News Update :

சனல் 4 வீடியோ உண்மையானது: ஐ.நா

Penulis : Antony on சனி, 9 ஜனவரி, 2010 | 2:39 PM

சனி, 9 ஜனவரி, 2010


நேற்றைய தினம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா மாநாட்டில் உரையாற்றிய பிலிப் அல்ஸ்டன், சனல் 4 இல் ஒலிபரப்பான வீடியோ உண்மையானது எனத் தெரிவித்துள்ளார். சட்டத்திற்கு புறம்பான படுகொலைகள் மற்றும் யுத்தக் குற்றங்களை விசாரணைசெய்யும் ஐ.நா வின் உயரதிகாரி பிலிப் அல்ஸ்டன் அவர்கள் நேற்றைய தினம் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியிருந்தார். அதில் அவர் பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோக் காட்சிகள் நிஜமானவை என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கைகள் கட்டப்பட்ட நிலையில் முழு நிர்வாணமாக, தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொல்லும் காட்சிகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகி இருந்தது. இதனையடுத்து 4 பேர் கொண்ட அவுஸ்திரேலியா வாழ் இலங்கை நிபுணர்களைக் கொண்டு இலங்கை அரசு அந்த வீடியோவை பரிசீலித்து, அது பொய்யான வீடியோ என உலகை ஏமாற்ற முனைந்தது. இதனால் பிலிப் அல்ஸ்டனின் உயரதிகாரிகள் இது குறித்து அவரை ஆராயுமாறு பணித்தனர் என்று கூறுகிறார் பிலிப் அல்ஸ்டன். இந்த வீடியோவை ஆராய பிலிப் அல்ஸ்டன் 3 தடய வல்லுனர்களை நியமித்துள்ளார். டானியல் சுமித், என்பவர் தடய வல்லுனர் , பீட்டர் டயட்டாக், வீடியோ வல்லுனர் மற்றும் ஜேஸ் ஸ்பிபாக் ஆயுத வல்லுனர். இவர்கள் மூவரும் சேர்ந்து இந்த வீடியோவை ஆராய்ந்து இது உண்மையான காட்சிகள் அடங்கிய வீடியோ என சான்றிதழ் அளித்துள்ளனர். சுமார் ஜூலை 17ம் திகதி இக் கொலைகள் நடைபெற்றிருப்பதாக அந்த வீடியோக் காட்சிகளை பதிவுசெய்த செல்போன் தேதி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து பிலிப் அல்ஸ்டன் இலங்கை அரசிடம் விளக்கம் கோரியுள்ளதுடன், சுதந்திரமான விசாரணைகளுக்கு தம்மை அனுமதிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனை இலங்கை அரசு நிராகரித்தால், மேலும் பல பின் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என அறியப்படுகிறது. பிலிப் அல்ஸ்டன் அவர்களை அதிர்வு இணையம் பிரத்தியேகமாகத் தொடர்புகொண்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இது குறித்து அவர் அதிர்வுக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றைத் தரவுள்ளார்.

கருத்துகள் | | Read More...

பாடகி சஹோலிக்கும் மகிந்தவுக்கும் தொடர்பு


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைப் போற்றும் வகையில் இயற்றப்பட்ட வணக்கம் மாமன்னரே ! என்ற சிங்களப் பாடலைப் பாடிய பிரபல சிங்களப் பாடகி சஹோலி கமகே இரகசியமான இடமொன்றில் மறைந்திருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது. இவர் ஜனாதிபதியை வாழ்த்திப் பாடிய நாள்முதல் மகிந்த இவருடன் சில ரகசிய உறவுகளைப் பேணி வந்ததாகக் கூறப்படுகிறது. இப் பாடகி மீது மகிந்த விசேட அக்கறை செலுத்தி வந்ததும், அவர் தனது செல் தொலைபேசி இலக்கதை கொடுத்ததும் ஜனாதிபதியின் பாரியாருக்குத் தெரியவந்துள்ளதாம். இதனையடுத்து ஷிராந்தி ராஜபக்ஷ ஆத்திரமடைய, ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் இந்தப் பாடகிக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதனால் ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷவிற்குப் பயந்து இரகசியமான இடமொன்றில் இப் பாடகி மறைந்து வாழ்வதாக அறியப்படுகிறது.பாடகி சஹோலி கமகே இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பில் இருப்பதாகவும், இவரை நாமல் ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் கூறப்படுகிறது. குறித்த பாடகியுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் என நாமல் ராஜபக்ஷவிற்கு அறிவித்திருக்கும் ஷிராந்தி ராஜபக்ஷ, இளைஞர்களுக்கான எதிர்காலம் என்ற விளம்பரத் தொடரில் அவரை இணைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அழுத்தம் கொடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் | | Read More...

தலைவர் பிரபாகரனின் தந்தை மரணம்


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை. கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் உச்சக்கட்ட சண்டை நடந்தபோது இவர் தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களோடு சேர்ந்து அவர் தடுப்பு முகாமில் தஞ்சம் அடைந்தார்.பிரபாகரனின் தாய், தந்தையை அடையாளம் கண்டு கொண்டு சிங்கள ராணுவத்தினர் அவர்களை மட்டும் தனியாக பிரித்தனர். பிறகு அவர்களை கொழும்புக்கு அழைத்து சென்று பயங்கரவாத தடுப்புப்பிரிவில் தங்க வைத்தனர்.அவர்களை நல்ல முறையில் கவனித்துக்கொள்வதாக சிங்கள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர்களை மீட்க பிரபாகரனின் தங்கை முயற்சி செய்தார். ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.கடந்த 7 மாதமாக வேலுப்பிள்ளையும், அவரது மனைவியும் கொழும்பு பயங்கரவாத முகாமிலேயே வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பற்றிய எந்த தகவலையும் சிங்கள அரசு வெளியிடவில்லை.இந்த நிலையில் வேலுப்பிள்ளை திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது மரணம் இயற்கையான மரணம் என்று ராணுவத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.பிரபாகரனின் தாய் என்ன ஆனா அவர் எப்படி இருக்கிறார எங்கு இருக்கிறார்ப என்பது போன்ற எந்த தகவல்களும் தெரியவில்லை.பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை 1980 களில் ஈழத்தில் கடும் சண்டை நடந்த போது தமிழ்நாட்டுக்கு வந்தார். நீண்ட ஆண்டுகள் திருச்சி மாவட்டத்தில் தங்கி இருந்தார்.நார்வே தூதுக்குழு மூலம் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதும் அவர் மீண்டும் ஈழம் சென்றார். அங்கு பிரபாகரனுடன் தங்கி இருந்தார். கடந்த மே மாதம் உச்சக்கட்ட போர் ஏற்பட்டபோது அவர் பிரபாகரனிடம் இருந்து பிரிந்தார்.வேலுப்பிள்ளை சிங்கள அரசு ஊழியராக 39 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். 1943-ம் ஆண்டு இலங்கை ரெயில்வேயில் அவர் கிளார்க் ஆக பணியில் சேர்ந்தார்.பிறகு பதவி உயர்வு பெற்று வேறு பல துறைகளுக்கு மாற்றப்பட்டார். 1982-ம் ஆண்டு அவர் நில ஒப்படைப்புத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார்.பிரபாகரனின் தந்தை மறைவுக்கு உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கருத்துகள் | | Read More...

இலங்கை சபாநாயகர்மீது செருப்பு வீச்சு


மயிலாடுதுறை அருகே இலங்கை சாபநாயகர் லொக்கு பண்டார அவர்கள் சென்ற கார் மீது சிலர் செருப்புகளை வீசியதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கை சபாநாயகர் லொக்கு பண்டார, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயிலில் சாமி கும்பிட வந்தார். அப்போது அவரது கார் மீது சிலர் செருப்புகளை வீசியுள்ளனர். இதில் சாபாநாயகர் மகன் மீது பலத்த அடி விழுந்தது. இதையடுத்து சபாநாயகர் மற்றும் அவரது மனைவி காரை விட்டு இறங்கவில்லை. சாமி தரிசனம் செய்யாமல் அவர்களை மதிமுக விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தி திருப்பி அனுப்பினர். இதையடுத்து பாதுகாப்புக்கு இருந்த பொலிஸார் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் | | Read More...

எழுநூறு முன்னாள் போராளிகள் விடுதலை


புனர்வாழ்வளிக்கப்பட்ட,713 தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது. இவர்கள் வவுனியா, புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இவர்கள் சிறுகுற்றங்களில் ஈடுபட்டுள்ளமை காரணமாகவே இவர்களை விடுவிக்க தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில், சிறுவர் போராளிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை. இவர்கள் விடுதலை செய்யப்படும் முன்னர் இவர்களை விசாரணை செய்ய விசாரணைக்குழு ஒன்றை அனுப்பக்கோரி சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையை நேற்று முன்தினம், கொழும்பு பிரதான நீதிவான் ஜானகி ராஜரட்ன நிராகரித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள் இல்லையென்றால் அவர்களை விடுவிக்கவேண்டும் என அவர் உத்தரவிட்டிருந்தார்.
எழுநூறு முன்னாள் போராளிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் நூற்றுக்கணக்கானோர் இன்றைய தினம் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செட்டிக்குளம் முகாமில் வைத்து அவர்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன்படி சுமார் 712 பேர் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நேரடியாக தொடர்பு அற்றவர்களே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு திணைக்களம் தெரிவித்திருந்தது.
இதில் 18 வயதுக்குட்பட்ட சுமார் 100 பேர் வரை அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 429 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டிருந்ததை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger