மக்கள் மீது கழிவொயில், கல்வீச்சு தாக்குதல்: இராணுவத்தினர் அட்டகாசம்
Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 15 நவம்பர், 2013 | 5:57 AM
வலி.வடக்கில் மேற்கொள்ளப்படும் நில மீட்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்கென யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட மக்கள் மீது இராணுவத்தினர் ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதோடு பல இடங்களில் வாகனங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இன்று காலை வல்வெட்டித்துறையிலிருந்து மக்களை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு வாகனம் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் வடமராட்சியில் இருந்து மக்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுதவிர வடமராட்சி கடற்றொழிலாளர் சங்க சமாசத்தின் தலைவரது வீடு, உள்ளிட்ட சிலரது வீடுகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் போராட்டம் நடைபெறும் மாவிட்டபுரம் பகுதியில் மக்களை ஏற்றிக்கொண்டு வந்த பல வாகனங்கள் பொலிஸாரால் மறிக்கப்பட்டு தொடர்ச்சியாக சோதனை செய்யப்பட்டு மக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
மேலும் போராட்டம் நடைபெறும் இடங்களில் இராணுவப் புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதால் கடும்பதற்ற நிலையில் ஏற்பட்டுள்ளது. ஆயினும் எந்த அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாது மக்கள் முழு வேகத்துடன் போராட்டங்களில் இணைந்துள்ளனர்.
Related posts:
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.
லேபிள்கள்:
ஈழம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துரையிடுக