News Update :
Home » » நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த மூவர் பொலி­ஸாரால் கைது!

நான்கு சிறு­மி­களை துஷ்­பி­ர­யோகம் செய்த மூவர் பொலி­ஸாரால் கைது!

Penulis : ۞உழவன்۞ on சனி, 27 ஜூலை, 2013 | AM 12:48

யாழ். குடா­நாட்டில் மூன்று வெவ்­வேறு பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மி­களைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்த மூவரைப் பொலிஸார் கைது செய்து நீதி­மன்றில் ஆஜர் படுத்­தி­யுள்­ளனர் என காங்­கே­சன்­துறை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஈ.எம்.எம். ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார்.

 யாழ். பொலிஸ் நிலை­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
இது விடயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்,
யாழ்ப்­பா­ணத்தில் மூன்று பிர­தே­சங்­களில் நான்கு சிறு­மிகள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு ஆளா­கி­யுள்­ளனர் கோப்பாய், உரும்­பிராய் கிழக்குப் பகு­தியில் கடந்த 18 ஆம் திகதி 15 வயதுச் சிறு­மியைப் பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக அதே இடத்தைச் சேர்ந்த 25 வய­து­டைய நப­ரொ­ருவர் மீது கோப்பாய் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த சந்­தேக நபரை பொலிஸார் கைது செயது யாழ். நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

யாழ். நீதிவான் சந்­தேக நபரை எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிவரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்­டுள்ளார்.
இதே­வேளை, அச்­சு­வேலிப் பகு­தியில் 8 வய­து­டைய சிறு­மி­யொ­ரு­வரை 19 வய­து­ இளைஞன் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்தார். எனும் குற்­றச்­சாட்டின் அடிப்­ப­டையில் குறித்த சந்­தேக நபரை அச்­சு­வேலி பொலிஸார் கைது செய்து சாவ­கச்­சேரி நீதிவான் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அதே­வேளை, காங்­கே­சன்­துறை பிர­தே­சத்­தி­லுள்ள பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்கும் 13 வய­தையும் 14 வய­தையும் உடைய இரண்டு சிறு­மிகள் யாழ்ப்­பாண கந்­தர்­ம­டத்தை சேர்ந்த 36 வய­து­டைய ஆசி­ரியர் ஒருவர் பாலியல் துஷ்­பி­ர­யோகம் புரிந்­தார் என காங்­கே­சன்­துறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் என்றார்
Share this article :

கருத்துரையிடுக

 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger