News Update :

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்தியா மத்திய அரசு அறிவிப்பு

Penulis : ۞உழவன்۞ on புதன், 6 ஜூலை, 2011 | 3:14 AM

புதன், 6 ஜூலை, 2011


சென்னை சூளைமேடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்து, இந்திய நீதிமன்றங்களில் முன் நிறுத்துவது இயலாது என இந்திய மத்திய அரசின் சார்பாக நேற்று வாதிடப்பட்டுள்ளது.கடந்த 1986 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்த வழக்கில் அமைச்சர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் திருநாவுக்கரசு என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை மேலதிக நீதிமன்றத்தில் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது.

இவ் வழக்கு விசாரணைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவைக் கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வரவேண்டும் எனக்கோரும் பொது நலமனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அவர் ஒரு நாட்டின் அமைச்சர் என்ற முறையில் இராஜதந்திர ரீதியான சட்டபாதுகாப்பு இருப்பதாக அரசு தலைமை வழக்கஞர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

பொது நல மனு தாக்கல் செய்திருக்கும் தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் இரு நாடுகளுக்கிடையே குற்றவாளிகளை நாடு கடத்தும் ஒப்பந்தம் (எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீட்டி) ஒன்று அமுலில் இருந்தும், 1994 ஆம் ஆண்டிலேயே தேடப்படும் குற்றவாளி என டக்ளஸ் தேவானந்தா அறிவிக்கப்பட்டும் அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்படவில்லை.

அவர் பின்னர் அமைச்சரான பிறகு, இந்தியா வந்து போயிருக்கிறார். இந்திய பிரதமரை சந்தித்தும் இருக்கிறார். இந்திய அரசு சட்டத்தை அமுல்படுத்த அக்கறை காண்பிக்கவில்லை என்று குறை கூறினார்.

எக்ஸ்ட்ராடிஷன் ட்ரீடி என்பது தேடப்படுவோரை ஒரு நாட்டிலிருந்து இன்னொருநாட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்த ஒப்பந்தமாகும். ஆனால் அது குறித்த இந்திய இலங்கை ஒப்பந்தம், தேவானந்தாவைக் கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர் அந்நாட்டு அமைச்சர் என்கிறார் மத்திய அரசு வழக்கறிஞர்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின், மேல் விசாரணை வேறு ஒரு டிவிஷன் பெஞ்சிற்கு மாற்றப்படுவதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

புலித்தேவன் அவர்கள் உடம்பில் வெள்ளை நிற உள் அங்கியுடன் இருக்கிற புகைப்படத்தை

Penulis : ۞உழவன்۞ on சனி, 2 ஜூலை, 2011 | 6:48 AM

சனி, 2 ஜூலை, 2011


தமிழீழ விடுதலை புலிகளை முள்ளி வாய்க்கால் பகுதியில் வைத்து இறுதிமுற்றுகைக்குள் சிக்கவைத்து அவர்களை முற்றாக அழிக்கும் நிலையில்நின்ற போது புலித்தேவன் நடசேன் ரமேஸ் போன்றவர்கள் வெள்ளை கொடிதாங்கியபடி எழுநூறுக்கு மேற்பட்ட போராளிகளுடன் இலங்கை இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர் .

அப்போது ஐநா இந்தியா இலங்கை என மூன்று வட்டராங்கள் வாயிலாக வழங்கபட்ட உறுதி மொழியின் அடிப்படையிலேயே புலிகளின் இந்த தளபதிகள்சரண் அடைந்தனர். ஆனால் அவர்களினால வழங்கப்பட்ட உறுதி மொழிகள் மீறப்பட்டு நய வஞ்சமாககோர சித்திரவதை செய்ய பட்டு கொலை செய்ய பட்டனர் .அன்று நடந்த இந்த தமிழர் வரலாற்றில் துயர் தோய்ந்த நிகழ்வுகள்.

தமிழர்கள் மனதில் பெரும் வலியினை உருவாக்கியுள்ள நிலையில்தற்போது இவை தொடர்பான முக்கிய சான்றுகள் ,ஆவணக்ம சிக்கியுள்ளன .இவை ஐநாவில் பெரும் சர்ச்சையினை உருவாக்குவதுடன் இலங்கையைசர்வதேச விசாரணைக்கு வர வேண்டிய நிர்பந்தம் உருவாகும் நிலை ஏற்படுவதுடன்இந்தியா பாரிய சங்கடத்தில் சிக்க வேண்டிய சூழல் உருவாக்குவதுடன் தாமும் புலிகளை தமிழர்களை அழிக்கும் பணியில் பங்கேற்றோம் என்பதனை ஏற்று கொள்ளும் நிலை உருவாகுவதுடன் ஐநாவும் தாம் விட்ட தவறிற்காக மன்னிப்பு கோரவேண்டிய நிலை உருவாகலாம் என எதிர்பார்க்க படுகின்றது .

முக்கிய நிறுவனம் ஒன்றில் இந்த ஆவணம்கள் கைமாற பட்டுள்ளன .எதிர் வரும் காலம்களில் இவை பெரும் பரபரப்பினை உருவாக்கும் என எதிர்பார்க்க படுகின்றது.. இதில் இரண்டு விதமான சான்றுகள் பரிமாற்ற பட்டுள்ளன. இறந்தகாலம். நிகழ்காலம் இதற்குள் அடக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..!

இலங்கை அரசனல் வெளியிட பட்ட புகைப்படம் இதில் புலித்தேவன் அவர்கள் உடம்பில் வெள்ளை நிற உள் அங்கியுடன் இருக்கிற புகைப்படத்தை வெளியிட்டது. அதன் பின்னர் உடம்பில் எந்த துணியும் இல்லாமல் உடம்பின் மேல் பெட்ரோல் ஊத்தி தீ மூட்டி சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளது ஆதாரமாகிறது.
கருத்துகள் | | Read More...

சனல்-4 ஆதாரத்தை முறியடிக்க சிறிலங்கா வெளியிட்டுள்ள போலியான காணொலிப் பதிவு


சிறிலங்காப் படையினரால் தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்படும் காட்சியை உள்ளடக்கிய சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொலியின் மூலப்பிரதி என்று கூறி சிறலங்கா பாதுகாப்பு அமைச்சு காணொலிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் நேற்றிரவு சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் இந்தக் காணொலிப் பதிவு ஒளிபரப்பப்பட்டது.

இந்தக் காணொலி சீருடை அணிந்தவர்கள் தமிழில் உரையாடிக் கொண்டு ஆண்களையும் பெண்களையும் சுட்டுக்கொல்வது போன்ற காட்சியை உள்ளடக்கியுள்ளது.

சனல் 4 வெளியிட்ட உண்மையான காணொலிப் பதிவில் சீருடை அணிந்த சிறிலங்காப் படையினர் சிங்களத்தில் உரையாடிக் கொண்டே ஆண்களையும் பெண்களையும் சுட்டுக்கொல்வது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுரவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, இதுவே மூலப்பிரதி என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இதனை பிரித்தானியாவில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் போலியானது என்று கூறிவரும் சிறிலங்கா அரசாங்கம் இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்துள்ளது.

சனல்4 ஆவணப்படம் அனைத்துக ரீதியாக சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே போலியானதொரு காணொலிப் பதிவை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்த முனைவதாக கருதப்படுகிறது.

நேற்றிரவு சுவர்ணவாகினி தொலைக்காட்சிக்கு இந்தக் காணொலியை வழங்கியுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அரச ஊடகங்களிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ இதுவரை அந்தக் காணொலியை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசாங்கம் சனல் 4 காணொலிப் பதிவு போலியானது திருத்தம் செய்யப்பட்டது என்று கூறினாலும், அது உண்மையானதே என்று அனைத்துலக வல்லுனர்கள் உறுதி செய்திருப்பதாக சனல் 4 தொலைக்காட்சியும் ஐ.நாவின் உயரதிகாரிகளும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger