News Update :

சிறைக்கைதிகளைப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுத்த தீர்மானம்

Penulis : Antony on ஞாயிறு, 27 மார்ச், 2011 | 8:14 AM

ஞாயிறு, 27 மார்ச், 2011


இனி வரும் காலங்களில் சிறைக்கைதிகளை அவ்வப்பிரதேசங்களில் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் சுமார் முப்பதாயிரம் வரையிலான நபர்கள் சிறைக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாளாந்தம் பத்து இலட்சம் ரூபா வரையில் உணவுக்காக மட்டுமே செலவிடப்படுகின்றது.

அதற்கு மேலதிகமாக மருத்துவ வசதிகள், மின்சாரம், தண்ணீர், சவர்க்காரம் என அதனையொத்த இன்னொரு தொகையும், அவர்களைக் கண்காணிக்கும் சிறைக்காவலர்களுக்குப் பெருந்தொகையொன்றைச் சம்பளமாகவும் வழங்க நோ்ந்துள்ளது.

அதன் காரணமாக இனி வரும் காலங்களில் சிறைக்கைதிகளைக் கொண்டு பயிரிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் தேசிய அபிவிருத்தியில் அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் முதற்கட்ட செயற்பாடு வீரவில சிறைச்சாலையிலிருந்து ஆரம்பிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துகள் | | Read More...

யாழ்ப்பாண குற்றச்செயல்களுடன் அரசியல்வாதிகளே தொடர்புபட்டுள்ளனர்


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் குற்றச் செயல்களுடன் அரசியல்வாதிகளே தொடர்புபட்டுள்ளனர் என்பதாக யாழ்.இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.யாழ்ப்பாண மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு ஒருசில அரசியல்வாதிகள் தான் முயற்சித்து வருகின்றார்கள். அவர்கள் தான் இங்கு நடக்கும் குற்றச்செயல்களுடனும் தொடர்புபட்டிருக்கின்றார்கள்.

ஆயினும் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொள்ளவே பிரஸ்தாப குற்றச்செயல்களை பயன்படுத்துகின்றனர். அதனை மக்களில் ஒருசிலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனாலும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இராணுவம்-பொதுமக்கள் இடையேயான நல்லுறவும் நல்லமுறையிலேயே காணப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளை மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்போம் என்றும் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் | | Read More...

இனப்பிரச்சினையும் சம்பூரும் - அரசியல் அநாதைகளாக நிற்கும் சம்பூர் பிரதேச மக்கள்

Penulis : Antony on வியாழன், 24 மார்ச், 2011 | 8:24 AM

வியாழன், 24 மார்ச், 2011


[கொழும்பில் இருந்து வெளியாகும் தினக்குரல் Thinakkuarl on 20.03.2011 ஞாயிறு இதழில் எல். சிவலிங்கம் என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை அம்மக்களின் குரலை வெளிப்படுத்துவதனால் புதினப்பலகை மீளவும் அதனை இங்கே வெளியிட்டு வாசகர்களின் கவனத்திற்கு கொணர்கின்றது].

இனப்பிரச்சினை ஆரம்பமான காலப்பகுதியில் சம்பூர் தனித்தமிழ் பிரதேசமாகக் காணப்படமையினால் போராட்ட இயக்கங்களின் நடமாட்டம் காணப்பட்டமை ஒன்றும் இரகசியமானதல்ல. இதனால் சுற்றிவளைப்புக்கள், கைதுகள், வீடெரிப்புக்கள் என பல்வேறு விதமான தாக்கங்களுக்கு சம்பூர் பிரதேசம் உட்பட்டு வந்தது.

பெயருக்கேற்ற சம்பூரணமான வளங்களைக் கொண்ட இப்பிரதேசம் பல்வேறு விதமான நெருக்கடிகளைச் சந்தித்து பொருளாதார ரீதியாகவும் கல்வியிலும்; மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட போதிலும் அனைத்திலும் தன்னிறைவான பிரதேசமாகவே இயங்கிக் கொண்டிருந்தது.

1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் முதன் முதலில் சம்பூரில் முகாம் அமைக்க முனைந்த போதிலும் இந்திய இலங்கை உடன்படிக்கையின் காரணமாக அவர்கள் சம்பூரை விட்டு இடைநடுவில் வெளியேற வேண்டியேற்பட்டது. 1990 களில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் சம்பூர் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் இலங்கை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் மாறி மாறி இருந்து வந்தது.

மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டிருந்தமையினால் இராணுவம் ஊருக்குள் வரும் போது புலிகள் காடுகளுக்குள் பின்வாங்கும் மரபினைக் கொண்டிருந்தனர்.

சம்பூரில் அமைந்திருந்த இலங்கை இராணுவ முகாம்கள் மீது புலிகள் ஒரு போதும் பெருமெடுப்பிலான தாக்குதலைத் தொடுத்திருக்கவில்லை என்பதிருந்தும் இராணுவம் சம்பூரை நோக்கி முன்னேறிய போதெல்லாம் ஒரு தரமேனும் புலிகள் இராணுவத்தினரை எதிர்த்து மரபு வழிச் சமரில் ஈடுபடவில்லை என்பதிலிருந்தும் சம்பூர் பிரதேசம் ஒருபோதும் புலிகளின் கோட்டையாக இருக்கவில்லை என்பது புலனாகின்றது.

கடைசியாக சம்பூரில் இருந்த இலங்கை இராணுவ முகாம் ஜயசிக்குறு நடவடிக்கைக் காலத்திலேயே அகற்றப்பட்டது. கடைசியாக நடந்த சண்டையிலும் புலிகள் சாதாரண எதிர்ப்பைக் காட்டிவிட்டு சம்பூரிலிருந்து பின்வாங்கியிருந்தனர் என்பதே உண்மையானதாகும்.

உண்மையில் மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட சம்பூர் பிரதேச நில அமைவானது புலிகளுக்கு மரபு வழிச்சமருக்கான ஒரு இயற்கையான பாதுகாப்பு நிலைமையை; வழங்கியிருக்கவில்லை. பல கால கட்டங்களில் இராணுவம் சம்பூரை விட்டு வெளியேறியவுடன் புலிகளின் நடமாட்டம் சம்பூரில் அதிகரித்தது என்பதே உண்மையானதாகும். எனவே சம்பூர் புலிகளின் கோட்டை எனும் ரீதியில் சம்பூர் மக்களைப் பழிவாங்குவது எவ்விதத்திலும் நியாமாகாது.

யுத்த நிறுத்தமும் சம்பூரும்

2002ம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நிலைமை முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தினை எடுத்தது.

யுத்த நிறுத்த காலத்தில் புலிகள் சம்பூர் பிரதேசத்தில் அவர்களின் திருமலை மாவட்ட தலைமை பொலிஸ் நிலையம், திருமலை மாவட்ட அரசியல் தலைமைச் செயலகம் என்பவற்றை அமைத்துக் கொண்டனர். இலங்கை அரசியல் வாதிகளும், வெளிநாட்டுத் தூதுவர்களும் அடிக்கடி வந்து சென்றமையினால்; உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அறியப்பட்ட ஒரு பிரதேசமாக சம்பூர் மாறத்தொடங்கியது.

தங்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துபற்றி சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் அப்போது அறிந்திருக்கவில்லை. 1983 ஆம் ஆண்டிலிருந்து யுத்தத்திற்கு மத்தியிலும் நெருக்கடிகளுடன் ஓரளவு சந்தோசமாகவே அவர்கள் வாழ்ந்து வந்தனர். யுத்த காலத்திலும் மூதூர் பிரதேசத்திற்கு அவர்கள் நெல், மீன், விறகு, பால் போன்றவற்றைத் தாராளமாக வழங்கி வந்தனர்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களின் மீது தற்கொலைத் தாக்குதல் 2006 ஏப்ரல் 25ம் திகதி மாதத்தில் கொழும்பில் நிகழ்த்தப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. ஏனெனில் திருகோணமலைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவமிக்க பகுதியில் அமைந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியாகக் காணப்பட்டமையினால் சம்பூர் மீதே முதன்முதலாக வான் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்பு வெற்றிலைக்கேணியில் இலங்கைக் கடற்படையினர் மீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்ட போதும் கெப்பிட்டிக்கொலாவையில் சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்ட போதும் சம்பூர் பிரதேசம் மீதே இலங்கை விமானப்படை தாக்குதலைத் தொடுத்தது. இதன்பிறகு மாவிலாறு பிரச்சினையினைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் தரைவழித் தாக்குதலை ஆரம்பித்து முதன் முதலாக சம்பூர் பிரதேசத்தினையையே கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து சம்பூர் மக்களின் இடம்பெயர்வு வாழ்க்கை ஆரம்பமாகியது.

இராணுவம் சம்பூரைக் கைப்பற்றியபோது சம்பூர் எப்படி இருந்தது

சம்பூர் மீது விமானத்தாக்குதல் ஆரம்பமான போது மக்கள் உடுத்த உடையுடன் அயற்கிராமங்களில் தஞ்சமடைந்தனர். யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தமையினால் தாக்குதல் தற்காலிகமானது எனவும் தாம் விரைவில் வீடு திரும்பிவிடலாம் என மக்கள் நம்பினர். ஆனால் அவர்களின் நினைப்பு பொய்த்துப்போனது.

தாம் ஆண்டாண்டு காலமாக சம்பாதித்த அனைத்து சொத்துக்களையும் வீடுகளுடன் விட்டுவிட்டு கையில் எடுக்கக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு இடம் பெயர்ந்த மக்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து விட்டு ஏதிலிகாக நிற்கின்றனர்.

சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்தினர் பத்திரிகையாளர் குழுவொன்றினை சம்பூருக்கு அழைத்துச் சென்றிருந்தனர். நேசன் வாரப் பத்திரிகையின் பத்திரிகையாளரான தரிஸ பஸ்தியன் 10.09.2006 அன்று வெளியான நேசன் பத்திரிகையில் “சம்பூர் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெறும் தேடுதல் நடவடிக்கைகளினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பாதிப்புக்களுக்கு அப்பால் பாடசாலைகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட சிவிலியன் உடமைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு மிகக் குறைவானதாகும்” தான் அன்று கண்ட சம்பூர் பற்றி எழுதியுள்ளார்.

ஆனால் அன்று அவர் கண்ட சம்பூரில் இருந்த எதுவுமே இன்று இல்லை. சம்பூரில் இருந்த மக்களின் வீடுகள் மட்டுமல்ல அரசாங்க வைத்தியசாலை கூட இருந்த அடையாளமே தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அப்போது சம்பூரில் நிலை கொண்டிருந்த 222 அல்லை – கந்தளாய் பிரிகேட்டின் கட்டளைத் தளபதியாகிய லெப்டினன்ட கேர்ணல் சரத் விஜேசிங்க சம்பூர்ப்பிரதேசத்தில் பல பொலிஸ் காவல் நிலைகள்; அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் இவை யாவும் காலப்போக்கில் முழு அளவில் தொழிற்படும் பொலிஸ் நிலையமாகத் தரமுயர்த்தப்படும் என்றும் இவை விரைவில் ஆரம்பமாகவிருக்கும் மக்களின் மீள்குடியேற்றத்திற்கான முன்னோடி நடவடிக்கைகள் எனத் தன்னிடம் கூறியதாகவும் தரிஸ பஸ்தியன் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஐந்து வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலும் மக்களின் மீள்குடியேற்றம் மட்டும் இன்னும் இடம்பெறவில்லை.

அனல் மின் நிலையம், பாதுகாப்பு வலயம், மற்றும் பாரக்கைத்தொழில் வலயம்

சம்பூர் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பின்னர் சம்பூரில் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இச்செய்தி வெளியாகி சிறிது காலத்தில் சம்பூர் பிரதேசம் முழுவதும் மக்கள் உட்செல்லமுடியாத உயர் பாதுகாப்பு வலயம் என வர்த்மானி அறிவித்தலை அரசு வெளியிட்டது.

அண்மையில் உயர்பாதுகாப்பு வலயம் என்பது நாட்டில் எங்கும் இல்லை என அரசு அறிவித்த சிலநாட்களில் சம்பூர் பாரக் கைத்தொழில் வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பூரை மக்களுக்கு ஒருபோதும் கையளிப்பதில்லை என்னும் முடிவில் அரசாங்கம் உறுதியாக இருப்பதுபோல் தோன்றுகின்றது.

உண்மையில் சம்பூர் விடயத்தில் நடப்பது என்ன? 2009 ஆகஸ்ட் 30 ஆந்திகதி ராவய சிங்கள பத்திரிகையில் தனுஜ பத்திரன அவர்கள் இந்தியாவின் உதவியுடன் அனல் மின்நிலையம் அமைப்பதற்காக சம்பூரில் 500 ஏக்கர் பரப்பளவான பிரதேசத்தில் நிர்மாணிக்கப்ட்டிருந்த சுமார் 500 வீடுகளை அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வித அறிவித்தல்களுமின்றி அவர்களுடைய எழுத்து மூலமான எவ்வித அனுமதியும் பெறாமல் இலங்கை அரசாங்கம் தரைமட்டமாக்கியுள்ளது எனவும் அந்த அனல் மின்நிலையம் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்ட சம்பூர் பிரதேசமானது மக்கள் வாழ்வற்ற சூன்யப் பிரதேசமென இந்தியப் பிரதிநிதிகளுக்கு காரணம் காட்டவே அரசாங்கம் இவ்வாறு தமிழ் மக்களின் வாழ்விடத்தை நாசப்படுத்தியுள்ளது எனவும் இது தொடர்பாக மின்சக்தி அமைச்சு அதிகாரிகளை அவர் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த வீடுகள் தமது அமைச்சினால் தரைமட்டமாக்கப்படவில்லை என்றும் அது அரசாங்கத்தின் பிறிதொரு தரப்பினரால் செயப்யப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அபிவிருத்தித் திட்டமொன்னிற்கு நிலக்கையகப்படுத்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் சட்டவிதிமுறைகளை இலங்கை அரசாங்கமே அப்பட்டமாக மீறி சம்பூர் மக்கள் மீது அட்டூழியம் புரிந்துள்ளமை தெளிவாகின்றது.

ஒரு அபிவிருத்தித்திட்டம் செயற்படுத்தப்படும்; போது கடைப்பிடிக்கப்படவேண்டிய எந்த நடைமுறைகளும் சம்பூர் விடயத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை. அபிவிருத்தித்திட்டத்தினால் ஏற்படக்கூடிய செலவு நலனைக் கண்டறியும் ஆய்வு, சூழல் பாதிப்பு ஆய்வு, சமூகப் பாதிப்பு ஆய்வு, என எதுவும் சம்பூர் விடயத்தில் பின்பற்றப்படவில்லை.

அத்துடன் இலங்கை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலக்கையகப்படுத்தல் நடைமுறைகள் எதுவும் இன்றுவரை பின்பற்றப்படவில்லை. ஏன் அரசாங்கம் இன்றுவரை அம்மக்களுடன் இது தொடர்பில் பேசவேயில்லை.

கிழக்கு மாகாண ஆளுனரும் திருமலை மாவட்ட அரசாங்க அதிபரும் இனி மக்கள் அங்கு குடியேற முடியாது எனக்கூறுகின்றனரே தவிர அரசாங்கம் அரசியல் ரீதியாக முறைப்படி அம்மக்களுடன் பேசவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் கூட இப்பிரச்சினையில் ஒரு நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கின்றார்.

சுமார் பத்தாயிரம் ஏக்கர் சதுர பரப்பளவான முறையான உறுதிகளைக் கொண்டுள்ள தனியார் நிலத்தினை அரசாங்கம் சட்டநடைமுறைகளை மீறி கையகப்படுத்த முடியாது என்பதனை சாதாரண அறிவுடையோர் கூட அறிவர்.

மக்களுக்கு மாற்றுக்காணிகளை வழங்குவதற்கு மூதூர்ப் பிரதேசத்தில் சுமார் நூறு ஏக்கர் நெற்காணிகள் கூட இல்லாத நிலையில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிலான நெற்காணிகளுக்கு எவ்வாறு மாற்றுக்காணிகளை வழங்குவது?. சுமார் 2500 ஏக்கர் பரப்பளவிலான நெற்காணிகள் சம்பூர் பிரதேசத்தில் இன்றுவரை செய்கை பண்ணப்படாமல் தரிசு நிலங்களாகக் ஆகிக் கொண்டிருக்கின்றன. வளமாக வாழ்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் எட்டாயிரம்; மக்கள் இன்று ஏதிலிகளாக முகாம்களில் அல்லலுறுகின்றனர்.

இப்பிரதேசத்தில் சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர் ஸ்ரீமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம், முதலிய பாடசாலைகள் தொடர்ந்தும் இயங்கமுடியாத நிலையில் செயலிழந்துள்ளன. சம்பூர் மகாவித்தியாலயத்தில் இலங்கை இராணுவத்தின் முகாமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் பிரசித்தி பெற்ற சம்பூர் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் விநாயகர் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம் (இவ்வாலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது), கூனித்தீவு விநாயகர் ஆலயம், கூனித்தீவு வடபத்திர காளி அம்பாள் ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம் முதலிய கோயில்களும் வருடக்கணக்காக பூசைகள் எதுவுமின்றி சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.

பிரசித்தி பெற்ற சம்பூர் ஸ்ரீபத்திரகாளி அம்பாள் ஆலயம் குண்டுத் தாக்குதல்களால் முற்றாகச் சேதமடைந்துள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய விடயமாகும். சுதந்திர இலங்கையில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுக் காணி, சுமார் எட்டாயிரம் மக்களின் வாழ்வு, ஐந்து பாடசாலைகள், ஏழு கோயில்கள் யாவற்றையும் அழித்து எங்காவது ஒரு அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உரியவர்கள் நாட்டுமக்களுக்கும் உலகிற்கும் வெளிப்படுத்தவேண்டும்.

மௌனம் காத்து இவ்வநியாயத்திற்குத் துணைபுரியும் தமிழ் அரசியல் வாதிகளை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்பதனையும் அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். வளமான இடத்தில் பிறந்து வாழ்ந்தது சம்பூர் மக்கள் செய்த குற்றமா? புலிகளின் கட்டுப்பாடுப்பகுதியில் அவர்கள் வாழ்ந்தது யார் செய்த குற்றம்?

சம்பூர் மக்களின் துயரம், அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தமிழ் அரசியல் வாதிகள்

சம்பூர் பிரதேச மக்கள் 1983 தொடக்கம் 2006 வரைக்கும் யுத்த சூழ்நிலைக்குள் வாழ்ந்த போதும் அவர்கள் ஒருபோதும் இடம்பெயர்ந்திருக்கவில்லை. ஆனால் 2006ல் இடம் பெற்ற வான்தாக்குதலைத் தொடர்ந்து முதன்முதலாக இடம்பெயர்ந்த சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பிரதேச மக்கள் இன்றுவரைக்கும் கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைபறிச்சான் ஆகிய பிரதேங்களில் அமைந்துள்ள அகதிமுகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

அரச அதிகாரிகள் சிலர் அம்மக்களை அணுகி இறால்குழி அல்லது இத்திக்குளம் ஆகிய இடங்களில் குடியேறுமாறு வற்புறுத்தியுள்ளனர். சம்பூர் பிரதேசம் விவசாயம், கால்நடை, தோட்டப்பயிர்ச்செய்கை மற்றும் கடற்றொழில் போன்றவற்றுக்கு மிகவும் பொருத்தமான பிரதேசமாகும். ஆறு அடி ஆழத்தில் நிலக்கீழ் நீரைக் கொண்டுள்ள மிகவும் வளமான பிரதேசமாகும்.

அரச அதிகாரிகள் முன்மொழிந்த இறால்குழி அல்லது இத்திக்குளம் ஆகிய பிரதேசங்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவையாகும். இறால்குழிப் பிரதேசம் மாரி காலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்படும் சேற்று நிலப்பகுதியாகும். இங்கு விவசாயம் செய்வதற்குரிய ஒரு சில நூறு ஏக்கர் நெற்காணிகள் கூட இல்லாத போது ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகளைக் கொண்ட மக்கள் எவ்வாறு அங்கு குடியேறுவது?

இத்திக்குளம் பிரதேசத்தில் நிலத்தடி நீர் 40-50 அடிகளுக்குள் கிடைப்பதே கடினமானதாகும். குடிநீருக்கே அல்லற்படும் அப்பிரதேசத்தில் விவசாயமும் செய்யமுடியாது. கடற்றொழிலும் செய்ய முடியாது. பத்தாயிரம் ஏக்கர் சம்பூர் காணிகளை வேலிபோட்டு அடைந்து வைத்து விட்டு வேலிக்கப்பால் கருங்கற் பாறை நிலங்களிலும் சேற்று நிலங்களிலும் மக்கள் குடியேறலாம் என அரசு எந்த நியாயாதிக்கத்தினடிப்படையில் கூறுகின்றது?

பத்தாயிரம் ஏக்கர் காணிகளை கொண்டிருந்த மக்களுக்கு ஒரு சில நூறு ஏக்கர் காணிகளை மூதுரிரின் எந்தப்பகுதியிலும் பெற முடியாத நிலையில் எந்த நியாயாதிக்கத்தின் படி அரசு மாற்றுக்காணிகள் வழங்கப்படும் எனக் கூறுகின்றது? இலங்கை அரசாங்கத்திற்கு இலங்கையில் எங்காவது சொந்தமாக ஒரு சில நூறு ஏக்கர் நெற்காணிகளாவது உண்டா? அவ்வாறிருக்கையில் 2500 ஏக்கர் நெற்காணிகளை எங்கிருந்து பெற்று சம்பூர் மக்களுக்கு அரசாங்கம் வழங்கப்போகின்றது?.

தற்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச டெயிலி மிரர் பத்திரிகைக்கு 01.11.2007அன்று வழங்கியுள்ள பேட்டியில் சம்பூர் பிரதேசத்திலிருந்து ஒரு தனிநபரேனும் வெளியேற்றப்படவில்லை என்றும் உண்மையில் எல்.ரீ.ரீ.ஈயினர் தங்கள் பாதுகாப்புக்காக சில குடும்பங்களை சம்பூர் பகுதியில் வைத்திருந்தாகக் கூறியுள்ளதுடன் இக்குடும்பங்கள் அப்பிரதேசத்தில் தமது சொத்துரிமைய நிரூபிக்க முடியாது எனவும் அவர்களால் அங்கு ஒரு வீட்டையேனும் காட்ட முடியாது என்றும் கூறியுள்ளார். இது முற்றுமுழுக்க ஆதாரமற்ற கதையாகும்.

சம்பூரில் தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். சம்பூர் மகாவித்தியாலயம் இலங்கை சுதந்திமடைவதற்கு முன்னரேயே ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக இயங்கியது என்பதையும் 1965ம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அப்போதைய மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் மர்கூம் அப்துல் மஜீத் அவர்களின் முன்முயற்சியினால் மூதூர் கிழக்கிலேயே முதன் முதலாக மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டது என்பதனையும் அரசாங்கத்திலுள்ளோர் கல்வியமைச்சின் ஆவணங்களைப் புரட்டிப்பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.

யுத்தம் தொடங்கிய பின் இலங்கை இராணுவத்தினர் பல தடவைகள் சம்பூரில் முகாமிட்டிருந்தனர். 1987-1989 காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினர் முகாமிட்டிருந்தனர். 1990 களின் முதற்பகுதியில் சம்பூரில் முகாமிட்டிருந்த இராணுவத்தினருக்கு கப்டனாக இருந்து தற்போது மேஜர் ஜெனரலாக இருக்கும் பேர்ட்டி பெரேரா அவர்கள் சம்பூர் பிரதேசத்தில் நீண்டகாலம் பணியாற்றியவர். அவர் சம்பூரைப்பற்றி அதிகம் கூறக்கூடியவர். ஆகவே சம்பூரில் மக்கள் வாழவில்லை என அரச தரப்பின் உயர்மட்டம் கூறுவது அடிப்படையற்றதாகும்.

இது இவ்விதமிருக்க தமிழ் அரசியல் வாதிகளின் சம்பூர் தொடர்பான அரசியல் நிலைப்பாடு துரோகத்தனமானதாகும். இந்தியா சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் கதை வெளியானதுடன் தமிழ் அரசியல் வாதிகளின் மௌன விரதம் ஆரம்பமாகியது.

சம்பூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் திருவாளர் சம்பந்தன் அவர்களின் சம்பூர் தொடர்பான நிலைப்பாடு சம்பூர் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. சம்மந்தன் அவர்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்குக் கேட்டு ஜனாதிபதி தோர்தல் காலத்திலும், அடுத்து வந்த பொதுத்தேர்தலில் தனக்கு வாக்குக்கேட்டும் சம்பூர் பிரதேச மக்களை அகதிமுகாம்களில் சென்று சந்தித்தார்.

இந்தியாவுடன் பேசி எப்படியும் மக்களைக் குடியேற்றுவதாக வாக்குறுதியளித்தார். அதன்பின் அம்மக்களை எட்டிக்கூடப்பார்க்காமல் இந்தியாவே கதியென தஞ்சமடைந்து விட்டார். தனக்கு வாக்களித்த மக்களை மிகமுக்கியமான காலத்தில் கைவிட்டு அரசியலில் இருந்து ஒய்வு பெறுவாரேயானால் வரலாற்றுப் பழியில் இருந்து அவர் தப்பமுடியாது.

அவர் தற்போது முதுமையடைந்து விட்டதாகவும் நோய்வாய்ப்பட்டு இந்தியாவில் ஓய்வெடுப்பதாகவும் கதைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறெனில் தேர்தல் பிரச்சாரங்களில் அவர் ஈடுபட்ட போது தனக்கு 80 வயது நெருங்குவதனையும் தான் செயற்படு அரசியலில் ஈடுபட முடியாது என்பதனையும் அவர் அறியாமல் இருந்தாரா?

அவர் மூப்படைவதும் அவர் ஓய்வெடுப்பதும் அவரது சொந்தப் பிரச்சினைகள். அதற்காக அவர் தன்னைத் தெரிவு செய்த மக்களின் தலைவிதியோடு விளையாடலாமா?

தற்போது கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை அவர் தக்கவைத்துக் கொண்டு திருமலை மாவட்டத்தில் செயற்படு அரசியலில் ஈடுபடக்கூடிய ஒருவரை தெரிவு செய்து மக்களின் தேவைகளை அறிந்து பணிசெய்யுமாறு அவரால் பணிக்க முடியாதா? ஏனெனில் அவர் தலைமை தாங்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினர்; இன்று வரை நாடாளுமன்றத்தில் சம்பூர் பிரதேச மக்களின் பிரச்சினை பற்றி தனியாக விவாதித்து ஒரு நியாமான தீர்வினைப் பெற்றுத்தர முன்வரவில்லை. இன்று வரையும் அவர்கள் சம்பூர் மக்களின் பிரச்சினையினை சட்ட ரீதியாகவும் அணுகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவே தமிழர்களுக்கு இனி எல்லாம் எனக்கருதும் இவர்கள் இந்தியாவை முழுமூச்சாக எதிர்த்து அரசியல் நடத்துவதும் இந்தியாவிடம் சரணாகதி அரசியல் நடத்துவதும் தமிழ் மக்களுக்கு ஒரேவிதமான முடிவினையே பெற்றுத்தரும் என்பதை ஏன் உணர மறுக்கின்றார்கள்?http://www.puthinappalakai.com/view.php?20110324103454
கருத்துகள் | | Read More...

சச்சின் உலக சாதனை


ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை படைத்தார் சச்சின் டெண்டுல்கர்.

உலககோப்பை கிரிக்கெட் கால் இறுதி போட்டியில் ஆமதாபாத்தில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சச்சின் தெண்டுல்கர், சேவாக் பேட்டிங் செய்ய களம் இறங்கினர். இந்திய அணி 8.1 ஓவரில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது சேவாக் 15 ரன்களில் அவுட் ஆனார். சச்சின் தெண்டுல்கர் 45 ரன்களை கடந்தபோது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 18 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்தோர் பட்டியலில் சச்சின் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.
கருத்துகள் | | Read More...

மட்டு. காத்தான்குடியில் இரு கட்சிகளிடையே மோதல் - இருவர் படுகாயம்

Penulis : Antony on ஞாயிறு, 13 மார்ச், 2011 | 11:32 AM

ஞாயிறு, 13 மார்ச், 2011


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற இரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தையடுத்து மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தொப்பி சின்னத்தில் சுயேட்சை குழுவாக போட்டியிடும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஆகியவற்றின் ஊர்வலம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரசார ஊர்வலத்தில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் கலந்துகொண்டிருந்த வேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியால் ஊர்வலம் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தின் முன்பாக சென்ற போது அங்கு இரு தரப்பு ஊர்வலங்களும் சந்தித்த போதே இந்த கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஆதரவாளர் ஒருவரும் பொதுமகள் ஒருவரும் படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதுடன் விசாரணை தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் | | Read More...

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள்: அடித்துச் சொல்கின்றது ஹிந்து பத்திரிகை

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இருக்கின்றார்கள் என்பதை புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக ஹிந்து பத்திரிகை அடித்துச் சொல்கின்றது.தற்போதைய நிலையில் தமிழ்நாடு மாநிலத்தில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் குறைந்திருப்பது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்ளும் ஹிந்து பத்திரிகை, ஆயினும் அயல் மாநிலங்களை நோக்கி நோக்கி அவர்கள் நகர்ந்து வருவதாக ஹிந்து பத்திரிகை தெரிவிக்கின்றது.

கேரளாவில் தற்போதைக்கு ஆயிரம் வரையான இலங்கைத் தமிழர்கள் தங்கியிருப்பதாகவும் அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டுகின்றது. அத்துடன் சிறீமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் இலங்கையில் இருந்து அனுப்பப்பட்டவர்களும் அங்கிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

அவ்வாறான நிலையில் தமிழ் நாட்டில் தமது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தற்போது கேரளாவின் வனப்பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதாக இந்தியப் புலனாய்வுத்துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

அதனையொட்டி தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

உருப்படியான விமானங்கள் இல்லையா? - வான்படை அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் கண்டனம்


பயணம் செய்வதற்கு உருப்படியான உலங்குவானூர்திகள் இல்லாது போனால் புதியவற்றை வாங்கும்படி சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சிறிலங்கா வான்படை அதிகாரிகளிடம் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பயணம் மேற்கொள்ளும் உலங்குவானூர்திகள் அடிக்கடி பழுதடைந்து போகின்றன.

இதன் காரணமாகவே, கடந்த வாரம் சிறிலங்கா வான்படை உயர்அதிகாரிகளை அழைத்து சிறிலங்கா அதிபர் தனது சினத்தை வெளிப்படுத்தினார்.

கடந்த வியாழக்கிழமை தேர்தல் பரப்புரைக்காக அவர் மொனராகலவுக்குச் சென்றார். கூட்டம் முடிந்த பின்னர் முக்கிய பிரமுகர்களுக்கான உலங்குவானூர்தியில் ஏறினார்.

அடுத்து அவர் கொழும்பில் நடைபெறும் திருமணம் ஒன்றில் சாட்சிக் கையொப்பமிட வேண்டியிருந்தது.

ஆனால் அவரது உலங்குவானூர்தியை கிளப்ப முடியவில்லை. அது பழுதடைந்து விட்டது.

பின்னர் அவர் பாதுகாப்பு அதிகாரிகள் பயணம் செய்த உலங்குவானூர்தியில் ஏறிக் கொண்டார். அது வீரவில வான்படைத் தளத்தில் அவரைக் கொண்டு சென்று இறக்கி விட்டது.

பின்னர் பாதுகாப்பு அதிகாரிகளை ஏற்றி வரும் வரை சிறிலங்கா அதிபர் வீரவிலவில் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஆனால் சீரற்ற காலநிலையால் பாதுகாப்பு அதிகாரிகளின் உலங்குவானூர்தியும் பறக்க முடியாமல் திரும்பி வந்தது.

பின்னர் அங்கிருந்து வை-12 வானூர்தியில் ஏறி கொழும்புக்கு புறப்பட்டார். வழக்கமாக அது இரத்மலானையில் தரையிறக்கப்படும்.

ஆனால் அன்று வான்படையின் 60வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நடைபெற்றதால் வானூர்தியை கட்டுநாயக்கவுக்கு கொண்டு சென்று தரையிறக்கினார் விமானி.

அங்கிருந்து வேறொரு உலங்குவானூர்தியில் மகிந்த ராஜபக்ச கொழும்பு சென்றார்.

அப்போது மிகவும் தாமதமாகி விட்டது. திருமணத்துக்காக குறிக்கப்பட்ட சுபநேரமும் கடந்து போனது.

இதனால் மகிந்த ராஜபக்ச அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை ஏற்பட்டது.

இதுபோன்று அடிக்கடி நிகழ்வதாலேயே சிறிலங்கா அதிபர் வான்படை உயர் அதிகாரிகளை அழைத்து கடுமையாக சாடியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

அவதூறுச் செய்தி: கலைஞர் டிவிக்கு ஜெயலலிதா நோட்டீஸ்

Penulis : Antony on திங்கள், 7 மார்ச், 2011 | 6:13 AM

திங்கள், 7 மார்ச், 2011


புனேவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலி கானிடம் உள்ள பெருமளவு பணம் தன்னுடையது என அவதூறாக செய்தி வெளியிட்ட கலைஞர் டிவி உள்ளிட்ட 3 ஊடகங்களும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மும்பையைச் சேர்ந்த மாலை நாளிதழ் மிட்-டே, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மற்றும் கலைஞர் டிவி ஆகிய 3 ஊடகங்களுக்கும் ஜெயலலிதா சார்பில் அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நோட்டீஸுக்கு பதிலளிக்கத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜெயலலிதா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

எந்த ஆவணங்களின் அடிப்படையிலும் இல்லாமல் உறுதிப்படுத்தப்படாமல் மிகவும் அற்பத்தனமான இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என ஜெயலலிதாவின் சார்பாக 3 ஊடகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பிய அவரது வழக்கறிஞர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.

கோடிக்கணக்கில் வருமானவரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் ஹசன் அலிகானிடம் உள்ள பெருமளவிலான பணம் பெண் அரசியல்வாதி ஒருவருடையது என்றும், அவர் தென்னிந்தியாவில் முதல்வராக இருந்துள்ளார் என்றும் விசாரணைகள் குறிப்பிடுவதாக பெயர்கூறவிரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என மிட்-டே நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது விஷமத்தனமானது என மனோஜ் பாண்டியன் கூறினார்.

ஹசன் அலிகான் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டவர். வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர்தான் ஜெயலலிதா என மனோஜ் பாண்டியன் கூறினார்.

உறுதிப்படுத்தப்படாமல் உள்நோக்கத்துடன் அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது என மனோஜ் பாண்டியன் அனுப்பிய நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியின்மூலம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட இழப்பு கணக்கிடமுடியாதது. செய்தியை வெளியிட்ட 2 பத்திரிகைகளும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். முதல் பக்கத்தில் அதை வெளியிட வேண்டும். கலைஞர் டிவியும் மன்னிப்பு கேட்டு செய்தி வெளியிட வேண்டும் என நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் கிடைத்தவுடன் அதைச் செய்ய வேண்டும். தவறினால் உரிய சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா சார்பாக மனோஜ் பாண்டியன் அனுப்பியுள்ள நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வடிவேலு

வடிவேலு ஹீரோவாக நடித்த முதல் படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசி. இந்த படத்தில் நடிக்க முதலில் மறுத்தவர் சிம்பு தேவனின் தொடர் முயற்சிக்கு பிறகுதான் நடிக்கவே ஒப்புக் கொண்டார்.

அப்படத்தின் மெகா மெகா வெற்றிக்கு பின் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்துவிட்டார் அவர். அதன்பின் செவன்த் சேனல் நாராயணன் தயாரித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட வடிவேலு முழுக்க கதை விவாதத்தில் நுழைந்து கொண்டார்.
  • தொடர்க »
  • கருத்துகள் | | Read More...

    யாழ். மீசாலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும், மகனும் வெள்ளைவானில் கடத்தல்! தாய் சடலமாக மீட்பு?


    யாழ். தென்மராட்சி பிரதேசத்தின், மீசாலை கிழக்கு பகுதியில் நேற்று தாயொருவரும், மகனும் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவத்தையடுத்து செயலில் இறங்கிய பொலிஸார் சம்பந்தப்பட்ட வெள்ளை வானை மடக்கிப் பிடித்தனர்.இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

    சம்பவத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38 வயதுடைய பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து, மீசாலை கிழக்கிலுள்ள உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார். நேற்று அவர்களது வீட்டுக்கு வேறு ஆட்களுடன் வானொன்றில் வந்த அப் பெண்ணின் கணவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவ் வேளையில் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடவே வாகனத்தில் வந்தவர்கள் மகனையும் தாயையும் இழுத்துச்சென்று வானில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

    கடத்தல்காரர்கள் தம்மை யாரும் அடையாளம் காணாத வகையில் முகத்தை மறைத்திருந்தனர். மேலும் கடத்தலின் போது சம்பவ இடத்தில் நின்ற சிலர் கடத்தல்காரர்களால் சைக்கிள் செயின் மூலம் கடுமையாகத் தாக்கப்பட்டும் உள்ளனர்.

    அயலவர்களின் தகவலையடுத்து பொலிஸாரும், படையினருமாக தேடுதல் நடிவடிக்கையில் இறங்கினர். சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வான் மடக்கிப் பிடிக்கப்பட்டு, வானினுள் இருந்த தந்தையும், வாகனச் சாரதியும் வேறொரு பெண்ணும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

    அதேநேரம், வாகனத்துக்குள் இருந்து சம்பந்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ள போதும், கடத்தப்பட்ட பெண் காணாமற் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் சுயாதீன செய்தி வட்டாரங்கள் எதுவும் இதனை உறுதிசெய்யவில்லை.

    சம்பவம் தொடர்பாக பொலிஸார் தகவல் தருகையில், பரபரப்புக்குரிய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை. இது வெள்ளைவான் கடத்தல் இல்லை. ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளனர்.

    மீசாலை கிழக்கில் தாயும், மகனும் கடத்தப்பட்ட சம்பவம் கடத்தல் அல்ல என மறுத்துள்ள பொலிஸார் குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றிற்குச் சென்ற பொலிஸார் செய்திகளை திரிவுபடுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

    பிந்திய இணைப்பு

    மீசாலை கிழக்கில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட குடும்பப்பெண் சடலமாக மீட்பு?

    யாழ்ப்பாணம் மீசாலை கிழக்குப் பகுதியில் நேற்று வெள்ளை வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட பெண் சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பவரே இவ்வாறு கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.

    இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்

    சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:

    கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்தவர்களை தடிகள் பொல்லுகள்ளால் தாக்கியுமுள்ளனர்.

    அங்கிருந்தவர்கள் கூக்குரலிடவே வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுபவர்கள் பிஸ்டலை பெண்ணின் மகனுடைய தலையில் வைத்து மிரட்டியதோடு அந்தப் பெண்ணையும், 8 வயதுடைய அவருடைய மகனையும் ஆயுத முனையில் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.

    சம்பவத்தையறிந்து உடனடியாக படையினரின் உதவியுடன் செயலில் இறங்கிய பொலிஸார் சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். பிடிக்கப்பட்ட வேளை வானினுள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மீட்கப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட பெண் வானினுள் இருக்கவில்லை. அவ் வேளையில் வானில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், வாகனச் சாரதியும், வேறொரு பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

    பொலிஸார் வாகனத்தை மடக்கிப் பிடித்த வேளை, வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஆயுததாரிகளும் தலைமறைவாகி இருந்தனர். இவர்கள் இருவரையும் தேடி நேற்று மாலை முழுவதும் பொலிஸார் வலை விரித்திருந்தனர். அதே நேரம் காணாமற்போன சாந்தினியைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டிருந்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சாந்தினியை ஒரு அடர்ந்த மரம் நிறைந்த பகுதியில் வானில் இருந்து கணவர் தள்ளி விட்டதாக மகன் கூறியதாகத் தெரியவந்திருந்தது.

    இன்று காலை பெருங்குளம் பகுதியில் பெண் ஒருவருடைய சடலம் காணப்படுவதாகக் தகவல்கள் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
    கருத்துகள் | | Read More...

    நடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி!


    கௌதம் வாசுதேவ் மேனன் வித்யாசமான படம் என்ற பெயரில் ஒரு கொடூரமான கொடுமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். என்ன ஆச்சு மனுஷனுக்கு? அவருக்கு என்ன! வித்யாசம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனா பார்க்கிறது நாம்தான! படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும்! இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம். அதற்காக எதை வேண்டுமானாலும் சினிமாவா எடுக்கலாம்னா, என்ன நியாயம்.

    அவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல! இந்தப் படத்தை பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களோடு ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.


    கதை என்னன்னா... ( அந்தக் கருமத்த வேற சொல்லனுமா... ) தன் அப்பா பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை சிறு வயதிலேயே பார்த்து மன பாதிப்புக்கு ஆளாகிறானாம் வீரா. ஒரு சனியன் புடிச்ச சாவுகிராக்கி தான் இந்த வீரா. இவனைத் தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சூப்பர் ஆண்ட்டி. வாலிப வயசு விளையாடும் போது ஆண்ட்டியிடமே தன் லீலையைக் காண்பித்துவிடுகிறான் அந்த தருதல. ஆண்ட்டிக்கு கல்யாணம் நடக்குது, புருஷனைக் கொன்றுவிடுகிறான். அந்த ஆண்ட்டியை ‘மீனாட்சி அம்மா’ என்று தான் கூப்பிடுகிறான் வீரா. அது அம்மாவின் மேல் இருந்த பாசமாம். என்னடா ரீல் விட்ரீங்க?


    பின்னர் இந்த சொரிநாயின் வேட்டை தொடருது... கொடூரக் கொலைகள், அபத்தமான கற்பழிப்புகள்... பார்க்க முடியாத பல விஷயங்கள்! எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம்! ( கொடும சார் ).


    கடைசியாய் கேடித்தனம் செய்த வீரா சைக்கோ என முடிவாகிறது. சைக்கோக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது படத்தின் கருத்து. குழந்தை எப்படி இந்த பலான வேலைகளை செய்யும்? இந்த விஷயத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்று கடைசியில் அதே போன்ற ஒரு பெண் சைக்கோவை காட்டுகிறார்கள்.


    படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்ததில் சந்தேகமில்லை. ஆனால் மலத்தில் இருக்கிற அரிசியை எப்படி பொருக்கித்திண்ண முடியும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா.


    படத்தில் ஒரே ஒரு ஆறுதல் சமீரா ரெட்டியின் நடிப்பு. அவரும் சில காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் ஓடுகிறார் ஓடுகிறார் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதுக்கு முன்னாடி தியேட்டர விட்டு ஜனங்க ஓடுறாங்க பா!
    கருத்துகள் | | Read More...

    தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 118 போ் புனர்வாழ்வளிக்கப்படவுள்ளனர்


    தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் 118 பேரை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் இதுவரை காலமும் பூசா தடுப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று அவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.

    பிரஸ்தாப சந்தேக நபர்கள் தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்த சட்டமா அதிபர் திணைக்களம் அவர்கள் புனர்வாழ்வுக்குட்படுத்தப் பொருத்தமானவர்கள் என்று இனம் கண்டு அதற்கான பரிந்துரையை நீதிமன்றத்திடம் முன் வைத்திருந்தது.

    அதனைக் கவனத்திற் கொண்ட நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பி வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
    கருத்துகள் | | Read More...

    தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

    Penulis : Antony on ஞாயிறு, 6 மார்ச், 2011 | 3:59 PM

    ஞாயிறு, 6 மார்ச், 2011


    முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?.

    தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஏராளமான சோதனைகளையும் தடைகளையும் கடந்துதான் தனது போராட்டத்தை நடாத்தி வந்தது. ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டத்திலே தனித் தலைமைச் சக்தியாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டு – உறுதி தளராத நோக்கத்துடன் - முழு வீச்சுடன் போராட்டத்தை முன்னெடுத்தது.

    இவ்வமைப்பானது போரியல் ரீதியில் பல இக்கட்டான காலங்களைக் கடந்து வந்துள்ளது. முக்கிய தளபதிகளின் இழப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிலவிய ஆயுத தளபாடப் பற்றாக்குறை, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக் காலம் என்று பல்வேறு காலங்களில் ஏற்பட்ட போரியல் நெருக்கடிகளைக் கடந்து இயக்கம் தன்னைக் காத்துக் கொண்டது.

    விடுதலைப் புலிகள் அமைப்பானது தன்னைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதும், அதனூடாக ஈழப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் என்றளவில் பலவித சவால்களைச் சந்தித்துள்ளது. பல்வேறு காலகட்டத்தில் இயக்கத்துள் பிளவுகள், துரோகங்கள் என்பன நடந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கேயுரிய பாணியில் அந்தச் சவால்களைக் கடந்து இயக்கம் மீண்டு வந்தது.

    இவையெல்லாவற்றையும் விட முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஈழத் தமிழினத்துக்கும் பேரிடியாகவே அமைந்தது. இயக்கம் நெருக்கடிகளிலிருந்து மீண்ட பழைய சம்பவங்களை எடுத்துக்காட்டி, அவற்றைப்போல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்தும் இயக்கமும் தமிழினமும் மீண்டுவரும் என்று பத்தோடு பதினொன்றாகச் சொல்லிவிட முடியாது.

    முள்ளிவாய்க்கால் பேரழிவென்பது மனித குலத்திலேயே ஒரு பெருந்துயரம். பல நாடுகளின் ஒன்றிணைந்த ஆதரவிலும் வழிநடத்தலிலும் சிறிலங்கா அரசு நடத்தி முடித்த மனித வேட்டையே அது. அப்பெரிய இராணுவ இயந்திரத்தை எதிர்த்து அவ்வளவு காலம் தீரமுடன் சமராடிய விடுதலைப் புலிகளினதும் அவர்களுக்குப் பக்கபலமாக நின்ற மக்களினதும் வீரமும் தியாகமும் அளவிட முடியாது. இருந்தபோதும் அளப்பெரிய இராணுவப் பலத்தால் எல்லாம் நாசமாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் எமது தாயகத்தில் வாழும் மக்களும் பேரிடருக்குள் சிக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

    இந்நிலையில், ஆயிரக்கணக்கான போராளிகள் இன்னமும் காடுகளுள் உறைந்துள்ளார்கள், பல படையணிகள் இன்னமும் செயற்பாட்டிலுள்ளன, கடும் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவாறு பல கதைகளைச் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் அப்பட்டமான கட்டுக்கதைகள் என்பதில் ஐயமில்லை.

    ஆனால், முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டதாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்குண்டு. அவ்வாறு கட்டியெழுப்பி எமது விடுதலைப் போரை வீச்சோடு முன்னெடுக்க வேண்டுமென்ற அவாவுமுண்டு.

    இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதென்பது தெளிவாகத் தெரிகின்றது. தாம் தான் இயக்கம் என்று சொல்லிக்கொண்டு தவறான பேர்வழிகள் சிலர், புலம்பெயர் தமிழரிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றமையை நாம் கண்கூடாகவே பார்க்கின்றோம்.

    முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முன்னர் இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுச் செயற்பட்ட சிலர் குழப்பங்களுக்கு அடிகோலாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தலைவர் வரும்போது கணக்கு காட்டுகின்றோம் அதுவரை எம்மிடம் தமிழ் மக்களோ, போராளிகளோ அல்லது பொறுப்பாளர்களோ கணக்கு கேட்கமுடியாது என்ற வகையில் இவர்கள் செயற்படுவது கவலையானதாகும்.

    தாயகத்தில் தொடர்பில்லாத நிலையில் கூட்டுமுயற்சியற்ற – தனிநபர் வழிகாட்டல்களும் எழுந்தமான முடிவுகளும் எமது போராட்டத்தைச் சீரிய வழியில் முன்னெடுக்கா என்பதே உண்மை.

    இந்நிலையில் ஏற்கனவே பல்வேறு பணி நிமித்தமாக தாயகப்பகுதியை விட்டு வெளியே அனுப்பப்பட்ட போராளிகளோடு, இறுதிவரை களத்தில் நின்று தப்பி வந்த போராளிகளும் இணைந்து தம்மாலான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை ஊகிக்க முடிகின்றது.

    பல்வேறு படையணிகளைச் சேர்ந்த போராளிகளும் துறைசார் பொறுப்பானவர்களும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தலைமைச்செயலகம் என்ற கட்டமைப்மைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவ்வாறானவர்களில் துறைப்பொறுப்பாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவருவதை நாம் காண்கின்றோம்.

    இவர்களின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் தற்கால உலக ஒழுங்குக்கு ஏற்றாற்போல் எமது போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் முதிர்ச்சித் தன்மையோடு அமைந்திருப்பதை ஓர் அவதானிப்பாக நாம் கண்டுகொள்ளலாம். இவர்களின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் புலிகளின் இருப்புப் பற்றிய நம்பிக்கையையும் அவர்களின் வழிநடத்தல் பற்றிய நம்பகத்தன்மையையும் தருகின்றன.

    இயக்கத்தைத் தக்கவைத்தல், கட்டியெழுப்பல் என்பதோடு எமது போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தற்காலத்தில் சாத்தியமான வழிமுறைகளில் முயன்றுவரும் இவர்களின் முயற்சியில் வெற்றிபெற்று எமது போராட்டம் வீச்சோடு பயணிக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழ்மக்களினதும் விருப்பாகும்.

    ஆயிரமாயிரம் வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தாலும், மக்களின் உறுதியான ஆதரவாலும் கட்டி வளர்க்கப்பட்ட இயக்கம் அழிந்துபோகாது என்பதோடு தலைவரினால் வளர்க்கப்பட்டுப் புடம்போடப்பட்ட போராளிகளும் தளபதிகளும் நெறிதவறவோ சோர்ந்து ஒதுங்கிவிடவோ மாட்டார்களென்ற நம்பிக்கையுண்டு.

    தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மட்டுமே எமது மக்களை ஒருகுடையின் கீழ் செயற்பட வைக்க முடியும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டு, சமாந்தரமான தளங்களில் முன்னெடுக்கப்படுகின்ற தமிழீழ மக்களின் விடுதலைக்கான பல்வேறான செயற்றிட்டங்களுக்கும் இயன்ற பங்களிப்பை செய்வதும் உதவிகளைச் செய்வதும் தமிழரின் கடமையுமாகும்.

    ஈழநேசன் ஆசிரியர்பீடம்
    ஈழநேசன்
    கருத்துகள் | | Read More...

    ராஜபக்சவை எதிர்க்கக்கூடாது! புலிகளை ஆதரிக்கக்கூடாது! - செந்தமிழன் சீமானுக்கு கொலை மிரட்டல்

    Penulis : Antony on புதன், 2 மார்ச், 2011 | 11:15 PM

    புதன், 2 மார்ச், 2011


    நாம் தமிழர் கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவரது கட்சியைக் கலைத்துவிடுமாறும் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
    நாம் தமிழர் கட்சியின் முக்கியஸ்தரான சாகுல் ஹமீது என்பவருக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ள கடிதத்திலேயே சீமானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவரது கட்சியைக் கலைத்துவிடுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அண்மையில் படுகொலை செய்யப்பட்ட கட்சியின் முக்கியஸ்தர் முத்துக்குமாரையும் தாமே கொலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மர்ம நபர்கள், சீமான் மற்றும் கட்சியின் ஏனைய முக்கியஸ்தர்களுக்கும் அவ்வாறான கதி ஏற்பட முன் கட்சியைக் கலைத்துவிட்டு, அரசியலை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராவும் செயற்படுதல், மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு எதிராகச் செயற்படுதல் ஆகிய செயற்பாடுகளை விட்டும் தவிர்ந்து கொள்ளுமாறும் கடிதம் மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்த கடிதம் மற்றும் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.

    சீமானுக்கு கொலை மிரட்டல்: கமிஷனரிடம் புகார்

    நாம் தமிழர் கட்சித் சீமானுக்கும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    கமிஷனரிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், 'தமிழ் முழக்கம் வெல்லும்' இதழின் ஆசிரியருமான சாகுல் ஹமீது அளித்த புகார் மனுவில், " புதுச்சேரியிலிருந்து ராம்கோபால் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் செவ்வாய்க்கிழமை சூளைமேடு கில் நகரில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு வந்தது.

    அதில், சீமானை மிரட்டி பின்வரும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. நான் உங்கள் கட்சியின் புதுக்கோட்டை உறுப்பினராக இருந்த முத்துக்குமாரைக் கொன்றவன். என் கட்டளைகளை ஏற்று நீங்கள் நடக்க வேண்டும். விடுதலைப் புலிகளை நீங்கள் ஆதரிக்கக் கூடாது. ராஜபட்சேவை எதிர்க்கக் கூடாது. மத்திய, மாநில அரசுகளை ஆதரிக்க வேண்டும். புதுக்கோட்டையில் புரட்சி செய்யக் கூடாது. மீறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். மேலும் பலருக்கு அஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும் என்பன உள்ளிட்ட மிரட்டல் வாசகங்கள் அக்கடிதத்தில் எழுதப்பட்டுள்ளன.

    நாம் தமிழர் கட்சியினரின் செயல்பாடுகளை முடக்கும் வகையில் இந்த மிரட்டல் கடிதம் விடுக்கப்பட்டுள்ளது. எனவேஇ இந்தக் கடிதம் குறித்து விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
    கருத்துகள் | | Read More...

    அரசுக்கு ஆமாம் சாமி போடும் தமிழ்க்கட்சி ஒன்றை உருவாக்குவதே அரசின் திட்டம்! - சுரேஷ் எம்.பி. சாடல்

    புலம்பெயர் தமிழர்களுள் ஒரு பிரிவினரையும், இங்கு அரசுக்கு ஆமாம் சாமி போடும் ஒரு பிரிவினரையும் உள்ளடக்கிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையில் அரச தரப்பு அதிதீவிரமாக ஈடுபட்டுள்ளது.வடக்கில் செல்வாக்கிழந்து வரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும், அதேநேரம் மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் இதன்மூலம் இல்லாமல் செய்துவிடவேண்டும் என்பதே அரசின் நோக்கம். இப்படிச் சாடுகிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன்.

    கொழும்பில் உதயன் செய்தியாளரிடம் சுரேஷ் பிறேமச்சந்திரன் மேலும் கூறியதாவது:

    யுத்தம் முடிந்துவிட்டது, சமாதானத்தை ஏற்படுத்திவிட்டோம், வடக்கு, கிழக்கில் மக்களை மீள்குடியேற்றிவிட்டோம் என்று அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் இப்பொழுது உண்மைகள் வெளிப்பட ஆரம்பித்துவிட்டன.

    இந்த உண்மைகளை மூடி மறைக்க வடக்கில் அரசசார்பு அமைப்பு ஒன்று இல்லை. அரசுக்குக் காவடி தூக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவதை புலனாய்வுத் தரப்பினர் அரசுக்கு தெளிவுபடுத்தி உள்ளனர்.

    அதேவேளை, ஆயிரம் அடக்குமுறைகள் இருந்தாலும் மக்களின் உள்ளார்த்தமான ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே உண்டு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

    இனிமேலும் டக்ளஸ் தேவானந்தாவை நம்பி இருப்பதில் நன்மை ஏதும் ஏற்படப்போவதில்லை என்பதை அரச தரப்பினரும் தெரிந்துகொண்டனர்.

    இதற்கு மாற்று உபாயமாகவே புதிய கட்சி ஒன்றை வட பகுதியினரைக் கொண்டே உருவாக்கும் சதியில் அரசு இறங்கியுள்ளது. இதற்கு துரும்புச்சீட்டாக கே.பியை அரசு பயன்படுத்துகின்றது.

    கே.பி. சர்வதேச மட்டத்தில் தேடப்படும் ஒரு கிரிமினல். ஆயுதக் கடத்தல்காரர். வெளி உலகில் நடமாட முடியாத இவருக்கு அரசு அடைக்கலம் கொடுத்து அவரிடம் இருந்து தகவல்களையும் பெறுகின்றது.

    சர்வதேச மட்டத்தில் புலிகளின் அமைப்புகள் எங்கு எங்குள்ளன, அவற்றின் சொத்துகள் எந்தப் பெயரில் இருக்கின்றன, புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் யார், அதிருப்தியாளர்கள் யார், எந்த எந்த நாடுகளில் அவர்கள் இருக்கின்றனர், அவர்களுடன் எப்படி தொடர்புகளை ஏற்படுத்துவது என்ற விவரங்களை கே.பியிடமிருந்து பெறும் அரச தரப்பினர் புலம்பெயர்வாழ் தமிழர் அமைப்பை உடைக்கும் வகையில் அங்குள்ள சில அதிருப்தியாளர்களை வலை வீசி பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

    அதேபோன்று வடக்கிலும், சிவிலியன்கள் மத்தியில் இருந்தும் சில பிரமுகர்களையும் இணைத்து புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கவும், அந்த அமைப்பின் மூலம் வடக்கில் பிரச்சினைகளே இல்லை என்று கூறவைக்கவும் அரசு திட்டமிடுகிறது.

    சர்வதேச நெருக்கடிகளையும், கேள்விகளையும் சமாளிக்க முடியாத அரசதரப்பு நெருப்பின்மேல் பஞ்சைப் போட்டு மூடி விடலாம் என்று நினைக்கிறது. என்றார் சுரேஷ்.
    கருத்துகள் | | Read More...

    ஈரானிய ஜனாதிபதியின் கார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு ஏலம்

    Penulis : Antony on செவ்வாய், 1 மார்ச், 2011 | 11:11 PM

    செவ்வாய், 1 மார்ச், 2011

    ஈரானிய ஜனாதிபதி அஹமட் நிஜாட்டின் கார் சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

    இத் தொகையானது குறைந்த வருமானம் பெறும் மற்றும் ஊனமுற்ற பெண்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்படவுள்ளது.

    சுமார் 25 பில்லியன் ரியால்களுக்கு இக்காரை வாங்கிய நிறுவனமானது அதன் பெயரை அறிவிக்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    சுமார் 8 நாடுகள் இந்த ஏலத்தில் பங்கு பற்றியிருந்தன.

    வெள்ளை நிற போர்ஜோ 504 ரக காரானது 1977 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகும்.

    இக்காரானது அஹமட் நிஜாட் ஈரானிய நகரபிதாவாக இருந்த கலத்தில் அவரால் உபயோகிக்கப்பட்டதாகும்.
    கருத்துகள் | | Read More...

    நடுநிசி நாய்கள் - ஷ்ஷபா தாங்க முடியலடா சாமி!


    கௌதம் வாசுதேவ் மேனன் வித்யாசமான படம் என்ற பெயரில் ஒரு கொடூரமான கொடுமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். என்ன ஆச்சு மனுஷனுக்கு? அவருக்கு என்ன! வித்யாசம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனா பார்க்கிறது நாம்தான! படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும்! இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம். அதற்காக எதை வேண்டுமானாலும் சினிமாவா எடுக்கலாம்னா, என்ன நியாயம்.


    அவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல! இந்தப் படத்தை பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களோடு ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.


    கதை என்னன்னா... ( அந்தக் கருமத்த வேற சொல்லனுமா... ) தன் அப்பா பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை சிறு வயதிலேயே பார்த்து மன பாதிப்புக்கு ஆளாகிறானாம் வீரா. ஒரு சனியன் புடிச்ச சாவுகிராக்கி தான் இந்த வீரா. இவனைத் தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சூப்பர் ஆண்ட்டி. வாலிப வயசு விளையாடும் போது ஆண்ட்டியிடமே தன் லீலையைக் காண்பித்துவிடுகிறான் அந்த தருதல. ஆண்ட்டிக்கு கல்யாணம் நடக்குது, புருஷனைக் கொன்றுவிடுகிறான். அந்த ஆண்ட்டியை ‘மீனாட்சி அம்மா’ என்று தான் கூப்பிடுகிறான் வீரா. அது அம்மாவின் மேல் இருந்த பாசமாம். என்னடா ரீல் விட்ரீங்க?


    பின்னர் இந்த சொரிநாயின் வேட்டை தொடருது... கொடூரக் கொலைகள், அபத்தமான கற்பழிப்புகள்... பார்க்க முடியாத பல விஷயங்கள்! எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம்! ( கொடும சார் ).


    கடைசியாய் கேடித்தனம் செய்த வீரா சைக்கோ என முடிவாகிறது. சைக்கோக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது படத்தின் கருத்து. குழந்தை எப்படி இந்த பலான வேலைகளை செய்யும்? இந்த விஷயத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்று கடைசியில் அதே போன்ற ஒரு பெண் சைக்கோவை காட்டுகிறார்கள்.


    படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்ததில் சந்தேகமில்லை. ஆனால் மலத்தில் இருக்கிற அரிசியை எப்படி பொருக்கித்திண்ண முடியும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா.


    படத்தில் ஒரே ஒரு ஆறுதல் சமீரா ரெட்டியின் நடிப்பு. அவரும் சில காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் ஓடுகிறார் ஓடுகிறார் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதுக்கு முன்னாடி தியேட்டர விட்டு ஜனங்க ஓடுறாங்க பா!
    கருத்துகள் | | Read More...

    சர்வதேச விசாரணைக் குழு முன்னிலையில் இலங்கை இழுக்கப்படலாம்: அமெரிக்கா


    தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொலை செய்தமைக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் இழுக்கப்படும் ஆபத்தை இலங்கை எதிர்நோக்குவதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
    இலங்கையைப் பொறுத்தளவில் வெளி விசாரணையொன்றைவிட, சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தர நியமங்களுக்கு அமைவாக சொந்த விசாரணையொன்றை நடத்துவது சிறந்த தேர்வாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

    இவ்விடயத்தில் சர்வதேச தர நியமங்களை அடைவதற்கு இலங்கை விரும்பாவிட்டால் இவ்விவகாரத்தை ஆராய்வதற்கு சர்வதேச ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான அழுத்தம் ஏற்படலாம் என்பதை கூறுவது முக்கியமானது என அவர் கூறியுள்ளார்.
    கருத்துகள் (1) | | Read More...

    புலிகளுக்கெதிரான முக்கிய விமானத்தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்


    இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளுக்கெதிரான முக்கிய தாக்குதல்களை மேற்கொண்ட விமானியே இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் கொல்லப்பட்டுள்ளதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கொல்லப்பட்ட விமானியின் மரண விசாரணைகள் இன்று அத்தனகல்லை மேலதிக மாஜிஸ்திரேட் ருவன் பதிரண முன்னிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் நடைபெற்றபோதே விமானப்படையினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

    நான்காம் கட்ட ஈழப் போரில் முக்கிய பல தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் இன்று விபத்தில் கொல்லப்பட்ட மொனாஷ் பெரேரா முக்கிய பங்காற்றியவர். அதன் காரணமாகவே விமானப்படையின் அறுபதாம் ஆண்டு நிறைவுக் கண்காட்சியில் அவருக்க முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது.

    இன்றைய விபத்தின் போது அவரது இருக்கை தன்னியக்க முறையில் விமானத்திலிருந்து வெளியே தூக்கியெறியப்பட்டிருந்த போதிலும், விமானத்தின் சிறகொன்றில் சிக்கிக்கொண்டதால் விரியாமற் போனதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கொல்லப்பட்ட மொனாஷ் பெரேராவின் சடலத்தின் தலை மட்டும் தென்னை மரமொன்றின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடலின் ஏனைய பாகங்கள் தீயில் கருகியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

    அவரது பரசூட் விரியாத நிலையில் அருகிலிருந்த அன்னாசித் தோட்டம் ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.



    கருத்துகள் | | Read More...
     
    Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
    Copyright © 2011. welvom . All Rights Reserved.
    Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger