டர் தருவதாக அறிவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் என்ன செய்வது?

விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. இருக்கிற நிலத்திலும் விவசாயம் செய்ய தண்ணீர் கொ டுக்கவில்லை.

நல்ல விளைச்சல் வந்துவிட்டால், நிலத்தை யாரும் விற்கமாட்டார்கள். தண்ணீர் இல்லாமல் வறண்டுபோனால், கிடைத்த விலைக்கு நில த்தை வாங்கலாம்.

வெளிநாட்டு கம்பெனிகளுக்கு அதிக லாபத்துக்கு விற்கலாம் என்று செயல்படுகின்றனர்.

"டிவி' கொடுத்தோம் என்று சொல்லுகிறார்கள். அதனால் என்ன நன்மை? ஜெயலலிதா, ஆடு தருவதாக அறிவித்துள்ளார். "டிவி ' குட்டி போடு மா? ஆடு குட்டிபோடுமா? அறிவுபூர்வமாக உணர்ந்து ஓட்டு போட வேண்டும்.

தி.மு.க., எம்.பி.,க்கள் தற்போது கூட்டணிக்காக ராஜினமா செய்வதாக அறிவித்தார்களே. இலங்கையில் தமிழ் பெண்களை கொடுமைப்படுத்தியதை தடுக்க ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கருத்துகள் (1) | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger