News Update :

நல்லெண்ணத்தை வெளிப்படுத்த எதிர்த்து வாக்களிக்கவில்லை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம்

Penulis : Antony on செவ்வாய், 30 நவம்பர், 2010 | 11:34 AM

செவ்வாய், 30 நவம்பர், 2010

மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் எமது நல்லெணத்தை வெளிப்படுத்துதற்காகவே வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2011ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காதது ஏன் என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “வரவுசெலவு திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி ஆராய்ந்தது.

நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த வரவுசெலவு திட்டமானது தமிழ் மக்களுக்கு குறிப்பாக இடம்பெயர்ந்து இன்னலுற்றிருக்கும் மக்களுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் வழங்கவில்லை.

இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்துவது தான் தமது முன்னுரிமையென அரசாங்கம் கூறி வருகின்றது.

ஆனால் வரவு செலவு திட்ட ஒதுக்கீடுகளில் அரசாங்கத்தின் இந்தக் கூற்று எந்தவித்திலும் பிரதிபலிக்கவில்லை.

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த எமது மக்கள் பல வருடங்களாக தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்து சொல்லொணாத் துன்ப நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த மக்களின் மீள்குடியேற்றம் பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் அதி முக்கிய கடமையாகும்.

வரவுசெலவு திட்டத்திலும் மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வேலைகள் தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்கள் எதுவும் இல்லை.

இந்த வரவு செலவு திட்டம் அந்தக் கடமைகளை நிறைவேற்றத் தவறியுள்ளது.

இதற்கு மேலாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு போர் முடிவடைந்த பின்னரும் ஆண்டாண்டு கூடிக் கொண்டே செல்கின்றது.

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான நாம் இவற்றை ஆராய்ந்து பார்த்த போது இந்த வரவுசெலவு திட்டத்தை எந்த அடிப்படையிலும் ஆதரிக்க முடியாது என்பதே எமது உறுதியான தீர்மானமாக இருந்தது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வரவுசெலவுத் திட்டத்தைக் கண்டித்துப் பேசியுள்ளனர்.

தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கொடுக்காத இந்த வரவுசெலவுத் திட்டத்தை நாம் ஆதரிக்க முடியாது என்பது எமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தாக இருந்தது.

தமிழ் மக்களின் உடனடி மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற அதி முக்கிய விடயங்கள் சம்பந்தமாக தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என்பதை நாம் ஆரம்ப காலம் தொடக்கம் வலியுறுத்தி வந்துள்ளோம்.

ஆனால் இதுவரை அரசாங்கத் தரப்பிலிருந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்ற எமது எண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பதில் இருந்து விலகியிருப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது“ என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

புலிகள் மீதான தடையை உடைக்க முடியும்!கருப்பன்‏


டெல்லி, சென்னை, ஊட்டி என விசாரணை நடத்தி... விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசு விதித்த தடையை சமீபத்தில் நியாயப்படுத்தியிருக்கிறார் விசாரணைத் தீர்ப்பாயத்தின் தலைவரும் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான விக்ரம்ஜித் சென். இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள புலிகள் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது பற்றி இன்னும் அறிவிக்காத நிலையில்...




தானே அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் மூத்த வழக்கறிஞரான கருப்பன். புற்றுநோயால் தாக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருப்பன், தற்போது குணமடைந்து வரும் நிலையில், அவரைச் சந்தித்தோம். ‘‘2010 மே, 14&ம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில், ‘எ.டி.டி.ஈ.யினர் படுகொலை செய்யப்பட்டபோதிலும், எஞ்சியுள்ள போராளிகளும் தலைவர்களும் தமிழீழத்தை உருவாக்கும் நோக்கத்துடன் நம்பிக்கை துரோகிகள் (இந்திய அரசு) மற்றும் எதிரிகளை (இலங்கை அரசு) பழிவாங்க தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர். தங்களின் தோல்விக்கு இந்திய உயர் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் காரணம் என்று இணையதளம் வாயிலாக கூறி வருகின்றனர்.




இது இந்திய உயர் பெருமக்களின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது’ என்பது போன்ற புளித்துப்போன காரணங்களைச் சொல்லித்தான் புலிகள் இயக்கத்துக்கு இந்தியா தடையை நீட்டித்திருக்கிறது.




இதில் ஆச்சரியமான உண்மை என்னவென்றால், தன்னை ஈழத்தமிழர்களின் நம்பிக்கை துரோகி என்றும், இலங்கை அரசை ஈழத் தமிழர்களின் எதிரி என்றும் இந்திய அரசே மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறது.




மேலும் அந்த அறிவிப்பில் ஓர் இடத்தில் கூட ராஜீவ்காந்தி படுகொலையைக் காரணம் காட்டவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே, ‘சோனியாவின் தாயார் பவுலா மைனோவுக்கும் குடும்ப நண்பரான ஒட்டோவியோ குவத்ரோச்சிக்கும் புலிகள் இயக்கத்துடன் நெடுநாளைய தொடர்பு உண்டு என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. சோனியாவின் பிரதான ஆலோசகர்களில் ஒருவரான மார்கரெட் ஆல்வாவின் நெருங்கிய நண்பர் அஸ்வத் நாராயணனின் உதவியாளர் வீட்டில்தான் சிவராசன் ஒளிந்திருந்தார்.




ஆல்வா, அர்ஜூன்சிங், மணிசங்கர ஐயர் ஆகியோர்தான் ராஜீவ்காந்தியை ஸ்ரீபெரும்புதூர் செல்ல வற்புறுத்தியவர்கள். எனவே சோனியா, அவருடைய தாயார், மார்கரெட் ஆல்வா, அர்ஜூன் சிங் ஆகியோரை சி.பி.ஐ. விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும்’ என்று சுப்ரமணியன் சுவாமி பகிரங்கமாகக் கூறியிருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் எந்தவொரு மாநிலத்திலும் எந்த-வொரு அசம்பாவிதத்திலும் புலிகள் இயக்கம் ஈடுபடவில்லை. ஈடுபட்டதாக அரசாங்கமும் சொல்லவில்லை. அப்படியிருக்க, புலிகள் இயக்-கத்தின் மீது தடை விதிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.




‘புலிகள் இயக்கப் பிரமுகர்கள் மட்டும்தான் ஆஜராகவேண்டும்’ என்று விக்ரம்ஜித் சென் சொல்லியிருப்பது கண்துடைப்பு மட்டுமல்ல, காமெடியும் கூட. ராஜீவ் கொலையில் புலிகள்தான் குற்றவாளி என்கிறார்கள். அந்த வகையில், புலி என்று யார் வந்தாலும் கைது செய்யப்படுவார்கள். இந்நிலையில், புலி என்று சொல்லிக்கொண்டு யாராவது இந்தியா வருவார்களா? அகதியாக வந்த அப்பாவி மக்களை புலிகள் என்று பிடித்து, செங்கற்பட்டு சிறப்பு முகாம்களில் அடைத்திருக்கிறார்கள்.




அரசின் ஆவணப்படி மேற்கண்டவர்கள் அனைவரும் புலிகள்தானே. அப்படியானால், அந்தப் புலிகளைக் கூப்பிட்டு ஏன் விசாரிக்கவில்லை? புலிகளையும் விசாரிக்க மாட்டார்கள், புலிகளுக்காக 18 மாதம் சிறையில் இருந்த வைகோவையும் விசாரிக்க மாட்டார்கள். புலிகளைக் காட்டித் தடை செய்யப்பட்ட தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறனையும் விசாரிக்க மாட்டார்கள். அப்புறம் எதற்குத் தீர்ப்பாயம், வெங்காயம்?’’ என வெடித்த கருப்பன் சற்றே ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பேசினார்.




‘‘கருத்துக் கேட்புக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே தடையை அமல்படுத்திவிட்டுத்தான் ஊட்டி வந்தார் விக்ரம்ஜித் சென். எனவே, இதுவொரு ஏமாற்றுவேலை. எத்தனை சொல்லியும், எவ்வளவு முறையிட்டும் கருத்து கூற இவர் அனுமதி மறுத்திருக்கிறார் என்றால், சம்பந்தப்பட்டவர்கள் செல்லவேண்டியது உச்ச நீதிமன்றம்தான்.




ராஜீவ் கொலை குறித்த வழக்கின்போது, ‘பிரபா-கரனுக்கும் ராஜீவ் காந்திக்கும் இடையிலான தனிப்பட்ட பகை காரண-மாகத்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறுவதை ஏற்க இயலாது’ என்று நீதியரசர் கே.டி.தாமஸ் கூறி-யிருக்கிறார்.




இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலேயே புலிகள் இயக்கத்தின் மீதான தடையை உடைக்க முடியும். உச்ச நீதிமன்றம் சென்று அதை நிச்சயம் செய்து முடிப்பேன்’’ என்றார் உறுதியுடன். தீர்ப்பாய தீர்ப்பு குறித்து புலிகளுக்காக வாதாடிய தமிழக மக்கள் உரிமைக் கழக வழக்கறிஞர் புகழேந்தியிடம் பேசினோம்.




‘‘விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பை எதிர்த்து கூடிய விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவிருக்கிறோம். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
கருத்துகள் (1) | | Read More...

அமெரிக்காவின் இரகசிய இராஜதந்திர தொடர்புகள்: அம்பலப்படுத்துகின்றது விக்கிலீக்ஸ்


இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரகசிய இராஜதந்திர தொடர்புகள் குறித்த விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
ஈராக் போரில் அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் குறித்த ஆவணங்களை வெளிப்படுத்தி அம்பலப்படுத்தியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்போது அமெரிக்க அரசின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த ஆவணங்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசாங்கமானது உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.

அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை என்று கூறப்படுகின்றது. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்பான மூவாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரியவருகின்றது.

அதற்கு மேலதிகமாக இந்தியா (5087), பாகிஸ்தான் (4775), ஆப்கானிஸ்தான் (7095), பங்களாதேஷ் (2182) ஆகிய நாடுகள் தொடர்பான ஆவணங்களும் விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ளதுடன் அவையும் விரைவில் வெளியிடப்படவுள்ளது.

நேற்றைய தினம் தன்னிடமுள்ள ஆவணங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஏனைய ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் படிப்படியாக வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது
கருத்துகள் | | Read More...

கிட்லர் மகிந்தவை கைது செய்ய மக்கள் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கை பரபரப்பு பேட்டி -video in

Penulis : Antony on திங்கள், 29 நவம்பர், 2010 | 12:12 PM

திங்கள், 29 நவம்பர், 2010


இந்த மின் அஞ்சலுக்கு மகிந்த செய்த போர்குற்றங்கள் தொடர்பான காணொளிகள் நிழல் படங்கள் உங்கள் முறையீடுகளை மக்களே உடனே .அனுப்பி வையுங்கள் . உங்கள் உறவினர்களை இறுதி யுத்தத்தில் நீங்கள் பலி கொடுத்திருந்தால் .

மகிந்தவினால் படு கொலை செய்ய பட்டிருந்தால் கைதாகி சிறையில் உங்கள் உறவுகள் இருந்தால் அனைத்து விபரங்களையும் அனுப்பி வையுங்கள் முடிந்தவரை ஆங்கிலத்தில் அனுப்புங்கள் . அவ்வாறு அல்லாவிடின் தமிழில் அனுப்பி வையுங்கள் இந்த மின் அஞ்சல் கிட்லர் மகிந்தர் கலந்து கொள்ளும் ஒக்ஸ்போர்ட் பல்கழை கழக மின் அஞ்சல் proctors.office@admin.ox.ac.uk University of Oxford University Offices Wellington Square Oxford OX1 2JD United Kingdom Telephone: +44 1865 270000 +44 1865 270000 Fax: +44 1865 270708 இணைய தள முகவரி http://www.ox.ac.uk/general_contact.html
கருத்துகள் | | Read More...

மட்டக்களப்பில் மாவீரர் தினம் பல பகுதிகளில் அனுஷ்டிப்பு


மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது.

அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள் இரகசியமான முறையில் பரவலாக நடைபெற்றிருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் தின வைபவங்களின் முக்கிய அம்சமான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் அதன் போது நடைபெற்றிருந்தது.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இருப்பதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக ஒரு சில அரசியல் வாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நேற்றைய நிகழ்வுகள் அதனைப் பொய்யாக்கியுள்ளன.

உணர்வு பூர்வமான இலட்சியப் பயணத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தயாராக இருப்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும், பெருமளவான பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டியிருந்தமையும் அதனையே பறைசாற்றி நிற்கின்றதாக எமது மட்டக்களப்பு நிருபர் தெரிவிக்கின்றார்.

ஆயினும் பாதுகாப்புக் கருதி மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்ற இடங்களின் விபரங்களை இங்கே நாம் தவிர்த்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று பரவலாக இடம்பெற்ற மாவீரர் தின வைபவங்களில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றிருந்ததாக எமது தகவல் வட்டாரங்கள் ஊர்ஜிதம் செய்கின்றன.
புலிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாக பெருமெடுப்பிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் இலங்கை அரசாங்கமானது மாவீரர் வாரத்தை முன்னிட்டு படைத்தரப்பை உச்சகட்ட உசார் நிலையில் வைத்திருந்தது.

அதனையும் மீறி நேற்று வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் பரவலாக மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதுடன், ஏராளம் பொதுமக்களும் அதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலான முறையில் இராணுவக் கண்காணிப்பும் படைப்புலனாய்வாளர்களின் கடுமையான அவதானிப்புகளுக்கும் மத்தியில் நேற்று நடைபெற்ற மாவீரர் தின அனுஷ்டானங்கள் இரகசியமான முறையில் பரவலாக நடைபெற்றிருந்ததாக ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவீரர் தின வைபவங்களின் முக்கிய அம்சமான ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் அதன் போது நடைபெற்றிருந்தது.

வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து இருப்பதையே அங்குள்ள மக்கள் விரும்புவதாக ஒரு சில அரசியல் வாதிகள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்ற போதிலும் நேற்றைய நிகழ்வுகள் அதனைப் பொய்யாக்கியுள்ளன.

உணர்வு பூர்வமான இலட்சியப் பயணத்தில் பங்கேற்க கிழக்கு மாகாண மக்கள் இன்னும் தயாராக இருப்பதையே நேற்றைய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

மிகவும் இறுக்கமான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் மீறி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டமையும், பெருமளவான பொதுமக்கள் அதில் ஆர்வம் காட்டியிருந்தமையும் அதனையே பறைசாற்றி நிற்கின்றதாக எமது மட்டக்களப்பு நிருபர் தெரிவிக்கின்றார்.

ஆயினும் பாதுகாப்புக் கருதி மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்ற இடங்களின் விபரங்களை இங்கே நாம் தவிர்த்துள்ளோம்.
கருத்துகள் | | Read More...

தமிழ் மக்களை கவர்ந்துள்ள சர்வதேச நீதி


உலகில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், நிறுவனங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் தவிக்கும் விடயம் என்னவெனில், பல சர்வதேச சட்டங்கள், நவீன மயப்படுத்தப்பட்ட நீதித் துறைகள் போன்றவை செயற்பாட்டிலிருந்தும் சர்வதேச குற்றங்களான சித்திரவதை, ஓர் இனத்தை பூண்டோடு அழித்தல், மனிதாபிமான போர் குற்றங்கள் என்பன தொடர்ந்து அதிகரித்து வருகின்றமையேயாகும்.


இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து (1945) அமைக்கப்பட்ட ‘‘நியூரம் பேர்க் விசாரணைகள்’’ 1948 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமை பிரகடனம், இனத்தை பூண்டோடு அழிப்பதற்கு எதிரான பிரகடனம் ஆகிய வழிமுறையில் பல புதிய சர்வதேச ஆவணங்கள், பிரகடனங்கள் உருவாகின.

சர்வதேச நீதியின் வரைவிலக்கணம் மிகவும் சிக்கலானது. கல்விமான்களின் ஆய்வுகளும் விவாதங்களும் ‘‘சர்வதேச நீதி’’ என்பது 1948 ஆம் ஆண்டு பிரகடனங்கள், சட்டங்களில் கூறப்பட்ட சாரங்களில் அறிவுறுத்தப்படுவதாகவும் ஆகையால் ‘‘சர்வதேச நீதி’’ என்பது ஏறக்குறைய ஆறு சகாப்தங்களாக நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இதற்கு எதிராக கல்விமான்கள், ‘‘சர்வதேச நீதி’’ என்ற சொற்பதம் முன்பு பாவனையில் இருக்கவில்லையென்றும் எனவே இது ஒரு புதிய நடைமுறை என்பது மட்டுமல்லாது, இது ஒரு நாட்டினுடைய இறைமையைப் பாதிப்பதாகவும் உள்ளதாக கூறுகிறார்கள்.

2002ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் வருகையை தொடர்ந்தும், இச் ‘‘சர்வதேச நீதி’’ பலமாக இருப்பதற்குரிய முக்கிய காரணம் சர்வதேசக் கிரிமினல் நீதிமன்றத்தினால் உலகில் 2002 ம் ஆண்டுக்குமுன் நடைபெற்ற எந்த சர்வதேச குற்றங்களையும் விசாரிப்பதற்கு தகைமை பெறவில்லை.

அணுகுமுறைகள்

இச் ‘‘சர்வதேச நீதி’’ என்பது எவ்வழியில் முக்கியம் பெற்றுள்ளது என்பதை நாம் ஆராய்வோமானால், உலகில் நடைபெற்ற இன, தேசிய, வர்க்க முரண்பாடுகளின் பொழுது இடம்பெற்ற பல சர்வதேச குற்றங்களை, நாடுகள் உள்நாட்டு நீதிமன்றங்களில் விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு அரச மன்னிப்புடன் பதவிகள், பட்டங்கள் வழங்கியவையே காரணிகளாகின்றன.

‘‘சர்வதேச நீதி’’க்கு ஒரு தனிப்பட்ட சட்டமோ, உடன்படிக்கையோ, பிரகடனமோ உலகில் கிடையாது. ஆனால் ஒரு நாடு, சித்திரவதை, இன அழிப்பு போன்ற சர்வதேச ஆவணங்களை ஏற்பதுடன் ஜெனிவா சட்டங்களை மிக மோசமாக மீறுவதும் “சர்வதேச நீதி' நடைமுறைக்கு வருகிறது.'

‘‘சர்வதேச நீதி’’ நடைமுறைப்படுத்துவதற்கு குற்றவாளியோ அல்லது பிரதிவாதியோ அந்த நீதிமன்றம் உள்ள நாட்டிலோ அல்லது குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து வேறு நாட்டில் இருக்க முடியும்.

பொதுவாக ஒரு நாட்டுடைய நீதிமன்றங்கள், தேசிய சட்டத்திற்கு அமையவே குற்றவாளிகளை விசாரிக்கவும் தண்டிக்கவும் உரிமை உடையன. ஆனால் அந்த நாடு சில சர்வதேச உடன்படிக்கைகள், சர்வதேச சட்டங்கள், பிரகடனங்களில் கையெழுத்திட்டிருக்கும் நிலையில் சர்வதேச சட்டம், சர்வதேச குற்றத்திற்கான சான்றுகள் குற்றவாளிகள் மீது முன் வைக்கப்படும் நிலையில் அவ்வழக்கை விசாரிப்பதற்கு தகைமை பெறுகிறது.

உலகில் தற்பொழுது நூற்றுக்கு மேலான நாடுகள் ‘‘சர்வதேச நீதி’’யை நடைமுறைப்படுத்த தகைமை பெற்றிருந்தாலும், சில நாடுகளே சர்வதேச குற்றங்களை விசாரித்து, நீதி வழங்கியுள்ளன. பெரும்பாலான நாடுகளில் அரசியல் தலைமைகளின் காழ்ப்புணர்வு காரணமாக ‘‘சர்வதேச நீதி’’ நடைமுறைப்படுத்தப்படவில்லை.

1945 ஆம் ஆண்டு ‘‘நியூரம் பேர்க் விசாரணைகள்’’ பின்னர் ஏறக்குறைய இருபத்து எட்டு நாடுகள் சர்வதேச நீதியில் கரிசனை கொண்டுள்ளன. அவையாவன: ஆர்ஜென்னரின, அவுஸ்திரேலியா, ஓஸ்திரியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், டென்மார்க், கிழக்கு தீமோர், பின்லாந்து, ஜேர்மனி, குவாட்டமலா, ஐஸ்லாந்து, இஸ்ரேல், மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, நியூஸிலாந்து, நோர்வே, பேரு, ருவாண்டா, சிலி, செனகல், தென்னாபிரிக்கா, ஸ்பானியா, சுவீடன், சுவிற்சர் லாந்து, துருக்கி, பிரித்தானியா, அமெக்கா போன்ற நாடுகளுடன் ஐரோப்பிய யூனியன், ஆபிரிக்கயூனியன் போன்றவையும் இணைத்துள்ளன.

பிரித்தானியா

தற்போதைய பிரித்தானிய சட்டவரையறையினுள், சர்வதேச குற்றத்திற்கான நீதி மன்றம் ஏற்கக் கூடிய ஆதாரங்களை கொண்ட தனி நபரோ அல்லது அமைப்போ குற்றம் இழைத்தவரென சந்தேகிக்கப்படுபவர் மீது வழக்குத் தாக்கல் செய்யும் உரிமை உண்டு. இவ் வழக்கை பிரித்தானிய நீதிமன்றம் ஏற்கும் நிலையில் குற்றவாளியென கூறப்படுபவர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யும் வேளையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுவார்.

பிரித்தானிய சட்டத்தில் ஒரு நாட்டுடைய தலைவர் உத்தியோக பூர்வமாக வருகை தரும் வேளையில் அரச பாதுகாப்புக்கு (immunity) தகைமை உடையவரா என்பது தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் உத்தியோகப்பற்றற்ற விஜயத்தின் பொழுது யாருக்கும் அரச பாதுகாப்பு கிடையாது. இதற்கு நல்ல உதாரணமாக 1998 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட சிலி நாட்டின் இராணுவ சர்வாதிகாரியான பினசேவ் அமைகிறார். இவரது உடல் நிலை காரணமாக பிரித்தானியா பினசேவ்வை விடுதலை செய்தது.

ஆனால் அன்றைய பிரித்தானிய அரசும், இன்றைய அரசும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில், பிரித்தானியாவில் உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர் உட்பட சகலரும் ‘‘சட்டத்திற்கு உட்பட்டவர்களே’’. 2005 ஆம் ஆண்டு பிரித்தானிய பிரதமர் ரொனி பிளேயர் உத்தியோக பூர்வமாக இஸ்ரேலிய பிரதமர் ஆரியல் சரோனை அழைத்திருந்தார். பிரித்தானியாவில் பெரும் தொகையான இஸ்ரேலிய சட்ட வல்லுனர்கள் இருந்த பொழுதும், ஆரியல் சரோன், ரொனி பிளேயரின் அழைப்பை ஏற்க மறுத்ததுடன், அவர் கூறியதாவது, ‘‘நான் அறிந்தவரையில் பிரித்தானிய சிறைச்சாலைகள் மிகவும் கடுமையானவை. அதனுள் ஒன்றில் அடைபடுவதை நான் விரும்பவில்லை’’ யெனக் கூறியுள்ளார். பல நாடுகளின் அழுத்தம் காரணமாக பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள சட்டம், சிறு குற்றங்களுக்கு வழக்குத் தொடர முடியாத வகையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

மற்றைய நாடுகள் பொதுவாக கூடுதலான ஐரோப்பிய நாடுகளில் ஏதோ ஒரு முறையில், சர்வதேச குற்றம் புரிந்த ஒருவர் மீது வழக்குத் தொடரவும் அவரை தடுத்து விசாரிப்பதற்குமான நிலைமைகளே காணப்படுகின்றன.

இதற்கு நீதிமன்றங்களினால் ஏற்கக் கூடிய ஆதாரங்களும், சளைக்காமல் முயற்சிக்கக் கூடிய தனி நபரோ அல்லது அமைப்போ முன்வர வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்துவதற்கு நல்ல வழக்கறிஞர்களும் இவர்களுக்கு தேவையான ஊழியத்தை வழங்கக் கூடிய நபர்களும் முன்வர வேண்டும்.

இவற்றைத் தாராளமாகக் கொண்டிருந்தால் ஒரு நாட்டின் தலைவரையோ அவருடன் கூடிய மந்திரிமார்கள், இராணுவ தளபதிகளை சர்வதேச குற்ற அடிப்படையில் ‘‘சர்வதேச நீதி’’ கேட்பதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ஐரோப்பாவில் பெல்ஜியத்தில் இருந்த பல வாய்ப்புக்கள், சட்டங்கள் மாற்றப்பட்டாலும் கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் அத்துடன் டென்மார்க் போன்ற பல நாடுகளில் இதற்கான சாத்தியங்கள் உள்ளன.

ஜேர்மனியில் சர்வதேச குற்றம் புரிந்தவரை விசாரிப்பதா இல்லையா என்பது முழுக்க முழுக்க அரச தொடுனர் கையிலேயே தங்கியுள்ளது.

இதேபோல் பிரான்ஸில், சித்திரவதை மேற்கொள்ளப்பட்டது என்ற அடிப்படையிலேயே சர்வதேச குற்றத்திற்கு வழக்குத் தொடர முடியும். கனடாவில் இன அழிப்புக்கும், சித்திரவதைக்கும் எதிராக வழக்கு தொடரமுடியும்.

சர்வதேச நீதி வேண்டி வழக்கு தொடர சந்தர்ப்பம் கூடிய நாடாக, நெதர்லாந்து காணப்படுகிறது. ஸ்பானியாவில் இதற்கான வாய்ப்பு தற்பொழுது மிகக் குறைவாகக் காணப்பட்டாலும,; ஸ்கன்டினேவியன் நாடுகளிடையே இதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.

ஆகையால் விதிமுறைகள், சட்டங்களை சரியான முறையில் அணுகினால் உள்நாடுகளில் சட்டம் மறுக்கப்பட்டவர்களுக்கு சர்வதேசரீதியாக நீதி கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

ச. வி. கிருபாகரன்,
பொதுச் செயலாளர்
தமிழர் மனிதர் உரிமைகள் மையம்,
பிரான்ஸ்
கருத்துகள் | | Read More...

BBCதொலை காட்சியில் மாவீரர் நாள் சிறப்பு பார்வை

Penulis : Antony on சனி, 27 நவம்பர், 2010 | 9:36 AM

சனி, 27 நவம்பர், 2010


ஏன் தமிழர்கள் மாவீரர்களை மீள நினைவு கூறுகின்றார்கள் ..? கேள்வி கேட்டே பதில் அளித்திருக்கும் சிறப்பு பார்வை

Share this pageFacebookTwitter ShareEmail Print Why Sri Lankan Tamils won't remember war dead this yearBy Swaminathan Natarajan BBC Tamil The three-decade Tamil Tiger insurgency may have ended in a bloody defeat last year, but it still casts a long shadow Continue reading the main story Sri Lanka After WarProfile:

Mahinda Rajapaksa Election a family affair Q&A: Post-war Sri lanka After the Tigers Around the world, Sri Lanka's diaspora Tamils are meeting to mark Maveerar Naal (Heroes' Day) and remember those who died during the failed insurgency. But back in the Indian Ocean island nation, many Tamils are either too scared of official retribution, or too apathetic to mark the second 27 November commemoration since the rebels' defeat last year. The Sri Lankan government has meanwhile been busy destroying the war graves and other memorials for the 20,000 insurgents killed during the three-decade conflict. One such cemetery has been turned into a playground; another in Jaffna was converted into an army camp.

Continue reading the main story “ Start Quote Destroying graves is unacceptable, those people who were buried there are humans” End Quote Suresh Premachandiran MP And no-one knows what has happened to the records scrupulously kept by the Liberation Tigers of Tamil Eelam (LTTE), who are thought to have financially supported the bereaved families. Suresh Premachandiran, an MP from northern Jaffna, says his party, the Tamil National Alliance, has tried in vain to stop the demolition of war cemeteries.

"Destroying graves is unacceptable," he said. "Those people who were buried there are humans. They fought for the Tamil people.

" He continued: "Recently when some Tamil civilians lit lamps to mark a Hindu festival in Kilinochchi, the local police thought they were trying to pay homage to the LTTE war dead and beat up them up." In the past, large numbers of Tamils visited these war graves. In many places, cultural programmes would also take place. But now they're not sure what to do. Tamil Tiger leader Velupillai Prabhakaran was killed on the last day of the war in May 2009 "Those who lost their relatives would like to remember them," says Selva, a resident of Colombo, who did not want his full name published. "But if they do any kind of public display - like garlanding the photos of people in LTTE uniform, they will be arrested." Sri Lanka's deputy high commissioner in the UK, P M Amza, defended his government's decision to demolish war graves, labelling them a rebel propaganda tool. "We consider the LTTE a terrorist organisation," he said. "We feel all those associated with it form part of terrorism.

"There is no evidence to show the LTTE represented collective Tamil aspiration. They have killed many Tamil leaders." Time to move on? Human rights groups say both government forces and the rebels committed crimes against humanity during the conflict. The LTTE were accused of recruiting children and firing at fleeing civilians during the final weeks of war.

It is an established fact that the LTTE killed thousands of Tamil youths who joined other armed groups in the early years of the rebellion. But many Tamils who are outspoken about the government's alleged war crimes say little about the charges against the LTTE. Eighteen months after the war, people are still living in refugee camps like the one in this 2009 photo For many in the diaspora across the world, Heroes' Day is an opportunity to gather and reaffirm their loyalty to the Tamil Tigers. Large gatherings are planned in Britain, Canada, Switzerland, France and Australia. Sam Krishna, media co-ordinator of the British Tamil Forum, said: "In addition to remembering those who sacrificed their lives for the Tamil cause, we will use the occasion to focus on the war crimes.

"We will once again press for an independent inquiry." Velupillai Prabhakaran, killed on the last day of the conflict in May 2009, traditionally marked Heroes' Day with a speech outlining his agenda for the year ahead, and the Tigers would stage a military parade. But no organisation in Sri Lanka plans to commemorate 27 November this year. Some even say the time has come to move on. A refugee who lives in the government-run camp in Vavuniya, in the north, said: "War has ended last year, but still we are in the camps.

We lost everything due to war. There's no point in talking about it." Some expat Tamils feel that overseas organisations behind the Heroes' Day commemorations would do better to use their resources helping those back home who are struggling to restart their lives.

இதன் தொடர் பகுதியை பார்க்க
http://www.bbc.co.uk/news/world-south-asia-11846369
கருத்துகள் | | Read More...

மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரத்தில் மாவீரர் பாடல் ஒலிபரப்பு


தென்தமிழீழமான மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் மாலை வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தின பாடல்கள் ஒலித்ததால் மட்டு.நகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலை மணி 6.15 அளவில் "கார்த்திகை 27" பாடலும் "சுட்டும் விரலால் சுட்டிக்காட்டு" எனும் பாடலும் சுமார் 10 நிமிடங்கள் வரை ஒலித்தாக மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள சரபவணபாவான் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

வழமையாக மட்டு.மாநகரசபை ஊழியர் ஒருவரே மாலை 6.30 மணி அளவில் வந்து வானொலி செய்திகளை ஒலிபரப்புவதாகவும் ஆனால் இன்று புலிகளின் பாடல் திடீரென ஒலித்ததை இட்டு தாம் அதிர்ச்சியடைந்தாகவும் அவர் கூறினார்.

மேலும், வழமையாக மாலை 6 மணிக்கு மணிக்கூட்டு கோபுரத்தில் வானொலியில் இடம்பெறும் பாடல்கள் ஒலிபரப்பாகுவதால் அருகில் இருந்த சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த போலீசார் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் அதன் பின் நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விசேட அதிரடிப்படையினரே மாவீரர் பாடல் ஒலிபரப்பாகுவதை புதினம் பார்க்க மக்கள் கூடுவதை பார்த்து சந்தேகம் கொண்டு விசாரித்த போதே ஒலிபரப்பாகுவது புலிகளின் பாடல் என தெரியவந்ததாகவும் அதன் பின் படையினரும் பொலிஸாரும் சென்று பாடலை நிறுத்தியதோடு கடுப்பில் அருகில் இருந்த கடை உரிமையாளர்களிடம் கடுமையான முறையில் விசாரணை மேற்கொண்டதாகவும் இச்சம்பவம் தொடர்பில் வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என அதிரடிப்படையினர் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மர்மநபர்களினால் ஒலிப்பரப்பட்ட இந்த பாடல்களில் புலிகளின் தலைவர் "பிரபாகரன்" அவர்களின் பெயர் இடம்பெறாமையினால் அதை அருகில் இருந்த பொலிஸார் தமிழ் தெரிந்தும் இனங்காணமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.

மணிக்கூட்டுக்கோபுரத்தில் ஒலிபெருக்கி பராமாரிப்பாளரை பொலிஸார் விசாரணையின் பின் விடுவித்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் | | Read More...

மாவீரர் தின அறிக்கை


விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகம் விடுத்துள்ள மாவீரர் தின அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மாவீரர்நாள் அறிக்கை
26-11-2010
தமிழீழம்

எமது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,

தேச விடுதலை என்ற அதியுயர் இலட்சியக் கனலை நெஞ்சில் சுமந்து, மரணத்தை வெற்றிகொண்டு, எமது இதயங்களில் நித்திய வாழ்வுபுரியும் மாவீரர்களை நினைவேந்தல் செய்யும் தேசிய மாவீரர் வாரம் இது.

சத்தியத்தை சாட்சியாக வரித்து சத்தியப் போர்புரிந்த எமது மாவீரர்களை நாமனைவரும் பூசிக்கும் தூயஏழல் இது. விடுதலையின் முதல் வித்தாக விழிமூடிய லெப்.சங்கர் என்ற அக்கினிக்குழந்தையின் வழித்தடம் நடந்து சத்திய வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரப்புதல்வர்களையும், வீரப்புதல்விகளையும் தமிழினம் ஆராதிக்கும் இந்த நாட்களில் தனியரசுப் பாதையில் மாவீரர்களின் ஆன்மீக வல்லமை வேண்டி நாமனைவரும் உறுதிபூண்டு நிற்கின்றோம்.

மரணம் என்பது மாவீரர்களுக்கு உரித்தானதன்று. அக்கினிப் பிழம்பாக, தீமைகளைச் சுட்டெரிக்கும் எரிமலையாக தமிழீழ தேசம் முழுவதும் வியாபித்து நிற்கும் மாவீரர்களை சாவு தீண்டுவதில்லை. காற்றோடு காற்றாகவும், கடலோடு கடலாகவும், மண்ணுக்குள் விதையாகவும் நித்தியத் துயில் கொள்ளும் எங்கள் வீரமறவர்கள் சாவை வென்ற சரித்திரநாயகர்கள்.

எமது மாவீரர்களின் வாழ்வும், வரலாறும் வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்டது. எமது மாவீரர்களின் அடியும், முடியும் எவராலும் அளவிட முடியாதது. எமது பெருந்தலைவனின் வழிகாட்டலில் களமாடி எமது மாவீரர்கள் புரிந்த சாதனைகள் எண்ணிலடங்காதது. அடங்கிக் கிடந்த தமிழினத்திற்கு முகவரியளித்த எமது தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது மாவீரர்கள் புரிந்த ஈகங்களின் அர்த்தபரிமாணங்கள் மனிதகுல வரலாற்றில் என்றுமே நீடித்து நிலைத்துநிற்கும்.

காலநதியின் ஓட்டத்தில் உலக ஒழுங்கு கட்டவிழ்ந்து செல்கின்றது. புதுப்புது முடிச்சுக்களுடன் கட்டவிழும் உலக ஒழுங்கில் ஓயாத பயணமாக எமது விடுதலைப் போராட்டமும் முடிவின்றித் தொடர்கின்றது. எமது தேசியத் தலைவரின் வழிகாட்டலில் இருபது ஆண்டுகள் இயங்கிய தமிழீழ நடைமுறை அரசு எதிரியால் சிதைக்கப்பட்டு, இருண்ட பூமியாக இன்று எமது மண் மாற்றப்பட்டுள்ளது. அடங்காப்பற்றாக வணங்காது தலைநிமிர்ந்து நின்ற வன்னிமண் இன்று அந்நிய ஆக்கிரமிப்பின் உறை விடமாக அழிவுற்றுக் கிடக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வரலாற்றுப் பெருமைகூறும் யாழ்ப்பாணமும், திருகோணமலையும், மட்டக்களப்பும், அம்பாறையும் இன்று தமது வரலாற்றுப் பெருமைகளை இடிபாடுகளுக்குள் தொலைத்து நிற்கின்றன.

தமிழினத்தின் வரலாற்று வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அங்கெல்லாம் பௌத்த விகாரைகளும், சிங்களப் பண்பாட்டுச் சின்னங்களும் முளைவிடுகின்றன. தமிழ் நிலங்களை புத்தர் சிலைகளும், அந்நிய ஆக்கிரமிப்புச் சின்னங்களும் ஆட்சிசெய்கின்றன. எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், வளங்களும் அந்நியர்களிடம் விலைபேசப்படுகின்றன. பேச்சுரிமை இழந்து, உயிர்வாழும் உரிமையும் மறுதலிக்கப்பட்டு அழிக்கப்பட வேண்டிய இனம் என்ற வரையறைக்குள் ஈழத்தமிழினத்தை சிங்களம் பகுத்துள்ளது.

யுத்த வெற்றிக் களிப்பில் திளைத்து நிற்கும் சிங்களம், ஆணவத்தின் உச்சத்தில் ஏறிநின்று தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும், தமிழ் மொழியையும் துடைத்தழிக்கும் வெறிகொண்டு இனவழிப்பை அரங்கேற்றுகின்றது. தென்னிலங்கையில் ராஜபக்ச குடும்பத்தின் காட்டாட்சி நர்த்தனமாட, தமிழீழ தாயகத்தில் சிங்களத்தின் பேயாட்சி தலைவிரித்தாடுகின்றது.

அதியுச்ச படைவலிமையுடனும், ஈவிரக்கமற்ற படைக்கலப் பிரயோகத்துடனும் எமது மக்களைக் கொன்றுகுவித்து எமது தாய்மண்ணை ஆக்கிரமித்த சிங்களம், எமது மாவீரர்கள் நித்தியத் துயில் கொள்ளும் கல்லறைகளையும் விட்டுவைக்கவில்லை. மாவீரர் நினைவாலயங்களை இடித்து வீழ்த்திய சிங்களம், மாவீரர் துயிலும் இல்லங்களை உழுதெறிந்து மாவீரர்களின் உறைவிடங்கள் மீது படைத்தளங்களையும், விமான ஓடுபாதைகளையும் நிறுவிக் குரூரத் திருப்தியடைந்துள்ளது.

துட்டகாமினியின் மறுபிறப்பாக தன்னை முன்னிறுத்தி மகாவம்ச மனவுலகில் முடிசூடியிருக்கும் சிங்கள அதிபர் ராஜபக்ச, தனது மூதாதையரை விஞ்சிய இனவெறியராகத் தன்னை அடையாளப்படுத்துவதில் பெருமிதம் கொள்கின்றார். அன்று எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றிகொண்ட துட்டகாமினிகூட எல்லாளனுக்கு சமாதியமைத்து தமிழ் மன்னனின் வீரத்திற்கு மதிப்பளித்து நற்பெயர் தேடினான். ஆனால் துட்டகாமினியின் இரத்தவாரிசாகத் தன்னை அடையாளப்படுத்தும் ராஜபக்சவோ மாவீரர்களின் உறைவிடங்களை உழுதெறிந்து பௌத்தத்தின் காவலனாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

இனவெறிகொண்டு மாவீரர்களின் உறைவிடங்களை சிங்களம் உழுதெறிந்தாலும்கூட, எமது மண்ணுக்குள்ளேயே அந்த வீரமறவர்கள் நித்தியத்துயில் கொள்வதை சிங்களத்தால் தடுக்க முடியவில்லை. எமது தேசத்தை ஆகர்சித்து நிற்கும் மாவீரர்களின் ஆன்மீக வல்லமையை முடக்கவும் இயலவில்லை. கல்லறைகளில் கண்ணீர் சொரிந்து, வாசமலர்களைப் பொழிந்து, மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றும் எமது மக்களின் உரிமையை ஆயுதவலிமையால் இன்று சிங்களம் தடுத்து நிறுத்தினாலும், தமது இதயங்களில் மாவீரர்களுக்கு எமது மக்கள் அகச்சுடரேற்றுவதை சிங்களத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகெங்கும் ஒரேநேரத்தில் தமிழினம் அணிதிரண்டு அக்கினிப்பிழம்பாக மாவீரர்களைத் தரிசிப்பதையும் சிங்களத்தால் முடக்க இயலவில்லை.

எமது அன்பார்ந்த மக்களே,

வரலாறு காணாத மிகப் பெரும் சோதனையை இன்று ஈழத்தமிழினம் சந்தித்து நிற்கின்றது. போரை வெற்றிகொண்டு அமைதியை நிலைநாட்டியிருப்பதாக உலகிற்குப் பிரகடனம் செய்திருக்கும் சிங்களம், கடந்த ஒன்றரை ஆண்டுகாலப் பகுதியில் எமது மண் மீதும், மக்கள் மீதும் புதிய வடிவில் போர்தொடுத்துள்ளது.

படைக்கல வலிமையில் கடந்த ஆறு தசாப்தங்களாக வெளிப்படையாக சிங்களம் அரங்கேற்றிய தமிழின அழிப்பு என்பது இன்று சத்தம்சந்தடியின்றி நிகழ்ந்தேறுகின்றது. அபிவிருத்தியின் பெயரால் எமது வளங்கள் அந்நியர்களிடம் தாரைவார்க்கப்படுகின்றன. மீள்குடியேற்றத்தின் பெயரால் எமது மண் கபளீகரம் செய்யப்படுகின்றது. அதியுயர் பாதுகாப்பு வலயங்களின் பெயரால் எமது குடிநிலங்கள் வல்வளைப்புச் செய்யப்படுகின்றன. இன நல்லிணக்கத்தின் பெயரால் கடுகதியில் எமது மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் வேரூன்றுகின்றன. பௌத்த தர்மத்தின் பெயரால் எமது மக்களின் பண்பாட்டு வாழ்வு சிதைக்கப்படுகின்றது. தன்னாட்சியுரிமைக்கும், அதனடிப்படையிலான தனியரசுக்கும் உரித்தான எமது இனம், சிறுபான்மையினமாக சிறுமைப்படுத்தப்பட்டு எமது மக்களின் பொருண்மிய வாழ்வும், உரி மைகளும் பறிக்கப்படுகின்றன.

மறுபுறத்தில் தனது ஆயுதப் படைகளின் ஆட்பலத்தைப் பெருக்குவதிலும், படைக்கல வலிமையை தக்கவைப்பதிலும் கவனம்செலுத்தித் தனது யுத்தப்பாதீட்டிற்குப் பெரும்தொகையில் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கும் சிங்களம், தமிழீழ தாயகப் பகுதிகளை முழுஅளவில் படைவலயங்களாகக் கட்டமைத்து வருகின்றது.

இருந்த பொழுதும் தமிழினத்தின் இதயங்களில் தணியாத தாகமாக, அணையாத தீயாகக் கொழுந்துவிட்டெரியும் தமிழீழ தனியரசுக்கான இலட்சியக் கனலை சிங்களத்தால் அணைத்துவிட முடியவில்லை.

எமது பாசத்துக்குரிய மக்களே,

சிங்களம் எக்காளமிடுவது போன்று நாம் அழிந்துவிடவில்லை. எமது இலட்சியப் பயணம் ஓய்வுக்கு வந்துவிடவுமில்லை. காலநதியின் ஓட்டத்திற்கேற்ப, வரலாற்றின் வழிகாட்டலுக்கு இணங்க எமது போராட்ட வடிவம் புதுமெருகூட்டப்பட்டுப் பரிணமித்துள்ளதே தவிர எமது இலட்சியம் மாறிவிட வில்லை.

நாம் போர் வெறியர்கள் அல்ல. நாம் அமைதியை விரும்பும் ஒரு தேசிய இனம். எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியையும், பண்பாட்டையும், பொருண்மிய வாழ்வையும் பேணி உலகின் ஏனைய இனங்களுடன் நல்லுறவைப் பேணி சகவாழ்வு புரிவதற்கே நாம் விரும்புகின்றோம். காலனித்துவ ஏகாதிபத்தியத்திடம் பறிபோய், இன்று சிங்களம் ஆக்கிரமித்திருக்கும் எமது இறையாண்மையை நிலைநாட்டி, எமது சொந்தமண்ணில் தனியரசு அமைத்து எம்மை நாமே ஆட்சிசெய்வதற்கே நாம் விரும்புகின்றோம்.

ஆயுதத்தின் மீது அலாதிப்பிரியம் கொண்டு எமது இனம் ஆயுதப் போர்புரியவில்லை. தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அறவழி தழுவி அன்று எமது மக்கள் போராடினார்கள். அன்று சமவுரிமை கோரிய எமது மக்கள் மீது குண்டர்களின் அடக்குமுறையை ஏவிச் சிங்களம் கலகம்புரிந்தது. பின்னர் சுயாட்சி கோரி அறப்போரை தீவிரப்படுத்திய எமது மக்கள் மீது ஆயுத அடக்குமுறையை ஏவி அரச பயங்கரவாதத்தை சிங்களம் கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் எமது உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே அன்றைய எமது இளைய தலைமுறை ஆயுதமேந்துவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டது. ஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.

இருந்த பொழுதும் அமைதிவழியில் எமது உரிமைகளையும், தேசிய விடுதலையையும் வென்றெடுப்பதற்கு கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், ஒவ்வொரு இடைவழியையும் நாம் தவறவிட வில்லை. திம்புவில் இருந்து ஜெனீவா வரை நிகழ்ந்தேறிய ஒவ்வொரு அமைதி முயற்சிகளிலும் நாம் பங்குபற்றினோம். போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழியில் தீர்வு காண்பதற்கு முன்னர் இந்தியப் பேரரசும், பின்னர் நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் அளித்த ஒவ்வொரு வாய்ப்புக்களையும் இதயசுத்தியுடன் நாம் அணுகினோம். இறுதியாக நோர்வேயின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பல விட்டுக்கொடுப்புக்களை எமது மக்களும், நாமும் புரிந்தோம். எமது இலட்சியத்தில் உறுதியாக நாம் நின்ற பொழுதும், உலகின் வேண்டுகைக்கு செவிசாய்த்தும், மதிப்பளித்தும் நெகிழ்வுப் போக்குடன் நாம் நடந்து கொண்டோம்.

எனினும் எமது மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் தீர்வு என்ற மாயைக்குள் எமது போராட்டத்தை மழுங்கடிப்பதிலேயே சிங்களம் குறியாக நின்றது. போர்நிறுத்தத்தின் விதிகளை அப்பட்டமாக மீறி எம்மை சீண்டியிழுப்பதற்கு சிங்களம் முற்பட்டது. அரசியலமைப்பு என்ற சட்டகத்திற்குள் நின்றவாறு கடும்போக்கைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளுக்கான புறச்சூழலை படிப்படியாக சிங்களம் இல்லாதொழித்த பொழுதுகூட நாம் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ளவில்லை. எந்தவொரு விடுதலை இயக்கமும் புரிந்திராத புதுமையாக நாமேயொரு இடைக்கால நிர்வாக வரைபைத் தயாரித்து உலகிற்கும், சிங்கள தேசத்திற்கும் முன்வைத்தோம்.

எமது நெகிழ்வுப் போக்கை தவறாகப் புரிந்து கொண்ட சிங்களம் எம்மால் சமர்பிக்கப்பட்ட இடைக்கால வரைபு பற்றிப் பேச மறுத்தது. ஒட்டுக்குழுக்களைக் கட்டமைத்து எமக்கு எதிராக நிழல் யுத்தத்தை தொடுத்தது. இருந்த பொழுதும் போர்நிறுத்த உடன்படிக்கையை நாம் முறித்துக் கொள்ளவில்லை. சமாதானத்தின் மீது கொண்ட எமது பற்றுறுதியை வெளிப்படுத்தும் நிமித்தம் உலகின் அழைப்பிற்கு மதிப்பளித்து ஜெனீவா பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம்.

எனினும் பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கு முரணாக எமது தேசத்தின் மீது அறி விக்கப்படாத யுத்தத்தை சிங்களம் தொடுத்தது. பேசித்தீர்க்க வேண்டிய மாவிலாறு நீர்ப் பிரச்சினையைப் பூதாகரப்படுத்தி எமது மண் மீது நில ஆக்கிரமிப்புப் போரை சிங்களம் ஏவிவிட்டது. ஈற்றில் போர்நிறுத்த ஒப்பந்தத்தையும் சிங்களம் கிழித்தெறிந்தது.

ஆயுதப் போராட்டமும், போரும் நாம் விரும்பியேற்ற தெரிவுகளல்ல. இவையிரண்டும் எம்மீது திணிக்கப்பட்டவை. வன்னிப் போர் உக்கிரமடைந்த பொழுதுகூட போர்நிறுத்தம் செய்வதற்கான பற்றுறுதியை மீண்டும் மீண்டும் நாம் வெளிப்படுத்தினோம். எமது மக்களுக்காகத் தமது உயிரை வேலியாக்கிக் களமாடிய எமது வீரர்கள், மக்களுக்காக எந்தவொரு அதியுச்ச ஈகத்தையும் புரிவதற்குத் தயாராகவே இருந்தார்கள். அந்நிய ஆக்கிரமிப்பால் எமது நிலப்பரப்பு சுருங்கிய பொழுதுகூட மக்களைக் காத்து, மக்களின் துயர்துடைப்பதற்காகவே எமது வீரர்கள் அரும்பணி புரிந்தார்கள். எமது மக்களுக்காக உயிரையே ஈகம்செய்யத் துணியும் எமது விடுதலை இயக்கம், எமது மக்களின் பாதுகாப்பை உலகம் பொறுப்பெடுக்கும் என்ற நம்பிக்கையில் முள்ளிவாய்க்காலில் அதியுயர் ஈகங்களைப் புரிந்தார்கள்.

எமது அன்பார்ந்த மக்களே,

போராட்ட இலட்சியத்தைக் கைவிட்டு சிங்களத்திடம் நாம் மண்டியிடவில்லை. எமது மக்களின் உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு சலுகைகளுக்காக சிங்களத்தை நாம் யாசிக்கவுமில்லை. மென்வழி தழுவி எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உலக சமூகம் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பளித்தே கடந்த ஒன்றரை ஆண்டாக ஒருதலைப்பட்சமான முறையில் நாம் அமைதியைப் பேணி வருகின்றோம்.

நாம் எடுத்திருக்கும் இந்தத் தெரிவு மிகவும் கடினமானது. நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நாம் புரிந்த விட்டுக்கொடுப்புக்களை விட இது உன்னதமானது. அக்காலப் பகுதியில் நாம் சந்தித்த இழப்புக்களை விட இது அதிக அளவிலானது.

முள்ளிவாய்க்கால் போரில் எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நிராயுதபாணிகளாகப் பேசச் சென்ற எமது அரசியல் போராளிகளை நயவஞ்சகமான முறையில் சிங்களம் படுகொலை செய்தது. களத்தில் விழுப்புண்ணெய்தி குற்றுயிராகத் துடித்த எமது போராளிகளை சிங்களம் சிறைப்பிடித்தது. உலகை நம்பி முள்ளிவாய்க்கால் கடலோரத்தில் காத்துநின்ற எமது மக்களை வகைதொகையின்றி சிங்களம் நரபலிவேட்டையாடியது. எஞ்சிய மக்களை விலங்குகளை விடக் கேவலமான முறையில் வதைமுகாம்களில் அடைத்துக் கொடும்வதை புரிந்தது. எமது பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஏவிவிடப்பட்டது. முள்வேலி முகாம்களுக்குள் எமது மக்கள் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் விபரிக்க முடியாதவை. அவலங்கள் அளவிட முடியாதவை. உலகின் மனச்சாட்சி மீது நம்பிக்கை கொண்டு, மென்வழி தழுவி நின்ற எமது மக்களுக்கு சன்மானமாக சாவையே சிங்களம் பரிசளித்தது.

இருந்த பொழுதும் உலகின் மனச்சாட்சி மீதும், தர்மத்தின் மீது நாம் நம்பிக்கை இழந்து விடவில்லை. எமது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், எமது சொந்த மண்ணில் தமிழீழத் தனியரசை அமைத்து நாம் வாழ்வதற்கும் உலகம் வழிசமைக்கும் என்று நாம் நம்புகின்றோம். பொறுமையின் எல்லைக்கு இன்று எமது தேசத்தை சிங்களம் இட்டுச்சென்றாலும்கூட உலகின் நீதியான அணுகுமுறை மீதான எமது நம்பிக்கை தளர்ந்துவிடவில்லை.

எமது தேசத்தின் தனியரசு உரிமையை உலக சமூகம் பகிரங்கமாக ஏற்க மறுத்தாலும்கூட, எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக அடிக்கடி உலகத் தலைவர்கள் குரல்கொடுப்பது எமக்கு ஆறுதலை அளிக்கின்றது. எமது தேசத்தின் மீது இனவழிப்பை சிங்களம் கட்டவிழ்த்து விட்டிருப்பதை ஒப்புக்கொள்வதற்கு உலக சமூகம் பின்னடித்தாலும்கூட, போர்க்குற்றங்கள் பற்றி உலகத் தலைவர்கள் பேசுவது எமக்குத் தென்பூட்டுகின்றது. இந்த வகையில் ஈழத்தீவில் தமிழினத்தை வேரோடு துடைத்தழிக்கும் இனவழித்தொழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆறு தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தி வரும் சிங்களத்திடமிருந்து இனியும் எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழினம் எதிர்பார்ப்பது அபத்தமானது என்பதைப் புரிந்து கொண்டு, நீதியின்பால் நின்று எமது தேசத்தின் அரசியல் சுதந்திரத்திற்கு உலகத் தலைவர்கள் வழிவகை செய்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

சிங்கள தேசத்திற்கு உரித்தான மண்ணைப் பிரித்தெடுத்து அரசமைப்பதற்கு நாம் முற்படவில்லை. அன்றி பயங்கரவாத வெறிகொண்டு நாம் பிரிவினைவாதம் பேசவுமில்லை. நாம் பயங்கரவாதிகளோ அன்றி இனச்சுத்திகரிப்பை சித்தாந்தமாகக் கொண்ட பிரிவினைவாதிகளோ அல்லர். நாம் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, அரசியல் சுதந்திரத்திற்காக, ஐக்கிய நாடுகள் சபையும், உலகின் வளர்ச்சியடைந்த தாராண்மைத்துவ நாடுகளும் போற்றிப்பேணும் தேசிய தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் எமது தேசத்தின் இறைமையை நிலைநாட்டுவதற்காகப் போராடும் ஒரு தேசிய விடுதலை இயக்கம்.

இந்த மெய்யுண்மையைப் புரிந்து கொண்டு எமது தேசத்தின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, தமிழீழத் தனியரசுக்கான புறநிலைகளை தோற்றுவித்து எமது மக்களின் விடிவிற்கு வழிவகை செய்யுமாறு உலக சமூகத்திற்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். இதேநேரத்தில் எமது மக்கள் மீது இனவழிப்புப் போரைத் திணித்த சிங்கள ஆட்சியாளர்களை போர்க்குற்றவாளிகளாக்கித் தண்டிக்குமாறும் உலக சமூகத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.

முள்ளிவாய்க்கால் போரில் நயவஞ்சகமான முறையில் சிறைப்பிடிக்கப்பட்ட எமது போராளிகளையும், எமது விடுதலை இயக்கத்திற்கு உறுதுணை நின்ற மக்களையும் கண்காணாத இடங்களில் சிங்களம் சிறைவைத்துள்ளது. இதேபோன்று பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும், அவசரகால நடைமுறை யின் கீழும் வகைதொகையின்றி கைதுசெய்யப்பட்ட எமது மக்களை நீதிவிசாரணைகள் இன்றி சிங்களம் சிறைவைத்துள்ளது. நீதிக்குப் புறம்பான முறையில் சிங்களம் சிறைவைத்துள்ள போர்க்கைதிகளையும், அரசியல்கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்தை நாம் வேண்டி நிற்கின்றோம்.

உலக சமூகத்தின் நீதியான அணுகுமுறை மீது நம்பிக்கை கொண்டு நிற்கும் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காலம் தாழ்த்தாது எமது தேசத்தின் அரசியல், சமூக, மனித உரிமைகளை உறுதிசெய்வதற்கான காத்திரமான நடவடிக்கைகளை உலகத் தலைவர்கள் எடுப்பார்கள் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கையுண்டு.
இத்தருணத்தில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் பெரும்தூணாக விளங்கும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களை தமது தேசியப் பணியைத் தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உரிமையுடன் நாம் கோருகின்றோம்.

தாய்மண்ணை விட்டுத் தொலைதூரம் புலம்பெயர்ந்தாலும், தமிழீழ தாயகத்திலேயே ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழர்களின் வேரும் ஆழப்பதிந்து நிற்கின்றது. தாயக மண்ணைவிட்டுப் பிரிந்த வலியை நன்கு உணர்ந்தவர்கள் என்ற வகையில், தமிழீழ தேச விடுதலைக்காக ஓயாது குரலெழுப்பி உலக சமூகத்தின் மனச்சாட்சியை தட்டியெழுப்பித் தேச விடுதலையை வென்றெடுக்கும் பொறுப்பு இன்று ஒவ்வொரு புலம்பெயர்வாழ் தமிழரையும் சார்ந்துள்ளது.

இதுவரை காலமும் எமது விடுதலைப் போராட்டத்தையும், மக்களையும் தாங்கிநின்ற புலம்பெயர்வாழ் உறவுகள், தொடர்ந்தும் எமது தாயக உறவுகளுக்கான மனிதநேய உதவிகளை வழங்கி, அவர்களின் அவலங்களைத் துடைத்து, இயல்புவாழ்வை தோற்றுவிப்பதற்கான பணிகளை தொடருமாறு வேண்டுகின்றோம்.

சோதனைகள் மிகுந்த இன்றைய காலகட்டத்தில் புகலிட உறவுகளைப் போன்று எமது மக்களின் விடிவிற்காக அயராது குரலெழுப்பும் தமிழகத் தலைவர்களுக்கும், எமது தொப்புள்கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளுக்கும் எமது நன்றிகளை உரித்தாக்குகின்றோம். காலத்தின் தேவையறிந்து காலம்காலமாக எமது தொப்புள்கொடி உறவுகள் புரியும் தார்மீக உதவி தமிழீழ தேசத்தின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டியது. எமது போராட்டத்திற்கான இந்தியப் பேரரசின் தார்மீக ஆதரவைப் பெற்றுத்தரும் பணியை தமிழக உறவுகள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்று நாம் உரிமையுடன் கோருகின்றோம்.

சத்திய இலட்சியத்தை உயிர்மூச்சாக வரித்துக் கொண்ட எமது மாவீரர்களின் ஆன்மீக வல்லமை மகத்தானது. அந்த சரித்திரநாயகர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தின் இறுதி நாளாக முகிழ்க்கும் தமிழீழ தேசிய மாவீரர் நாளாகிய நவம்பர் 27ஆம் நாளன்று உலகத் தமிழினத்தை அணிதிரண்டு மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றுமாறு உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றோம். அன்றைய நாளில் அந்நிய ஆக்கிரமிப்பில் சுடரேற்றும் வாய்ப்புக்கள் மறுதலிக்கப்பட்ட எமது உறவுகளை தமது இதயங்களில் அகச்சுடரேற்றி மாவீரர்களை நினைவுகூருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

எத்தனை தடைகளை எதிர்கொண்டாலும், எத்தனை இடர்களுக்கு ஆளானாலும் எம்தலைவனின் வழிகாட்டலில், மாவீரர்களின் இலட்சியப் பாதையில் பயணித்து தமிழீழத் தனியரசை நிறுவுவோம் என உறுதிபூணுவோமாக.

நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
கருத்துகள் | | Read More...

தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது-ராஜபக்சே

தமிழர் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

கொழும்பில் பல்வேறு தமிழர் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய அவரிடம் வட பகுதியில் சிங்களர்கள் குடியேற்றப்பட்டு வருவது குறித்து முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ராஜபக்சே, கொழும்பில் தமிழர்கள் வசிக்கும்போது, வடக்குப் பகுதியில் ஏன் சிங்களர்கள் வசிக்கக் கூடாது?. அப்பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதை யாராலும் தடுக்க முடியாது. அங்கு அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்றார்.

அதே போல அரசியல் கைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களையும் விசாரணை முடியாமல் விடுதலை செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார்.

ராஜபக்சே-கிருஷ்ணா சந்திப்பு:

இலங்கை சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, கொழும்பில் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவை நேற்று சந்தித்தார்.

அப்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர் மறுவாழ்வுப் பணிகளை விரைவுபடுத்துமாறும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்துமாறும் வற்புறுத்தினார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறும் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் இந்தியா, இலங்கை கூட்டு குழுவின் கூட்டத்திலும் கிருஷ்ணா பங்கேற்றார். இக் கூட்டம் 2005ம் ஆண்டுக்கு பின் இப்போது தான் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரிஸ், தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து கொடுப்பது பற்றி அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு தமிழர் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுதல், மறுகுடியமர்த்தல் ஆகியவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறாம்.

அந்தப் பணிகள் முடிந்ததும் அதிகார பகிர்வு குறித்த நடவடிக்கைகள் தொடங்கும். இது தொடர்பாக, புலிகள் இயக்கத்தின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களுடன் அதிபர் ராஜபக்சே ஆலோசனை நடத்தியுள்ளார் என்றார்.

கிருஷ்ணா கூறுகையில், பல இன மக்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இலங்கை அரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. முகாம்களில் உள்ள தமிழர்கள் நிலைமை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி கவலை தெரிவித்துள்ளா. அவர்களை சொந்த இடங்களில் மறுகுடியமர்த்தும் பணிகளை விரைவு படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழர் பகுதிகளில் மக்களை மறுகுடியமர்த்த வசதியாக 50,000 புதிய வீடுகளை கட்டித் தர இந்தியா முடிவு செய்துள்ளது. அவற்றில் முதல் 1,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் துறைமுக, ரயில்வே திட்டங்களில் பங்கேற்கவும் இந்தியா திட்டமுள்ளது என்றார்.

யாழ்பாணத்தில் இந்திய துணைத் தூதரகம்:

மேலும் இந்தப் பயணத்தின்போது யாழ்ப்பாணத்திலும், ஹம்பன்தோடாவிலும் இந்திய துணை தூதரகங்களை எஸ்.எம். கிருஷ்ணா திறந்து வைக்கவுள்ளார்.

நேற்று ஹம்பன்தோடாவில் நடக்க இருந்த நிகழ்ச்சி, மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது. இன்று யாழ்ப்பாணத்தில் தூதரக திறப்பு விழாவில் பங்கேற்கும் கிருஷ்ணா, நாளை ஹம்பன்தோடா தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.
கருத்துகள் | | Read More...

போர் மமதையில் இருந்து அரசாங்கம் இன்னமும் விடுபடவில்லை

Penulis : Antony on வெள்ளி, 26 நவம்பர், 2010 | 9:39 AM

வெள்ளி, 26 நவம்பர், 2010

கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ச்சியாக காலத்திற்குக் காலம் நடத்தப்பட்ட தமிழினத்திற்கு எதிரான தாக்குதல்கள் மூலம் உயிரிழப்புகள்,சொத்தழிப்புகள், சொத்துகளைச் சூறையாடல், தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வரைமுறையற்ற கைதுகள்,கொலைகள்,உயர்கல்வி வாய்ப்பு பறிப்பு, உத்தியோகப் பறிப்பு என உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் அடிப்படைத் தேவைகள் மறுப்பு ரீதியாகவும் பல முனைகளில் தமிழ் இன ஒழிப்பை நிகழ்த்தி வந்த சிங்கள ஆட்சியாளர்கள் இன்று தமிழ் இனவொழிப்பை வேகப்படுத்தும் வேலைத்திட்டத்தினை "பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்' என்ற போர்வையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்படுத்தி வருகின்றனர்.
இன்று வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைமையை உதாசீனம் செய்து நிர்வாக அதிகாரிகளின் சுதந்திரமானதும் சட்டபூர்வமானதுமான செயற்பாடுகளைத்தடுத்து இனவெறியூட்டப்பட்ட இராணுவத்தின் துணையுடன் தமிழ் இனவொழிப்பு நடவடிக்கையை அதிவேகப்படுத்தும் செயல்திட்டத்தினை அபிவிருத்தி என்ற பெயரால் இவ்வரசு செயற்படுத்தி வருகிறது. இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவுசெலவுத் திட்டமானது தமிழ் இனவொழிப்பு செயல்திட்டத்தை நாசூக்காகவும் தாக்கமாகவும் நடைமுறைப்படுத்தற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளமை துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது.

இனப்படுகொலை தொடர்பாக மனோரீதியானதும் மற்றும் உடல் ரீதியானதும் தொடர்பாக இலங்கையில் உள்ள நிலைமை என்ன?

மனோரீதியாக இலங்கையில் தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் வேலை இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே ஆரம்பித்து விட்டது. சிங்கள பௌத்தத்தின் மறுமலர்ச்சித் தலைவர் என்று சொல்லக்கூடிய அநõகரிக தர்மபாலவின் குடிணடச்டூஞுண்ஞு ச்ணூஞு tடஞு ண்ணிண ணிஞூ tடஞு ண்ணிடிடூ. கூடஞு கூச்ட்டிடூண்,ட்ணிணிணூண் ச்ணஞீ Mச்டூச்தூச்டூஞுஞுண் ச்ணூஞு tடஞு ச்டூடிஞுணண் என்ற பிரசாரத்தைத் தொடர்ந்து சிங்களத்தை மட்டும் அரச கரும மொழியாகக் கொண்டு வந்து தமிழ்மொழியை அழித்தல், மலைநாட்டில் தமிழ் மக்களின் வாக்குரிமையை பிடுங்கி அவர்களின் பிரதிநிதித்துவத்தை அழித்தல்,தமிழ் மக்கள் பாரம்பரியமாகவும் பெரும்பான்மையாகவும் வாழ்ந்த இடங்களில் சிங்கள மக்களைக் குடியேற்றி தமிழரை அவர்களது பூர்வீக இடங்களில் சிறுபான்மையினராக்கி அவர்களின் தனித்துவத்தை அழித்தல், தமிழ் மக்களது நூலகங்களை எரித்து அவர்களது வரலாறு மற்றும் கலாசார பாரம்பரியங்களை அழித்தல், இவை எல்லாமே தமிழினத்தின் தனித்துவத்தை அழிப்பதன் மூலம் தமிழினத்தை இல்லாதொழிக்கத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் எடுத்து வந்த முயற்சிகளாகும்.

உடல் ரீதியானது என்பதில் ஓடிடூடூடிணஞ் Mஞுட்ஞஞுணூண் ணிஞூ tடஞு எணூணிதணீ என்பது இன அழிப்பின் ஓர் முக்கிய வடிவமாகும். இன அழிப்பிற்கெதிராக போராடிய எத்தனை இலட்சம் தமிழ் மக்கள் கடந்த 30 ஆண்டுகளில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். சுதந்திரத்தின் பின் எத்தனை இனக்கலவரங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் எத்தனை ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் 2005 இல் இன்றைய ஆட்சியாளர் பதவிக்கு வரு முன்னர் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற முகமூடிக்குள் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பக்கச்சார்பற்ற கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தால் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட அல்லது காணாமல்போன இளைஞர்கள்,யுவதிகள் பல்லாயிரம் பேர் மேலும் ஏறத்தாழ பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இராணுவ அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு விரட்டப்பட்டுள்ளனர். நடைபெற்ற இப்பாரிய அளவிலான கொலைகள் தொடர்பாக அரசாங்கத்திடம் எந்தவிதமான புள்ளிவிபரங்களும் தகவல்களும் இல்லை என்பதுடன் ஒரு சம்பவத்திலாவது குற்றவாளி தண்டிக்கப்பட்டானா? என்றால் இல்லை. இவை எல்லாம் ஆட்சியாளரின் இனவொழிப்பு நோக்கத்தையே அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன. ஓர் இனத்தின் உறுப்பினர்களைப் பகுதியாகவோ, முழுமையாகவோ கொன்றொழிப்பது என்பது வெளிப்படையான இனவொழிப்பு நடவடிக்கையாகும்.

அதாவது ஓர் இனத்தின் ஒரு பகுதி மக்களையோ அல்லது அனைவரையுமோ உடல் ரீதியாகவோ அல்லது உளரீதியாகவோ கடுமையான துன்பத்திற்குள்ளாக்குவதென்பதும் இனவொழிப்பின் இன்னோர் வடிவமாகும். அரச பயங்கரவாதம் காரணமாகக் கொன்றொழிக்கப்பட்ட மக்கள் போக எஞ்சியிருப்போரில் அங்கவீனர் ஆக்கப்பட்டோர்,குண்டுத்தாக்குதல்களால் உடல்களில் செல் துண்டுகளை தாங்கி நீண்டகால நோயாளிகளாக்கப்பட்டோர் பல்லாயிரம் பேர்.

தாய்,தந்தையை இழந்து மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவர்கள்,தமது பிள்ளைகளை இழந்து எதிர்காலம் பற்றிய கனவுகளையும் தமது பாதுகாப்பையும் தொலைத்து நடைபிணமாக வாழும் பெற்றோர்கள் பல பத்தாயிரத்தைத் தாண்டும். வடக்கு,கிழக்கில் ஏறத்தாழ ஒரு இலட்சத்தை அண்மித்த தமிழ்ப் பெண்கள் கணவன்மாரை இழந்து வாழ்க்கையே வெறுமையாகப் போயுள்ளதுடன், தமது குழந்தைகளை வளர்க்க வழியற்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவ்விதவைகளில் ஏறத்தாழ பாதிப்பேர் இளம் வயதினர் ஆவர். ஆக தமிழ் மக்களின் ஒரு தலைமுறை இளைஞர் சமுதாயத்தின் பெரும்பகுதி அழித்தொழிக்கப்பட்டதன் மூலம் அடுத்த தலைமுறை உருவாக்கத்திற்கான மூலங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டிருக்கின்றது.

ஓர் இனத்தை முழுமையாகவோ அரைகுறையாகவோ அழிப்பதற்கான திட்டமிட்ட புறச்சூழ் நிலைகளை உருவாக்குவதல் என்பது இனவொழிப்பின் இன்னோர் வடிவமாகும். வடக்கு,கிழக்கை இராணுவமயமாக்கி தமிழ் மக்களின் அரசியல் தலைமையும் முடக்கி திட்டமிட்ட இராணுவ ஆட்சியினை நிலை நிறுத்துவதன் ஊடாக மக்களின் அடிப்படை உரிமைகள் ஜனநாயக உரிமைகளை மறுத்து அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கும் சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. வடக்கு,கிழக்கில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இக் கிராமங்களிலுள்ள மக்களின் குடிமனைகள் வரை பரவியிருக்கின்றனர். மக்களின் அன்றாட வாழ்க்கை,சுதந்திரமான போக்குவரத்து ஆகியவற்றை இது பாதிப்பது மட்டுமன்றி மக்களின் பாதுகாப்பிற்கு குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகவுள்ளனர்.

வடக்கு,கிழக்கில் போரின்போது மக்களின் வீடுகள், பொதுச் சொத்துகளுக்குச் சேதங்கள் ஏற்பட்டதுடன், ஒரு பகுதி முற்றாக அழிக்கப்பட்டது. சேதமான பெரும்பகுதி வீடுகளும் பொதுக்கட்டிடங்களும் திருத்திப் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருந்தன. ஆனால், போர் முடிந்த பின்னர்தான் பெருமளவு வீடுகளும் பொதுக் கட்டிடங்களும் இராணுவத்தினரால் புல்டோசர் மூலம் தரைமட்டமாக்கப்பட்டு ஊர்கள் இருந்த அடையாளமே தெரியாமல் நிலத்துள் மூடப்பட்டன. கிழக்கில் சம்பூரும் வடக்கில் இயக்கச்சி,முல்லைத்தீவில் பல கிராமங்களும் இவ்வாறு காணாமல் போயுள்ளன. இங்கு வாழ்ந்த ஏறத்தாழ இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த எட்டாயிரம் பேரில் இன்று வரை ஒருவர் கூடத் தமது வீடுகளில் குடியேற்றப்படவில்லை. ஆறு பாடசாலைகள்,எட்டுக் கோவில்கள்,இரண்டாயிரம் வரையான வீடுகள்,ஒரு வைத்தியசாலை ஆகியவற்றைக் கொண்ட பல நூற்றாண்டு கால பழம்பெரும் குடியிருப்பு முற்று முழுதாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டு பத்தாயிரம் ஏக்கர் கொண்ட இவ்வூர் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் வெட்டை வெளியாக்கப்பட்டுள்ளது. இதைவிட இவ்வூருக்கான விலாசத்தையே அழிக்கும் வகையில் தபால் அலுவலகம் மீளப்பெறப்பட்டுள்ளது.

வன்னியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மக்களின் சொத்துகள்,கால்நடைகள்,வாகனங்கள் ஆகியன கொள்ளையிடப்பட்டது மட்டுமன்றி,வீட்டுக்கதவுகள்,ஜன்னல்கள்,கூரைகள் உட்பட அனைத்தும் இன்றும் மக்களின் கண்முன்னாலே திருடப்படுகின்றன. மக்களுக்கும் சிவில் அதிகாரிகளுக்கும் சம்பந்தப்பட்ட அன்றாட அலுவல்கள், இராணுவத்தின் தலையீடுகளாலும் இராணுவத்தினரிடம் அனுமதி பெற வேண்டிய நிலைகளாலும் அகதிகளான தமிழ் மக்களுக்கு கடும் அசௌகரியங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. வடக்கு,கிழக்கில் இராணுவ ஆட்சியானது அரசாங்கத்தின் இனவொழிப்பு வேலைத்திட்டத்தைத் துரிதமாக நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. தம் இனவாதக் கொள்கையைச் செயற்படுத்துவதற்கும் மக்களைப் பணியவைப்பதற்கும் புலிகளுடன் தொடர்பு அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு என்கின்ற சுலபமான ஒரு காரணத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய எதேச்சதிகார சூழ்நிலையானது வடக்கு,கிழக்கு மக்களை ஒன்றில் விரட்டியடிப்பது அல்லது அடிமைப்படுத்துவது என்கின்ற இனவழிப்பு நோக்கங்களைத் தவிர வேறு ஏதும் இருக்க முடியாது.

இவற்றுக்குப் பலம் சேர்க்கும் வகையில் இன்னொருபுறம் வேகமான கலாசார அழிப்பு செயல்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கு,கிழக்கில் இராணுவ விமானப்படைக் குண்டு வீச்சினால் பல நூறு கோவில்களும் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் அவற்றைப் புனரமைத்து மக்களின் வழிபாட்டுக்கு அனுமதிப்பதற்கு மாறாக கோவில்களின் சுற்றுப்புறங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதும் மீதமிருக்கும் கோவில்களை அழிப்பதும் மக்கள் அவற்றைப் புனரமைப்பதற்கோ சுதந்திரமாகச் சென்று வழிபடுவதற்கோ தடைவிதிப்பது மட்டுமன்றி,விலையுயர்ந்த கோவில் விக்கிரகங்களைத் திருடுவதுமே நடைபெறுகின்றது. பௌத்தம் அரச மதம் என்ற அரசியல் யாப்பு உரிமையை கேள்விக்கிடமற்ற அதிகாரமாகப் பயன்படுத்தி பௌத்தர் இல்லாத இடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல்,பழைமையும் புனிதமும் மிக்க இந்துக் கோவில்களுக்கு அருகில் பௌத்த விகாரைகளையும் பெரும் புத்தர் சிலைகளையும் நிர்மாணித்தல். இதன் மூலம் பௌத்தர் அல்லாத மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தலும் அவர்களின் நிலங்களை கபளீகரம் செய்தலும் தமிழக மக்களின் கலாசார தனித்துவங்களை அழிக்கும் செயற்பாடுகளே!

யாழ்ப்பாணத்தின் மாதகலில் ஓர் புதிய பௌத்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது ஏ9 பாதையின் மாங்குளத்தில் புதிய பௌத்த கோவில் கட்டப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக பௌத்த கோவில் கட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வவுனியா வைத்தியசாலையில் உள்ள நீர்த்தாங்கி உடைக்கப்பட்டு ஆளுநரின் உத்தரவின் பேரில் அங்கும் ஓர் பௌத்த கோவில் அமைக்கப்படுகின்றது. பாடல் பெற்ற பழம்பெருமை வாய்ந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இலங்கையின் ஐந்து ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரத்தின் முகப்பில் புதிய பௌத்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல வருடங்களுக்கு முன்பாகப் பாடல் பெற்ற திருத்தலமான திருகோணமலையின் கோணேஸ்வர ஆலயத்தின் முன்பாக பாரிய புத்தர் சிலை அமைக்கப்பட்டது. இன்று தமிழ் மக்கள் தமது இறுதிக் கிரியைகளைச் செய்கின்ற மிகவும் தொன்மை வாய்ந்த இராவணனால் தனது தாய்க்கு இறுதிக் கிரியைகள் செய்யப்பட்டதாக சொல்லப்படும் கன்னியா வெந்நீர் ஊற்றும் பௌத்த துறவிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனைவிட வன்னியின் பல பகுதிகளிலும் பௌத்த கோவில்கள் உருவாகி வருகின்றன.

நாங்கள் ஒன்றும் பௌத்த கோவில்களுக்கோ பௌத்தர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. ஆனால், அது பௌத்த மக்கள் இருக்கும் இடங்களில் அவை உருவாக்கப்பட வேண்டும். வன்னியில் இராணுவத்தினருக்கோ, பொலிஸாருக்கோ பௌத்த கோவில்கள் தேவைப்பட்டால் அது அவர்களின் முகாம்களில் அமைக்கப்பட வேண்டும். தமிழ் மக்களோ,இந்துக்களோ செறிந்து வாழும் இடங்களில் அமைக்கப்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. அது தமிழ் இனவொழிப்பின் இன்னொரு பரிமாணமாகவே பார்க்கப்படும்.

இவை மட்டுமன்றி, தமிழ்ப் பிரதேசங்களில் சாதாரண அரச அலுவலகத் திறப்பு விழாக்கள் உட்பட நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ் பாரம்பரிய இசைகளுக்கு பதிலாகக் கண்டிய நடனங்களையும் சிங்கள இசைகளையும் திணித்தல், தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடும்படி தமிழ் மாணவர்களை நிர்ப்பந்தித்தல்,பௌத்த விழாக்களுக்கு பௌத்தர் அல்லாத மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கட்டாயப்படுத்திப் பணம் சேர்த்தல், அவ்விழாக்களுக்கு மக்களை வரும்படி வற்புறுத்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்க் கலாசாரத்தின் இருப்பிற்கு அபாய விளக்குக் காட்டப்படுகின்றது. இவை மட்டுமன்றி, தமிழ் மக்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்தல் மற்றும் அவற்றைத் திரித்துக்காட்ட முற்படல் ஆகியவற்றிலும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தால் போல் இந்துக்களின் புனித நாளான நவம்பர் 21 ஆம் திகதி தீபத்திருநாளன்று வீடுகளில் தீபமேற்றிய மக்கள் பலர் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினால் அடித்து நொருக்கப்பட்டுள்ளனர். இவையனைத்தும் வெளிப்படையான கலாசார அழிப்பின் உச்சக்கட்டமாகும்.

இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வரவுசெலவுத் திட்டமானது மேலே பட்டியலிடப்பட்டுள் பலமுனை தமிழின அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அப்பட்டமான இனவாத வரவு செலவுத் திட்டம் என்பதனை சாதாரண பாடசாலை மாணவனாலேயே புரிந்துகொள்ள முடியும்.

யுத்தம் முடிவடைந்தவுடன் எல்லோருக்கும் நிவாரணம் கிடைக்கும் எனப் பொதுமக்களும் சம்பள உயரும் என அரச ஊழியர்களும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிக்கும் என முதலீட்டாளர்களும் வணிகம் விருத்தியடையும் என வணிகர்களும் எதிர்பார்த்ததுடன், மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என மனிதாபிமானமுள்ள

வெளிநாடுகளும் எதிர்பார்த்தன. அழிக்கப்பட்ட தமது வீடுகள் மீளக் கட்டித்தரப்படும் என நான்கு இலட்சம் வரையிலான வடக்கு,கிழக்கு மக்கள் எதிர்பார்த்தனர். தமது சொத்தழிவிற்கான நிவாரணங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.தமக்கு வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்த்தனர். இராணுவ செலவு குறைக்கப்பட்டு மீள்குடியிருப்பு, கல்வி,சுகாதார மீள்கட்டுமான செலவுகளுக்கு ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்த்தனர். ஆனால், இவற்றில் எதுவுமே வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

அரசாங்கம் இன்னும் யுத்த மமதையிலிருந்து விடுபடவில்லை. பாதுகாப்புக்கு 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2011 ஆம் ஆண்டுக்காக 13 பில்லியன் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகையானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகையை விட இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாகும். பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் கடந்த காலங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் கொள்வனவில் ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக என்று கூறப்படுகின்றது. இது முற்றிலும் தவறானதாகும்.

வெளிநாட்டுக் கடன்களை அடைக்கும் பணி நிதியமைச்சினுடையதாகும். ஒவ்வொரு அமைச்சு தொடர்பான கடனையும் திருப்பிச் செலுத்தும் முழுப்பொறுப்பும் நிதியமைச்சினுடையதாகும். இது பாதுகாப்பு அமைச்சுக்கும் பொருந்தும். பாதுகாப்புக்கு அதிக நிதியொதுக்கப்பட்டுள்ளமைக்கான அடுத்த காரணம் பாதுகாப்பு அமைச்சு அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுகின்றது என்பதாகும். அப்படியானால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் ஏனைய அமைச்சுக்களும் எதற்காக இருக்கின்றன? என்ற கேள்விக்கப்பால் பாதுகாப்பு அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட 215 பில்லியனானது முப்படைகளுக்கும் பொலிஸுக்கும் ஏனைய பாதுகாப்புத் தொடர்பான நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதே தவிர, அபிவிருத்திக்கு அல்ல என்பதையும் நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பாதுகாப்புக்கு கடந்த ஆண்டினை விட 13 பில்லியன் ரூபாக்கள் அதிகமாக ஒதுக்கிய அரசாங்கம் கல்விக்கும் உயர் கல்விக்கும் முறையே 2.7 மற்றும் ஒரு பில்லியன் ரூபாவையே அதிகமாக ஒதுக்கியுள்ளது. இதுதான் அரசாங்கம் இந்நாட்டின் கல்வியைப் பாதுகாக்கும் இலட்சணமா? அரச ஊழியர்கள் சம்பள உயர்வு கேட்டால் நாட்டின் அபிவிருத்திக்காக அவர்கள் சம்பள உயர்வினைத் தியாகம் செய்ய வேண்டும் என உபதேசிக்கப்படுகின்றது. 30 வருடங்களாக சம்பள உயர்வினைத் தியாகம் செய்து இன்று ஆசியாவிலேயே குறைவான சம்பளம் பெறுபவர்கள் என்னும் நிலையை அடைந்துள்ளமை போதாதா? கல்வி, உயர்கல்விக்கு மட்டுமல்ல தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (3.7 பில்லியன்) போன்ற மிக முக்கிய அமைச்சுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவும் போதுமானதல்ல.

நாடு தீவாக இருந்தும் கடல் உணவுப் பொருட்கள் கூட இறக்குமதி செய்யப்படுகின்றன. இருந்தும் கடற்றொழில் நீரக வளமூலங்கள் அமைச்சுக்கு 4.4 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளன. பால் மா இறக்குமதிக்காகப் பெருந்தொகைப் பணம் செலவிடப்படும் நிலையில், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சுக்கு 2.2 பில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் அசிரத்தைக் காட்டப்பட்டுள்ளது என்பதையே காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் இறக்குமதிகளைக் குறைப்பது எவ்வாறு?
கருத்துகள் | | Read More...

நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும்


எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களே! தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், தமிழீழ தேசத்தின் சுதந்திரத்திற்காகவும் தம் இன்னுயிரை ஈகம்செய்த மாவீரர்களை நினைவுகூரும் வாரமாகும். எம் இதயக் கோவில்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகத்தான தியாகங்களை புரிந்த அந்த உன்னத வீரர்களை உணர்வோடு நினைவுகூருவதற்கு ஒன்று திரளும் நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியமான கட்டமைப்பில் செயற்பட்டவன் என்ற வகையில் சில விடயங்களை உங்களோடு பகிரவிரும்புகிறேன். எமது விடுதலை இயக்கத்தின் பாசத்திற்குரிய உறவுகளே! ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில், ஆயுதங்களின் அமைதி என்பது அப்போராட்டத்தின் முடிவல்ல. காலத்தின் கட்டளையும், உலகத்தின் நியதியும் மீண்டும் மீண்டும் மாறும். அது, அடுத்த கட்டப் போராட்டத்திற்காக நாம் எத்தகைய ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்ற செய்தியை எமக்குத் தரும். அந்த செய்தி வரும் வரை அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.




எமது கடின உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் மட்டுமே, எமக்கான வாசற்கதவுகளை நாம் திறக்க முடியும். இது, முற்றுமுழுதான மக்கள் மயப்பட்ட போராட்டமாக இருக்க வேண்டும். மக்களுக்காய் உருவான போராட்டம், மக்களின் புரட்சியினாலேயே அதன் இலக்கை அடையத்தக்க வகையில் பயணிக்க வேண்டும். எமது மாவீரர்கள் துயில்கின்ற இல்லங்களையே சிங்களப் பேரினவாதம் சிதைத்தழித்துவிட்டது. இருப்பினும், எந்த மண்ணின் விடுதலைக்காக அவர்கள் வீழ்ந்தார்களோ அந்த மண்ணோடே அவர்கள் மீண்டும் மீண்டும் சங்கமிப்பதை சிங்கள அரச பயங்கரவாதத்தால் தடுக்க முடியவில்லை. உயரிய அர்ப்பணிப்பினை புரிந்த மாவீரர்கள் எமது போராட்டத்தில் கல்லறைகள் அல்ல, மாறாக எமது சுதந்திரப் போராட்டத்திற்கான கருவறைகள்.




சர்வதேச போர்மரபு சட்ட நியமங்களை மீறி, எமது இதயக் கோவில்களில் வாழும் எம் மாவீரச் செல்வங்களின் துயிலுமில்லங்களை அழித்து, தமிழர் தாயகத்தை சிதைத்து வரும் சிறீலங்காவின் அரச பயங்கரவாதத்திற்கு நாம் தகுந்த பதிலடியை உரிய நேரத்தில் கொடுப்போம். இதற்கு, உலகெங்கும் பரந்து வாழும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழரினதும் பங்களிப்பு அவசியம். களநிலை மாறியிருக்கலாம், ஆனால் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது உறுதியான மனநிலை என்றுமே மாறக்கூடாது. எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களே! தன்மானமும், பொறுப்புமுள்ள மனிதர்கள் என்ற வகையில், எத்தகைய கட்டத்திலும் எமது சுதந்திரப் போராட்டத்தை நாம் கைவிடக்கூடாது. எமது தேசியத் தலைவர் தொடர்ச்சியாக கூறுவதுபோல் எமது இறுதி மூச்சுவரை எமது மக்களின் சுதந்திரத்திற்கான போராட்டம் தொடர வேண்டும்.




எத்தகைய காலகட்டத்திலும் எமது சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் கொள்கையையோ, எமது தேசியத் தலைமையின் இலட்சியத்தையோ மானமுள்ள தமிழர்களாகிய நாம் கைவிட முடியாது. தேசிய நலன்களுக்காக முட்டி மோதிக்கொள்ளும் இன்றைய புதிய உலக ஒழுங்கிலே, விடுதலைப் புலிகளின் அடையாளத்தை பூண்டோடு அழித்து தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்ற பேராபத்து நிறைந்த சூழலை உருவாக்கும் பாரிய சதித்திட்ட முயற்சியில் சிங்களப் பேரினவாதமும் அதன் நேச சக்திகளும் முனைப்புக் காட்டி வருகின்றன.




தமிழர்கள் என்ற இனத்தையும், அவர்களின் பாரம்பரிய அடையாளங்களையும் அழிக்க வேண்டுமாயின், அதன் முதற்கட்டமாக விடுதலைப் புலிகள் என்ற அடையாளத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற இரகசிய நிகழ்ச்சி நிரலிலே பல சக்திகள் இயங்கி வருவதை எமது புலனாய்வுக் கட்டமைப்பு கண்டறிந்துள்ளது. இதற்காக ஆசைவார்த்தைகளைக் காட்டி, மாயமான்களை உருவாக்கி உரிமைக்கான எமது விடுதலைப் போராட்டத்தை சலுகைகள் ஊடாக கருவறுக்கும் முயற்சியிலே குறித்த சக்திகள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.




இதற்காக, விடுதலைக்கு உதவுவது போல் போக்கு காட்டி விடுதலை உணர்வாளர்களின் மனவுறுதியை சிதைக்கும் பயங்கர நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அன்பிற்குரிய எமது மக்களே, விடுதலை உணர்வாளர்களே! சிங்களப் பேரினவாதம் விரித்து வைத்துள்ள கபட வலைக்குள் வீழ்ந்து விடாமல், விழிப்புணர்வோடு இருந்து எமது சுதந்திரப் போராட்டத்தை நகர்த்துவதற்கு உங்களின் பங்களிப்பை வழங்க வேண்டியது இந்நேரத்தில் வரலாற்றுக் கடமை என்பதை மனதிற்கொள்ளுங்கள். போராடப் புறப்பட்ட இனம் ஒன்று அவலங்களையும், இழப்புகளையும் கண்டு பின்வாங்கியதாக இதுவரை விடுதலைப் போராட்ட வரலாறு இருந்ததும் இல்லை, இனிமேலும் இருக்கவும் கூடாது. எமக்கான இன்னல்கள் என்பது, எமது தேசத்தின் விடுதலைக்கான பிரசவ வலி.




பல தலைமுறை இழப்புக்குப் பின் சுதந்திரத்தை வென்றெடுத்து இன்று நிமிர்ந்து நிற்கும் அயர்லாந்தைப் பாருங்கள்.




1990ஆம் ஆண்டோடு அழிந்தது சோவியத் ஒன்றியம் எனச் சொன்னோர்கள் அச்சமுறும் வகையில், இருபது வருடங்களுக்குள் தனியொரு தேசமாய் தலைநிமிர்ந்து நிற்கும் ரஷ்யாவைப் பாருங்கள். அடுத்து! பால்கன்ஸைப் எடுத்துப் பாருங்கள். எத்தனை இனப்படுகொலைகளைச் சந்தித்தது? புதைகுழிகளின் நகரங்களாக மாற்றம் பெற்றது. மயான தேசத்தில் நிர்க்கதியற்ற மக்களாக அந்த மக்கள் அந்தரித்து விடப்பட்டார்கள்.




ஆனால், அந்த மக்களோ, சுதந்திர தேசத்தை அடைய வேண்டும் என்ற கனவைக் கைவிடவில்லை. இழந்து போன உறவுகளை நினைக்கும் போதெல்லாம் உங்கள் கனவுகளை நனவாக்குவோம் என்று உறுதியெடுத்துக் கொண்டார்கள். அதற்கேற்ப அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். அ தன் பலன், பால்கன்ஸ் குறுகிய காலப்பகுதிக்குள் ஆறு சுதந்திர தேசங்களை பிரசவித்தது. (இறுதியாக விடுதலையடைந்த ஏழு சுதந்திர தேசங்களில் ஆறு தேசங்கள் பால்கன்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்தவை.) இதற்கு தனித்து பூகோள அரசியல் மட்டுமல்ல, மக்களின் விடுதலை உணர்வும் பாரிய பங்களிப்பை வழங்கியது. இரண்டாம் உலகப் போரோடு யூதர்கள் என்ற இனம் அழிந்தது என்று ஒரு வரலாறு சொன்னது. ஆனால், இன்று இஸ்ரேலியர்கள் வரலாற்றையே மாற்றிவிட்டார்கள். குந்த ஒரு குடிநிலமாகக் கொடுத்த நிலத்தை ஒரு சக்திமிக்க தேசமாக மாற்றிவிட்டார்கள்.




அயல்நாடுகள் அரபுநாடுகளாக இருக்கின்ற போதும், நடுநாயகமாகத் தனித்திருந்து சூழவுள்ள நாடுகள் அனைத்திற்கும் சவால்விடும் தேசமாக இன்று இஸ்ரேல் வளர்ந்த கதைக்குப் பின்னால் இருப்பது, தோல்விகளைக் கண்டு பின்வாங்காத உறுதிமிக்க மனோபாவம், அர்ப்பணிப்புடன் ஒன்றுபட்ட கடும் உழைப்பு, தளராத தன்னம்பிக்கை மற்றும் எத்தகைய இழப்புகள் வரினும், இலக்கினை அடையும் வரை போராடும் மனஉறுதி. இவை கடந்த கால அல்லது அண்மைக் கால எடுத்துக்காட்டுக்களும் எமக்கான சில எடுத்துக்காட்டுக்களுமே ஆகும். எமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்ள நாமே போராட வேண்டும். காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும், எமக்கான சாத்தியப்பாடுகள் கைநழுவிப் போய்விடும். ஆகவே, எமக்கு ஏற்பட்ட பேரழிவென்பது, எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்வுக்குத் தடையாக இருக்கக்கூடாது. அவர்களுக்கு ஏற்படப்போகும் சவால்களைத் தகர்ப்பதற்கு நாமே போராட வேண்டும்.




அழிவுகளைக் கண்டு நாம் பின்வாங்காமல், எமது இலட்சியத்தைக் கைவிடாமல், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இலட்சக்கணக்கான எமது மக்களை பூண்டோடு அழிக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தின் திட்டத்தை அறிந்த எமது போராட்ட அமைப்புக்கு, எமது மக்களைப் பாதுகாக்கும் நோக்கோடு ஆயுதங்களை மௌனமாக்கும் நிர்ப்பந்தம் உருவானது.




எமது மண் சிங்கள இனவெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது! எமது பண்பாட்டுச் சின்னங்கள், மத வழிபாட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகிறது! இந்த நிலை நீடிக்குமிடத்து, தமிழர் என்ற இனமே இலங்கைத் தீவில் இல்லாமல் போகும். எமது தாயக நிலப்பரப்பு முற்றுமுழுதாக சிங்கள இனவெறியர்களின் ஆக்கிரமிப்புக்கு உட்படும். ஆகமொத்தத்தில், எமது கடந்த கால அடையாளங்கள் மட்டுமல்ல, எதிர்கால இருப்பே இல்லாமல் போகும் பேராபத்து விரைவாகச் சூழ்ந்து வருகிறது. இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களையும், முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களையும் இழந்த பின்னும் நாம் அமைதி காக்கப் போகிறோமா?




பல்குழல் எறிகணைகளின் வீச்சு ஒருபக்கம், கடற்படையின் தாக்குதல் இன்னொருபக்கம், இரசாயனக்குண்டுத் தாக்குதல் மறுபக்கம், இவற்றையெல்லாம் தாண்டி, மிகையொலி விமானங்களின் கொடும் தாக்குதல். உண்ண உணவில்லை, உயிரைப் பாதுகாக்க இடமில்லை, பட்ட காயத்திற்கு கட்டுப்போட மருந்தில்லை, இப்படியான இக்கட்டான நிலைமைகளுக்குள்ளும் இலட்சியப் பற்றுறுதியோடு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று எமது தாயக மண்ணோடு சங்கமித்த எம்மக்களை ஒரு தரம் நினைத்து பாருங்கள்.




சுதந்திரமே மூச்சென்று வாழ்ந்து கல்லறைகளுக்குள் விழிமூடிய பின்னும், எம் கனவுகளுக்குத் துணைநிற்கும் மாவீரர்களை மனத்திற் கொள்ளுங்கள். பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொண்ட மண்ணில் இறுதிக்கணம் வரை நிலைகொண்டு, சிறீலங்காவின் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும், போர்க்குற்றங்களையும் வெளிக்கொணர்வதற்காக தாயக மண்ணில், சிறீலங்காப் படைகளின் கொடூர பிடிக்குள் இருந்து கொண்டு துணிச்சலோடு செயற்படும் போராளிகள் - மாவீரர் குடும்ப உறுப்பினர்களின் மனவுறுதியைப் பாருங்கள்.




இராணுவ மயமாக்கப்பட்ட மயான பிரதேசங்களுக்குள் வாழ்கின்ற போதும், சிறீலங்காப் படைகள் நடாத்திய இனஅழிப்புப் போரின் சாட்சிகளாக முன்வந்துகொண்டிருக்கும் எங்கள் தாய்க்குலங்களைப் பாருங்கள். இத்தனை நடந்த பின்னும், இவர்களின் போராட்ட உணர்வு மட்டும் மங்கவில்லையே.




ஆனால், களத்தோடு ஒப்பிடுமிடத்து, புலத்தில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு விடுதலைக்கான ஆதரவுத்தளங்களை விஸ்தரிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். ஆயினும், அந்தப் பணி ஆக்கபூர்வமாக இன்னும் தொடங்கப்படாமையால் எமது மக்களின் விடுதலைக்கான போராட்டச் சக்கரம் மந்த நிலையை அடைந்துள்ளது. இது எதிரியானவனுக்கு வாய்ப்பானதாக மாறிவிட்டுள்ளது. ஆகவே, தாயக விடுதலையென்ற உன்னத இலட்சியத்தை அடைவதற்காகவும், எமது மக்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் உணர்வுடனும், உத்வேகத்துடனும் உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்.




மிக நெருக்கடியான காலகட்டமொன்றிலே தேசியத் தலைவர் உறுதியாக எடுத்த முடிவொன்றைக் கூறி இந்தக் கருத்து பகிர்வை நிறைவுசெய்கிறேன். அமைதி காக்கும் படையென்ற பெயரில் வந்திறங்கிய இந்தியப் படையினர் எமது மண்ணை ஆக்கிரமித்து, எமது மக்களைப் படுகொலை செய்தபோது, அவர்களுக்கு எதிராக போரிடுவதைத் தவிர வேறுவழியில்லையென்ற முடிவில் போரிடத் தயாரான போது, விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் அதற்கு இணங்கவில்லை. ஏனெனில், இந்திய இராணுவத்தின் உச்சபலம் அவர்களை அவ்வாறான ஒரு நிலைக்கு இட்டுச்சென்றது. ஆனால், தேசியத் தலைவரோ தான் எடுத்த முடிவை மிக நேர்த்தியாக நிறைவேற்றினார்.




எத்தகைய சவால்கள் வரினும் எமது சுதந்திரப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்று தன் அருகிலிருந்தவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.




இது, எமது இன்றைய நிலைக்கும் பொருந்தும்.




" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"
கருத்துகள் | | Read More...

புலிகளின் குரல் இலங்கை இந்தியா மற்றும் உலக மெங்கும் சிறப்பு ஒலிபரப்பு


புலிகளின்குரல் வானொலி மாவீரர்நாள் 2010 சிறப்பு ஒலிபரப்பு மதிப்புக்குரிய தமிழீழ மக்களே, தமிழக மக்களே, தமிழ்பேசும் எம்முறவுகளே, தமிழீழத்தின் தேசியக்குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் புலிகளின்குரல் வானொலியின் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் கார்த்திகை 26-27ம் நாட்களில்; உலகம் முழுவதும் ஒலிக்கும் வண்ணம் புலிகளின்குரல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.




அந்த வகையில் எமது அதிகாரபூர்வ இணையத்தளமான www.pulikalinkural.com ஊடாகவும், ஐரோப்பா, ஆசியா, மத்தியகிழக்கு நாடுகளில் செய்கோள் ஊடாகவும் 24மணி நேரமும் நீங்கள் எமது ஒலிபரப்புகளைக் கேட்கலாம், செய்கோள் விபரம்:

Name : Tamilarkural Satellite :

Hotbird 13 Frequency :

10815 Polarization :

Horizontal Symbol Rate :

27500 Fec : 5/6 Broadcast :

Digital Free-Air

அதே போன்று, தமிழீழம், இலங்கை, இந்தியா, மற்றும் அனைத்து ஆசியா நாடுகளிலும் சிற்றலையூடாக எமது ஒலிபரப்புக்கள் ஒலிக்கவுள்ளன.

வெள்ளி 26 மற்றும் சனி 27 நாட்களில் தாயக நேரம் பிற்பகல் 3.30மணி தொடக்கம் 7.30 மணி வரையும், 17880kHz என்ற சிற்றலை அலைவரிசையில் ஆரம்பித்து, இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரையும்6230kHzஎன்ற அலைவரிசையில் தொடர்ந்து ஒலித்து, பின்னர் இரவு 8.30 மணி தொடக்கம் 9.30 வரை 13860kHz என்ற அலைவரிசையில் ஒலித்து மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்கள் சிற்றலையில் நிறைவடையும்.

எமது தேசிய மாவீரர்நாள் ஒலிபரப்புகளை மேற்குறிப்பிட்ட வழிமுறைகள் ஊடாக நீங்கள் கேட்கலாம்.
கருத்துகள் | | Read More...

அதியப்பிறவிகள் விரமிகு மாவீரர்கள்

மாவீரர்களின் மாதம் என்று நாம் பூஜிக்கும் கார்த்திகை மாதத்தில் நாம் நிற்கின்றோம். கார்த்திகை மாதத்தின் கதவுகள் நமக்காக திறக்கின்றபோதே உள்ளே மாவீர்களின் மௌனமான உறக்கம் நமது கண்களுக்கு தெரிகின்றது. மரியாதைக்குரிய மாதமாக கார்த்திகையை நாம் பூஜிப்பது என்பதும் இந்த மாவீரர்களுக்கே ஆகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. விடுதலைப் புலிகள் அதிகாரம் வன்னி மண்ணில் துலங்கியபோது இந்த தியாகிகளுக்கு தகுந்த இடம் கிடைத்தது. உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் அந்த சிறிய ராஜ்யத்தில் சிறப்பான விழாக்கள் நடைபெறுவதுண்டு. கார்த்திகை 27ம் நாள் அந்த மண்ணில் சூரியக் கதிர்கள் பட்டுத்தெறிக்கும் முன்னரேயே மக்கள் வீடுகளை விட்டு வந்து தங்கள் இதய தெய்வங்களாம் மாவீரர்கள் துயில் கொள்ளும் மாவீரர் இல்லங்களுக்கு அணியணியாய் செல்வார்கள். எந்தளவிற்கு அவர்களுக்காக அழுது வடிக்க முடியுமோ, எந்தளவிற்கு அவர்களுக்காக மரியாதை செலுத்த முடியுமோ, எந்தளவிற்கு அந்த வீரர்களின் தியாகத்தை புகழ்ந்து பேச முடியுமோ, எந்தளவிற்கு அந்த வீரத்தமிழர்களது வீர வரலாற்றை பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நமது மக்கள் செய்து வந்தார்கள். அதற்கு மேலாக புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர்களின் புகழ்பாடவும் அவர்களுக்காய் கண்ணீர் அஞ்சலி செலுத்தவும் மக்கள் லட்சக் கணக்கில் கூடுவதுண்டு. ஆனால் உலகெங்கும் இன்றுள்ள நெருக்குவாரங்கள் பலவற்றிக்கு மத்தியில் இந்த தியாக தீபங்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் உலகெங்கும் இடம்பெறுகின்றன. மாவீரர்களின் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவை. நமக்கு தனிப்பட்ட வகையில் சிரமங்கள் வரலாம் என்ற அச்சம் நமக்கு தேவையில்லை. நமக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்கள் எம்மைப் பொறுத்தளவில் தெய்வங்களே. காரணம் அவரகள் தாங்கள் அனுபவிக்க வேண்டிய பல சுகபோகங்களை துறந்து சென்றவர்கள். இன்பங்களுக்கு பதிலாக கஸ்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்றவர்கள். நாளை இறப்பு நிகழப்போகின்றது என்பதை நிச்சயமாக தெரிந்து கொண்டிருந்தாலும் இன்று சிரித்த முகத்துடன் சக போராளிகளுக்கு உற்சாகமூட்டும் கதைகளைக் கூறி தாக்குதல் களத்திற்கு விடைபெறும் போதும் கூட வழியனுப்பி வைத்தவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தோடினாலும் தங்கள் கண்களை ஈரமாக்காமல் அந்த இடம் விட்டு நீங்கியவர்கள் இந்த அதியப்பிறவிகள். ஆமாம், அர்ப்பணிப்பும் அடக்குமுறைக்கு எதிராக கொதித்து எழுந்த போர்க்குணமும் அறிவாற்றலும் அதற்கு மேலாக மற்றவர்கள் அதிசயிக்கும் உயர்ந்த குணாம்சம் கொண்டவர்களாக விளங்கிய நமது மாவீரர்களின் நினைவுகளை அவர்களை வணங்கும் நாளில் மீட்டு வந்து அவர்களுக்கு மரியாதை செய்வோமாக.
கருத்துகள் | | Read More...

(படங்கள்)படையினரைக் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்திலிருந்து ஆதாரங்கள் கிட்டவில்லை

Penulis : Antony on வியாழன், 25 நவம்பர், 2010 | 9:27 AM

வியாழன், 25 நவம்பர், 2010

கிளிநொச்சியில் படையினரைக் கூட்டாகக் கொன்று புதைத்ததாக கூறப்படும் இடத்திலிருந்து எதிர்பார்த்தளவு ஆதாரங்கள் கிட்டவில்லை என்பதாக தெரிய வருகின்றது.
ஒரு சில ஆடைகளின் துண்டுகள், சில வெற்றுத் தோட்டாக்கள் என்பன தவிர முக்கியமான எந்தத் தடயமும் இலங்கை அரசாங்கத்துக்குக் கிட்டவில்லை என்பதாக பொலிஸ் திணைக்கள தகவல்கள் கூறுகின்றன.

ஏராளமானோர் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்திலிருந்து ஒரு சில எலும்புத்துண்டுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளமை விசாரணையாளர்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.

ஆரம்பத்தில் அந்த இடத்தில் 26 படை வீரர்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்து வந்த அரசாங்கம் தற்போது 16 பேரின் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக செய்திகளை வெளியிட்டுள்ளது.

இருந்தும் தோண்டியெடுக்கப்பட்டு ஒரு நாள் கூட ஆகாத நிலையில் டீ.என்.ஏ பரிசோதனை மூலம் அவற்றை இனங்காண்பதென்பது வெறும் வார்த்தை ஜாலம் என்பதாக சட்ட மருத்துவத்துறை நிபுணர் ஒருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.




கருத்துகள் | | Read More...

அப்பா விஜயகுமார் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்’

‘அப்பா விஜயகுமார் பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன்’ – வனிதாநடிகர் விஜயகுமார் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வந்தால், அவரை பற்றிய ரகசியங்களை வெளியிடுவேன் என்று அவரது மகளும் நடிகையுமான வனிதா ஆவேசமாக கூறினார். டிவி நடிகர் ஆகாஷை
கருத்துகள் | | Read More...

தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுச் சின்னத்துக்கு ஆபத்து!


யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 1974 ஆம் ஆண்டு இடம்பெற்றபோது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபி யாழ்ப்பாணம்-காங்கேசன் துறை வீதி விஸ்தரிப்பின்போது உடைக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி விஸ்தரிப்புத் திட்டச் செயற்பாட்டுக்கான எல்லைப் பரப்புகள் அடையாளம் இடப்பட்டுள்ளன.

சீன அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட இருக்கும் இவ்வீதி அகலிப்புத் திட்டத்துக்குள் மேற்படி நினைவுச் சின்னத்தின் ஒரு பகுதி அகப்பட்டு உள்ளது.

இவ்வீதி அகலிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் சந்தர்ப்பத்தில் முதலில் அழிக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுச் சின்னம் இருக்கும்.
கருத்துகள் | | Read More...

வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படையினர்.நாடாளுமன்ற உறுப்பினர்


வடக்கில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், 1990 ம் ஆண்டளவில் இருந்த நிலைக்கு இராணுவம் பின்தள்ளப்படவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் எந்தவிதமான சட்ட பின்னணியும் இன்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச மக்களினால் பிரவேசிக்க முடியாத வகையில் அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ ஆட்சியிலிருந்து விடுதலையும் இயல்பு நிலையுமே இன்று தமிழ் மக்களின் அத்தியாவசிய தேவையாகி உள்ளன என வலியுறுத்திய அவர் 1990ஆம் ஆண்டளவில் இருந்த நிலைக்கு இராணுவம் பின்தள்ளப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் இரண்டாவது நாளாக நடைபெற்ற வரவு செலவுத்திட்ட உரை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே விநாயகமூர்த்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய விநாயகமூர்த்தி எம்.பி. மேலும் கூறியவை வருமாறு:

அண்மையில் யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றில் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயமென்று ஏதும் இல்லையென்றும் கண்ணிவெடி அகற்றப்பட வேண்டிய இடங்களே காணப்படுகின்றன என்றும் கூறியிருந்ததை இங்கு நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அரச உயர் பதவியில் இருக்கும் ஒரு தமிழ்ப் பெண்மணி இவ்வாறு அப்பட்டமாகப் பொய் கூறிவரும் துர்ப்பாக்கிய நிலையையிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன்.

இனிமேலாவது அவர் வாயைத் திறக்குமுன்பு சரியான தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவருடைய சொந்த இடத்தில் சென்று மீளக்குடியமர விடாது மறுப்பது அவருடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்.

அத்துடன், அண்மையில் 350 சிங்களக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்துக்குச் சென்று யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருந்தனர் என்ற செய்திபற்றிக் குறிப்பிட விரும்புகின்றேன். பின்னர் அவர்கள் நாவற்குழிக்குச் சென்று அங்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து தங்கியிருக்கிறார்கள்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் சில விசாரணைகளை நடத்தியிருந்ததும் அதன்போது இவர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னர் குடியிருந்ததாகவோ அல்லது யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களோ அல்லர் என்பது தெரிய வந்துள்ளது.

எங்களுக்கிடையில் கலகத்தை உண்டுபண்ண முனையும் சில குழுக்களே இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி பிரச்சினைகளை உருவாக்குகின்றன. உண்மையில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து துரத்தப்பட்டவர்களாயின் அவர்கள் அங்கு மீளக்குடியேற்றப்படல் வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறானவர்கள் அல்லர்.

போர் முடிவடைந்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ள அவர் பொருட்கள் சேவைகளின் விலை ஏற்றத்தினால் மக்களின் கொள்வனவு இயலளவு வீழ்ச்சியடைந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு செலவுகளுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், போர் நிறைவடைந்துள்ள சந்தர்ப்பத்தில் அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

நாற்பது ரூபாய்க்காக சிறுவனை கொன்ற இளைஞர்

Penulis : Antony on புதன், 24 நவம்பர், 2010 | 1:03 PM

புதன், 24 நவம்பர், 2010


ஆந்திர மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவனை நாற்பது ரூபாய் பணத்துக்காக இளைஞன் ஒருவன் கொலை செய்துள்ளான்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் வேமுல கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தவன் கொண்ட குருவாரெட்டி (6). இவனது பெற்றோர் கூலி தொழிலாளிகள்.

இவன் பள்ளிக்கு போக மாட்டேன் என்று அடம்பிடித்ததால் அவனிடம் ரூ.40 கொடுத்து அனுப்பினர்.

இடைவேளையின்போது அவர் பள்ளிக்கு வெளியே உள்ள கடைக்கு சென்றான்.

அப்போது அவனது கையில் ரூ.40 இருப்பதை கோட்டிரெட்டி (18) என்பவர் பார்த்தார். உடனே அதை அவனிடம் இருந்து பறிக்க திட்டமிட்டார். சிறுவனை எவ்வளவோ ஏமாற்றியும் பணத்தை கைப் பற்ற முடியவில்லை.

இதையடுத்து சிறுவனை அங்குள்ள காட்டுப்பகுதிக்கு நைசாக அழைத்து சென்று 40 ரூபாயை பறித்தான். சிறுவன் பெற்றோரிடம் உண்மையை சொல்லிவிடுவானோ என்று பயந்த கோட்டிரெட்டி பாறாங்கல்லை அவன் தலையில் போட்டு கொன்று விட்டு தப்பி ஓடினான்.

இதுபற்றி வேமுலா போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டிரெட்டியை கைது செய்தனர். 40 ரூபாய்க் காக சிறுவனை கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் | | Read More...

காதலும், திகிலும் கலந்த "மையம் கொண்டேன்"

காதலும், திகிலும் கலந்து புதுமையான கோணத்தில் ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, மையம் கொண்டேன் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
மலையும், காடும் சார்ந்த பகுதிகள் மற்றும் கடலும், கடற்கரையும் சார்ந்த பகுதிகள் ஆகிய இரண்டு பகுதிகளையும் இணைக்கும் வகையில், திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

புதுமுகங்கள் திலீப்-ஷோபனா நாயுடு ஆகிய இருவரும் கதாநாயகன்-கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, வின்சென்ட் அசோகன், ரியாஸ்கான், காதல் தண்டபாணி, சுகுமாரி, சுமன் ஷெட்டி, பாண்டு, ஷர்மிலி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

தினா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், கே.அர்ஜ×ன் ராஜா. ஜி.ஏ.ஜி. சினிமாஸ் சார்பில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு ராஜபாளையத்தில் தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை மொரீசியஸ் தீவில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கருத்துகள் | | Read More...

வெள்ளைக்கொடி விவகாரத்தால் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பு


ஜனநாயக தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகவின் வெள்ளைக் கொடி விவகாரம் சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக ஐக்கியநாடுகளின் ஜெனிவா விற்கான இலங்கை வதிவிடப்பிரதிநிதி செனுகா செனவிரத்ன தெரிவித்துள்ளார்.வெள்ளக்கொடி வழக்கில் சாட்சியமளித்த போது...
READ MORE -
கருத்துகள் | | Read More...

தமிழ் கைதிகள் புதிய நீதி அமைச்சருக்கு கடிதம்


புதிதாக நீதி அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் அவர்கட்கு விசேட ஏற்பாட்டின் கீழ தங்களை பிணையிலாவது விடுதலை செய்வதற்கு உதவுமாறு கோரி அனைத்திலங்கை அரசியல் கைதிகள் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அக்கடிதத்தின் முழு வடிவம் வருமாறு:

அரசியல் கைதிகள்
புதிய மகசின் சிறைச்சாலை
கொழும்பு
24.11.2010.

கௌரவ நீதி அமைச்சர்,
ரவூப் ஹக்கீம் அவர்கட்கு,

அனைத்திலங்கை அரசியல் கைதிகள் மிகப்பணிவாக வேண்டிக்கொள்வது.

உங்கள் விசேட ஏற்பாட்டின் கீழ் பிணையில் செல்ல உதவுங்கள்.


நீங்கள் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம் அத்துடன் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

எமது விடயத்தில் இனியாவது நியாயமான தீர்வு கிடைக்குமென நம்புகின்றோம்.

உங்களால் முடிந்தளவு எமது விடயத்தில் கூர்ந்து கவனம் செலுத்தி தற்போதைய சூழ்நிலையில் பிணையில் செல்வதற்காவது விசேட ஏற்பாடொன்றை உங்கள் தலமையின் கீழ் ஏற்படுத்தி தாருங்கள்.

நாட்டில் தற்போது நல்ல சூழல் உருவாகி உள்ளது நாட்டில் சகல மாகாணங்களிலும் தடையின்றி நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. எமது நாட்டில் தற்போது அரச கட்டுப்பாடற்ற பகுதியென ஒன்றில்லை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. கடந்த காலங்களில் ஜனாதிபதியின் தலமையின் கீழ் வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன இவை அனைத்தும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை என்பதனைக் காட்டுகின்றது.

எனவே கௌரவ அமைச்சர் அவர்களே! எமது பெற்றோர்கள் சகலவற்றையும் இழந்து ஒரு சட்டத்தரணியைக்கூட அமர்த்த முடியாமல் அவர்களிடத்தில் இருந்த எல்லாவற்றையும் இழந்துபோய் கண்ணீரே வாழ்க்கையாக்கி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு மேலாய் நாம் சிறையில் அனுபவிக்கின்ற வேதனைகள் உளவியல் ரீதியாக நாம் அடைகின்ற மன உழசை;சல்கள் எண்ணிலடங்க முடியாதவை.

சிறைகளில் கர்ப்பிணித் தாய்மார்கள்; கைக்குழந்தைகள் அங்கவீனர்கள் வயோதிபர்கள் உள்ளடங்கலாக 765 கைதிகளும் பலவிதமான வியாதிகளுடன் மருத்துவ வசதிகூட இல்லாமல் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டவர்களாய் வாழ்ந்து வருகின்றோம்.

கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் நேரடியாக எம்மைப் பார்க்க வந்து வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார்களே தவிர இவைகளில் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

நாம் சில தமிழ் அரசியல்வாதிகளிடம் கேட்டுக்கொண்டோம் இலவச சட்டத்தரணிகள் ஒழுங்கை எமக்குச் செய்துதாருங்கள் என்றும் எமக்கு தேவையான அன்றாடத் தேவைகள் பல இருக்கின்றது அவைகளை எமக்கு பூர்த்திசெய்து தாருங்கள் என்றும் கூறி இருந்தோம்.

அத்துடன் நாம் சிறையில் இருப்பதால் எமது குடும்பங்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள் என்றும் பலமுறை அவர்களிடத்தில் முறையிட்டிருந்தோம். ஆனால் இதில் எதையும் நிறைவேற்றியதாக இல்லை. ஆனால் எமது கைது தொடர்பான விபரங்களைக் கூட எம்மிடம்தான் கேட்கிறார்கள்.

இதுதான் இன்றைய எமது நிலை இவை இவ்வாறு இருக்க 01.08.2010 அன்று நீங்கள் உங்களின் தலமைக் காரியாலயத்தில் வைத்து ஒரு ஊடகவியலாள்ர் மகாநாட்டை நடாத்தி இருந்தீர்கள் அதில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறும்போது,

1. அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நான் நேரடியாக தலையிடுவேன் என்றும்,

2. சிறைச்சாலைகளுக்கு நேரடியாகச் சென்று அரசியல் கைதிகளின் விபரங்களைத் திரட்டி அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவதாக உறுதிமொழி அளித்திருந்தீர்கள். அவை அனைத்தும் எமது பதிவுகளில் இருக்கின்றது.

எனவே கௌரவ அமைச்சர் அவர்களே! நீங்கள் ஒரு சட்டவாளர் என்ற அடிப்படையிலும் எமது பிரச்சினைகளை விளங்கிக்கொள்ளக் கூடியவர் என்ற காரணத்தினாலும் எம் அனைவருக்கும் பிணையில் செல்வதற்கு விசேட ஏற்பாடொன்றை செய்துதரும்படி அனைத்திலங்கை அரசியல் கைதிகளாகிய நாம் உங்களிடத்தில் வேண்டி நிற்கின்றோம்.

அத்துடன் பிணையில் செல்வதற்கான அனுமதியை நீங்கள் வழங்கினால் இதற்கு வேண்டிய பிணை ஏற்பாடுகளைச் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் அவர்கள் தயாராக இருப்பதாக ஜனாதிபதியிடம் அண்மையில் தெரிவித்திருந்தார் என்பதையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

இவ்வண்ணம்
அனைத்திலங்கை அரசியல் கைதிகள்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறி வந்தது யாவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது அக்கட்சி அரசுடன் இணைந்துள்ளதுடன் நீதி அமைச்சுப் பொறுப்பும் அதன் கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலை தொடர்பாக எவ்வாறான போக்கை அக்கட்சி கடைப்பிடிக்கும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger