News Update :

எச்சரிக்கை: பேஸ்புக் பாவனையாளர்களின் புகைப்படங்கள் பாலியல் தளங்களில்

Penulis : Antony on புதன், 9 பிப்ரவரி, 2011 | 1:46 AM

புதன், 9 பிப்ரவரி, 2011


நீங்கள் வலையில் இருந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எவ்வாறு இருக்கும்.
பேஸ்புக்கில் இருந்து இதுவரை 250,000 உறுப்பினர்களின் விவரங்களை டேட்டிங் தளங்கள் திருடி உள்ள செய்தி வெளியாகி உள்ளது. லவ்லி பேசஸ் என்னும் இணையதளம் சமீபத்தில் வெளியானது. இதில் இப்படியாக பேஸ்புக் பக்கங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கானோரின் விவரங்களைத் திருடி வெளியிட்டு இருந்தனர்.

இதனை பேஸ்புக் நிறுவனத்தால் தடுக்கவே முடியாது என்பது இன்னொரு வேடிக்கையான விடயமாகும். "உறுப்பினர்களின் விவரங்களைத் திருடுவது எமதுக் கொள்கைகளின் மீறலாலும்" என பேஸ்புக்கின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான பேரி சச்னிட் கூறினார். இவ்வாறு அத்துமீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இருந்தாலும் இப்படி இணையத்தில் இருந்து உறுப்பினர்களின் விவரங்களை சுடுபவர்களை முற்றாக ஒன்றும் செய்ய முடியாத நிலையே உண்மையாக இருக்கிறது. காரணம் இவ்விவரங்கள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் பொது உடைமையாக இருப்பதே.

பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களும் அல்லது உங்களது வயதுநிரம்பாத பிள்ளைகள் கணக்கு வைத்திருந்தாலும், கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது. பின்னாளில் வரன் தேடும் தளங்களில் மட்டுமில்லாமல் டேட்டிங் தளங்களிலும் உங்கள் புகைப்படங்கள் வரலாம்.
கருத்துகள் (1) | | Read More...

பாவ ஒப்புதலுக்கு கத்தோலிக்க திருச்சபையில் புதிய i - Phone அறிமுகம்


கத்தோலிக்கர்களுக்கு பாவ ஒப்புதல் வாக்குமூலத்தில் உதவக் கூடியதாகவும், சமயத்திலிருந்து விலகியிருப்பவர்கள் மீண்டும் விசுவாசத்துக்கு திரும்ப உதவக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்ட iPhone களுக்கு அமெரிக்காவின் கத்தோலிக்கத் திருச்சபை அனுமதியளித்துள்ளது.

பாவ ஒப்புதலுக்கான இந்த iPhone திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள முதலாவது ரோமன் கத்தோலிக்க iPhone என வர்ணிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பாவனையாளரினதும் மனசாட்சியை பரிசீலிக்கும் வகையில் இதன் மென் பொருள் வடிவமைக்கப் பட்டுள்ளதாக கம்பனி கூறுகின்றது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் கத்தோலிக்கர்களை தமது சமயத்தோடு ஈடுபாடு கொள்ள வருமாறு அழைப்பு விடுப்பதே எமது நோக்கம் என்று கம்பனிப் பேச்சாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

டிஜிட்டல் உலகில் கிறிஸ்தவர்களின் பிரசன்னத்தை வலியுறுத்தி பாப்பரசர் கடந்தாண்டு உலகத் தொலைத்தொடர்பாடல் மாநாட்டுக்குச் செய்தியொன்றை அனுப்பியிருந்தார்.

இதுவே மேற்படி கண்டு பிடிப்புக்குக் காரணம் என்றும் கம்பனி விளக்கமளித்துள்ளது.
கருத்துகள் | | Read More...

சீனாவில் பஞ்சம் வரும் அபாயம்!

Penulis : Antony on செவ்வாய், 8 பிப்ரவரி, 2011 | 8:32 AM

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011


உலகின் மிகப்பெரிய கோதுமை உற்பத்தி நாடாக விளங்கும் சீனாவில் கோதுமை விவசாயம் வெகுவாக பாதிக்கப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் முக்கிய விவசாயப் பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி காணப்படுவதாக அந்நாட்டு அரசு ஊடகம் நேற்று தகவல் வெளியிட்டுள்ளது.


ஷான்டாங் மாகாணத்தின் உணவு தானிய உற்பத்தி 200 ஆண்டுகளில் காணப்படாத வகையில் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த மாத இறுதிக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.



எகிப்து மற்றும் அரபு நாடுகளில் நடைபெறும் போராட்டங்களால் ஏற்கெனவே கோதுமை விலை உயர்ந்துள்ளது.

தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ள சீனா கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்களை இறக்குமதி செய்தால் அது இறக்குமதியை மட்டும் நம்பியிருக்கும் ஏனைய நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



சீனாவின் கோதுமை பயிரிடப்படும் 140 லட்சம் ஹெக்டேர் நிலத்தில், 50 லட்சம் ஹெக்டேர் நிலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 25 லட்சம் பொதுமக்களும் 27 லட்சம் மற்ற உயிரினங்களும் குடிநீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர் என்றும் ஐநாவின் உணவு முகமை தெரிவித்துள்ளது.
கருத்துகள் | | Read More...

தனிமையில் வாடும் பார்வதி அம்மாள்

பிள்ளைகள் எவரும் பார்வையிட வராமையால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரின் தாய் பார்வதி அம்மாள் மிகவும் மனம் உடைந்து போய் உள்ள்ளார் என்று யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரதம வைத்தியர் மயிலேறும் பெருமாள் தெரிவித்தார்.

இவர் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு கூறி உள்ளார்.

இவரது பேட்டி வருமாறு:-

" நீண்ட காலமாக பாரிசவாத நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் பார்வதி அம்மாளின் உடல் நைந்து கொண்டு இருக்கின்றது. அவர் மிகவும் மனம் உடைந்த நிலையில் உள்ளார்.

ஏனெனில் பிள்ளைகள் எவரும் வந்து பார்க்கவில்லை என்பது இவரின் மிகப் பெரிய மன வருத்தம்.

பேரப் பிள்ளைகள்கூட வந்து பார்க்கவில்லை என்கிற ஆதங்கத்தில் ஒடிந்து போய் உள்ளார். இதனால் அவரின் மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இவரின் தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று கூற முடியாது.”
கருத்துகள் | | Read More...

வடக்கு மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டே பதிவு நடவடிக்கை: யாழ். அரச அதிப

படுகொலைக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த பெரும்பான்மை இன இளைஞன் ஒருவர் இன்று இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தபோது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவரின் பெயர் எம்.கே.சஞ்சீவ சொய்ஷா. வயது-27.

இவர் கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

காலி மாவட்டத்தில் இடம்பெற்ற படுகொலை ஒன்றுடன் இவருக்கு சம்பந்தம் உண்டு.

இவர் இலங்கைப் பணத்தில் ரூபாய் ஒரு இலட்சம் கொடுத்து தோணி மூலம் இராமேஸ்வரம் வந்து இருக்கின்றார்
கருத்துகள் | | Read More...

யுத்தத்திற்கு வழிவகுத்த தவறுகளை இலங்கை கருத்திற்கொண்டுள்ளது

Penulis : Antony on திங்கள், 7 பிப்ரவரி, 2011 | 10:58 AM

திங்கள், 7 பிப்ரவரி, 2011


நாட்டைத் துண்டிப்பதற்கான ஆயுதமேந்திய நீண்ட கால பிரிவினைவாதத்தை வெற்றி கொண்டமை குறித்து இலங்கை பெருமையடைகிறது. ஆனால் 30 வருட கால யுத்தத்திற்கு வழி வகுத்த கடந்த கால தவறுகள், இடைவெளிகள் முரண்பாடுகள் குறித்தும் இலங்கை கவனம் செலுத்துகிறது என பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

ஆயுதப் போராட்டத்தையும் பாரியளவிலான வன்முறைகளையும் நிரந்தர சமாதானமாக மாற்றும் சிக்கலானதும் கடினமானதுமான செயற்பாட்டில் இலங்கை உள்ளதாகவும் அவர் கூறினார்.

இத்தகைய சமாதானம் மக்களின் மனதிலேயே கட்டியெழுப்பப்பட முடியும். அது நீதி, சமத்துவம், ஜனநாயகம் என்பனவற்றின் அடிப்படையில் அமைய வேண்டும் எனவும் கலாநிதி ஜயதிலக கூறினார்.

பாரிஸ் நகரிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 63 ஆவது சுதந்திர தின வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இவ் வைபவத்தில் இந்தியா, கியூபா, வெனிசுலா, ஜப்பான், நேபாளம், பிலிப்பைன்ஸ், ஜேர்மனி, வத்திக்கான், ஸ்லாவாக்கியா ஆகிய நாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா, மலேசியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, கெமரூன், செனகல், கஸகஸ்தான், வியட்நாம், குவைத் ஆகிய நாடுகளின் பதில் தூதுவர்கள் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் | | Read More...

தொடர்கிறது அடைமழை: 11 பேர் மரணம் - மூன்று பேரைக் காணவில்லை

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் மரணமடைந்துள்ளனர். மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை வெள்ளம் காரணமாக 3 இலட்சத்து 20ஆயிரத்து 408 பேர் 759 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ள அனர்த்தம் காரணமாக ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 11ஆயிரத்து 471 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

திருகோணமலை, மட்;டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்

கருத்துகள் | | Read More...

கே.பி சம்பந்தப்பட்ட கேள்விக்கு கருணாவை இழுத்துப் பதில் சொன்ன அமைச்சர்

Penulis : Antony on சனி, 5 பிப்ரவரி, 2011 | 12:15 PM

சனி, 5 பிப்ரவரி, 2011


கே.பி, கருணா போன்றவர்களின் அரசியல் இருப்பை உறுதி செய்ய வேண்டியவர்கள் மக்களே என்று தெரிவித்து உள்ளார் பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரமுகராக இருந்த கே.பி அரசியலுக்கு வருகின்றமையை ஏற்றுக் கொள்வீர்களா? என்று ஊடகம் ஒன்று கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்தபோதே இவ்வாறு கூறி உள்ளார்.

இவரது பதில் வருமாறு:-

"ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்துக்குள் வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் இவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்கின்றமை மக்களின் கைகளிலேயே உள்ளது
கருத்துகள் | | Read More...

வெஸ்டர்ன் தாடியுடன் அஜித்


சென்னையில் நடந்த 'மங்காத்தா' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் என்பதால் விரைவில் மும்பை செல்ல திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.

மும்பையில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியான தாராவியில் குறிப்பிட்ட சில காட்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறதாம்.

இந்தப் பகுதியை எடுத்துவிட்டால் கிட்டத்தட்ட படமே முடிந்தமாதிரி. மார்ச் முதல் வாரத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிடுமாம்.

ரஜினியைபோல உண்மையை மறைக்காமல் தனது சுய தோற்றத்தோடு வெளியே வருபவர் அஜித். 'மங்காத்தா' யூனிட்டில் அஜித், இயக்குநர் வெங்கட் பிரபு என பலரும் தங்கள் ஆப்பிள் ஒயிட் தாடியுடன் காணப்படுகிறார்கள்.

வெஸ்டர்ன் நாடுகளில் அங்கே தாடிகளில் ஒயிட் எட்டிப்பார்த்தால் முன்பெல்லாம் ரெட் அல்லது கோல்ட் கலரிங் செய்து கொள்வார்கள். இப்போது கலரிங் எதுவும் செய்யாமல் அப்படியே ஒயிட்டாக விட்டுவிடுவதுதான் இப்போது அங்கேயும் ஃபேஷன். இந்த ஃபேஷன் இப்போது அஜித் மூலம் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது.

எத்தனை தல ரசிகர்கள் கறுப்பு தாடியிலும் தலைமுடியிலும் வெள்ளை நிறத்தை பூசிக்கொள்வார்களோ? 'மங்காத்தா' படத்திலும் த்ரிஷாவுடன் நடிக்கும் காட்சிகளில் இப்படி தனது நரைத்துப் போன முடி மற்றும் தாடியுடன் வருகிறாராம் அஜித்.
கருத்துகள் | | Read More...

தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் நிலைமை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது.
தற்போதைய நிலையில் அவரது ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல்நிலையும் மோசமடைந்துள்ளது.

பேசும் சக்தியை முற்றாக இழந்துள்ள அவர், யாரையும் அடையாளம் காண்பதிலும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அதற்கு மேலாக தற்போது அவர் முற்றாக சுய நினைவை இழந்த நிலையில் காணப்படுகின்றார்.

அவரது கணவர் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானது தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தகவல் தருகையில்,

பார்வதி அம்மாளின் நிலைமை மோசமடைந்துள்ளதாக அவருக்குச் சிகிச்சையளித்து வரும் டாக்டர்கள் தன்னிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், தற்போது சுய நினைவினை இழந்து விட்டார். அவரால் யாரையும் அடையாளம் காண முடியாதுள்ளது. அதே போன்று அவர் பேசும் சக்தியையும் இழந்துள்ளார். எனத் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

மக்களுக்கு உதவ புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும் - முரளிதரன்

Penulis : Antony on வியாழன், 3 பிப்ரவரி, 2011 | 1:26 PM

வியாழன், 3 பிப்ரவரி, 2011


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ புலம்பெயர் மக்கள் முன்வரவேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் மாவட்ட செயலகத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அரச திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத்தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் புலம்பெயர் தமிழ் மக்களின் உதவி திருப்தியளிக்கும் விதத்தில் கிடைக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிங்கள மக்கள் ஓடிவந்து கோடிக்கணக்கான காசுகளை செலவளித்து உதவிகளை வழங்கியுள்ள போதிலும் எமது புலம்பெயர் மக்களினதோஅமைப்புகளினதோ உதவிகள் ஒழுங்காகவந்து சேரவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

ஹிலாரி கிளின்டன் சுதந்திர தினச் செய்தியின் மர்மம் என்ன?


சிறீலங்கா தனது 63வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஹிலாரி கிளின்டன் அமெரிக்காவின் வாழ்த்துச் செய்தியை ஊடகங்களிற்கு கசிய விட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தைத் தோற்றுவித்துள்ளது.
வழமையாக இவ்வாறான வருடாந்த சுதந்திர தினக் கொண்டாடங்களின் போது இலங்கையிலுள்ள தமது தூதுவர்களினூடாக ஏனைய நாடுகள் தங்களது வாழ்த்துச் செய்திகளை இலங்கையரசிற்கு கையளிக்கும். இதுவே இன்றுவரைக் கடைப்பிடிக்கப்படும் இராஜதந்திர நடைமுறை. மாறாக 50வது சுதந்திரதினம், 60வது சுதந்திரதினம், 75வது சுதந்திரதினம் போன்றவற்றில் சிறப்புப் பிரதிநிதிகள் கலந்து கொள்வதுடன் விசேட செய்திகளும் மற்றைய அரசாங்கங்களால் வெளியிடப்படும்.

ஆனால் ஒருதுளியும் முக்கியத்துவமில்லாத 63வத சுதந்திர தின வாழ்த்து, மகிந்தாவுடன் தாம் கொண்டுள்ள உறவை உலகிற்கு அறிவிக்கும் ஒரு வாய்ப்பாகவே அமெரிக்காவில்
கருதப்பட்டுள்ளது. அதுவும் மகிந்தாவின் அண்மைய அமெரிக்க விஜயம், மகிந்தாவிற்கு எதிராக அமெரிக்கத் தமிழர்களின் வழக்கு என்பனவற்றின் மத்தியில் இச் செய்தி
வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு விடுக்கப்பட்டுள்ள செய்தியிலும், அமெரிக்க இலங்கை உறவு எந்தவித மாறுதலிற்கும் உட்படாது என்பது கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளதுடன், இலங்கையின் வளர்ச்சியில் அமெரிக்கா ஒரு பங்காளராக இருக்கும் எனவும் அண்மைய காலங்களில் இலங்கையின் எல்லாத் துறைகளிலும் ஆரோக்கியமான வளர்ச்சி காணப்படுவதாகவும், இலங்கை மக்களின் வாழ்க்கை முறை சமாதானமான முறையில் நகர்ந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சாதாரன நிலையிலிருந்து மாறுபட்ட வகையில் உள்ளதாகவும் தமிழர்களின் அமெரிக்கா சார்ந்த எதிர்ப்பார்ப்பினை பலவீனப்படுத்துவதாக உள்ளதாகவுமே இருக்கிறது.
கருத்துகள் | | Read More...

நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்? - தமிழ்நாட்டில் கருத்தரங்கம்


நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்? என்னும் தலைப்பில் நாளை 04-02-2011 வெள்ளிக் கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் ஒன்றினை 'நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மையம்' என்னும் அமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போராசிரியர் சரசுவதி தலைமையில் நடைபெறும் இக்ககருந்தரங்ககில் அறிமுக உரையை தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தை சேர்நத தியாகு நிகழ்த்துகிறார். கருத்துரைகளை கொளத்தூர் மணி, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், ஊடகவியலாளர் அய்யநாதன், மருத்துவர் எழிலன் ஆகியோர் வழங்குகின்றனர்.

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் செயல்பட்டுவரும் இவ்வமைப்பானது தற்போது இந்தியாவில் தமிழ்நாட்டிலும் தனது பரப்புரைப் பணிகளை தொடக்கி உள்ளது.



கருத்துகள் | | Read More...

யாழ். மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் - வெள்ளிக்கிழமை அமைப்பு மகிந்தவுக்கு பகிரங்கக் கடிதம்


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள் குறித்து அதிர்ச்சி வெளியிட்டுள்ள ‘வெள்ளிக்கிழமை அமைப்பு‘ [Friday Forum] அங்குள்ள மக்களின் பாதுகாப்பையும் மனிதஉரிமைகளையும் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறிலங்கா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக இந்த அமைப்பின் சார்பில் சிறிலங்கா அரசின் சமாதான செயலக முன்னாள் பணிப்பாளரும், மூத்த இராஜதந்திரியுமான ஜெயந்த தனபால பகிரங்க கடிதம் ஒன்றை சிறிலங்கா அதிபருக்கு எழுதியுள்ளார்.

அந்தப் பகிரங்கக் கடிதத்தில்-

“ வெள்ளிக்கிழமை அமைப்பின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதை அடுத்து இந்தக் கடிதம் எழுதப்படுகிறது.

‘வெள்ளிகிழமை அமைப்பு‘, சமூக பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்த அரசுக்கு எப்படி உதவலாம் என்பது பற்றியும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும், தேசியப் பிரச்சினையை தீர்ப்பது பற்றியும் தொடர்ச்சியாக சந்தித்து கலந்துரையாடி வருவதாகும்.

யாழ்ப்பாணத்தில் கொலைகள், ஆட்கடத்தல்கள் போன்ற அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பாக கிடைக்கும் தகவல்களையிட்டு நாம் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்துள்ளோம்.

இந்தப் பகுதிகளில் ஆயுதப்படையினர் வலுவாக நிலை கொண்டுள்ள சூழலில் தான் இந்தச் சம்பவங்கள் நடந்தேறுகின்றன என்பது முக்கியமானது.

இவை அனைத்தும் தனிப்பட்ட ரீதியானவை அல்ல.

இன்று நாடு எதிர்கொள்ளுகின்ற முக்கிய சவால் சமாதானத்தை வெற்றி கொள்வதாகும்.

இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் நீண்டகாலமாக ஆயுதப்போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.

அரசாங்கம் அவர்களின் பாதுகாப்பையும் மனிதஉரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

இதைச் செய்யத் தவறினால், போருக்குப் பிந்திய சமூக மாற்றங்கள், அபிவிருத்தி, அமைதி ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில் அமைந்து விடும்.

இந்த விடயத்தில் கவனம் செலுத்துவீர்கள் என்று நம்புகிறோம்“ என்று அந்தப் பகிரங்கக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை அமைப்பில், வண.பேராயர் டுலிப் சிக்கேரா, பேராசிரியர்கள் அர்ஜுன அலுவிகார, சாவித்திரி குணசேகர, ஞானநாத் அபேசேகர, ரஞ்சினி அபேசேகர, கலாநிதி தேவநேசன் நேசையா, ரஞ்சித் பெர்னான்டோ, சித்தி திருச்செல்வம், வெலியமுன,ஜெசிமா இஸ்மாயில், விஸ்வலிங்கம், மனோரி முத்தெட்டுவேகம ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கருத்துகள் | | Read More...

தீர்வை எட்டுவதற்கு மேற்குநாட்டு அழுத்தம் தொடரும்! பிரிட்டிஷ், சுவிஸ் குழுவினர் தெரிவிப்பு

Penulis : Antony on செவ்வாய், 1 பிப்ரவரி, 2011 | 11:37 PM

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011


இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தொரு தீர்வு எட்டப்படுவதன் மூலமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இலங்கையின் நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும். இவ்வாறு யாழ். வந்த பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் நேற்று தெரிவித்தனர்.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக இந் தியா, சீனா போன்ற நாடுகள் உதவி வழங்கி வருவதால், மேற்கு நாடுகள் இலங்கைக்கான உதவிகளைக் குறைத்துள்ளன. என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டனின் தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டேவிட் ஆஷ்லி, அபிவிருத்திக்கும் அரசியலுக்குமான இரண்டாந்தரச் செயலாளர் டொமினிக் வில்லியம்ஸ், பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் உத்தியோத்தகர் அஷ்மா எட்றிஸ் மற்றும் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த சஷ்யா முலர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் நேற்று சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளின் பிரதிநிதிகளும் மேலும் தெரிவித்தவை வருமாறு:

யாழ்ப்பாண மக்களின தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காகவே நாம் இங்கு வருகை தந்தோம்.
இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாடுகள் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி இருந்தன.

இருப்பினும் தற்போது இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்தியா மற்றும் சீனா அதிகளவிலான பொருளாதார உதவிகளை வழங்கி வருவதினால் மேற்குலக நாடுகள் இலங்கைக் கான உதவிகளைக் குறைத்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் வெகுவிரைவில் பிரிட்டிஷ் தூதரகத்தின் கிளை திறந்துவைக்கப்படும். மற்றும் இங்குள்ள மக்களின் ஆங்கிலக் கல்வி விருத்திக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நடந்து முடிந்துவிட்ட விடயங்களை விடுத்து இனி வரப்போகும் விடயங்கள் பற்றிச் சிந்திப்போம் என்றனர்.
கருத்துகள் | | Read More...

சிறுமியை கொன்ற மீனவருக்கு இரட்டை ஆயுள்


நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலுசாமி. மீனவர். இவரது மகள் மதிவதனி (10). அதே பகுதியை சேர்ந்தவர் தேசப்பன் (42), பிச்சை (57) ஆகியோர் வேலுசாமியுடன் சேர்ந்து கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்தனர்.

2007 செப்டம்பர் 23ம் தேதி வேலுசாமியும், அவரது மனைவியும் உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றனர்.

இரவு வேலுச்சாமி வீடு திரும்பியபோது, மதிவதனியை காணாமல் திடுக்கிட்டார். அவரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடினர்.

வேலுசாமி புதிதாக கட்டி வரும் வீட்டின் வாசலில் மதிவதனி கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தாள். கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், தேசப்பன், பிச்சையுடன் சேர்ந்து மதிவதனியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நேற்று விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக தேசப்பனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்த குற்றத்திற்காக மற்றொரு ஆயுள் தண்டனையும், 2 குற்றத்திற்கும் தலா 20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றம் நிரூபிக்கப்படாததால் பிச்சை விடுதலை செய்யப்பட்டார்.
கருத்துகள் | | Read More...

மாரடைப்பின் பின்னர் சுயமாக புதுப்பித்துக் கொள்ளும் திறனைப் பெறுமா மனித இதயம்?


சீப்ரா எனப்படும் மீன் வகையின் இதயமானது மாரடைப்பின் பின்னர் தானாக புதிப்பித்துக் கொள்ளும் திறனைக் கொண்டுள்ளதைப் போல மனித இதயமும் அத்தகைய திறனைப்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வின மீன்களின் இதயத் திசுக்களானது மாரடைப்பின் பின்னர் தானாக மீள உருவாகுவதாகவும் இவ்வுத்தியை பயன்படுத்தி மனிதனின் இதயம் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நாட்களை நாம் நெருங்கிக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அம்மீனினத்தின் இதயத்தசைகளின் 20 % சுமார் 2 வாரங்களிலேயே குணமடைவதாகவும் இதற்கான முக்கிய காரணம் அவற்றின் இதயத்தில் காணப்படும் 'மொசைன் பீடா-4' எனப்படும் ஒருவகை புரத மூலக்கூறு எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக மனித இதயமானது 4 இதயவறைகளைக் கொண்டுள்ளது. சீப்ரா மீன்களின் இதயமானது 2 இதயவறைகளைக் கொண்டுள்ளது.

எனினும் மனித இதயமானது அதிக மூல உயிரணுக்களை கொண்டுள்ளதால் இவற்றைத் தூண்டுவதன் மூலம் அம் மீனினத்தைப்போல மனிதனின் இதயத்திற்கும் புத்துயிரளிக்கமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் | | Read More...

மீண்டும் மீனவர்கள் தாக்கப்பட்டால் மீண்டும் மீண்டும் எச்சரிப்போம்


மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இந்திய, இலங்கை நல்லுறவு கெடும் என்பதை இலங்கைக்கு இந்தியா, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்வதாக மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
முதல்வர் கருணாநிதியை இன்று கிருஷ்ணா சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

ஒரு விஷயத்தை நான் இலங்கைக்குத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். எந்த மாதிரியான சூழ்நிலையிலும், எப்படிப்பட்ட நிலையிலும் படை பலத்தை அப்பாவி மீனவர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது கடந்த காலமாக இனி இருக்க வேண்டும். இது தொடரக் கூடாது. இனி எப்போதும் இது நடக்கவே கூடாது.

இந்திய மீனவர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது.

இதை மீறி இலங்கை கடற்படையினர் தாக்குதலைத் தொடர்ந்தால், இரு நாடுகளின் நல்லுறவை அது பாதிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். உறவு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இலங்கையின் கடமையாகும்.

பாகிஸ்தான் நமது மீனவர்களைத் தாக்குவதில்லை, கொல்வதில்லை. வேறு எந்த நாட்டிலும் கூட இப்படி நடப்பதில்லை. ஆனால் இலங்கை மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறது என்று அந்த நாட்டிடம் கேட்கப்பட்டுள்ளது. இனிமேல் இது தொடரக் கூடாது என்றும் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையுன் இந்தியாவுக்கு இதயப்பூர்வமான, தோழமையான, பாரம்பரியமான உறவு உள்ளது. இதை இலங்கை அரசு மனதில் கொள்ள வேண்டும். எனவே இது கெடாத வகையில், தனது படையினருக்கு அது அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.

தமிழக மீனவர்கள் தாக்குதல் விவகாரத்தில் இதுவரை இப்படி ஒரு எச்சரிக்கையை இந்திய அரசு வெளியிட்டதே இல்லை. இதுவரை கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு முறை கூட மத்திய அரசு வருத்தப்பட்டதில்லை, வேதனைப்பட்டதில்லை, துடித்ததில்லை, பொங்கியதில்லை, ஏன் ஒரு கேள்வி கூட இலங்கையை நோக்கி கேட்டதில்லை. குறைந்தபட்சம், கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி கூட செய்ததில்லை.

இப்போதும் கூட சமீபத்தில் 2 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்திலும் கூட இதுவரை மத்திய அரசிடமிருந்து ஒரு ஆறுதலோ, இழப்பீடோ வரவில்லை. ஆனால் தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதாலும், ஒட்டுமொத்த மீனவர் சமுதாயமும் கடும் கோபத்தில் இருப்பதாலும், எங்கே வாக்கு வங்கியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில்தான் இப்படி பதறித் துடித்துள்ளது மத்திய அரசு என்று கூறப்படுகிறது.

இன்று விடுக்கும் எச்சரிக்கையை முதல் மீனவர் கொல்லப்பட்டபோதே இந்திய அரசு கடுமையாக விடுத்திருந்தால், கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காதே. இதை ஏன் இத்தனை காலமும் செய்யவில்லை மத்திய அரசு என்பது மீனவர்களின் வருத்தம் கலந்த கேள்வி.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger