News Update :

முள்ளிவாய்க்கால் முடிவல்ல திருப்பம், ஒன்றாய் எழுவோம் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

Penulis : Antony on புதன், 18 மே, 2011 | 12:30 PM

புதன், 18 மே, 2011


முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவு நிகழ்வு நாளை லண்டனில் நடைபெறவுள்ள நிலையில், அந்த நிகழ்வு பற்றியும், அதன் முக்கியத்துவம் தொடர்பாகவம், புலம்பெயர்ந்த மக்களின் பொறுப்பு பற்றியும்,
தமிழின உணர்வாளர்கள் தம் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல திருப்பம், ஒன்றாய் எழுவோம் - உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

‘முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல திருப்பம்’ என தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூறியதை நினைவுகூர்ந்த தமிழீழத்தின் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்த 2ஆம் ஆண்டு நினைவு நிகழ்வை நினைவேந்தும் நாளில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாய் எழுவோம் என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பிரிவுக்கு செவ்வி வழங்கிய ; உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், போர்க்குற்றம் என்பதில் இருந்து இன அழிப்பு, இனப்படுகொலை நடந்தது என்பதை உலகம் ஏற்கும் இட்டுச்செல்லும் பாரிய பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் பேரவலப் படுகொலைகளை தமிழர்கள் ஏன்றும் மறக்க முடியாது - பழ.நெடுமாறன்

முள்ளிவாய்க்காலில் தமிழ் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட பேரவல நிகழ்வை தமிழ் மக்கள் எவரும் மறந்துவிட முடியாது எனவும், மறக்கக்கூடாது என்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் ஐயா பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

மக்கள் பதைக்க பதைக்கப் படுகொலை செய்த பாதர்களை தண்டிக்கும் பொறுப்பு தமிழ் மக்களிற்கு இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் கனலாக, அனலாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

எந்த இலட்சத்தியத்திற்காக எமது மக்கள் உயிர்களை ஈகம் செய்தார்களோ, அந்த இலட்சியத் தீயை அனைவரும் ஏந்திப்பிடித்து முன்னேற வேண்டும் எனவும் பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்திருக்கின்றார்.

மக்களின் திரட்சியே, மாற்றத்திற்கான புரட்சி – செந்தமிழன் சீமான்

ஈழத்தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் வாழ்வதா?, அல்லது பிரிந்து சென்று சுதந்திரமாக வாழ்வதா? என்பதை ஈழத்தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என, செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழர் அரசை நிறுவதன் ஊடாக இந்தியாவையும், உலக நாடுகளை தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்க வைக்க முடியும் எனவும் சீமான் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பை நினைவுகொள்ளும் இந்த நாளில், தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்த போராடடத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.

முள்ளிவாய்க்கால் போன்ற பேரவலத்தை நான் பார்க்கவில்லை - தமிழிழன உணர்வாளர் சத்தியராஜ்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போது ஏற்பட்ட துக்கம் போன்ற கவலையை வாழ்நாளில் அனுபவிக்கவில்லை என தமிழின உணர்வாளரும், நடிகருமான சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் வாழும் தமிழ் உறவுகள் அனைவரும் நாளை லண்டனில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

யூதர்களுக்கு எவ்வாறு ஒரு தனிநாடு கிடைத்ததோ அதேபோன்று உலகம் எங்கும் சிதறிக் கிடக்கும் தமிழ் மக்களிற்கு ஒரு தனிநாடு நிச்சயம் கிடைக்கும், அதுதான் தமிழீழம் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

கருத்துகள் | | Read More...

மும்பை விமான நிலையத்தில் நடிகை கைது


அளவுக்கு அதிகமான தங்க நகைகளை மறைத்து எடுத்து வந்ததாக, பாலிவுட் நடிகை மினிசா லம்பா, மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற பின் மும்பை திரும்பிய அவர், அனுமதி பெறாமல் அளவுக்கு அதிகமான தங்க நகைகளை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து மும்பை விமான நிலையத்தில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான வைர நகைகளை வைத்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் நடிகை மனிஷாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் | | Read More...

இலங்கை அரசுக்கு எதிரான நிலைப்பாடு உலகில் வலுக்கிறது

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிரான போக்கு உலக அரங்கில் அதிகரித்து வருகிறது. அந்த அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ள போதும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கருத்தே பெரும்பாலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.ஆதரவு

இதுவரையில் சீனா, ரஷ்யா, மாலைதீவு ஆகிய நாடுகள் மட்டுமே நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றித் தலையிட்டுக் குழப்பக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்டது ஐ.நா. அறிக்கையே கிடையாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

அறிக்கை ஏன் இப்போது விடப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று மாலைதீவு ஜனாதிபதி தெரிவித்தார்.

எதிர்ப்பு

உலகெங்கும் 35க்கும் மேற்பட்ட நாடுகள் நிபுணர் குழு அறிக்கையை ஆதரித்துள்ளதுடன் இலங்கை அதனடிப்படையில் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

நிபுணர் குழுவின் அறிக்கை ஒரு வரப்பிரசாதம் என்று தெரிவித்துள்ளது பிரான்ஸ். இலங்கை அதிகாரிகள் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என்றும் அது கேட்டுள்ளது.

அறிக்கை தொடர்பில் ஐ.நாவுடன் இணைந்து பணியாற்றுமாறு ஜப்பான் வலியுறுத்தியுள்ளது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசு சரிவரச் செயற்படுத்தாவிட்டால் அனைத்துலக விசாரணை அவசியம் என்கிறது நியூஸிலாந்து. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கை விசாரித்தே ஆகவேண்டும் என்கிறது நோர்வே.

நிபுணர் குழு அறிக்கையைச் சாதகமான முறையில் பரிசீலிக்கும்படி இலங்கையை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது பிரிட்டன்.

அமெரிக்காவோ, இலங்கை தனது பொறுப்பை நிறைவேற்றுகிறதா என்பதையே முதலில் கவனிக்கிறோம் என்கிறது.

சுவிற்சர்லாந்து நிபுணர் குழுவின் அறிக்கையை வரவேற்றுள்ளது.

27 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய நாடாளுமன்றம், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கையைக் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் என்று இறுதியில் இந்தியாவும் வலியுறுத்தியுள்ளது.

எனினும் இந்தியாவுக்குள்ளே, பிரதான கட்சிகளான பாரதீய ஜனதாக் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் கட்சி, அதிமுக, திமுக, விடுலைச் சிறுத்தைகள், மதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி போன்றனவும் இலங்கைக்கு எதிரான கருத்துக்களையே கொண்டுள்ளன.
கருத்துகள் | | Read More...

சிறிலங்காவுக்கு பட்டியல் போட்டு அழுத்தம் கொடுத்தது இந்தியா - ஐ.நா அறிக்கை பற்றி ஒருவார்த்தையும் இல்லை


போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ள இந்தியா அவசரகாலச்சட்டத்தையும் உடனடியாக நீக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளது.

மூன்று நாள் பயணமாக இந்தியா சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் இந்தியாவின் நிலைப்பாடு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நேற்றுக்காலை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.



அதற்கு முன்னர் அவர், இந்தியாவின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.

இதன்போது, ஐ.நா நிபுணர்குழுவின் போர்க்குற்ற அறிக்கையால் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதற்கு இந்தியா நேரடியாகப் பதிலளிக்காத போதும், சிறிலங்கா நிறைவேற்ற வேண்டிய சில விடயங்களை அழுத்திக் கூறியுள்ளது.

இந்தச் சந்திப்புகளின் முடிவில் இருநாடுகளும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நேற்றுமாலை வெளியிட்டன.

அதில் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை பற்றியோ அதுதொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு பற்றியோ ஒரு வார்த்தை கூட இடம்பெறவில்லை.

ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை இந்தியா வலியுறுத்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கையை வைத்து இந்தியா பல்வேறு விடயங்களை சிறிலங்காவிடம் அழுத்தமாக கூறியுள்ளது.

அதிகாரப்பகிர்வு, அரசியல்தீர்வு, மீனவர்களின் பிரச்சினை, இந்தியாவின் திட்டங்களுக்கு இருந்து வந்த தடைகளை அகற்றல், அவசரகாலச் சட்டநீக்கம், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய விசாரணை என்று இந்தியா பல்வேறு விடயங்களை உடனடியாக நிறைவேற்றுமாறு சிறிலங்காவுக்கு அழுத்திக் கூறியுள்ளது.

அந்தக் கூட்டறிக்கையின் முழு விபரம் வருமாறு-

1. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கடந்த 15 திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

2. அவர் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளிவிவகார செயலர் நிருபமாராவ் ஆகியோரை சந்தித்து பேசினார்.

3. இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் தங்கள் பிரதிநிதிகளுடன் 16ம் நாள் அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்திய போது, இரு தரப்பினரும் பரஸ்பர நல்லுறவு பற்றிய விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.

2010ம் ஜூனில் சிறிலங்கா அதிபர் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. 2010ம் நவம்பரில் கொழும்பில் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்தில் நடத்தப்பட்ட கூட்டு ஆணைக்குழு கூட்டம் பற்றிய விபரங்களும் ஆராயப்பட்டது.

4. சிறிலங்காவில் ஆயுதப்போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பமானது, பல விடயங்களை புரிந்துணர்வுடனும், பரஸ்பர விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும், உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசியல் தூரநோக்கையும் கையாள்வதற்கான அரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பதை இருதரப்பும் ஏற்றுக் கொண்டுள்ளன.

சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்க்கட்சிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்களில் விரைவில் உறுதியான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு தமது அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் எடுத்துக் கூறினார்.

சிறிலங்கா அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்க முடியுமென்றும் சிறிலங்கா தரப்பு வலியுறுத்துகின்றது.

5. மீள்குடியேற்றம், நல்லிணக்கம் ஆகியவற்றில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகளான- தடுத்து வைத்திருத்தல், சட்டம், ஒழுங்கு, நிர்வாகம், மொழிப் பிரச்சினை, சமூக, பொருளாதார, வாழ்வாதாரப் பிரச்சினை போன்ற நடைமுறைப் பிரச்சினைகள் இருப்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு, சிறிலங்கா அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தி, மீள்குடியேற்றத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதன் மூலம், இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கு வகை செய்ய வேண்டும், அவசரகாலச்சட்டவிதிகளை கூடிய விரைவில் விலக்கிக் கொள்ள வேண்டும், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணைக்குட்படுத்த வேண்டும், இயல்புநிலையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

6. இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணத்தையும், மீள்குடியேற்றத்திற்கான வசதியையும் செய்து கொடுப்பதற்கு ஏற்புடைய வகையில், கண்ணிவெடிகளை அகற்றுவதற்கும் வாழ்வாதாரத்திற்கு உதவி செய்வதற்கும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளுக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நன்றி தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை அமைப்பதற்கும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களை மேற்கொள்வதிலும், காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், பலாலி துறைமுகத்தை புனரமைப்பு செய்வதற்கும், மருத்துவமனை மற்றும் பாடசாலைகளைத் திருத்துவதற்கும் கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும், தொழிற்பயிற்சி நிலையங்களை அமைப்பதற்கும், யாழ்ப்பாணத்தில் கலாசார நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், தொடருந்து சேவையை மீள ஆரம்பிப்பதற்கும், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கை புனர்நிர்மாணம் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நல்ல நிலையில் இருப்பதற்கும் இருதரப்பினரும் நன்றி தெரிவித்தனர்.

7. இந்தியாவின் உதவியுடன் சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொடருந்துப் பாதை அமைப்புத் திட்டங்கள் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர். இந்தத் திட்டங்களை நேரகாலத்தில் பூர்த்தி செய்வதற்கும் தாங்கள் வசதிகளை செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

2010ம் ஜூன் 9 கூட்டறிக்கையின் படி, கூட்டு அனல் மின்சார திட்டத்தை திருகோணமலையின் சம்பூரில் பூர்த்தி செய்வதற்கும், அதனையடுத்து உடன்பாட்டில் சேர்க்கப்பட்டுள்ள பளை- காங்கேசன்துறை தொடரூந்துப் பாதையை மீள் நிர்மாணம் செய்தல், புதிய சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்பை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கும், கூட்டுப் பொருளாதார உடன்பாட்டை விரைவில் தயாரித்து முடிப்பதற்கும் இணக்கப்பாட்டைத் தெரிவித்தனர்.

இந்திய, சிறிலங்கா மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு இடையில் தொடர்பை ஏற்படுத்துவது பற்றிய பகுப்பாய்வு தொடர்பான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தனர்.

பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்துவதிலும் சிறிலங்கா, இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.

8. 2011 மார்ச் 28,29ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெற்ற கடற்றொழில் பற்றிய கூட்டு செயற்குழு கூட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதிகாரத்தைப் பயன்படுத்துவதை விட கடற்றொழிலாளர்களை மனிதாபிமான முறையில் நடத்துவது அவசியம் என்ற கருத்தை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.

சிறிலங்கா கடல் எல்லைப் பிரதேசத்தில் இந்திய கடற்றொழிலாளர் களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், இது குறித்து இந்திய அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2008 ஒக்டோபர் 26ம் நாள் கடற்றொழில் ஒழுங்கு முறைகள் பற்றிய கூட்டு அறிக்கையைடுத்து, இப்போது இந்த வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளதை இருதரப்பினரும் ஏற்றுள்ளனர். சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கான உத்தேச உடன்பாட்டை விரைவில் பூர்த்தி செய்வதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

9. இரு தரப்பினரும் மக்களிடையே கலாசார நட்புறவையும் ஒருவர் ஒருவருடனான தொடர்புகளை வளர்த்து, நட்புறவை பேணிப் பாதுகாப்பதற்கு உதவக் கூடிய வகையில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும், இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினர்.

சிறிலங்காவில் உள்ள துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் சிறிலங்காவின் துறைமுக சேவைகளை விருத்தி செய்தல் தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் முதலீடு செய்வதற்கும் இணக்கப்பாட்டை தெரிவித்தனர்.

10. ஐ.நா பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளன.

11. ஐ.நா. பாதுகாப்புசபையின் நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவுக்கு உரித்தான ஒரு அங்கத்துவத்தை பெற்றுக் கொடுப்பதற்கு சிறிலங்கா வலுவான ஆதரவை அளிக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.


கருத்துகள் | | Read More...

அஜித்தின் முத்தத்திற்கு காத்திருந்த த்ரிஷா

Penulis : Antony on திங்கள், 16 மே, 2011 | 6:45 AM

திங்கள், 16 மே, 2011

முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதை ஒரு குறிக்கோளாகவே வைத்திருக்கிறார் அஜீத்.
அப்படியிருந்தும் மங்காத்தா படத்தில் ஒரு காட்சியில் த்ரிஷாவுக்கு உதட்டு முத்தம் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாராம் வெங்கட்பிரபு.


த்ரிஷாவும் ஆசையாக காத்திருந்தாராம். ஆனால் நான் அப்படியெல்லாம் நடிக்கவே மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டாராம் அஜீத். அப்புறம் வேறு வழியில்லாமல் அதை நவீன முறையில் எடுத்தார்களாம்.

இதற்கிடையில் இன்னொரு செய்தி மங்காத்தா பற்றி. இந்த படத்தின் கடைசி பகுதி ஊதியம் தேர்தல் முடிவுக்கு பிறகு தரப்படும் என்று கூறியிருந்தார்களாம். ஆனால் முடிவு வேறு மாதிரி ஆனதால் குழம்பி போயிருக்கிறார்களாம் அத்தனை பேரும்.
கருத்துகள் | | Read More...

அரசியல் பேச்சில் அரசுடன் திருப்திகரமாக இல்லையாம் - இந்தியாவிடம் கூட்டமைப்பு ஒப்பாரி

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாணும் நோக்கில் அரசுடன் நடத்தி வரும் பேச்சு நகர்ந்து செல்லும் போக்கு திருப்திகரமாக இல்லையாம் என்று இந்தியாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இலங்கை அரசுடன் 6 ஆம் கட்டப் பேச்சை முடித்துக்கொண்ட கூட்டமைப்பு பேச்சுக்குழு, நேரடியாக இந்தியத் தூதரகம் சென்று தூதர் அசோக் கே.காந்தை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ்பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கூட்டமைப்பினர் தெரிவித்த விடயங்கள் குறித்து டில்லிக்கு தான் விளக்குவார் என்று தூதர் அசோக் கே.காந்த் தெரிவித்துள்ளர்.
கருத்துகள் | | Read More...

ஒசாமா கொல்லப்பட்டதன் எதிரொலி: சவுதி நாட்டு தூதரக அதிகாரி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை


பாகிஸ்தானின் கராச்சி நகரில் சவுதி நாட்டைச் சேர்ந்த தூதரக அத‌ிகாரி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கராச்சியிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் பணி புரிந்து வந்த ஹசன் அல்-கஹடானி என்ற நபரே துபாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமைக்கான பழிவாங்கலாக இருக்கலாம் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்
கருத்துகள் | | Read More...

ஒசாமா பின்லேடனின் வசிப்பிடத்தில் ஆபாச வீடியோ படங்கள்

Penulis : Antony on ஞாயிறு, 15 மே, 2011 | 11:34 PM

ஞாயிறு, 15 மே, 2011


அல்கொய்தா போராளி குழுவின் தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஆபாச வீடியோ படங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் அபோதாபாத்திலுள்ள ஒசாமா பின்லேடனின் வசிப்பிடத்திலிருந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மேற்படி ஆபாச இலத்திரனியல் வீடியோ படங்கள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வீடியோ படங்கள் இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதேசமயம் ஒசாமா பின்லேடனின் வசிப்பிடத்திலும் வீடியோ புகைப்படக் கருவிகள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீடியோ ஆபாச படங்களை ஒசாமா பின்லேடன்தான் கண்டுகளிப்பதற்காக வைத்திருந்தாரா அல்லது வேறு நோக்கத்திற்காக அவை அங்கு வைக்கப்பட்டிருந்தனவா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் | | Read More...

யாழ்ப்பாணம் கிளிநொச்சியில்இரண்டு சடலங்கள் மீட்பு


யாழ்ப்பாணம் கச்சேரியடியிலுள்ள விடுதியிலிருந்து இளைஞன் ஒருவரது சடலமும் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன.

கச்சேரியடி சோமசுந்தரம் வீதியிலுள்ள விடுதியிலிருந்து மர்மமான முறையில் இறந்த இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைராசா சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது வாயில் இரத்தக்கசிவுடன் நுரையும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேபோல் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவரின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் உடற் பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமலதாசன் பவிதா (வயது 19) என்ற இளம்பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்துகள் | | Read More...

ஆபத்தில் இருந்து கணணியை பாதுகாக்க


நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் நம்முடைய கணணிக்கு ஆபத்தும் வளர்ந்து வருகிறது. தினம் தினம் புது புது வைரஸ்களும், மால்வேர்களும் உருவாகிக்கொண்டே இருக்கிறது.
இதனை தடுக்க நாம் பல ஆன்டிவைரஸ்களை உபயோகப்படுத்துகிறோம். இணையத்தில் ஏராளமான இலவச ஆன்ட்டி வைரஸ் இருந்தாலும் அவஸ்ட் ஆன்ட்டி வைரஸ் அதிக அளவில் உபயோகபடுத்தப்படுகிறது.

இப்பொழுது இந்த ஆன்ட்டிவைரசில் புதிய பதிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதன் பதிப்பான 6.0.1000 இருந்து பல மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் 6.0.1125 என்ற புதிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மென்பொருளின் சிறப்பம்சங்கள்:

1. அவஸ்ட் மென்பொருளை அனைவரும் உபயோக படுத்த காரணமே வைரஸ் மற்றும் மால்வேர்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது.

2. கணணியில் ஏதாவது புதிய வைரஸ் நுழைய முயன்றாலே தகவல் தெரிவித்து அதை அழித்து விடுகிறது.

3. இணையத்தில் சில மால்வேர் பாதிக்கப்பட்ட தளங்களுக்கு சென்றால் நமக்கு தகவல் தருகிறது.

4. வன்தட்டுக்களில் குறிப்பிட்ட அளவே இடத்தை எடுத்து கொள்வதால் கணணியின் வேகம் குறைவதில்லை.

5. வேகமாக கோப்புகளை ஸ்கேன் செய்ய கூடியது.

6. கோப்புகளை உபயோகித்து கொண்டிருந்தாலும் ஸ்கேன் செய்யும்.

7. ஸ்கிறீன் சேவர்களையும் ஸ்கேன் செய்யும் வசதி.

8. கணணி பூட் ஆகும் போதே ஸ்கேன் செய்யும் வசதி NT/2000/XP உபோகிப்பவர்களுக்கு மட்டும்.

இந்த மென்பொருளை நிறுவும் முறை:

நீங்கள் இந்த ஆன்ட்டிவைரசை ஏற்கனவே உபயோகித்து கொண்டு இருந்தால் நீங்கள் சுலமாக இந்த அப்டேட் வெர்சனை நிறுவி கொள்ளலாம்.

முதலில் கீழே டாஸ்க்பாரில் உள்ள அவஸ்ட் லோகோ மீது வலது க்ளிக் செய்து வரும் விண்டோவில் Update என்பதை க்ளிக் செய்து பிறகு Program என்பதை க்ளிக் செய்தால் போதும் உங்கள் கணணியில் புதிய பதிப்பு இன்ஸ்டால் ஆகிவிடும்.

ஏற்கனவே இந்த ஆன்ட்டி வைரஸ் மென்பொருளை உபயோகிக்காதவர்கள் கீழே உள்ள தரவிறக்க சுட்டியை கிளிக் செய்து உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

தரவிறக்க சுட்டி
கருத்துகள் | | Read More...

நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை


சிறிய நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை எதிர்ப்பதற்கு ஒரு கரண்டி சர்க்கரை வெகுவாக உதவுகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நோய் தொற்றை எதிர்க்கும் ஆண்டிபயாடிக் திறனை மேம்படுத்துவதில் சர்க்கரை முக்கிய பங்கு வகிக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு சில நுண் உயிரி தொற்றுகள் பாதிப்பு காரணமாக நோய்கள் நீண்ட காலம் இருப்பதுடன் அடிக்கடி நோய்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. மருந்தில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையை நுண் உயிரிகள் வீரியம் இழக்கச் செய்து விடுவதால் நோய் தொற்றுப் பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது.

நுண் உயிரிகளால் ஏற்படும் நோய் பாதிப்பை தவிர்க்க தாவர சர்க்கரை வகைகளான குளுக்கோஸ், ப்ரக்டோஸ் உதவுகிறது. ஒரு கரண்டி சர்க்கரை மருந்தின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து நுண் உயிரிக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் நோய்த் தொற்று அபாயமும் தவிர்க்கப்படுகிறது.

பாஸ்டன் பல்கலைகழக விஞ்ஞானிகள் சர்க்கரையை பயன்படுத்தி நுண் உயிரி சோதனையை செய்த போது இந்த உண்மை தெரியவந்தது. சிறுநீரக பாதையில் இ.கோலி என்ற பக்டீரியா நோய் தொற்றை ஏற்படுத்தும். இந்த பாதிப்பை அடிக்கடி ஏற்படுத்தும் நுண் உயிரியை 99.9 சதவீதம் 2 மணி நேரத்தில் சர்க்கரை உதவி மூலம் விஞ்ஞானிகள் அகற்றினர்.

சர்க்கரை இல்லாமல் உள்ள மருந்து உரிய பலன் அளிப்பதில்லை என்கிற இந்த ஆய்வு அறிக்கை நேச்சர் இதழில் வெளியாகி உள்ளது.
கருத்துகள் | | Read More...

சிறிலங்கா: 'போர் ஓய்ந்துள்ள போதிலும் பழைய வாழ்வை மீளப்பெற முடியவில்லை'

யுத்தம் ஒய்வுக்கு வந்தபிறகும்கூட வன்னியில் இராணுவத்தினரின் நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதுடன், வீதிக்கு வீதி காணப்படும் சோதனைச்சாவடிகள் மக்களின் இயல்பான போக்குவரத்துக்குத் தடையாக உள்ளன. பொதுக்கட்டடங்களின் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதுடன், வீதிச்சோதனைச் சாவடிகள் முழத்திற்கு முழம் அதாவது 200 மீற்றர் இடைவெளிகளில் காணப்படுகின்றன.

இவ்வாறு அ!வுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Sydney Morning Herald ஊடகத்தின் செய்தியாளர் Ben Doherty எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

சிறிலங்காவின் வடபகுதியில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது இரு ஆண்டுகளின் முன்னர் முடிவுக்கு வந்தபோதிலும்; அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்னமும் தொடர்வதாகத் தென்படுகிறது.

தமிழ்ப் புலிகள் என நன்கறியப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தைத் தடுக்கும் முகமாக மன்னாரிலுள்ள ஆன்னி மனுவேற்பிள்ளையின் (உண்மைப் பெயர் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளிப்படுத்தப்படவில்லை) கிராமத்தின் மீது சிறிலங்காப் படைகள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

ஆன்னியின் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதல்கள் மற்றும் அவரது கிராமம் முழுவதும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்கள் இக்கிராமத்து வாழ் மக்களின் வாழ்வைக் கேள்விக்குறியாக்க, ஆன்னியும் உயிர்த் தஞ்சங்கோரி பல முகாங்களில் அடைக்கலம் புகுந்தாள்.

ஆனால் இந்த இடங்கள் முதலில் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டு பின்னர் சில குறுகிய கால இடைவெளியில் போர்வலயங்களாக மாற்றப்பட்டபோது ஆன்னியும் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ளவேண்டியிருந்தது.

ஓராண்டுக்கு பின்னர் அவர் தனது சொந்த வீட்டிற்குச் சென்றபோது அவளது வீட்டுநிலை பார்க்க மிகப் பரிதாபகரமானதாக இருந்தது. வீட்டுச்சுவர்களை எறிகணைகள் பதம் பார்த்திருந்தன. வீட்டின் கூரையாக தறப்பாள் மாறிக்கொண்டது. வீட்டிற்கு வெளியே சமைத்துக் கொண்டு கையில் போதியளவு நிதியிருக்காதபோதிலும் மனதில் எஞ்சியிருந்த நம்பிக்கையுடன் அவள் மீண்டும் தனது வாழ்க்கையைக் கொண்டு நடாத்தத் தயாரானாள்.

கிராமத்து வாழ்க்கை மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கியது. புழுதி படிந்த வீதிகளில் இந்தக் கிராமத்து மக்களின் நாளாந்தங்கள் நகரத் தொடங்கியது. தமது வீட்டுத் தேவைகளுக்கு வேண்டிய நீரை நீர்த்தாங்கிகளிலிருந்து எடுத்து அவற்றை வாளிகளில் இந்தக் கிராமத்துச் சிறார்கள் காவிச்செல்ல வேண்டியிருந்தது.

இது இவ்வாறிருக்க, புலிகளால் விதைக்கப்பட்ட கண்ணிவெடிகளின் தொகை இங்கு அதிகமாக இருந்தது. பெருமளவான கண்ணிவெடிகள் தற்போது அகற்றப்பட்டுள்ளபோதிலும், பெரும்பாலான குடும்பங்களின் வயல்நிலங்களில் கண்ணிவெடிகளின் அபாயம் இன்றும் காணப்படுகின்றது.

"இங்கு வாழ்வதென்பது மிகக் கடினமான விடயமாகும். நாங்கள் முன்னிருந்ததை விட மிகவும் வறுமைநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலையில் எமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்த நாம் தினமும் யுத்தம் செய்கின்றோம். வெளிப்படையாகப் போர் ஓய்வுக்கு வந்தபோதிலும், எமது பழைய வாழ்வை எம்மால் மீளப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. எமது வயல்களில் சுதந்திரமாக நடமாடமுடியாதுள்ளது. சிலர் தமது காணிகளுக்கு மீள வரமுடியாதுள்ளனர்" என்கிறார் ஆன்னி.

சிறிலங்காவின் வடபகுதியில் அமைந்துள்ள வன்னிப் பெருநிலப்பரப்பு உள்ளடங்களாக தமிழர்களுக்குச் சொந்தமான இடங்களுக்கு அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் திரும்பிச் செல்லமுடியாதுள்ளனர் என ஆன்னி கவலையுடன் கூறுகிறார்.

தமது சொந்த நிலங்களுக்குச் செல்ல முடியாததமிழ்மக்கள் மொத்த சனத்தொகையில் 17 வீதமாவர். சிறிலங்காவின் மொத்த சனத்தொகையான 20 மில்லியனில் நான்கில் மூன்று பகுதியினராக தென்னிலங்கையில் வாழும் பெரும்பான்மைச் சிங்களவர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவிலிருந்து சிறிலங்காவிற்கு குடிபெயர்ந்த வந்தேறு குடிகளாகத் தமிழர் உள்ளனர் எனச் சிலர் கூறுகின்றனர். சிறிலங்கா சுதந்திரமடைந்த பின்னர் சிங்களவர்களால் தமிழர்கள் திட்டமிட்டு ஒடுக்கப்பட்டதாக வேறுசிலர் கூறுகின்றனர்.

புலிகள் 1983ல் 13 இராணுவ வீரர்களைக் கொலை செய்தமை, சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வன்முறை வெடிக்கக் காலாக இருந்தது. 1983 கலவரத்தில் 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பலர் கடத்தப்பட்டனர், பலர் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். தமிழ் வர்த்தகர்களின் கடைகள் எரிக்கப்பட்டதுடன் பொருட்களும் சூறையாடப்பட்டன.

அதுநாள்வரையிலும் தென்பகுதியில் வாழ்ந்த தமிழர்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக வடகிழக்கு நோக்கித் தப்பியோடினர். இவர்களில் பலர் புலிகளின் பயிற்சி முகாங்களுக்கும் சென்றனர். இவ்வாறு வெடித்த இந்தக் கலவரம் இரு இனத்தவர்களுக்குமிடையிலான போராக மாறி கால் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்தது.

வன்னிப்பெருநிலப்பரப்பு உண்மையில் ஒரு அழகான இடமல்ல. இது மிகவும் வறண்ட உலர்ந்த நிலப்பரப்பாகவும், சனத்தொகை அடர்த்தி மிகக்குறைந்த பிரதேசமாகவும் காணப்பட்டது.

ஆனால் யுத்த காலப்பகுதியில், இப்பிரதேசத்தில் வாழ்ந்த 40,000 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 3,00,000 இற்கும் மேற்பட்டோர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா வின் மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறிலங்காவின் வடபகுதியைச் சேர்ந்தமக்களில் குறைந்த எண்ணிக்கையானோர் தமது வாழிடங்களை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். சில பகுதிகளில், மீள்புனரமைப்புப் பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ள போதிலும் இவர்களுக்கு இந்தப் பணி மிகவும் சவாலானதாகவே உள்ளது.

இந்நிலையில் "உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களில் 95 வீதத்தினர் 18 மாதங்களில் அதாவது மிக்ககுறுகிய காலப்பகுதியில் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளமை சிறிலங்கா அரசாங்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகின்றது" என இவ்வாரம் ஐ.நா வின் பாதுகாப்புசபைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சிறிலங்காப் பிரதிநிதி பாலித கோகன்ன தெரிவித்திருந்தார்.

ஆனால் வன்னிப்பெருநிலப்பரப்பில் தற்போதும் போர் எச்சங்கள் காணப்படுகின்றன. கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஏற்படும் தாமதம், குறிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவத்தின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாத நிலை, வீடுகட்டித் தரப்படும் என்ற உறுதிப்பாடு நிறைவேற்றப்படாமை போன்ற பல்வேறு காரணங்களால் இன்னமும் 18,000 வரையானோர் இடம்பெயர்ந்த முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

போர் முடிவுக்கு வந்ததையடுத்து 300000 வரையான மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என அரசாங்கத்தால் கூறப்படுகின்றது.

"செய்வதற்கு நிறைய உள்ளது. ஆனால் 2011 முடிவதற்குள் நாங்கள் முழுச் செயநற்பாடுகளையும் பூர்த்தி செய்துவிடுவோம்" என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் உத்பால பஸ்நாயக்கா [Uthpala Basnayakaye] கடந்த பெப்ரவரியில் உறுதியளித்திருந்தார்.

புலி உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 4,000 வரையானோர் தற்போது இராணுவத்தின் இரகசிய 'புனர்வாழ்வு முகாங்களில்' அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது பெயர்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆயிரக்கணக்கான பெற்றோர், மனைவிமார், பிள்ளைகள் தமது பிள்ளைகள், கணவன்மார், மற்றும் தந்தையார் இன்னமும் உயிருடனிருக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முடிவுக்கு வந்துள்ள சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில் இரு தரப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பான அறிக்கையை ஐ.நா வெளியிட்டதன் பின்னரே இவ்வாறான இரகசிய வதைமுகாங்களில் புலிச்சந்தேநபர்கள் அடைத்துவைக்கப்பட்டிருந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

போர் முடிவிற்கு வந்ததும், சிறிலங்காப் படைகளிடம் சரணடைந்த 11,600 வரையிலான தமிழ்ப் புலிப் போராளிகள், படையினரால் நிர்வகிக்கப்படும் 'புனர்வாழ்வு முகாங்களுக்குக்' கொண்டுசெல்லப்பட்டனர். இவர்களில் 6,000 வரையிலானோர் மீளவிடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போதும் 4,343 வரையான புலிச் சந்தேக நபர்கள் 24 புனர்வாழ்வு முகாங்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்.

"இந்த இளைஞர்கள் தமது வாழ்க்கையில் மிகக் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமது வாழ்க்கையின் வசந்த காலத்தைத் தொலைத்துவிட்டனர். இவர்களது எதிர்மறை எண்ணங்களை சாதகமாக மாற்றி சமூக நீரோட்டத்துடன் இவர்களை இணைப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும். ஆனாலும் பல்வேறு வகையன முறைகளின் ஊடாக இவர்களின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவர நாம் மிகப் பிரயத்தனப்பட்டுள்ளோம்" என புனர்வாழ்வுக்கான உயர் ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் 'நல்லதொரு சிறந்த பணியை' ஆற்றுகிறார் எனக் கூறியுள்ள தமிழ்த் தெசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தெடர்ச்சியாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைப்பதென்பது ஆபத்தானதும் சட்டரீதியற்றதுமான ஒரு நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கபட்டவர்களுக்கு புனர்வாழ்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றபோதிலும், வல்லுறவு, பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல் போன்ற பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடாத சந்தேகநபர்கள் இரு ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்" என அண்மையில் ஐ.நா வின் வல்லுனர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள 200 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவிற்குள் இடம்பெற்ற பல்வேறு விதமான குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் என்கப இந்த அறிக்கையில் மிகவும் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

"சிறிலங்காவில் அமைதி நிலவ நாம் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டோம் என்பதை உலகின் முன் சமர்ப்பிக்கவுள்ளோம். அத்துடன், உள்நாட்டுக்குள் இடம்பெற்ற மோதலை முடிவுக்குக் கொண்டு வர நாம் பட்ட முயற்சிகளையும் அனைத்துலகத்திடம் ஒப்புவிப்போம்" என அதிபர் மகிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது, விடுதலைப் புலிகளாலும், அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக்குற்றங்களை தெளிவுபடுத்திக்காட்டியுள்ளபோதிலும் அரசாங்கத் தரப்புக் குற்றங்கள் மிகக்கடுமையானதாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டுகின்றது.

அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட வைத்தியசாலைகள் மீதான குண்டுத்தாக்குதல்கள், பாதுகாப்பு வலயங்களில் குடியிருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல்கள், ஐ.நா மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் மீதான தாக்குதல்கள் ஆகியவை ஐ.நாவால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் ஆதாரங்களுடன் ஆவணமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைவதற்காக வந்த புலிகள் மற்றும் பொதுமக்கள் உட்படப் பலர் உயிருடன் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு சிறிலங்கா அதிபர், மற்றும் அவரது சகோதரன், மூத்த அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் காரணமாக இருந்துள்ளனர் எனவும் இந்த அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.

யுத்தம் ஒய்வுக்கு வந்தபிறகும்கூட வன்னியில் இராணுவத்தினரின் நடமாட்டங்கள் அதிகமாக இருப்பதுடன், வீதிக்கு வீதி காணப்படும் சோதனைச்சாவடிகள் மக்களின் இயல்பான போக்குவரத்துக்குத் தடையாக உள்ளன. பொதுக்கட்டடங்களின் இராணுவத்தினர் குடிகொண்டுள்ளதுடன், வீதிச்சோதனைச் சாவடிகள் முழத்திற்கு முழம் அதாவது 200 மீற்றர் இடைவெளிகளில் காணப்படுகின்றன.

'யுத்த கதாநாயகர்களுக்காக' சிறிலங்கா அரசாங்கத்தால் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள றணசெயபுர என்ற குடியேற்ற இடத்திலிருந்து 50 கிலோமீற்றருக்கும் குறைவான தூரத்திலேயே ஆன்னியின் வீடும் அமைந்துள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சிறப்புச்சந்தைகள் எனப் பல நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த இராணுவ வீரர்களுக்கான குடியிருப்பானது மூன்று அறைகளைக் கொண்ட 1500 வீடுகளையும் உள்ளடக்கியுள்ளது. வடக்கில் பணியாற்றும் 50,000 வீரர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள முதலாவது குடியிருப்பு இதுவாகும்.

இவ்வாறு திட்டமிட்ட ஒரு சிங்களக் குடியேற்றமாக வன்னி மாற்றப்பட்டுவருவது மிகவும் கவலைக்குரியதென தமிழ்த் தலைவர்கள் கூறுகின்றனர். தமிழ்ப் புலிகளுக்கும் சிறிலங்கா அரச படைகளுக்கும் இடையில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற குறுகிய நிலப்பரப்பைக் கொண்ட முல்லைத்தீவுக் கடல்நீரேரியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் போரின் போது சிந்தப்பட்ட குருதி இன்னமும் இங்கு உறைந்து காணப்படும் நிலையில், இதன் பெரும்பாலான பிரதேசங்கள் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டிலேயே உள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் சில கிராமத்து மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

உக்கிர போர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் விவசாயியாக இருந்த 73 வயதான நேசமணி சுகுமார் தற்போது ஒரு பெட்டிக்கடையின் சொந்தக்காரன். தனது சொந்த நிலத்தில் மீளப் பயிர்செய்ய முடியாத நிலையில் இவர் விளையாட்டுப் பொருட்கள், மென்பானங்கள் போன்றவற்றை விற்கும் கடையை நடாத்துகிறார்.

இவரின் நாளாந்த வியாபாரம் மிகக் குறைவாக உள்ளது. இவரது மகனும் மகளும் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். இவரது அயலவர்கள் காணாமற்போய்விட்டனர். அவர்களுக்கு என்ன நடந்ததென்பது அவருக்குத் தெரியாது.

"போரின் முன்னர் என்னிடம் பணம் தாராளமாக இருந்தது. என்னிடம் மிக அழகான வீடிருந்தது. எனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் கொண்டிருந்தேன். போரின் விளைவு நான் எல்லாவற்றுடனும் எனது அனைத்து உறவுகளையும் இழந்துவிட்டன்" என தனது விரல்களை நெஞ்சில் வைத்தவாறு சுகுமார் நெஞ்சம் நெகிழ்கிறார்.
கருத்துகள் | | Read More...

ஜெயலலிதா அரசு புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம்: வெள்ளையன்


எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு புரட்சி கரமாக செயல்பட்டு புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் கூயுள்ளார்.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

சாமானிய மக்களை வெகுவாக பாதித்திருக்கும் விலைவாசியைக் குறைக்கவும் மின்வெட்டை சீர்செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு முதல் அமைச்சர் பொறுப்பேற்க இருக்கும் ஜெயலலிதாவை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.




எங்கள் வணிகர் பேரவை நடத்திய விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடு அமோக வெற்றி பெற்றதைப் போல அதன் கருத்தின் வலிமையும் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

அரசின் கஜானா சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட்டு மக்கள் நலனும் மக்களின் சுயதொழில்களும் காக்கப்பட வேண்டும். அந்நிய ஆதிக்கத்தில் இருந்து நாட்டின் சுதந்திரம் காக்கப்படவேண்டும்.

அதற்கு ஏற்றாற்போல் தவறான பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப்பட வேண்டும். அதற்கு எம்.ஜி.ஆர். வழிவந்த ஜெயலலிதா அரசு புரட்சி கரமாக செயல்பட்டு புதிய வரலாறு படைக்க வாழ்த்துகிறோம். இவ்வாறு த.வெள்ளையன் கூறினார்.
கருத்துகள் | | Read More...

கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க

Penulis : Antony on சனி, 14 மே, 2011 | 2:24 PM

சனி, 14 மே, 2011


கொலைக்குற்றவாளியாகி கம்பி எண்ணவிருந்த மஹிந்த ராஜபக்ஷவை தப்பவிட்டு, ஜனாதிபதியாக வரவிட்டது ரணில் விக்கிரமசிங்கவின் குற்றமென பொலிஸ் மா அதிபர் குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.
அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வெளியாட்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபரை கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்திருந்தார். அதன் காரணமாக மனம் நொந்துபோன அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன் மனக்குறையை வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது பொலிஸ் மா அதிபர் பாலசூரிய இதுவரை வெளிவராமல் பொலிஸ் புத்தகங்களுக்குள் மட்டும் மறைந்து போயிருந்த பல உண்மைகளைத் தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் விபரம் கீழ்வருமாறு,

1991ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமான பிரதேச அரசியல் சகாவான பெலியத்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.கே. குணரத்தின என்பவர், பிரதேச சபையின் பதவிப் பிரச்சினையொன்றின் காரணமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார்.

அதன் பின் பெலியத்தை பிரதேச சபைத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.அதன் மூலம் அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்பட்டது.

ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் 1997ம் ஆண்டு பிரஸ்தாப குணரத்தின மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 1997ம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் காமினி அத்துக்கோரளையும் இணைந்து பெலியத்தையில் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. பொதுச் செயலாளருமான காமினி அத்துக்கோரளை, ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் கொலையாளிகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் படுகொலை மாத்திரமன்றி, தங்காலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜினதாச வீரசிங்கவின் புதல்வர் லலித் வீரசிங்க படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் விசாரிக்கவென குற்றப்புலனாய்வு அதிகாரிகளைக் கொண்ட விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அன்றைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க பிரஸ்தாப படுகொலைச் சம்பவங்களின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லயனல் குணதிலக்கவிடம் ஒப்படைத்திருந்ததுடன், குற்றப்புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ். ஞானரத்தின அவரின் கீழ் பணியாற்றியிருந்தார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவின் விசாரணைகளின் போது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் அன்றைய (1994-2002) அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான சகாவான சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித் என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருந்தன.

அவரைக் கைது செய்து விசாரித்தபோது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும் மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவே தன்னைப் பணித்திருந்ததாகவும், கொலைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் ரகத்தைச்சோ்ந்தது என்றும், அதனை மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலையில் அமைந்திருக்கும் கால்டன் வீட்டின் மேற்கூரையில் ஒளித்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் பணிக்கப்பட்டுள்ளார்.

அதற்கேற்ப உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின தலைமையிலான விசேட பொலிஸ் குழுவொன்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராபஜக்ஷவைக் கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், அது பற்றிய தகவல் அறிந்த அவர் உடனடியாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் கெஞ்சியிருக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.ஆயினும் ஜோன் அமரதுங்க அதற்கு பெரிதாக இசைந்து கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அதன்போது அவருக்கு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளித்த ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவைக் கைதுசெய்வதென்பது அன்றைய ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அரசியல் ரீதியில் பெரும் அனுகூலமாக அமைந்து விடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியிலான பிளவுகள் தொடர இடமளிப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயக்கும் என்பதன் காரணமாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் களநிலவரம் அறிந்து பணியாற்றுமாறு அவர் ஜோன் அமரதுங்கவைப் பணித்துள்ளார்.

அதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் போய்க் கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவைத் தனது மொபைல் போன் ஊடாகத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசாரணை நடவடிக்கைககளைக் கைவிட்டு உடனடியாகக் கொழும்புக்குத் திரும்பி வரும்படி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி அதன்பின் படுகொலை செய்யப்பட்ட குணரத்தின மற்றும் லலித் வீரசிங்க ஆகியோரின் கொலைச்சம்பவங்களின் விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின் வந்த காலத்தில் பிரஸ்தாப விசாரணை தொடர்பாக தங்காலை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகம் என்பவற்றில் பாதுகாக்கப்பட்டிருந்த அறிக்கைகளும் காணாமற்போயிருந்தன.

அதன்பின் வந்த காலப்பகுதியில் விசாரணைகளின் போது தன்னைக் காட்டிக்கொடுத்த கடுப்பில் தென் மாகாண அமைச்சராக இருந்த சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித்தை வம்பொட்டா என்றொரு பாதாள கும்பல் தலைவன் ஊடாக மஹிந்த ராஜபக்ஷ தீர்த்துக் கட்டியிருந்தார்.அதனையடுத்து வந்த சில வருடங்களுக்குள் வம்பொட்டாவும் இனந்தெரியாத நபர்களால் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட படுகொலைகளிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இன்றைக்கு நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருக்கும் அதிர்ஷ்டமும் அவருக்குக் கிட்டியுள்ளது.
கருத்துகள் | | Read More...

ஜெயலலிதா - கே.பாலச்சந்தர் சந்திப்பு

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் கே.பாலச்சந்தர் சந்தித்தார். அப்போது, தாதாசாகிப் பால்கே விருது பெற்றதற்காக ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்றார். அதமுக கூட்டணி வெற்றிப் பெற்றதற்காக கே.பாலச்சந்தரும் வாழ்த்து தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

புலித்தேவனுக்கு பாலித கோஹன்ன தகவல் வழங்கினாரா?

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு அ!வுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் Sydney Morning Herald ஊடகத்தின் செய்தியாளர் Ben Doherty எழுதியுள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக [puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அதன் முழுவிபரமாவது,

சிறிலங்காவில் முல்லைத்தீவு விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தம் இடம்பெற்ற இடம். அவ்வேளையில், தொலைபேசி ஊடாகவும் வேறுவழிமுறைகளிலும் நிபந்தனையற்ற சரணடைதலுக்குப் ஒப்புக்கொண்ட புலிகள் போர் வலயத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேறுவதற்கான வழிகளை கோரியிருந்தனர்.

தற்போது இச்சம்பவம் நிகழ்ந்து இரு ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியப் குடியுரிமை பெற்றவரும், மூத்த சிறிலங்கா இராஜதந்திரியுயான பாலித ஹோகன்ன, சரணடைய வந்த தமிழர்களைக் கொலை செய்தமைக்காகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

இரத்தம் தோய்ந்த முல்லைத்தீவுக் கடற்கரையில் முடிவுற்ற சிறிலங்காவின் உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு Herald [Sydney Morning Herald] ஊடகத்தின் விசாரணையானது ஒரு இறுதி முயற்சியாக பார்க்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப்புலிகளால் தனிநாடு கோரி சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கால் நூற்றாண்டுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட போரானது மே 2009ல் முடிவுக்கு வந்தது.

சிறிலங்காத் தீவின் மூன்றில் ஒரு பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்த பயங்கரவாத புலிகளின் இராணுவம் கடலால் சூழப்பட்ட, கடல்நீரேரியான, குறுகிய கரையோரப்பகுதிக்குள் தள்ளப்பட்டு சிறிலங்கா இராணுவத்தின் முன்னேற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் தோல்வியைச் சந்தித்துக்கொண்டது.

பெரும்பாலான புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே போடுவதைவிட சாகும் வரை போராடவே விரும்பினார்கள். ஆனால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேறுவழியின்றி சரணடைய முன்வந்தனர்.

மூர்க்கமான எறிகணைத்தாக்குதல்களின் மத்தியில் போதியளவு சார்ஜ் அற்ற பற்றறிகளைக் கொண்ட செல்லிடத்தொலைபேசிகளின் உதவியுடன் புலிகள் தம்மைக் காப்பாற்றக்கூடிய எல்லோருக்கும் தமது நிலைப்பாடுகள் தொடர்பான தகவல்களை அனுப்பினர்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கும், புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் தமக்குத் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினரின் உதவியையும் புலிகள் இறுதி நேரத்தில் நாடினர்.

அவர்கள் பல அழைப்புக்களை தொலைபேசிகளின் வழியே மேற்கொண்டனர். சிறிலங்காவின் வெளிவிவகாரச் செயலரும், புலிகளிற்கெதிரான சிறிலங்காப் படைகளின் யுத்தத்தின் போது தமது தரப்புத் தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்த பாலித ஹோகன்ன விற்குப் புலிகள் ஐரோப்பிய இடைத்தரகர் ஒருவரின் ஊடாக தகவல் ஒன்றை வழங்கியிருந்தனர்.

சிறிலங்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் இரட்டைக் குடியுரிமை பெற்ற பாலித ஹோகன்ன வெளிநாட்டு வர்த்தக மற்றும் விவகாரங்கள் என்ற திணைக்களத்தின் அவுஸ்திரேலியாவிற்கான இராஜதந்திரியாகவும் வர்த்தகத் துறைக்கான சமரசவாளராகவும் செயற்பட்டிருந்தார்.

இவர் தற்போது சிறிலங்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாகவும் அவுஸ்திரேலியத் தூதராகவும் உள்ளார்.

புலிகளின் சமாதானச் செயலகத்திற்குப் பொறுப்பாகவிருந்த புலித்தேவனால் அனுப்பப்பட்ட தகவலைப் இவர் பெற்றிருந்தார். புலித்தேவன் ஒரு இராணுவ வீரர் அல்லர். ஆனால் இவர் புலிகளின் கொள்கை தயாரிப்பாளர்களில் மிகவும் முக்கியமான நபராவார். அவர் நிபந்தனையற்ற சரணடைதலுக்கான தகவலை வழங்கியிருந்தார்.

இவருடன் இணைந்து இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் புலிகளின் அரசியற் பொறுப்பாளராகச் செயற்பட்ட நடேசன், புலிகளின் கேணல்களில் ஒருவரான ரமேஸ், மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடன் முல்லைத்தீவுக்கரையிலிருந்து செல்ல விரும்பினர்.

சில மணித்தியாலங்களின் பின்னர் வெள்ளைக்கொடியுடன் இவர்கள் பாதுகாப்பாக சரணடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் 58வது இராணுவ நிலைக்கூடாக பாதுகாப்பான வழியில் இவர்கள் சரணடைவதற்குரிய ஒருவழியும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. படைவீரர்களிடமும் இவர்களை எதிர்பார்க்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

மே 17 ஞாயிற்றுக்கிழமை மு.ப 8.46 மணிக்கு மூன்றாந்தரப்பின் உதவியுடன் புலித்தேவனுக்கு ஹோகன்னவிடமிருந்து எழுத்து மூலத்தகவல் ஒன்று தொலைபேசி ஊடாக வழங்கப்பட்டது.

"படையினர் நிலைகொண்டிருக்கும் இடத்திற்கூடாக மிக மெதுவாக நடந்து வரவும். அத்துடன் வெள்ளைக்கொடியைக் கையில் ஏந்தியவாறு தரப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். இராணுவ வீரர்கள் தற்கொலைக் குண்டுதாரிகள் தொடர்பாக அச்சமடைகிறார்கள்" என அந்ததகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்தநாள் காலை 6.30 மணிக்கு புலித்தேவன், நடேசன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உள்ளடங்கலாக வெள்ளைக் கொடிகளைத் தமது தலைக்கு மேலால் உயர்த்தியவாறு தமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக 58வது இராணுவ நிலைகளை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

யுத்த வலயத்தில் இவர்கள் இராணுவத்திடம் சரணடையச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழர் ஒருவர் பின்வருமாறு தனது கருத்தை Herald இடம் கூறுகிறார். இவர் இச்சம்பவத்தின் பின்னர் சிறிலங்காவை விட்டு வெளியேறிவிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக இவரது பெயர் தெரியப்படுத்தப்படவில்லை.

"எனது இரு கண்களாலும் அவர்களை நான் கண்டேன். புலித்தேவன், நடேசன் முன்செல்ல ஏனையோர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அவர்களின் கைகளில் ஆயதங்கள் இருக்கவில்லை. அவர்கள் நிராயுதபாணிகளாகவே இருந்தார்கள். இராணுவ வீரர்களை நோக்கி அவர்கள் நடந்து சென்றார்கள். அந்த வீரர்கள் truck வாகனங்களை வைத்திருந்தனர். அந்த வாகனங்களின் பின்னால் சரணடையச் சென்றவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் எங்களால் அவர்களைப் பார்க்கமுடியாமல் போய்விட்டது. அதன்பின்னர் எமக்குத் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அவர்கள் முனகும் ஒலியும் கேட்டது. துப்பாக்கிப் பிரயோகம் இயந்திரத் துப்பாக்கிகள் போன்று மிகவேகமானதாக இருந்தது".

"அவர் சரணடைய முன்வருகிறார். ஆனால் நீங்கள் அவரை சுடுகிறீர்கள்" ஒரு சிங்களப் பெண்ணான புலித்தேவனின் மனைவி படைவீரர்களிடம் இவ்வாறு கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இடம்பெற்று அரை மணித்தியாலத்தில் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற செய்தி ஊடகங்களின்; வாயிலாக வெளிவந்தது. புலித்தேவனது மனையிவின் சடலமும் கண்டெடுக்கப்பட்டது. அன்றைய நாள் யுத்தமும் ஓய்வுக்கு வந்தது.

அதன் பின்னர் வந்த சில நாட்களில் சரணடையச் சென்றவர்கள் சிலரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால் நிறையப் பேரின் உடலங்கள் கிடைக்கவில்லை. இராணுவத்திடம் சரணடையச் சென்றவர்கள் உயிருடனில்லை என நம்பப்படுகிறது.

புலிகளுடன் எவ்வித சமரச முயற்சிகளையும் மேற்கொள்ளும் நோக்குடன் தான் எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை என Herald இடம் ஹோகன்ன தெரித்தார். "நான் சிறிலங்காவின் வெளியுறவுச் செயலர். படையினருக்குக் கட்டளையிடும் அதிகாரமோ அல்லது பயங்கரவாதிகள் சரணடைதல் தொடர்பாகக் கலந்தாலோசிப்பதற்கான அதிகாரமோ எனக்கில்லை. இதனை நான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்யமுடியாது" சரணடையச் சென்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தன்னால் நம்பமுடியாமல் உள்ளதாக ஹோகன்ன தெரிவித்தார்.

"தொலைபேசி வழிவந்த எழுத்த மூலத்தகவல் ஒரு விசாரணைக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருந்தது. ஆனால் புலிகளுடன் தொடர்புடைய எவரும் இந்த விடயத்தில் தொடர்புபடவில்லை. சரணடைவதற்குரிய முயற்சிகளைச் செய்யவேண்டும் என்ற ரீதியில் அந்தத்தகவல் அனுப்பப்படவில்லை. அதனைச் செய்வதற்குரிய அதிகாரமும் எனக்கிருக்கவில்லை" என்கிறார் ஹோகன்ன.

மூன்றாந்தரப்பொன்றிற்கு செய்தி ஒன்று ஹோகன்னவால் அனுப்பப்பட்டது என்பதை மூன்று வெவ்வேறு தரப்புக்களின் மூலம் Herald உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரனான பாதுகாப்புச் செயலர் பசில் ராஜபக்ச ஆகிய இருவரதும் ஒப்புதலுடனும் புலிகளின் தலைவர்களால் அனுப்பப்பட்ட சரணடைவதற்கான வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் என கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சிறிலங்கா விவகாரம் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"பசில் ராஜபக்சாவின் ஆலோசனைக்கமைவாக வெள்ளைக்கொடிகளை உயர்த்தியவாறு இராணுவ முன்னரங்கை நோக்கி மெதுவாக நடந்துவரும்படி புலிகளின் தலைவர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டது"

புலிகள் சரணடைவதை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுத்த பசில் ராஜபக்ச மற்றும் அவரது மற்றுமொரு சகோதரனான கோத்தாபய ஆகிய இருவரிடமும், புலிகளின் தலைவர்களிடமும் நோர்வேத் தூதர் தொடர்பைக் கொண்டிருந்தார் என்பது அமெரிக்கத்தூதரக வட்டாரத் தகவல்களிடமிருந்து வெளிப்பட்டுள்ளன.

சரணடையும் சகல புலிகளையும் வழமையான நியமங்களுக்கு உட்படுத்தாமல் உடனடியாக கொலைசெய்யுமாறு சண்டைக்களத்திலிருந்த இராணுவத்தளபதி ஒருவரால் படைவீரர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவரிடம் Herald மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. நிராயுதபாணிகளாகச் சரணடைந்த புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்று ஏனைய தமிழ்மக்கள் சரணடைவதை உறுதிப்படுத்திக்கொண்டது.

மனிதாபிமான மீடபு நடவடிக்கையைத் தான் மேற்கொண்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

"பொதுமக்கள் தரப்பில் எவ்வித இழப்புக்களுமின்றி அரசாங்கம் தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது" என இவ்வாரம் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாலித ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

புலித்தேவன் மற்றம் நடேசனின் மரணம் தொடர்பாக தனக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை என Herald இடம் ஹோகன்ன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் காணப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சரியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களை ஏறறுக்கொள்ளமுடியாதது போல் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை தென்படுகிறது.
கருத்துகள் | | Read More...

ராஜினாமா கடிதத்துடன் அலையும் அதிகாரிகள்

தமிழக சட்டபேரவை தேர்தலில் தி.மு.க படுதோல்வி அடைந்ததையடுத்து பல அரசு அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர் சையத் இப்ரஹிம்(தி.மு.க). நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இவரது வார்டுக்கு உட்பட்ட பகுதியில், அ.தி.மு.க வுக்கு அதிகளவு ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இவர் தேர்தல் தோல்விக்கு தார்மீக தேர்வுக்கு பொறுப்பேற்று தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்தார். ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி உதவி ஆணையரிடம் கொடுக்க வந்தார்.

ஆனால் அவர் ராஜினாமா கடிதம் பெற மறுக்கவே ஆணையரிடம் சென்றார். ஆனால் ஆணயரும் ராஜினாமா கடிதத்தை பெற மறுத்துவிட்டார்.

‌முறைப்படி மேயரிடம் தான் ராஜினாமா கடிதத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை மேயரிடம் கொடுப்பதற்காக கவுன்சிலர் அலைந்து திரிகிறார்.

மேலும் மதுரை மாவட்ட குற்றவியல் மற்றும் பொது அரசு வக்கீல்கள் ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் ராஜினாமா கடிதத்தை மாவட்ட கலெக்டர், மாவட்ட தலைமை நீதிபதி மற்றும் உள்துறை செயலருக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் | | Read More...

ஜெயலலிதாவிற்கு சோனியா மற்றும் மன்மோகன் சிங் வாழ்த்து

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று அபார வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா மற்றும் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

அபார வெற்றி பெற்று, மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதாவுக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு சோனியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி திரும்பினார்.

அதிமுக வெற்றி பெற்றது குறித்து அறிந்த பிரதமர் மன்மோகன்சிங் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். இவர்கள் இருவருக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger