News Update :

இந்திய உளவுத்துறையே என்னையும், சரத் பொன்சேகாவையும் எதிரிகளாக்கியது

Penulis : ۞உழவன்۞ on புதன், 29 ஜூன், 2011 | 12:00 PM

புதன், 29 ஜூன், 2011


இந்திய உளவுத்துறையின் சதி காரணமாகவே தானும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் எதிரிகளாக நோ்ந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பச்சாதாபப்பட்டுள்ளார்.விடுதலைப் புலிகளுடனான யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டு சிறிது காலத்துக்குள்ளாகவே இராணுவத்தளபதி பதவியிலிருந்து சரத் பொன்சேகாவை நீக்கியது தான் செய்த தவறு என்று ஏற்றுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய உளவுத்துறையின் சதியே அதற்கான காரணம் என்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருவருடன் தனிப்பட்ட முறையிலான உரையாடலொன்றை மேற்கொண்டிருந்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா குறித்து இந்திய உளவுத்துறை போலியான தகவல்களை வழங்கி என்னை தவறாக வழிநடாத்தி விட்டது. அதன் பின்பு ஜனாதிபதித் தோ்தலில் போட்டியிடுவதற்காக சரத் பொன்சேகா கூட்டுப் படைகளின் பிரதம அலுவலர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய முன்வந்த போது அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொண்டது அதனை விடப் பெரும் தவறாகும்.

சரத் பொன்சேகாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ எவ்வளவோ வற்புறுத்தியும் இந்தியாவின் அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு அதனை நான் ஏற்றுக் கொண்டேன்.

அவ்வாறின்றி அவரது இராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாதிருந்தால், காலப்போக்கில் சரத் பொன்சேகாவுடன் இருந்த மனக்கசப்புகளைத் தீர்த்துக் கொண்டிருக்க முடிந்திருக்கும்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தின் பின் சரத் பொன்சேகா புகழேணியின் உச்சத்துக்கு ஏறியிருப்பதாகவும், அதன் காரணமாக அவர் இராணுவ சதிப்புரட்சி மூலமாக அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டில் பெரும்பாலானவர்கள் அவரை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், உளவுத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு என்னை எச்சரித்த இந்திய அதிகாரிகள், பொன்சேகாவின் அதிகாரங்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினர்.

அதன் பிரகாரம் செயற்பட்டே நான் சரத் பொன்சேகாவின் அதிகாரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

இராணுவத்தின் அறுபதாவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கி விட்டு, 2009ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 17ம் திகதி தனது பிறந்த நாளுடன் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெற சரத் பொன்சேகா தீர்மானித்திருந்தார். அதன் பின் பதவி நீடிப்பு தொடர்பில் கோரிக்கை முன்வைப்பதில்லை என்று அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

முரட்டுத்தனமானதும், தன்னிச்சையானதுமான போக்குகளைக் கொண்டிருந்த போதும், சரத் பொன்சேகாவின் ஆற்றல் மற்றும் அறிவு என்பவற்றுக்கு அருகில் நெருங்கவும் முடியாத நிலையிலேயே ஏனைய அதிகாரிகள் இருக்கின்றனர். வெளிநாட்டு அழுத்தங்கள் கடுமையாகிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது விலகல் எனக்குப் பெரும் இழப்பாகவே இருக்கின்றது என்றவாறு கடந்த கால சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலையுடன் அசைபோட்டுள்ளார்.

சரத் பொன்சேகா தொடர்பில் ஜனாதிபதி இந்தளவுக்கு இறங்கி வரக் காரணம் அரசியல்வாதிகள் சிலர் சரத் பொன்சேகா விடயத்தில் மேற்கொண்ட தலையீடுகள்தான் என்றவாறாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
கருத்துகள் | | Read More...

செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டாம்

Penulis : ۞உழவன்۞ on செவ்வாய், 28 ஜூன், 2011 | 12:00 AM

செவ்வாய், 28 ஜூன், 2011


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தன்னுடைய ஆட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக இங்கு செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினரும் இக்கட்சியின் மூத்தத் தலைவருமான இல. கணேசன் கூறினார்.



புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஊழல் ஒழிப்பு, கறுப்பு பணம் மீட்பு தொடர்பான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இல.கணேசன்,



15 தொகுதிகளில் வெற்றி பெற்றது ரங்கசாமி கட்சி. இப்போது அதில் ஒன்றில் ரங்கசாமி ராஜிநாமா செய்துவிட்டார். 14 எம்எல்ஏக்கள்தான் இருக்கின்றனர். இது போன்ற சூழ்நிலையில் எப்படி அவரால் தனித்து ஆட்சி அமைக்க முடிந்தது? புதுச்சேரியில் எங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும்போதே என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வாக்குளித்து ஏமாந்து போகாதீர்கள் என்று கூறியிருந்தேன்.



யூகமாக அப்போது சொல்லியிருந்தாலும் காங்கிரஸ்கார்களின் புத்தி எனக்குத் தெரியும். முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி தன்னுடைய அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் படத்தை மாட்டி வைத்திருக்கிறார்.



எதற்காக அதை அவர் மாட்டி வைத்திருக்க வேண்டும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அதை மக்களிடம் கொண்டு சென்று வாக்குகளாகப் பெற்ற ரங்கசாமி மீது இப்போது மக்களுக்குச் சந்தேகம் வந்துள்ளது. தில்லி சென்றபோது ரங்கசாமி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கவில்லை. சோனியாகாந்தியைச் சந்தித்து வந்திருக்கிறார்.



பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தில்லி சென்றால் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கிறார். மாற்றுக் கட்சி ஆட்சியாக இருந்தாலும் நிர்வாகக் காரணங்களுக்காக பிரதமரைச் சந்திக்கிறார். ஆனால் ரங்கசாமி சோனியகாந்தியைச் சந்தித்தது ஏன்?



தேசம் முழுவதும் காங்கிரஸூக்கு எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது போன்ற நிலையில் தன்னுடைய ஆட்சிக்கு உயிர்க்கொடுக்கப் போய் செத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் இல. கணேசன்.
கருத்துகள் | | Read More...

ராஜபக்ச குடும்பத்தின் மீதே குற்றஅறிக்கை தயாரித்தது அமெரிக்கா – பசில் ராஜபக்ச விசனம்

Penulis : ۞உழவன்۞ on திங்கள், 27 ஜூன், 2011 | 11:57 PM

திங்கள், 27 ஜூன், 2011


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்கள் சில சிறிலங்காவுக்கு எதிராக தொடர்ந்தும் சதி செய்து வருவதாக சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்துக்கு எதிராக அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் குற்றஅறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளின் உதவியுடன் தப்பிச் சென்ற புலிகள், சில வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து கொண்டு சிறிலங்காவில் குழப்ப நிலையை ஏற்படுத்த முனைகின்றனர்.

சில உதவி நிறுவனங்களும் அவர்களுடன் இணைந்துள்ளன. தற்போது இந்த தீய சக்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக பல்வேறு சதித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றனர்.

இதில் ஒன்று தான் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தயாரித்த ராஜபக்ச குடும்பத்துக்கு எதிரான குற்ற அறிக்கை. ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்குப் பின்னர் இது வந்தது.

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை காட்டிக் கொடுத்தவர். ரணில்- பிரபா உடன்பாட்டின் மூலம் அவர் எட்டு மாவட்டங்களை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தார்.

இப்போது அவர்கள் மனிதஉரிமைகள், போர்க்குற்றங்கள், தகவல் உரிமை குறித்துப் பேசுகிறார்கள்.

கிராமப்புற மக்கள் இவையெல்லாம் என்னவென்று கேட்கிறார்கள்.

அண்மையில் ஐதேகவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் உரிமைச் சட்டமூலத்தின் பிரதியைக் கூட வெளிநாட்டு உதவி நிறுவனம் ஒன்று தான் தயாரித்துக் கொடுத்து என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

புதிய வியூகம் வகுக்கிறார் மகிந்த ராஜபக்ச

Penulis : ۞உழவன்۞ on ஞாயிறு, 26 ஜூன், 2011 | 1:27 PM

ஞாயிறு, 26 ஜூன், 2011


வடக்கு மாகாணசபைக்கு உடனடியாகத் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காணப்பட்ட வேண்டும் என்று அதிகரித்து வரும் அழுத்தங்களைச் சமாளிக்கவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வடக்கு மாகாணசபையை அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறிலங்கா அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்களில் அரசியல் இணக்கப்பாடு எட்டப்படுவதற்கு முன்னதாக, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த வேண்டும் என்ற அரசியல் மூலோபாய வகுப்பாளர்களும், அரசியல்வாதிகளும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்த சிறிலங்கா அதிபர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக விரைவில் தேர்தல் ஆணையாளருடன் சிறிலங்கா அதிபர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போர்க்குற்ற ஆதாரங்களை வைத்து பரப்புரை செய்யத் திட்டமிடும் ஐதேக

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் சிறிலங்காவின் கொலைக்களங்கள் காணொலி ஆகியவற்றை சிறிலங்கா முழுவதும் இலவசமாக விநியோகிப்பதற்கு ஐதேக தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற ஐ.தேகவின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் நாள் கண்டியில் நடைபெறவுள்ள ஐதேகவின் பரப்புரைக் கூட்டத்தில் வைத்து இவை விநியோகிக்கப்படவுள்ளன.

ஐ.நா நிபுணர்குழு அறிக்கையின் சிங்கள மொழிபெயர்ப்பை பொதுமக்கள் மத்தியில் விநியோகிப்பதென்று ஐதேக ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

இந்தநிலையிலேயே அண்மையில் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தையும் அதனுடன் இணைத்து பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ஐதேகவின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

அரசியல் நலனை விட நாட்டு நலன் குறித்து ஐதேக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாலித ரங்க பண்டார, சுஜீவ சேனசிங்க போன்றோரே ஐதேகவின் இந்தத் தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தெரிவுக்குழு மூலம் மட்டுமே அரசியல்தீர்வு - மகிந்தவின் பிடிவாதம்

நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் மட்டுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐதேகவின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்றே முன்வைக்கப்படவுள்ளதாகவும் இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா அதிபர் கரு ஜெயசூரியவிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுன்றத் தெரிவுக் குழுவில் ஐதேகவையும் இணைந்து கொள்ளுமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அம்பாறையில் இரு அதிரடிப்படை முகாம்களுக்கு மூடுவிழா

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக இயங்கி வந்த இரண்டு சிறப்பு அதிரடிப்படை முகாம்கள் நாளையுடன் மூடப்படவுள்ளன.

காரைதீவு மற்றும் கல்முனை சிறப்பு அதிரடிப்படை முகாம்களே நாளையுடன் மூடப்படவுள்ளன.

இங்குள்ள சிறப்பு அதிரடிப்படையினர் வவுனியாவுக்கும், மல்வத்தைக்கும் அனுப்பப்படவுள்ளனர்.

காரைதீவு சிறப்பு அதிரடிப்படை முகாம் தனியார் மற்றும் அரச கட்டடங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.

நாளை இந்த முகாம் மூடப்பட்ட பின்னர் தனியார் கட்டடம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ள அதேவேளை, அரச கட்டடத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் முகாமிடவுள்ளனர்.

அதேவேளை, காரைதீவு முகாமுக்கு அருகே, மூடப்பட்ட நிலையில் உள்ள வீதியும் நாளை முதல் திறக்கப்படவுள்ளது.

தடுப்புமுகாம்களுக்குச் செல்ல சட்டவாளர்களுக்கு அனுமதி

தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சந்திப்பதற்கு சட்டவாளர்களை அனுமதிக்குமாறு சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரியன் ஜோசப் டேவிட் என்பவரின் சார்பில் அவரது சட்டவாளர் சாலிய பீரிஸ் தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் மனு மீதான விசாரணையின் போதே சிறிலங்கா உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுகின்ற போதும், சட்டவாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால் தமது கட்சிக்காரர் தொடர்பிலான தரவுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதிருப்பதாக, சட்டவாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சிராணி திலகவர்த்தன தலைமையிலான மூன்று உறுப்பினர் நீதியரசர் குழுவே சிறிலங்காவின் சட்டமா அதிபருக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 2000 விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனல்4 மீது வழக்குத் தொடுக்க தாயாராகிறது சிறிலங்கா

சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பிய சனல் 4தொலைக்காட்சி நிறுவனம் மீது எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த ஆவணப் படத்தின் மூலப்பிரதியை தம்மிடம் ஒப்படைக்குமாறும் சிறிலங்கா அரசாங்கம் சனல் 4 தொலைக்காட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் போலியானது என்பதை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் இது போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அவர், இதற்காக சனல் 4 தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கோரப்பட வேண்டும் இல்லையேல் நட்டஈடு தரக்கோரி வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் | | Read More...

இலங்கைப் பொலிஸாரின் 1500 சித்திரவதைச் சம்பவங்கள்

இலங்கையில் 1998 ஆம் ஆண்டிற்கும் 2011 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட 1500சித்திரவதைச் சம்பவங்கள் பற்றிய அறிக்கையொன்றை ஆசிய மனித உரிமைகள் ஆணை க்குழு தொகுத்து வெளியிட்டுள்ளது. இவற்றில் 323 சித்திரவதைச் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக சித்திரவதைக்குள்ளான அனைவரும் பொலிஸாரால் தான் தோன்றித் தனமான முறையில் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுகளின் பேரிலே கைது செய்யப்பட்டவர்கள் என்பதாகும்.

இத்தகைய சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களின் பேரில் பெருந்தொகையானோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றமை இலங்கையில் குற்றவியல் நீதி முறைமையில் அதிகளவு அதிர்ச்சியளிக்கும் அம்சமாகக் கருதப்படுகின்றது. குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ள வைப்பதற்காகவே இச் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க முடியாது - இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்தது சிறிலங்கா

சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 23 தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு விடுத்த கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவைச் சேர்ந்த 62 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டால் மட்டுமே தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை தம்மால், கவனத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்படும் போது அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரும் போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடத்தப்படுகின்றன.

ஆனால் சிறிலங்கா மீனவர்கள் இந்தியாவில் கைது செய்யப்படும் போது விரைவில் அவர்களை விடுதலை செய்யக் கோரும் போராட்டங்களை நடத்துவதில்லை.

அவ்வாறு சிறிலங்கா மீனவர்களும் போராட்டங்களை நடத்த ஆரம்பித்தால் அதற்கு இந்தியா பதிலளிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்காவைச் சேர்ந்த பல மீனவர்கள் ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் இந்திய அரசாங்கம் அவர்களை விடுதலை செய்து நல்லெண்ணத்தை வெளிப்படுத்தினால், தாமும் அதற்கு சாதகமான முறையில் பதிலளிக்கத் தயார் என்றும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 23 தமிழ்நாட்டு மீனவர்களையும் ஜுலை 1ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர்களை சிறிலங்கா அரசாங்கம் அனுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளது.
கருத்துகள் | | Read More...

மருத்துவமனையின் மீது தாக்குதல் : 60 பேர் பலி

Penulis : ۞உழவன்۞ on சனி, 25 ஜூன், 2011 | 12:20 PM

சனி, 25 ஜூன், 2011


ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் இன்று நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல் சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை ஆப்கன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



லோகர் மாகாணத்தில் உள்ள அஸ்ரா மாவட்டத்தில் செயல்படும் சிறிய மருத்துவமனை ஒன்றில் இத்தாக்குதல் நிகழ்ந்தது.



இன்று காலை, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று மருத்துவமனை நோக்கி ஓட்டி வரப்பட்டது. மருத்துவமனையின் பாதுகாவலர்கள் அதை ஓட்டி வந்த நபரை தடுக்க முயன்றனர். ஆனால், அதையும் மீறி காரை ஓட்டிச் சென்று மருத்துவமனை கட்டடத்தில் அவர் மோதச் செய்தார். இதில், சம்பவ இடத்திலேயே 60 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.



இதனிடையே, இத்தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என்று தலிபான் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்துளார்.


மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆப்கனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் | | Read More...

வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக வடக்கு, தெற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். சிவில் நிர்வாகத்துக்கு இடமளித்து வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

அளவெட்டியில் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது குற்றுயிராக இருந்த ஜனநாயகத்துக்கு இறுதியாக அடிக்கப்பட்ட சாவுமணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அளவெட்டிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நேற்று பிற்பகல் 12.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்னவின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம். சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஜனநாயக மக்கள் முனனணியின் தøலவர் மனோ கணேசன், செயலாளர் நல்லையா குமரகுருபரன், உப தலைவர் வேலணை வேணியன் உட்பட பல அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

12.30 மணியளவில் ஆரம்பமான ஆர்ப்பாட்டம் 1.15 மணிவரை நடைபெற்றது. இதன்போது இராணுவச் சட்டம் இலங்கைக்கு வேண்டாம், சிவில்நிர்வாகத்தை வடக்கில் உறுதிசெய்க, யாழ். கட்டளைத் தளபதி பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியபடியும் சுலோக அட்டைகளை தாங்கியவாறும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஜனநாயக ரீதியில் வேட்பாளர் சந்திப்பொன்றை கடந்தவாரத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர். இதில் பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர். இந்த அமைதியான சந்திப்பில் இராணுவ சீருடையுடன் வந்தவர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. இருந்தபோதிலும் மெய்ப்பாதுகாப்பாளர்கள் இந்தக் தாக்குதலிலிருந்து எம்.பி.க்களைப் பாதுகாத்தனர். இதன்போது அவர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இங்கிருந்த பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 20க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பொல்லுகளுடன், துப்பாக்கிகளுடனும் வந்தே தாக்குதலை மேற்கொண்டனர். ஜனநாயக ரீதியில் நடைபெறும் இவ்வாறான கூட்டங்களில் இராணுவத்தினர் தலையிடவேண்டிய அவசியமில்லை. கூட்டமைப்பினரின் அரசியலை முடக்கி வடக்கு மக்களை அச்சத்துக்குள் வைத்திருக்கவே இத்தகைய தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. எனவே ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக தெற்கில் சிங்க மக்களும் வடக்கின் தமிழ்மக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டிய காலம் பிறந்துள்ளது என்று கூறினார்
கருத்துகள் | | Read More...

சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் பிரபுதேவா


தங்கர் பச்சான் இயக்கியிருக்கும் ”களவாடிய பொழுதுகள்” படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் பிரபுதேவா.
பொதுவாக தங்கரின் படத்தில் நடிக்கிற எவரும் மீண்டும் அவரை பற்றி பேச்செடுத்தாலே எரி கல்லை முழுங்கிய மாதிரி முகத்தை காட்டுவார்கள்.

ஆனால், மாஸ்டர் அப்படியில்லை. புகழோ புகழென்று புகழ்கிறார் தங்கர்பச்சானை. ”களவாடிய பொழுதுகள்” மாதிரி ஒரு திரைப்படம் அமைவதே அதிர்ஷ்டம். நான் கொடுத்து வைத்தவன் என்றெல்லாம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார் பிரபுதேவா.

இவ்வளவு துாரம் அவரை கவர்ந்த இந்த பண்ருட்டி படைப்பாளி, தான் எழுதிய தொலைந்து போனவர்கள் என்ற நாவலை ஒருநாள் கொடுத்து படிக்கச் சொன்னாராம் பிரபுதேவாவிடம். படித்து பார்த்த மாஸ்டர், அசந்தே போயிருக்கிறார். இப்படி ஒரு அற்புதமான கதை படமாக வேண்டும். இதில் நடிக்க பொறுத்தமான நடிகர் சித்தார்த் மட்டும் தான். நானே அவரிடம் பேசி இந்த படத்தில் நடிக்க வைக்கிறேன் என்றெல்லாம் பாராட்டினாராம் தங்கரை.

சொன்ன மாதிரியே இந்த தொலைந்து போனவர்கள் நாவல் பற்றி சித்தார்த்திடமும் பேசினாராம். முதலில் கதையை பற்றியெல்லாம் கேட்டு தெரிந்து கொண்ட சித்தார்த், ஒருவேளை நான் கால்ஷீட் கொடுத்தா, அதை யாரு இயக்குவாங்க என்றாராம். பிரபுதேவாவும் தயங்காமல் தங்கர்பச்சானின் பெயரை சொல்ல, அதற்கு சித்தார்த் மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
கருத்துகள் | | Read More...

இன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்


ஐக்கிய நாடுகள் அவையால் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் யூன் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி நிற்போம். என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
26 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறவுள்ள “மெழுகுவர்த்தி ஏந்தல்” நிகழ்வு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான அவர்கள் விடுத்துள்ள அறிக்கை :

ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26ஆம் நாளை உலகெங்கிலும் சித்ரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவூ தினமாக ஐ.நா கடைபிடித்து வருகிறது. அரசுக்கு எதிராகப் போராடியவர்கள், தீவிரவாதிகள் என்று பொய்ப்பழி சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டோர், இனத்தின் விடுதலைக்காக போராடியவர்கள் ஆகியோர் தாம் பெருமளவிற்கு சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

அப்படிப்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியூம் சித்ரவதை மானுடத்திற்கு ஒவ்வாத நடவடிக்கை என்பதை உலகிற்கு உணர்த்தவூம் இந்நாள் ஐ.நா.வால் கடைபிடிக்கப்படுகிறது.

சித்ரவதையென்பது மனித உரிமைக்கும் மனித நேயத்திற்கும் எதிரான பயங்கரத்தின் திட்டமிட்ட வடிவமாகும் சக மனிதனை மனிதாபிமானமற்ற வகையில் கொடூரமான துன்பத்திற்கு ஆளாக்குவதாகும்“.என்று சித்ரவதைக்கு எதிரான ஐ.நா. பிரகடனம் கூறுகிறது.

1984 ஆம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி ஐ.நா. அவையால் வெளியிடப்பட்ட சித்ரவதைக்கு எதிரான பிரகடனத்தில் யூன் இலங்கை இந்தியா உள்ளிட்ட 147 நாடுகள் கையெழுத்துட்டுள்ளன. இலங்கை 1994ஆம் ஆண்டு இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டது.

ஆனால் இந்த நாடுதான் சித்ரவதையை ஈழத் தமிழர்களுக்க எதிரான ஒடுக்குமுறையின் முதன்மை ஆயூதமாக இன்று வரை பயன்படுத்தி வருகிறது. உடல், மனரீதியாக பாதிப்பது பட்டினி போடுவது சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்தல் வெள்ளை வேன்களைக் கொண்டு கடத்தல் காணடித்தல் குடும்பத்தினரை பிரித்தல் மனித உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களைக் கொண்டு கைது செய்வது விசாரணை என்ற பெயரில் சித்திரவதைச் செய்வது என அந்நாட்டின் பூர்வீக இனத்தையே வதைத்து சிதைத்து சின்னாபின்னமாக்கி வருகிறது. ராஜபக்ச இனவெறி அரசு. போரின் போதும், போர் முடிந்த பின்னரும் வன்னி முகாம்களில் இத்தகைய வதைகளை இலங்கை அரசு வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறது.

இரண்டரை ஆண்டுக்காலப் போரில் சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான ஆயூதங்களை பயன்படுத்தி ஒன்றரை இலட்சம் ஈழத் தமிழர்களை கொன்றுக் குவித்தது அந்த இனப்படுகொலை முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் இலங்கை இனவெறி அரசாலும் ராணுவத்தாலும் தொடந்து வதைபட்டு வருகின்றனர்.

தொடர் சித்திரவதை, கற்பழிப்புகள், கடத்திக் காணடித்தல் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்தாமல் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி மன உளைச்சலை அதிகரித்தல் என்று பலவழிகளிலும் ஈழத் தமிழினம் இன்று சிங்கள இனவெறியின் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கள அரசின் மனிதாபிமானமற்றப் போக்கிற்கு இந்திய மத்திய அரசு மறைமுகமாக துணை நிற்கிறது. ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழ்நாட்டின் மீனவர்களையும் சிங்கள் கடற்படை கால் நூற்றாண்டுக் காலமாக நடுக்கடலில் படுகொலை செய்தும் கண்ணியக் குறைவாக நடத்தியும் வதைத்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தோல்விக்காக இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை சிங்கள கடற்படை கை கால்களை வெட்டி கொன்றதை விட வேற என்னா அத்தாட்சி வேண்டும்?

எனவே இலங்கை அரசின் தமிழின வதை போக்கை தோலுறுத்துக் காட்டும் முகமாக ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னை மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலை பின்புறம் அணி திரள்வோம், தமிழின வதைக்கு நியாயம் கேட்டு தமிழர்களாகிய நாம் அனைவரும் மெழுகு வர்த்தி ஏந்தி நிற்போம்.

சிங்கள அரசின் இருண்ட இனவெறிச் சித்திரவதைக் கூடங்களை உலகம் இந்த ஒளியின் வழி காணட்டும். இந்த ஒளி ஈழத் தமிழருக்கு விடுதலையையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாரம்பரிய மீன பிடி உரிமையையும் பெற்றுத் தரும் பாதையை காட்டட்டும்.
கருத்துகள் | | Read More...

போர்க்குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் புலம்பும் மகிந்த!

Penulis : ۞உழவன்۞ on வெள்ளி, 24 ஜூன், 2011 | 5:43 PM

வெள்ளி, 24 ஜூன், 2011

போர்க்குற்றம் என்ற பெயரில் எனக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து மின்சார நாற்காலியில் அமரவைக்க சிலர் துடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சே.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கையில்,

பல்வேறு அறிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்புக்களின் மூலம் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சுமத்தப்படுகிறது.

அரசுக்கு எதிராக தூக்கப்படும் கரங்கள் இறுதியில் பொதுமக்களின் தலைகளின் மேல் விழுகின்றன.
இன்று இலங்கை மக்கள் அனுபவித்து வரும் சுதந்திரத்தை பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படைவீரர்களைப் போன்றே விவசாயிகளையும் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளேன்.

இன்று சிலர் என்னை மின்சார நாற்காலியில் அமரவைத்து தண்டனை கொடுக்க துடிக்கின்றனர், தீவிரமாக முயற்சிக்கின்றனர் என்றார் மகிந்த.
கருத்துகள் | | Read More...

இலவச பசு, ஆடு வழங்கும் திட்டம்: முதல்வர் ஆய்வு

இலவசமாக பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்க அவர் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற தனித் துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை எனும் இத்துறைக்குத் தனி அமைச்சரும், செயலாளரும் உள்ளனர்.

தொடர் திட்டங்கள்: தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றும் பணியில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு அதற்கான பயனாளிகள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்துக்கும், இலவச லேப்-டாப் அளிக்கும் திட்டத்துக்கும் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தப் புள்ளிகள் ஜூலை 11-ம் தேதி திறக்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 15-ம் தேதி இந்தத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்.

பசுக்கள், ஆடுகள் வழங்கும் திட்டம்: அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மற்றொரு முக்கிய திட்டமாக இருப்பது, இலவசமாக கறவை மாடுகளும், நான்கு ஆடுகளும் அளிப்பதாகும். பால் உற்பத்தியை 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக உயர்த்த 6 ஆயிரம் கிராமங்களில் 60 ஆயிரம் பசுக்கள் இலவசமாக வழங்கப்படும்.

வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு இலவசமாக நான்கு ஆடுகள் வழங்கும் திட்டம் குறித்து, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார் முதல்வர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, கருப்பசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும், தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி, முதல்வரின் செயலாளர்கள் ஷீலா ப்ரியா, ராம மோகன ராவ், வெங்கடரமணன், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை செயலாளர் சிவதாஸ் மீனா, பால், மீன்வளம், கால்நடைத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பொங்கலில் தொடங்க முடிவு? இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தை உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில் தொடங்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மக்களின் கணக்கெடுப்பு உணவுப் பொருள் வழங்கல் துறையிடம் இல்லை. எனவே, உள்ளாட்சி, நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளிடமிருந்து விவரங்கள் பெறப்பட உள்ளன.

சாதிவாரிக் கணக்கெடுப்பு தமிழகத்தில் டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கணக்கெடுப்புடன் வறுமைக் கோட்டுக் கீழ் உள்ளவர்களின் விவரமும் தொகுக்கப்படுகிறது. இந்தக் கணக்கெடுப்பை மையப்படுத்தி இலவசமாக ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் | | Read More...

மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக டெல்லியிலிருந்து மதுரை வந்தார் மு.க.அழகிரி


தனது மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவசரமாக டெல்லியிலிருந்து மதுரை திரும்பினார்.
சென்னைக்கு வந்தால் தலை இருக்காது என்று துரை தயாநிதிக்கு மிரட்டல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் வெளியானது. தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து டெல்லியிலேயே முகாமிட்டிருந்த அழகிரி, இந்த மிரட்டல்களையடுத்து நேற்று மாலை அவசரமாக மதுரை திரும்பினார்.

இந்த மிரட்டல்கள் பழைய நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து தான் வந்துள்ளதாக அழகிரியிடம் தயாநிதி கூறியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து துரை தயாநிதியை டெல்லிக்கு அழைத்துச் செல்லவும் அழகிரி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
கருத்துகள் | | Read More...

மட்டக்களப்பில் இரு மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்


மட்டக்களப்பபில் உள்ள மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கடலில் நீராடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நேற்று மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் அதே ஊரைச் சேர்ந்து புண்ணியமூர்த்தி வினோதராஜ் (14 வயது) மற்றும் தங்கத்துரை டிசாந்தன் (14 வயது) என்பவர்களே நீரில் மூழ்கி மரணமாகி உள்ளனர்.

ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள நிலையில் மற்றவரின் சடலத்தை பிரதேச வாசிகள் தேடி வருகின்றனா்.

இன்று வெள்ளிக்கிழமை காலையில் மற்றைய மாணவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் | | Read More...

கணவனைக் கொலை செய்ய கள்ளக் காதலனுக்கு உதவிய மனைவி


விழுப்புரம் நாராயணா நகரைச் சேர்ந்தவர் தீனதயாளன்(28). பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இவரது மனைவி லட்சுமி(27). காதல் திருமணம் செய்து கொண்டனர். ரேணுகாதேவி(6), கீர்த்தனாதேவி (3) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் தீனதயாளன் வீட்டின் படுக்கை அறையில் கடந்த 21ம் தேதி கை, கால் கட்டப்பட்ட நிலையில் அடித்து கொல்லப்பட்டு கிடந்தார். மனைவி லட்சுமி (27) கை, கால், வாய் கட்டப்பட்டு இருந்தது. மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர்.

விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். மகன் சாவில் மருமகள் லட்சுமி, அவரது தந்தை சப்&இன்ஸ்பெக்டர் நாகராஜ் மீது சந்தேகம் இருப்பதாக தீனதயாளன் தாயார் பிரேமா புகார் கொடுத்தார்.

லட்சுமி கொடுத்த தகவலும், அவரது மகள் ரேணுகாதேவி கொடுத்த தகவலும் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் லட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டு அவரது செல்போனை சோதனையிட்டதில், ஒரே எண்ணிற்கு நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்மூலம் விருத்தாசலம் முல்லாத்தோட்டத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (33), மோகன் (22) பிடிப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

போலீசிடம் முத்தமிழ்செல்வன் கூறியதாவது:
விருத்தாசலம் காவல் நிலையத்தில் 2006ல் சப்&இன்ஸ்பெக்டராக நாகராஜ் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமானார். அப்போது அவரது மகள் லட்சுமியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

3 ஆண்டுகளாக நெருங்கி பழகினோம். திருமணம் ஆனபின்னர் கடைக்கு தீனதயாளன் சென்றதும் வீட்டிற்கு என்னை லட்சுமி வரவழைத்தார். இதை அறிந்த தீனதயாளன் மனைவியை கண்டித்தார். தந்தை வீட்டிற்கு லட்சுமியை அனுப்புவதை தீனதயாளன் தவிர்த்தார்.

இது நாகராசுக்கு ஆத்திரம் அடைய செய்தது. வழக்கு விசாரணைக்கு விருத்தாசலம் சென்றுவரும்போது என்னிடம் மருமகன் தீனதயாளனை அடக்கி வைக்க வேண்டும் என நாகராஜ் கூறினார்.

இதற்கிடையில் லட்சுமி, தீனதயாளன் பயங்கர தொல்லை கொடுத்து வருவதாகவும், அவரை தீர்த்துக்கட்டும்படி ஒரு மாதமாக செல்போனில் வலியுறுத்தினார். இதற்காக, கடந்த 20ம் தேதி நண்பர் மோகனுடன் வந்தேன்.

மறுநாள் அதிகாலை 2 மணிக்கு லட்சுமி ஏற்பாட்டின் பேரில் தீனதயாளன் வீட்டு போர்ட்டிகோ கதவை திறந்து வைத்திருந்தார். படுக்கை அறையில் தூங்கி கொண்டிருந்த தீனதயாளன் தலையில் இரும்பு பைப்பால் பலமாக தாக்கினோம். இதில் அவர் இறந்தார்.

எங்களை அடையாளம் காணாமல் இருக்க மஞ்சள் தூளை அங்கு தூவினோம். கழுத்தில் இருந்த தாலியை லட்சுமி அறுத்து என்னிடம் கொடுத்தார். பீரோவில் இருந்த நகைகளையும் கொடுத்தார்.

இதையடுத்து தீனதயாளன் உடலை மூன்று பேரும் சேர்ந்து கயிற்றால் கட்டினோம். லட்சுமியை கயிறால் கட்டி போட்டு விட்டு தப்பினோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வைத்து முத்தமிழ்செல்வன், மோகன் ஆகியோரையும், விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் வைத்து லட்சுமியிடம் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

மருமகனை மிரட்டுவதற்காக முத்தமிழ்செல்வன் உதவியை சப்&இன்ஸ்பெக்டர் நாகராஜ் நாடினாரா? என்ற கோணத்தில் தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.
கருத்துகள் | | Read More...

மீனவர்களுடன் இணைந்து போராட்டம்: சீமான்

Penulis : ۞உழவன்۞ on வியாழன், 23 ஜூன், 2011 | 11:57 AM

வியாழன், 23 ஜூன், 2011


இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டமாக முன்னெடுக்கும். இவ்வாறு நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

இது வரை 550 க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கொலை செய்தும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்தும் அவர்களைச் சித்திரவதை செய்த சிங்களப் படை சிறிது காலம் தனது வெறியாட்டத்தை நிறுத்தி வைத்திருந்தது.

சில நாட்களுக்கு முன் இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்ததன் பேரில் 16-ந் தேதி விடுதலை செய்யப்பட்டனர். இப்பொழுது மீண்டும் சிங்களக் கடற்படை தனது அட்டூழியத்தையும் வெறித்தனத்தையும் ஆரம்பித்துள்ளது.

இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன் தினம் காலை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு களில் மீன்பிடிக்கச் சென்ற 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நடுக்கடலில் வலைகளை விரித்து மீன்களை பிடித்து கொண்டிருந்த பொழுது,அங்கு வந்த சிங்கள கடற்படை வீரர்கள் நமது மீனவர்களை அச்சுறுத்தியும் மிரட்டியும் மிக கடுமையாக நடந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சிந்தாத்துரை, செல்வம், பேரின்பம், அழகேசன், கணேசன், முத்துக்காளை, ராமகிருஷ்ணன், ராம சாமி, உள்பட 23 மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்று மன்னார் கடற்படை முகாமில் வைத்துள்ளது.

இந்த அட்டுழியத்தை இந்த முறையாவது நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்த நிலை தொடர நாம் அனுமதிக்கக் கூடாது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், அடிக்கடி கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து அதன்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் விசைப்படகுகள் இராமேஸ்வரம் துறைமுகம், பாம்பன், தங்கச்சிமடம் கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இந்த மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கைளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு தனது சிறப்புத்தூதரை இன்று உடனடியாக கொழும்பு அனுப்பி சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களையும் மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் இராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்தும் மீனவர் அமைப்புக்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டமாக முன்னெடுக்கும் என்று எச்சரித்தார்.
கருத்துகள் | | Read More...

அளவெட்டித் தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது - நாடாளுமன்றத்தில் சம்பந்தன் குற்றச்சாட்டு

அளவெட்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல், அரசியல் நோக்கம் கொண்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட இரா. சம்பந்தன், அளவெட்டியில் கடந்த 16ம் நாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக்கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தியது சிறிலங்காப் படையினரே என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல் தொடர்பாக முறைப்படியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள மோசமான தாக்குதல் இது என்று வர்ணித்த இரா.சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் ஏற்படுவதை சிறிலங்காப் படையினர் தடுக்க முனைவதை இது வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

சாய்பாபாவின் வாரிசு மற்றும் உயில் விவரங்களை வெளியிடுவேன்: சாய்பாபாவின் அமெரிக்க பக்தர்


ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சமீபத்தில் ரூ.35 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இப்பணம் கொடி கொண்டா பொலிசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கியது. இதையடுத்து கார் ஓட்டுனர் ஹரீஷ் நந்தா ஷெட்டி, சென்னை தொழில் அதிபரின் கார் ஓட்டுனர் சந்திரசேகர், பெங்களூரை சேர்ந்த ஷோகன் ஷெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சொகுசு பேருந்தில் கடத்தப்பட்ட பல கோடி பணத்தையும் பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து புட்டபர்த்தி பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர் ரத்னாகர், சென்னை தொழில் அதிபர் ஆகியோருக்கு பொலிசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.

இந்நிலையில் சாய்பாபாவுக்கு மிகவும் நெருக்கமான அமெரிக்க பக்தர் ஐசக் டிரிகேட் புட்டபர்த்தியில் நிருபர்களிடம் கூறியதாவது, நான் அமெரிக்காவில் பீர் நிறுவனம் நடத்தினேன். அதில் பல ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. நிம்மதி கிடைக்கவில்லை. போதைக்கு அடிமையாகி மிகவும் கஷ்டப்பட்டேன். எனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு சாய்பாபா பற்றி கேள்விப்பட்டு இந்தியா வந்தேன். அவரது ஆசியால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு மன நிம்மதி கிடைத்தது. இதனால் அடிக்கடி இந்தியா வந்து சாய்பாபாவை சந்தித்தேன். இதனால் இருவருக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக புட்டபர்த்தி ஆசிரமத்தில் தங்கி உள்ளேன். சாய்பாபா என்னிடம் மனம் திறந்து பேசுவார். அப்போது அவர் தனக்கு பிறகு யாரை வாரிசாக நியமிப்பது? தான் உயிலில் எழுதப் போவது என்ன? போன்ற விவரங்களை கூறி இருந்தார். அதை நான் 6 வாரத்தில் வெளியிடுவேன் என்று அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது, சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள விலை உயர்ந்த ஆபரணங்கள், கோடிக் கணக்கான பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர அரசு இனியும் மவுனமாக இருப்பது நல்லதல்ல. சாய்பாபா ஆசிரம சொத்துக்களை அரசுடமை ஆக்க வேண்டும். ஆசிரமத்தில் நடந்த கொள்ளை பற்றி விரிவான விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

பறக்கும் படை : நடிகர் விவேக் அதிரடி


சென்னையில் நடிகர் விவேக் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர், ‘’2020ல் இந்தியா வல்லரசாக வேண்டும் என்பது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவு.

உலகம் வெப்பமாதலை தடுக்க நாடு முழுவதும் 100 கோடி மரக்கன்றுகளையாவது நட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரை நான் சந்தித்தபோது, திரைப் படங்களில் இந்த கருத்தை வலியுறுத்தும்படி கூறினார்.



தமிழகம் எங்கும் உள்ள எனது நற்பணி மன்றங்கள் மூலம் டிசம்பர் மாதத்துக்குள் 25 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.






இந்த பணியை எக்ஸ்னோரா கிளை இயக்கங்கள், எக்ஸ்னோரா இளைஞர் பாசறையுடன் இணைந்து செயல்படுத்த இருக்கிறோம். இதற்கான துவக்க விழா வரும் 26ம் தேதி காலை திருச்சி சிங்கார தோப்பில் நடைபெறும். மரக்கன்றுகளை மாவட்டம் வாரியாக பள்ளி, கல்லூரி, கிராமங்களுக்கு வழங்க இருக்கிறோம்.



மரக்கன்று பெற்றவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் மூலம் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் சரியாக பராமரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க பறக்கும் படையை அமைக்க உள்ளோம். புளியங்கன்று, காளானை தவிர அனைத்து வகையான மரக்கன்றுகளையும் வழங்க இருக்கிறோம்.



இந்த கன்றுகளை வனத்துறையினர், தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனம் போன்றவற்றிடம் இருந்து பெற இருக்கிறோம். மரக்கன்று நடுதல் மூலம் மூலம் உலகம் வெப்பமாதலை ஓரளவு தடுக்க முடியும்’’என்று கூறினார்.
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger