News Update :

எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: மனோ

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 27 செப்டம்பர், 2011 | 11:57 AM

செவ்வாய், 27 செப்டம்பர், 2011


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகளாகும். அதில் நீங்கள் தலையிட்டு கருத்துத் தெரிவிப்பது முறையற்ற நடவடிக்கை. எங்களைப் பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்துபோயும் வாக்களிக்கமாட்டார்கள் என்று ஐனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட நீங்கள் நாளை அரசாங்க பக்கத்திற்கு தாவமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது? முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக நேரடி அரசியலுக்கு வந்த நீங்கள் மாமனிதர் அஷ்ரபின் மறைவிற்கு பின்னர் அஸ்ரஃபின் தலைமையில் பொது ஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து நுவா கட்சியில் செயற்பட்டீர்கள். பின்னர் 2002 ஆம் வருடத்தில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸிற்கு மீண்டும் கட்சி மாறி வந்தீர்கள். பின்னர் 2004 ஆம் வருடம் பொதுத் தேர்தலில் கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு தேர்தலில் வேலை செய்தீர்கள்.அதே வருடம் நடைபெற்ற மாகாணசபை தேர்தலில் மீண்டும் கட்சி மாறி நுவா கட்சியில் போட்டியிட்டு மாகாண சபைக்கு சென்றீர்கள். அதன் பிறகு மீண்டும் 2009 ஆம் ஆண்டு கட்சி மாறி ஐ.தே.க.வில் இணைந்து மாநகர சபை உறுப்பினராக தெரிவாகி விட்டு இன்று மேயர் வேட்பாளராக போட்டியிடுகின்றீர்கள். இன்றைய அமைச்சர் பௌசி ஆரம்பத்தில் ஐ.தே.க.வின் கொழும்பு மேயராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார். இந்நிலையில் பல கட்சிகள் மாறிய வரலாறு கொண்ட முஸமில் ஆகிய நீங்கள் இன்னொரு பௌசி ஹாஜியாக மாறமாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என எனது ஐ.தே.க. இஸ்லாமிய நண்பர்களே இன்று கேள்வி கேட்கின்றார்கள்.

இதற்கு உங்களது பதிலை கூறிவிட்டுத் தலைநகர தமிழர்களை பற்றி கருத்துத் தெரிவியுங்கள் என்றும் அவர் கூறினார். தன்னையும் தனது கட்சியையும் பெயர் குறிப்பிட்டு கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து முஸம்மிலின் பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு தனக்கு உள்ளதாக கூறிய மனோ கணேசன் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் தமிழ் இனத்தின் பங்காளிக் கட்சிகள். அதில் நீங்கள் தலையிட்டு கருத்து தெரிவிப்பது உங்களது தந்திரமான குள்ள நரித்தனத்தை காட்டுகின்றது. எங்களை பிரிக்க நினைக்கும் உங்களுக்கு தமிழர்கள் மறந்து போயும் வாக்களிக்கமாட்டார்கள். கூட்டமைப்பின் தலைவர்கள் எங்களுக்கு பகிரங்கமாக ஊடகங்களில் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கூட்டமைப்பு தலைவர்கள் எங்களது தேர்தல் பிரசாரங்களிலே நேரடியாக பெரியளவில் கலந்து கொள்ளாமைக்கு காரணம் இருக்கின்றது. இது தொடர்பிலே எங்களுக்கும் கூட்டமைப்பிற்கும் நல்ல புரிந்துணர்வு இருக்கின்றது. கூட்டமைப்பு தலைவர்கள் நேரடியாக கொழும்பு பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டால் புலிக்கூட்டம் ஒன்று சேர்ந்துவிட்டது என பிரசாரம் செய்வதற்கு நிறைய பேரினவாதிகளும் அவர்களது தமிழ் பேசும் தரகர்களும் தயாராக இருப்பது எங்களுக்குத் தெரியும். கடைசி நேரத்திலே எங்களது வெற்றியை தடுப்பதற்கு நீங்களும் கூட மறைமுகமாக இதைத்தான் செய்வீர்கள். இதுதான் சதிவலையாகும். இந்த சதிவலையில் புத்தியுள்ள தமிழர்களாகிய நாங்கள் சிக்கிக் கொள்ள மாட்டோம். இன்று அரசாங்கத்தை காப்பாற்றிக் கொண்டிருப்பது உங்களது ஐக்கிய தேசியக் கட்சிதான் என்று உங்களது கட்சியிலேயுள்ள ஐ.தே.க. அரசியல்வாதிகளே சொல்கிறார்கள். உங்களது தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐ.நா வரை சென்று பான்கீ மூனை சந்தித்து இன்றைய அரசாங்கத்தை காப்பாற்றிவிட்டு வந்துள்ளார் என்றும் அதற்குப் பிரதியுபகாரமாகவே இன்றைய அரசாங்கம் உங்களைக் காப்பாற்றுகின்றது என்றும் உங்களது ஐ.தே.க. அரசியல்வாதிகளே சொல்கிறார்கள்.

எங்களது கட்சியிலிருந்து அரச தரப்பிற்கு தாவிய தனி நபரின் அரசியல் பயணம் ஏற்கனவே முடிவிற்கு வந்து விட்டது. எதிர்வரும் தேர்தலுக்கு பிறகு அது பகிரங்கமாக தெரியவரும். அதை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம். ஆனால் எங்களது கட்சியைப் பற்றி பேசும் நீங்கள் உங்களது கட்சியின் பக்கம் திரும்பிப் பாருங்கள். கடந்த பாராளுமன்றத்திலும் சுமார் 25 ஐ.தே.க. எம்.பி.க்கள் அரச தரப்பிற்கு தாவினார்கள். இந்த பாராளுமன்றத்திலும் சுமார் 5 ஐ.தே.க. எம்.பி.க்கள் அரச தரப்புக்கு தாவியுள்ளார்கள். பல கட்சிகள் தாவி வந்த உங்களுக்கு இது பரீட்சயமான விடயமாகும்.

இன்னும் எத்தனை ஐ.தே.க. காரர்கள் பாராளுமன்றத்திலிருந்தும் மாகாண சபையில் இருந்தும் எதிர்கால மாநகர சபையில் இருந்தும் அரச தரப்பிற்கு தாவப் போகின்றார்கள் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். எனவே தான் ஆளுங்கட்சியும் வேண்டாம் எதிர்க் கட்சியும் வேண்டாம் என தலை நகர தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டி எங்களது தனித்துவ அரசியல் பலத்தை உறுதிப்படுத்திக் கொள்ள நாங்கள் தயாராகி வருகின்றோம். எங்களுக்கு வாக்களிப்பதற்கு தலைநகர தமிழர்களும் தயாராக இருக்கின்றார்கள்.

நான் எனது கட்சியின் தலைவர் நீங்கள் உங்களது கட்சியின் தலைவர் அல்ல ஆனாலும் மாநகர சபை முதன்மை வேட்பாளர்கள் என்ற முறையிலும் நண்பர் என்ற நாகரீகத்தின் அடிப்படையிலும் தான் உங்களுடன் பலமுறை கலந்துரையாடி இருக்கின்றேன். ஆனால் அதற்காக நீங்கள் உங்களுக்குப் புரியாத விடயங்களை பற்றி பேசக்கூடாது. கட்சி தலைவர்கள் என்ற முறையில் நான் ரணில் விக்கிரமசிங்க அல்லது உங்களது பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பிரதி தலைவர் கரு ஜெயசூரிய ஆகியோருடன் பரிமாறிக் கொண்ட கருத்துக்கள் பற்றி உங்களுக்குத் தெரியாது.

உங்களது கட்சி எங்களை அரவணைத்து செல்வதற்கு தவறி விட்டது என நீங்களே ஏற்றுக்கொள்கின்றீர்கள். அது முற்றிலும் உண்மை. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கூட்டணி தமிழ் கட்சியான எங்களுக்கு கொடுக்க வேண்டிய தேசியப் பட்டியல் உறுப்புரிமையை தராமல் உங்களது கட்சி ஏமாற்றியது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸிற்கு இரண்டு தேசியப்பட்டியல் உறுப்புரிமைகளை உங்களது கட்சி வழங்கியது. இது ஏன் என்று போய் உங்கள் தலைவரிடம் கேளுங்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலே கொழும்பில் மூன்று தமிழ் வேட்பாளர்களை நாங்களே போட்டியிட வைத்திருக்கலாம்.

ஆனால் ஐ.தே.க.வின் தமிழ் வேட்பாளராக மாகாண சபை உறுப்பினர் சி.வை.ராமிற்கு அதை நாங்கள் விட்டுக் கொடுத்தோம். எனவே எங்களுக்காக மூன்றாவது தமிழ் வேட்பாளரைக் களமிறக்கவில்லை என்று நீங்கள் சொல்வது பொய். ஆனால் கடைசியில் மூன்றாவது தமிழ் விருப்பு வாக்கை பெற்றுக் கொள்வதற்காக ரவி கருணாநாயக்க சி.வை.ராமிற்கு போட்டியிட இடங்கொடுக்கவில்லை. அதற்கு பின்னர் உங்களது கட்சி தலைவர் மாகாண சபை உறுப்பினர் சி.வை.ராமை அழைத்து அவரை கொழும்பு மேயர் வேட்பளாராக போட்டியிட வைப்பதாக உறுதியளித்து சமாதானம் செய்தார். இவற்றை சி.வை.ராமே ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் மூன்றாவது முஸ்லிம் வேட்பாளராக ஐ.தே.க.வில் போட்டியிட்டு தோல்வியடைந்த உங்களை தற்சமயம் மேயர் வேட்பாளராக உங்களது தலைவர் நியமித்துள்ளார். இதன் மூலம் உங்களது கட்சியை சார்ந்த தமிழ் உறுப்பினராகிய சி.வை.ராமை பொதுத் தேர்தலிலும் ஏமாற்றி தற்சமயம் மாநகர சபைத் தேர்தலிலும் ஏமாற்றியுள்ளீர்கள். இதுதான் ஐ.தே.க. தமது கட்சியின் தமிழர்களையும் தம்முடன் கூட்டுச் சேர்கின்ற தமிழ் கட்சிகளையும் நடத்துகின்ற முறையாகும்.

ஐ.தே.க. எப்பொழுதும் தமிழ் மக்களின் வாக்குகளை மாத்திரம் பயன்படுத்தப்பார்க்கின்றது என்பது தான் இதன் காரணமாகும். எங்கள் மக்களின் வாக்குகளை பயன்படுத்தி உங்கள் தலைவருக்கு ஆயுட்காலம் பூராவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கும் நீங்கள் மேயராகிவிட்டு அரசாங்கப் பக்கம் தாவுவதற்கும் நாங்கள் உதவ முடியாது.
கருத்துகள் | | Read More...

சத்யானந்தா படத்துக்கு நித்யானந்தா எதிர்ப்பு

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 25 செப்டம்பர், 2011 | 11:36 AM

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011


3 கோடியே 456 நஷ்ட ஈடு கேட்டு சத்யானந்தா திரைப்படத்தி்ற்கு நித்யானந்தா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தன்னை பற்றி சினிமா எடுத்துள்ள தயாரிப்பாளரிடம் 3 கோடியே 456 நஷ்டஈடு கேட்டு சாமியார் நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகை ரஞ்சிதாவும் சாமியார் நித்யானந்தாவும் பிடதி ஆசிரமத்தில் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியானது.

இதற்காக கைது செய்யப்பட்ட அவர் இப்போது ஜாமீனில் உள்ளார். அவர் மீது மோசடி, பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன. நித்யானந்தாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ”சத்யானந்தா” என்ற சினிமாவை கன்னட இயக்குனர் மதன் படேல் தானே தயாரித்துள்ளார்.

இந்த படத்தால் தனது புகழுக்கு களங்கம் ஏற்படும் என குற்றம்சாட்டி பெங்களூர் சிவில் நீதிமன்றத்தில் நித்யானந்தா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தும் கூட. படத்தை வெளியிடப் போவதாக மதன் படேல் அறிவித்துள்ளார். இந்த நிலையில் மதன் படேலிடம் நஷ்டஈடு கேட்டு நித்யானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சத்யானந்தா படம் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்ளது. எனவே படத்தை வெளியிட கூடாது.

அவதூறு பரப்பும் வகையில் படம் எடுத்த தயாரிப்பாளர் மதன் படேல், நடிகர் ரவி சேட்டன் ஆகியோர் எனக்கு நஷ்டஈடாக 3 கோடியே 456 வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரான மதன் படேல் ”சத்யானந்தா” படம் சாமியார்களை பற்றியது அல்ல. மேலும் நித்யானந்தா கேட்டுள்ள நஷ்டஈடை கொடுத்துவிட்டால் படத்தை வெளியிடலாமா? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் | | Read More...

ஒளியை விட வேகமாக பயணிக்கமுடியும்: ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகியதா? _

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 23 செப்டம்பர், 2011 | 1:14 PM

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான 'Theory of Relativity' யை விஞ்ஞானிகள் தவறென நிரூபித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளனர்.

ஒளி (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீட்டர்.

எனினும் அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் வேகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும்.

கருத்துகள் | | Read More...

கே.பி யின் 600 வங்கிக் கணக்குகள் 15 கப்பல்களுக்கும் நடந்த மாயம் என்ன?

Penulis : ۞உழவன்۞ on வியாழன், 22 செப்டம்பர், 2011 | 2:33 AM

வியாழன், 22 செப்டம்பர், 2011

குமரன் பத்மநாதனாகிய கே.பி கைது செய்யப்பட்ட பின்னர் அவருக்கு 600 வங்கிக் கணக்குகளும், 15 கப்பல்களும் இருப்பதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் கூட இவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரையிலும் எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்று ஜே.வி.பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதி மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி சேகரிப்பதை ஒடுக்கும் சமவாய திருத்தச் சட்டப் பிரேரணை விவாதத்தில கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியினால் 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிதி புலனாய்வுத்துறை உண்மையாக இருந்திருந்தால் புலிகளின் சொத்து விபரத்தை சரியாக வெளிப்படுத்தியிருக்கும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

உள்ளாடையுடன் உலாவும் மர்மனிதன்; அச்சத்தில் கிராம மக்கள்

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 18 செப்டம்பர், 2011 | 12:25 AM

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011



மன்னார் பெரிய கடை வீதி பெட்டா கிராமத்தில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் மர்ம மனிதனொருவன் உள்ளாடை மாத்திரம் அணிந்து வீட்டின் மேல் நடமாடித்திரிந்த மையினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்துடன் கூடிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பெரிய கடை வீதி- பெட்டா பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் கிராமத்திற்குள் சென்ற மர்ம மனிதனொருவன் அங்குள்ள வீடு ஒன்றின் முன் மதிலில் ஏறி அருகில் நின்ற முருங்கை மரத்தினூடாக வீட்டின் மீது ஏறி நின்றுள்ளான்.

இதன் போது, வீட்டில் உள்ளவர்கள் திடீரென வெளியில் வந்த போது வீட்டின் மேல் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்த மனிதனைக் கண்டு அயல் வீடுகளில் உள்ளவர்கள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு முன் வந்தனர். குறித்த நபர் மரங்களின் மேல் தாவி தப்பிச் செல்வதைப் பலர் பார்த்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தபோதும் சந்தேக நபரை பிடிக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் மாவட்டத்தில் சுமார் நான்கு வாரங்களுக்கு மேலாக மர்ம மனிதர்களினால் ஏற்பட்ட அச்ச நிலை குறைவடைந்துள்ள நிலையில் மேற்படி சம்பவம் குறித்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
கருத்துகள் | | Read More...

சிறிலங்கா சிறையில் நான்காண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருக்கும் பிரித்தானிய தமிழர்

Penulis : ۞உழவன்۞ on சனி, 17 செப்டம்பர், 2011 | 12:22 PM

சனி, 17 செப்டம்பர், 2011

எந்தவொரு விசாரணைகளுமின்றி தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் ஒருவரை வைத்திருப்பதற்கு அனுமதிக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பிரிட்டன் குடிமகனாக கோபிதாஸ் உள்ளார்.

இவ்வாறு பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் The Guardian ஊடகத்தின் இணையத்தளத்தில் Sam Jones எழுதியுள்ள செய்திக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

நோயாளியான பிரிட்டன் தமிழர் ஒருவர் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் சரத்துக்களின் பிரகாரம், கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்தவொரு குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணைகளோ அன்றி சிறிலங்காவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளது தொடர்பான தமது ஆதங்கத்தை பிரிட்டன் அரசாங்கம் மற்றும் சட்ட ரீதியான தொண்டர் அமைப்பு ஒன்றும் வெளிப்படுத்தியுள்ளன.

இரு பிள்ளைகளின் தந்தையாரான தெற்கு லண்டனைச் சேர்ந்த விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்பவர், ஏப்ரல் 2007 ல் விடுதலைப் புலிகளிற்கு ஆதரவு வழங்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு இரவு நேர தொலைநோக்குக் கருவி ஒன்றை வழங்க முற்பட்டார் என மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டை 41 வயதுடைய கடை உரிமையாளரான இவர் மறுத்துள்ளார். நண்பனின் வியாபாரத்திற்காகப் பயன்படுத்தப்படும் செல்லிடத் தொலைபேசிகள் மற்றும் பூகோள நிலையறிதல் கருவிகள் ஆகியவற்றையே கொண்டுவந்துள்ளதாக கோபிதாஸ் தெரிவித்தார்.

தான் சிறிலங்காவிற்கு வரும்போது இரவு நேரத் தொலைநோக்குக் கருவியை ஒருபோதும் கொண்டு வரவில்லை என கோபிதாஸ் தெரிவித்தார். பிரிட்டனுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னர் இவர் ஏற்கனவே தான் சுங்கத்திணைக்களத்தில் ஒப்படைத்த பொருட்களைத் தன்னுடன் மீளவும் கொண்டு செல்லும் நோக்குடன் அவற்றைச் சரிபார்க்கச் சென்றிருந்தார்.

இந்தவேளையிலேயே பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இவரைக் கைதுசெய்திருந்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட கோபிதாஸ் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் செயலகத்தில் ஒருமாத காலம் வரை தடுப்பில் இருந்தார்.

இதன் பின்னர் இவரால் புரிந்து கொள்ள முடியாத சிங்கள மொழியில் எழுதப்பட்ட அறிக்கை ஒன்றில் கையெழுத்திட்ட பின்னர் கோபிதாஸ் தொடர்ந்தும் ஒன்றரை ஆண்டுகள் வரை காவற்துறையினரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள புதிய மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட இவர் அங்கே மூன்று ஆண்டுகள் வரை எந்தவொரு குற்றமும் சாட்டப்படாமலும், விசாரணைகள் எதுவுமின்றியும் மூன்று ஆண்டுகளைக் கழித்துள்ளார்.

எந்தவொரு விசாரணைகளுமின்றி தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் ஒருவரை வைத்திருப்பதற்கு அனுமதிக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பிரிட்டன் குடிமகனாக கோபிதாஸ் உள்ளார்.

சிறிலங்காவில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரப்பட்ட போரானது 2009 ல் புலிகளைத் தோற்கடித்ததன் மூலம் முடிவிற்கு வந்தபோதிலும், இவ்வாறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் தொடர்ந்தும் நடைமுறையிலிருக்கின்றது.

பெருமளவில் அதிகரித்துள்ள கைதிகளின் எண்ணிக்கை காரணமாக இதய வருத்தங்களாலும், உயர் இரத்த அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள தனது உடல் நிலைக்குப் பொருத்தமான மருத்துவ வசதியைப் பெறமுடியாதுள்ளதாவும் இதனால் தனது உடல் நிலை பாதிப்படைந்து வருவதாகவும் கோபிதாஸ் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு படுக்கை விரிப்புக்களோ, காற்றோட்ட வசதிகளோ, மின்விசிறிகளோ இன்றி வெறும் சீமெந்துத் தரையிலேயே கோபிதாஸ் படுத்துறங்குவதாக இவரது உறவினர் ஒருவர் கார்டியனுக்கு தெரிவித்துள்ளார்.

"இங்கு குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. அதாவது மலசலகூடத்திற்குச் செல்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். 80-100 வரையானவர்களுக்கு இரண்டு மலசலகூடங்கள் மட்டுமே உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார்.

"காலவரையின்றி தன்னை இவ்வாறு தடுத்து வைத்திருந்து தாங்கொணாத் துன்பங்களை எதிர்கொள்வதை விட இறப்பதோ அல்லது அவர்கள் என்னைச் சுட்டுக் கொல்வதோ மேலானதாகும் எனவும் இதன் மூலம் தான் அனுபவிக்கும் துன்பங்கள் நீங்குவதுடன், தனது குடும்பத்தவர்களது துன்பங்களும் குறைக்கப்படும்" என கோபிதாஸ் தெரிவித்ததாக இவரது பிறிதொரு உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

ஏனெனில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இவர் மட்டும் துன்பங்களை அனுபவிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் இவருக்கு உணவு கொண்டு வரும் 80 வயதை அடைந்த இவரது தந்தையார் உள்ளடங்கலாக ஒவ்வொருவரும் இவரது நிலையால் நாளும் துன்பத்தைச் சுமந்து வாழ்கிறார்கள் என கோபிதாசின் உறவினர் மேலும் தெரிவித்தார்.

2007ம் ஆண்டிலிருந்து இவர் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சிறிலங்கா அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இனிவருங்காலத்திலும் தொடர்ச்சியாக இது தொடர்பான அழுத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரிட்டன் தூதரக அதிகாரிகள், கோபிதாசை கிரமமுறையில் சந்தித்து வருவதாகவும் பிரித்தானிய வெளியுறவுச் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

"எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி கோபிதாசைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருப்பது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அமைச்சரான Alistair Burt, சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர் பீரிசிடம் இவ்வாண்டு யூன் மாதத்தில் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கப்பால் சிறிலங்காவில் நீண்டகாலமாக எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைத்திருக்கப்படுவது தொடர்பான அந்நாட்டின் சட்ட நடைமுறை தொடர்பாகவும் பிரிட்டன் தனது அதிருப்தியை வழமையாக வெளியிட்டு வருகின்றது" என பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோபிதாஸ் இன்னமும் விடுதலை செய்யப்படவோ அல்லது அவரை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக பிரிட்டன் அரசாங்கத்தின் மத்தியில் அதிருப்தி நிலவுவதை கார்டியன் உறுதிப்படுத்துகின்றது. சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றில் வியாழன் அன்று விவாதம் மேற்கொள்ளப்படவுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கால வரையறைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள கோபிதாஸ் தொடர்பான விடயத்தை Fair Trials International என்கின்ற நிறுவனமானது ஐ.நா மனித உரிமைகள் சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.

"சிறிலங்காவில் இடம்பெற்ற போரானது சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறைவுபெற்றுவிட்டது. ஆனால் கோபிதாஸ் உட்பட பல ஆயிரக்கணக்கானவர்கள் எந்தவொரு விசாரணைகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ இன்றி அவசரகாலச் சட்ட நடைமுறைகளின் கீழ் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்" என இவ்வமைப்பின் நிறைவேற்று இயக்குனர் யாகோ றுஸ்ஸெல் தெரிவித்துள்ளார்.

"தடுத்து வைக்கப்பட்டு கோபிதாஸ் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு லண்டனிலுள்ள அவரது மனைவி மற்றும் இரு இளவயது மகள்மாருடன் மீண்டும் சென்று வாழ வழிவகுப்பதற்கேற்ப பிரிட்டன் அதிகாரிகள், சிறிலங்கா அதிகாரிகள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கவேண்டும்" எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"இவர் தொடர்பான சரியான சாட்சியங்களுடன் நீதியான விசாரணை ஒன்று நடாத்தப்படவேண்டும் என நான் கோரிக்கை விடுக்கின்றேன். நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள கோபிதாஸ் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவர் தொடர்பான பிரச்சினைகள் நீதியான முறையில் தீர்க்கப்படவேண்டும்" என பழமைவாதக்கட்சியின் இல்போர்ட் வடக்குப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவருமான லீஸ்கொற் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"சிறிலங்காவில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை நாம் வரவேற்கின்றோம். இருந்தும் சிறிலங்காவில் தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் தற்போது புதிதாகப் பரிந்துரைக்கப்பட்ட சில சட்ட விடயங்கள் தொடர்பில் நாம் அதிக கவனத்தைச் செலுத்தியுள்ளோம். இதற்கு முன்னர் சிறிலங்காவில் புதிதாக அவசரகாலச் சட்டமானது முன்னறிவித்தல் மற்றும் கால அவகாசத்துடன் நாடாளுமன்றின் ஊடாகவே புதுப்பிக்கப்படுவது வழமையாகும். ஆனால் தற்போது இதுபோன்ற சட்டங்கள் நாடாளுமன்றின் அனுமதியுடன் சரிபார்க்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதை சிறிலங்கா அரசாங்கம் தவிர்த்து வருகின்றது" என உலக தமிழர் பேரவையின் தலைவரான S.J இமானுவேல் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

கேணல் ராமை சமீபத்தில் சுட்டுக்கொன்றதா இலங்கை இராணுவம்?


இலங்கை அரசானது விடுதலைப் புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட பின்னர் அவ்வியக்கத்தின் பல முக்கிய தளபதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்தும் வேறுபகுதிகளில் இருந்தும் தப்பிச் சென்றதாக பல செய்திகள் தெரிவித்தன. அவற்றினுள் தளபதி ராமும் அடங்குவார். பெயர் குறிப்பிட முடியாத காட்டுப்பகுதி ஒன்றினுள் அவர் இருப்பதாகவும் சிதறிக்கிடக்கும் விடுதலைப் புலிகளை ஒன்றுசேர்த்து அவர் புதிதாகப்போராட இருப்பதாக இலங்கை அரசு வேண்டும் என்றே கதைகளைக் கட்டிவிட்டது.

2010ம் ஆண்டு மாவீரர் தின உரையை தாமே நிகழ்த்தவிருப்பதாகவும் அதனை ஊடகங்களில் வெளிக்கொண்டுவரவேண்டும் எனவும் கூறி அவர் பல ஊடகங்களுடன் நேரடியாகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் தொடர்புகொள்ள பாவிக்கப்பட்ட மோபைல் இலக்கங்கள் அனைத்தும் தற்போது செயலிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது.

அவற்றில் ஒரு மோபைல் இலக்கம் முஸ்லீம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமாகவும் மாறியுள்ளது. அதுமட்டுமல்லாது தளபதி ராம் தற்போது உயிருடன் இல்லை என இராணுவத்தின் புலனாய்வுத் துறைக்கு நெருக்கமானவர்கள் தற்போது தெரிவித்திருப்பதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. திரும்பவும் போராட இருப்பதாக ஒரு பொய்யான செய்தியை இலங்கை இராணுவம் கட்டவிழ்த்து விட்டதும் போதாது என்று, தமிழ் நாட்டில் இருந்து ஊடகவியலாளர் பாண்டியனை அழைத்து அவர் நேரே பார்த்ததுபோல ஒரு செய்தியையும் இலங்கை அரசு திட்டமிட்டு போடச்செய்தது. இலங்கையில் உள்ள இருண்ட மலை என்னும் பிரதேசத்தில் கேணல் ராம் படு பயங்கர ஆயுதங்களோடு விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக பாண்டியன் கதைகளைக் கட்டவிழ்த்தார். சிங்களம் போட்ட எலும்புத்துண்டுக்கு பாண்டியன் வாலாட்டினார்.

இக் கதைகள் பக்கம் பக்கமாக இணையங்களிலும் ஊடகங்களிலும் வெளியாக பல மக்கள் ராமுக்கு நிதியுதவி செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது ராம் நேரடியாகவே தொலைபேசி மூலம் பல நபர்களைத் தொடர்புகொண்டு பணம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை நம்பி பலர் அனுப்பியுள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. இவ்வாறு அனுப்பப்பட்ட பணத்தில் சுமார் 200,000 பவுன்ஸ்சுகள் பிரித்தானியாவில் இருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிற நாடுகளில் இருந்து எவ்வளவு பணம் சென்றது என்ற கணக்கு இன்னும் தெரியவில்லை. இந் நிலையில் பணம் முழுவதையும் இலங்கை அரசு கைப்பற்றிக் கொண்டு இறுதியில் அவரைக் கொலைசெய்துவிட்டதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

சிங்கள காட்டுப் பகுதியில் முகாம் ஒன்றை அமைத்து அங்கே புதிதாகச் சேரும் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதுபோல பாசாங்கு செய்யச் சொல்லியது இலங்கை அரசு. அதனைச் சென்று பார்க்க சில ஊடகங்களுக்கு மறைமுகமாக அனுமதியையும் வழங்கியதும் சாட் சாத் இலங்கை அரசே. அதனை விடுதலைப் புலிகளின் இரகசிய பயிற்சி முகாம் என்ற போர்வையில் நடத்தியும் வந்தது. ஆனால் அங்கே பயிற்சியில் ஈடுபட்ட ஒருவர் தற்செயலாகச் சுட்டபோது கேணல் ராம் உயிரிழந்துவிட்டதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. இச் செய்தியை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை என்பதனையும் இங்கே அறியத்தருகிறோம். இல்லை இதுவும் இலங்கை அரசு வேண்டும் என்றே கட்டவிழத்த கதையாகவும் இருக்கலாம். எது எவ்வாறு இருந்தாலும் கேணல் ராம் அவர்கள் தற்போது உயிருடன் இல்லை என சிலர் அடித்துச் சொல்கிறார்கள்.

அதிர்வு
கருத்துகள் | | Read More...

அனைத்துலக விசாரணைப் பொறிக்குள் சிக்குகிறது சிறிலங்கா

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 13 செப்டம்பர், 2011 | 9:36 AM

செவ்வாய், 13 செப்டம்பர், 2011


சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர்குழு தயாரித்த அறிக்கையை ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக ஜெனிவா தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இந்த அறிக்கையை இன்று தமக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்ப்பதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இதனால் சிறிலங்கா விவகாரம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் மீண்டும் விவாதிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

முதல் இணைப்பு

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, நிபுணர்குழு தயாரித்த அறிக்கையை விரைவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு அனுப்பவுள்ளதாக ஐ.நா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நகர்வு சிறிலங்காவை அனைத்துலக விசாரணைகளுக்குக் கொண்டு செல்லக் கூடும் என்று ‘வொய்ஸ் ஒவ் அமெரிக்கா‘ தகவல் வெளியிட்டுள்ளது.

கடந் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர்குழு அறிக்கையை பான் கீ மூன் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிடம் அடுத்த சில நாட்களில் கையளிக்கலாம் என்றும் ஐ.நா அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாகவும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்ததுடன், இதுபற்றி விசாரிக்க அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது.

இந்த அறிக்கையை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் விவாதிக்க இணங்கிய பின்னரே ஐ.நா பொதுச்செயலரால் விசாரணை ஒன்றுக்கு ஆணை வழங்க முடியும் என்றும் ‘வொய்ஸ் ஒவ் அமெரிககா‘ தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

அடுத்தடுத்த வாரங்களில் மகிந்த சந்திக்கப்போகும் கடுமையான சவால்கள்

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 12 செப்டம்பர், 2011 | 8:58 AM

திங்கள், 12 செப்டம்பர், 2011


சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அடுத்த சிலவாரங்களில் இராஜதந்திரமுனையில் கடுமையான சவால்களைச் சந்திக்கப் போவதாக கொழும்பு ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.

இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை சிறிலங்கா அரசாங்கம் கடுமையாகவே எதிர்கொள்கிறது.

இந்தக் கூட்டத்தொடருக்கு முன்னதாகவே அதிக அழுத்தங்களை சிறிலங்கா அரசாங்கம் சந்தித்துள்ளது.

இந்தநிலையில் கொழும்பு வரும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் பிளேக், நம்பகமான விசாரணை குறித்து மேலும் அழுத்தங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரும் நியுயோர்க்கில் நாளை தொடங்கவுள்ளது.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு தொடக்க நாளிலேயே உரையாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்ட சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு இம்முறை எதிர்வரும் 23ம் நாளே உரையாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது உரையில் சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்த சிறிலங்காவின் நிலைப்பாட்டை எடுத்து விளக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, போர்க்குற்ற விசாரணைகள் குறித்த அனைத்துலக அழுத்தங்கள் தொடர்பாக சிறிலங்காவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் மகிந்த ராஜபக்ச இருப்பதாக இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த விவகாரத்தை ஐ.நாவில் வாய் திறக்கப் போனால் வில்லங்கத்தை விலைக்கு வாங்க வேண்டியிருக்கும் என்று சிறிலங்கா அதிபரிடம் அவரது ஆலோசகர்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் | | Read More...

நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டில் குண்டு வீச்சு

Penulis : ۞உழவன்۞ on சனி, 10 செப்டம்பர், 2011 | 1:35 PM

சனி, 10 செப்டம்பர், 2011


நடிகரும், மைலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகரின் வீட்டில் கடந்த 5 ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பலினர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, நடிகர் எஸ்.வி.சேகர் பட்டினப்பாக்கம் போலீசில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த நாத்திகன் (வயது 25), சரவணன் (26), தாமரைக்கண்ணு (24), ஸ்டீபன் (25), விநாயகம் (26) ஆகிய 5 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger