
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போலியான குறுந்தகடை வெளியிட்டுள்ளது என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் 1 மணி நேரம் மட்டும் தான் மின்வெட்டு இருந்தது.
ஆனால் இப்போது பல மணி நேரம் மின்வெட்டு உள்ளது. அப்போது மின்வெட்டு குறித்து கேள்வி எழுப்பியவர்கள் இப்போது எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ளனர்.
எனினும் மின்வெட்டு குறித்து வாய்திறக்காமல் உள்ளனர் என்றார். மேலும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு போலியான குறுந்தகடு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டு வரஉள்ளது. அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு இலங்கை அரசு பொய் பிரசாரம் செய்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக