News Update :

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வராது என்று சிறிலங்கா இராணுவத்தினால் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது.

Penulis : ۞உழவன்۞ on சனி, 29 அக்டோபர், 2011 | 5:03 AM

சனி, 29 அக்டோபர், 2011

சிறிலங்கா இராணுவம், இராணுவப் புலனாய்வுப் படைப்பிரிவில் உள்ள பற்றாலியன்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரித்துள்ளது.

எதிர்காலத்தில் எழக்கூடிய அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கும், கடந்தகாலத்தில் ஏற்பட்டது போன்ற சூழல் மீண்டும் உருவாகாமல் தடுப்பதற்குமே இராணுவப் புலனாய்வுப் பிரிவைப் பலப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிகால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

“ பலமானதும் உறுதித்தன்மை கொண்டதுமான புலனாய்வு வலையமைப்பை நாம் கொண்டிருந்தால், உள்நாட்டு வெளிநாட்டு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் நெருக்கடியை சந்திக்க வேண்டியதில்லை.

எவரிடம் இருந்து அச்சுறுத்தல் வந்தாலும், எமது வலைமையப்பு பலமாக இருந்தால் எம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

புலம்பெயர் சமூகத்தின் சில சக்திகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வராது என்று சிறிலங்கா இராணுவத்தினால் 100 வீதம் உறுதிப்படுத்த முடியாது.

கடந்தகாலத்தில் எதிர்கொண்டது போன்ற சூழலை நாம் விரும்பவில்லை.

இராணுவப் புலனாய்வுப் பணியகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கு றெஜிமென்ட் தளபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியாக பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் இந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றாலியன்களை நிறுத்தியுள்ளோம்.

புதிதாக உருவாக்கப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு பற்றாலியன்களின் ஆட்பலம் பற்றிய தகவல்களை வெளியிட முடியாது.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

முன்னாள் போராளிகள் 700 பேர் விரைவில் விடுதலை

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 28 அக்டோபர், 2011 | 9:25 AM

வெள்ளி, 28 அக்டோபர், 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் 700 பேர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சந்தன ராஜகுரு தெரிவித்துள்ளார்.

இன்னும் சில தினங்களில் இவர்கள் சமூகமயமாக்கப்படவுள்ளனர். தற்போது அவர்களுக்குத் தேவையான வாழ்வாதாரப் பயிற்சிகள் வவுனியா மற்றும் வெலிகந்த முகாம்களில் வழங்கப்பட்டு வருகின்றன.

அதே நேரம் நீதிமன்ற உத்தரவின் கீழ் 100 பெண்களும் முகாம்களில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

காணி மீள்பதிவு நடவடிக்கை ஓர் இனவாத செயற்பாடு

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 10 அக்டோபர், 2011 | 11:49 AM

திங்கள், 10 அக்டோபர், 2011


வடக்கு- கிழக்கு மாகாணங்களில் மட்டும் காணிகளை திடீரென மீள்பதிவு செய்யும் நடவடிக்கையானது இனவாத செயற்பாடாகும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மாத்தாயை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நேற்று கொழும்பில் சந்தித்துள்ளனர். சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவடையாத நிலையில் உள்ள மீள்குடியேற்றம், திடீரென மேற்கொள்ளப்படும் காணிப்பதிவுகள், முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்ப்பகுதிகளில் சிங்கள உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளை உருவாக்க முயற்சி போன்ற பலதரப்பட்ட பிரச்சினைகளை முன்வைத்துள்ளதாகவும் இப்பிரச்சினைகள் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக மாத்தாய் கூறியதாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது
கருத்துகள் | | Read More...

எண்ணெய்வளம் கண்டுபிடிக்கப்படுவதை தடுக்கவே புலிகளை ஆதரித்தது நோர்வே – சிறிலங்கா குற்றச்சாட்டு

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 4 அக்டோபர், 2011 | 12:11 PM

செவ்வாய், 4 அக்டோபர், 2011


எண்ணெய் வளத்தையும், வாயு வளத்தையும் கண்டுபிடிப்பதை தடுத்து நிறுத்தவே நோர்வே, புலிகளுக்கு ஆதரவளித்து அவர்களைக் காப்பாற்றி வந்ததாக சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த குற்றம்சாட்டியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வந்திராது போனால் மன்னார் படுக்கையில் மட்டுமல்ல, மன்னார் பக்கமே யாரும் தலைவைத்துப் படுத்திருக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயுவை இன்னும் மூன்று வருடங்களில் மின்உற்பத்திக்கும், போக்குவரத்துக்கும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதலாவது எண்ணெய் கிணறு மூலம் ஹைட்ரோ கார்பன் என்ற வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை உடனடியாகப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வாயுவை கடல் மட்டத்துக்கு மேல் கொண்டு வந்தால் மின்உற்பத்திக்காக பயன்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் மிகக்குறைந்த செலவுடன் மின்உற்பத்தி செய்ய முடியும் என்றும் சுசில் பிறேம் ஜெயந்த குறிப்பிட்டுள்ளார்.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள எரிவாயு சமையலுக்காகப் பயன்படுத்தப்படும் திரவ எரிவாயு அல்ல என்றும், இந்த இயற்கை எரிவாயுவை திரவநிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த திரவ எரிவாயுவைக் கொண்டே ஜப்பான், கொரியா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது மின்உற்பத்தித் தேவையில் 30 வீதத்தை பூர்த்தி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடல் மேல்மட்டத்தில் இருந்து சுமார் 1354 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை ஓரிரண்டு நாட்களில் மேலே கொண்டு வந்துவிட முடியாது என்றும் கூறியுள்ள சுசில் பிறேம் ஜெயந்த, கடல் மட்டத்தில் தளம் அமைத்து எரிவாயுவை திரவநிலைக்கு மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்காக வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பத்தைப் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் | | Read More...

பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுப்பட்ட குழு மட்டு.வில் கைது

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 3 அக்டோபர், 2011 | 9:16 AM

திங்கள், 3 அக்டோபர், 2011

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களிலும் மிக நீண்டகாலமாக பாரிய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாரிய கொள்ளைக்கோஷ்டியொன்றை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்ததாக மாவட்ட தலைமையக பொலிஸ் அத்தியட்சககர் சஞ்சித் வனராஜா தெரிவித்தார்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவெட்டவின் பணிப்புரையின் பேரில் தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் வனராஜாவின் வழிகாட்டலில் தமைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே.சாந்தகுமார் தலைமையில் இச்சுற்றிவளைப்பு நடாத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களிடமிருந்து 12 இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் கம்பியூட்டர்கள், ஒலிபெருக்கி சாதனங்கள் தங்க நகைகள் உட்பட பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger