News Update :

21ம் நூற்றாண்டின் பேரவலம்

Penulis : Antony on ஞாயிறு, 27 செப்டம்பர், 2009 | 1:43 PM

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009


21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலம் இலங்கையில் இடம்பெற்று வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். யுத்தம் நிறைவடைந்து நான்கு மாதங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையிலும் பெருந் தொகையான அப்பாவி பொதுமக்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகள் இயங்கிய பிரதேசத்தில் பிறந்த ஒரே குற்றத்திற்காக அகதிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் அடக்குமுறைகளினால் அவதியுற்றதாகவும், தற்போது அரசாங்கத்தின் தடுப்பு முகாம்களில் அவதியுறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.புலிகளிடமிருந்து விடுதலைப் பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கிய சொந்த அரசாங்கத்திடமே மக்கள் கொடுமைகளை எதிர்நோக்கி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.அகதி முகாம்களிலிருந்து சுமார் 10000 பேர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எங்களை வீடுகளுக்குச் செல்ல அனுமதியுங்கள் என்பதே அகதிகளின் முதன்மைக் கோரிக்கையாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்பதனை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வகட்சி பாராளுமன்றக் குழு ஒன்றின் கண்காணிப்பின் கீழ் உடனடியாக மீள் குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அதிக எண்ணிக்கையிலான மக்கள் கடந்த காலங்களில் நிலக்கண்ணி வெடிகளுடன் வாழ்ந்து வந்துள்ளதாகவும், அவ்வாறு நிகலக்கண்ணி வெடிகளினால் பாதிப்பு ஏற்படும் என்றால் அகதிகள் சொந்தங்களுடன் செல்வதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தகவல் : Antony
கருத்துகள் | | Read More...

தமிழர்கள் கடத்தல் தொடர்கிறது


சவூதி அரேபியாவில் கடந்த ஆறு வருடங்களாகப் பணியாற்றியபின் நாடு திரும்பிய தமிழ் இளைஞரொருவர் காணாமல் போயுளார். இது குறித்து அவரது உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புனித ஆசீர்வாதப்பர் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகாலிங்கம் பிரசாத் என்பவரே காணாமல் போயுள்ளார். இது குறித்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமும் கட்டுநாயக்க விமான நிலைய காவற்துறையினரிடமும் முறையிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் கூறியுள்ளனர். கடந்த 16 ஆம் திகதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்ட பிரசாத் 17 ஆம் திகதி காலை 8.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார். இதனை விமான நிலைய தகவல் பிரிவினரும் காவற்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் இவர்; தனது இருப்பிடத்துக்கு திரும்பாததனையடுத்தே அவர்களது உறவினர்கள் உரிய முறையில் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
தகவல் : Antony
கருத்துகள் | | Read More...

முகாமில் வெளிநாட்டுப் பிரஜைகள்


இலங்கையின் வடபகுதி அகதி முகாம்களில் சில வெளிநாட்டு பிரச்ஜைகள் சிக்கியிருப்பதாக பிரபல ஆங்கில வார இறுதிப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 12 வெளிநாட்டுப் பிரஜைகள் இவ்வாறு அகதி முகாம்களில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.இவர்களில் அநேகமானவர்கள் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட வெளிநாட்டுப் பிரஜைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானியர்கள், டச்சுக்காரர்கள், அவுஸ்திரேலியர்கள், ஜெர்மனியர்கள், இந்தியர்கள், கனேடியர் மற்றும் நோர்வேப் பிரஜைகள் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர்களை விடுவிப்பது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் ஏற்கனவே பேச்சுவார்த்கைதளை ஆரம்பித்துள்ளன.பாகுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கினால் மட்டுமே வெளிநாட்டு பிரஜைகளை விடுதலை செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.தமிழீழ விடுதலைப்புலிகளுடன் குறித்த நபர்கள் தொடர்புகளைப் பேணினார்களா என்பது குறித்து ஆராயப்பட்டதன் பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. அகதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பிரஜைகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை என தூதரகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

தகவல் : Antony
கருத்துகள் | | Read More...

விலங்குகளைப் போல தமிழர்கள்


விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல, அப்பாவித் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் வனவிலங்குக் கொட்டகைகளில் அடைத்து வைத்துள்ளனர். என்று அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் எலின் சந்தர் வேதனை தெரிவித்தார்.ஒரு மாதத்தில் வரப்போகும், வடகிழக்கு பருவமழையின் கடுமையான பாதிப்பிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்,'' என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.டில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.இந்திய இஸ்லாமிய மைய அரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் அமெரிக்காவைச் சேர்ந்த, டாக்டர் எலின் சந்தர் உரையாற்றுவதாக இருந்தது.இவருக்கு விஸா மறுக்கப்பட்டதையடுத்து, அமெரிக்காவில் இருந்தே நேரடியாக "டெலிகொன்பரன்சிங்' மூலம் அரங்கில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது: சுனாமியின்போது இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் அன்பை நேரடியாகக் கண்டேன். அப்படிப்பட்டவர்கள், இன்று உடைமைகள் இழந்து தவிக்கின்றனர். முகாம்கள் என்ற பெயரில், முள்வேலிக்குள் அடைத்து வைத்துள்ள அவலம் நடந்துள்ளது. தண்ணீர் வசதி அந்த முகாமில் இல்லை. மூன்றரை இலட்சம் பேருக்கு வெறும் ஐந்நூறு கழிவறைகள்தான் உள்ளன.முகாமைச் சுற்றிலும் மனிதக் கழிவுகள் கிடக்கின்றன. சுகாதாரமற்ற சூழ்நிலையால் சிக்குன்குன்யா, மலேயா போன்ற நோய்களுக்கு பலரும் பலியாகின்றனர். திறந்தவெளி பிரசவங்கள் நடக்கின்றன.தொண்டு நிறுவனங்கள் உதவ வந்தும் அதை அரசு தடுக்கின்றது. உணவு, மருந்துத் தட்டுப்பாடு உள்ளது. வெறும் 50 டாக்டர்கள்தான் உள்ளனர். உறவினர்களை பார்க்க அனுமதியில்லை. விலங்குகளை அடைத்து வைத்துள்ளது போல இவர்கள் ஒரு வனவிலங்கு கொட்டகைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.இன்னும் ஒரு மாதத்தில், வடகிழக்கு பருவமழை பெய்யும். காம் இருக்கும் வன்னிப் பகுதி மிகவும் தாழ்வான பகுதி. எனவே மழைநீர் பெயஅளவில் தேங்கும் வாய்ப்புள்ளது.அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய மீடியாக்களுக்கும் அனுமதியில்லை. வடக்கு பகுதி,ல்லைத்தீவு போன்றவற்றில் கண்ணிவெடியெல்லாம் கிடையாது. பொஸ்னியாவில் செர்பியர்கள் தாக்கப்பட்டபோது, சிலமணி நேரங்களில் ஐக்கியநாடுகள் சபை செயல்பட்டு அவர்களைக் காப்பாற்றியது.ஆனால் தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது, யாருமே கண்டுகொள்ளவில்லை. ஐ.நா.வை செயல்படவிடாமல் ஒருசில நாடுகள் செய்துவிட்டன. இவ் விஷயத்தில், இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும்.இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சகம் தண்டனை வழங்க வேண்டும்.இவ்வாறு எலின் சந்தர் பேசினார்.இதே கூட்டத்தில் பேசிய ம.தி..க., பொதுச்செயலர் வைகோ, "இந்தியாதான் அனைத்துத் துயரங்களுக்கும் பொறுப்பு. மத்திய அரசு அளித்த 500 கோடி ரூபா மற்றும் உதவிப் பொருட்கள் என்ன ஆனது என்பதே தெயவில்லை' என்றார். ம.நடராஜன் மற்றும் பலர் உரையாற்றினர்.
தகவல் : Antony
கருத்துகள் | | Read More...

கைகோர்த்துப் போராடுவோம்..


சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது.வன்னி மக்களைச் சிறுகச் சிறுக முற்றாக அழித்தெழிக்கும் சிங்கள அரசின் திட்டத்திற்கு, மேற்குலக நாடுகளும் பல மனித உரிமைகள் அமைப்புக்களும் தெரிவித்துவரும் கண்டனங்களை சிங்கள அரசு செவி சாய்ப்பதாகத் தெரியவில்லை. இந்த நாடுகளின், அமைப்புக்களின் அழுத்தங்களைச் சமாளித்தவாறே தனது கொடூரங்களை நிறைவேற்றி வருகின்றது.வன்னி வதை முகாம்களுக்குள் வைத்திருந்த மூன்று இலட்சம் மக்களில் முப்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது, என்பதே இதுவரையில் தெரியப்படுத்தப்படவில்லை. அது குறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவும் தெரியவில்லை. இதுவரை தெரிய வந்த கணக்குப்படி 5,000 ற்கும் குறைவானவர்களாலேயே இராணுவத்தினருக்கும், ஒட்டுக் குழுவினருக்கும் இலஞ்சம் வழங்கித் தப்பிச் செல்ல முடிந்திருக்கிறது. விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்பவர்களில் பெரும்பாலானோர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்பி அழைத்து வரப்படுவதில்லை. ஏற்கனவே இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் என்று சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட பத்தாயிரம் என்ற கணக்கு தற்போது பதின்மூவாயிரமாக அதிகரித்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த மூவாயிரம் விடுதலைப் புலிகளையும், முகாமிலிருந்து தப்பிச் சென்ற சுமார் ஐயாயிரம் தமிழர்களையும் சேர்த்தாலும் முகாமில் இல்லை என்று அறிவிக்கப்பட்ட மேலும் 22,000 பேர் இலங்கையின் பல்வேறு சித்திரவதைக் கூடங்களுக்குள் அடைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது இலங்கை அரசின் உத்தரவின்பேரில் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அண்மையில் பிரித்தானிய 'சனல் 4' தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட படுகொலைக் காட்சிகளில் சிங்கள தேசத்தின் ஒட்டு மொத்த காட்டுமிராண்டித்தனமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்திருக்கும் தமிழர்களை விடுவித்து அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்ற பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அழுத்தங்களைச் சமாளிக்க சிங்கள தேசம் மேலும் பல தடுப்பு முகாம்களை உருவாக்கி வருகின்றது. வவுனியா முகாம்களில் இருந்து விடுவிக்கிறோம் என்ற விளம்பரத்தோடு, அங்கிருந்த மக்கள் வடக்கிற்கும், கிழக்கிற்கும் அழைத்துச் செல்லப்பட்டு, 'இடைத்தங்கல் முகாம்' என்ற பெயரில் அமைக்கப்பட்ட பல்வேறு தடை முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு வருகின்றார்கள். சிலர் அங்கிருந்து அழைத்துச் சென்று அவர்களுக்குப் பரிச்சயம் அல்லாத அரச ஒட்டுக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளில் கட்டாயமாகக் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். வன்னியில் தமிழ் மக்களது மீள் குடியேற்றம் என்பது திட்டமிட்ட வகையில் தவிர்க்கப்பட்டு, வன்னி மக்கள் நிரந்தர அகதிகளாக்கப்பட்டு, வேறு பிரதேசங்களில் கட்டாய குடியேற்றம் செய்யப்படுவது மிகவும் அபாயகரமான விடயமாகும். 1995-ம் ஆண்டில் சிங்களப் படைகள் யாழ். குடாநாட்டை ஆக்கிரமிக்கும் யுத்தத்தை மேற்கொண்டபோது, அங்கிருந்த ஐந்து இலட்ச் மக்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்த போதும் அவர்கள் பட்டினி தெரியாத அளவுக்கு வன்னி மண் அவர்களுக்கு வாழ்வு வழங்கியது. தற்போது, சிங்கள அரசின் கொடூர யுத்தத்தினால் இடம்பெயர்ந்த வன்னி மக்கள் திட்டமிட்டு அவர்கள் நிலங்களிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். வன்னி மண் சிங்கள தேசத்தினால் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளதை நாம் மறந்துவிட முடியாது. ஏற்கனவே, சிங்கள அரசுகள் திட்டமிட்டு எமது வளம் கொழிக்கும் பூமிகளை அபகரித்து வந்துள்ளது. கிழக்கே தமிழர்களின் பூர்வீக விவசாய நிலங்களும், கரையோரக் கிராமங்களும் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் 'மணலாறு' என்ற வளமான பகுதி சிங்களக் குடியேற்றங்களால் அபகரிக்கப்பட்டு, 'வெலியோய' என்ற முற்றுமுழுதான சிங்களப் பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. 'மகாவலி கங்கை' திட்டத்தால் பல்வேறு தமிழ்க் கிராமங்கள் சிங்களவர்களின் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு, அங்கு பூர்வீகமாக வசித்து வந்த தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர். வவுனியாவரை ஊடுருவியுள்ள சிங்கள குடியேற்ற மண் அபகரிப்பு வன்னிவரை விரிவாக்கம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழர்களின் வளமான பூமிகளை வல்வளைப்புச் செய்வதன் ஊடாக, தமிழர்களின் தேசிய சிந்தனையைச் சிதைக்கும் சிங்கள இனவாதிகளின் திட்டங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கிழக்கில் தமிழர்களின் பூர்வீக பூமியான சாம்பூர் தற்போது சிங்கள அரசால் அபகரிக்கப்பட்டு, அங்கே இந்திய அரசின் துணையோடு அனல் மின் நிலையம் உருவாக்கும் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. யாழ். குடாநாட்டில் தமிழர்களின் வளமான நிலங்களும் வீடுகளும் அபகரிக்கப்பட்டு, உயர் பாதுகாப்பு வலையமாக அறிவிக்கப்பட்டு, அங்கே தமிழர்களின் மீள் குடியேற்றம் தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறே, வன்னியும் பல கூறுகளாக்கப்பட்டு, பாரிய பல படை முகாங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அங்கே நிலை கொண்டுள்ள இலட்சத்திற்கும் அதிகமான படையினருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கும் விடுதிகள் அமைக்கப் பாரிய நிலப்பகுதி சிங்கள அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே புத்த கோவில்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமிழர்களுக்குப் பாரிய அழிவுகளை ஏற்படுத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைப் பலிகொண்டதுடன் திருப்திப்படாத ராஜபக்ஷ அரசு, எஞ்சியுள்ள தமிழர்களையும் அவர்களது பூர்வீக நிலங்களிலிருந்தும் அப்புறப்படுத்தி நிரந்தர அகதிகளாக்குவதன் மூலம் அவர்களை அடுத்த வேளை உணவுக்கு மட்டுமே சிந்திக்க வைக்கும் நிலைக்குள் வைத்திருக்கும் சதி முயற்சியில் இறங்கியுள்ளது. வன்னி முகாம்களிலிருந்து எமது மக்களை உடனடியாக விடுவிக்கும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதுடன், அந்த மக்களுக்கான மண்ணை மீட்கும் போராட்டத்தையும் தொடர வேண்டிய கடமை புலம்பெயர் தமிழர்களுக்கு உள்ளது. நாகரியமடையாத, அடைய விரும்பாத காட்டுமிராண்டி இனமாக மேற்குலகால் அடையாளம் காணப்பட்டுள்ள சிங்கள அரசுமீது மேலும் பல அழுத்தங்களைக் கொண்டு வருவதன் மூலமே எஞ்சியுள்ள எமது மக்களையும், எமது மண்ணையும் சிங்கள இனவாதிகளிடமிருந்து மீட்க முடியும். எமது மக்களை மட்டுமல்ல... அவர்களது மண்ணை மட்டுமல்ல... எமது தேசத்தை மீட்கும் போராட்டத்திலும் நாம் தொடர்ந்து செல்வோம்! எமது மக்களையும், எமது மண்ணையும், எமது தேசியத்தையும், எமது தேசியத் தலைவரை நேசிக்கும் தமிழர்களே, களம் நோக்கி வாருங்கள்! கைகோர்த்துப் போராடுவோம்!!
தகவல் : Antony
கருத்துகள் | | Read More...

சர்வதேசம் கைவிட்டது ஏன்..?

Penulis : Antony on வியாழன், 24 செப்டம்பர், 2009 | 2:13 PM

வியாழன், 24 செப்டம்பர், 2009


வன்னியில் கடைசிவரை மக்களுக்கு மருத்துவப் பணி செய்து பிரித்தானியாவிற்கு திரும்பியுள்ள தமிழ் மருத்துவர் தமிழ்வாணி, வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நிகழ்ந்த கொடூரத்தை உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளார். அங்கு மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களையும், இழப்புக்களையும் விவரித்து இலண்டனில் இருந்து வெளிவரும் ‘த கார்டியன்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி இது.
கடைசிவரை வன்னி மக்களை சர்வதேசம் கைவிட்டது ஏன்…? வன்னி மக்கள் செய்த தவறு என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்றபோது, அங்கு பாதுகாப்பு வலயத்தில் மக்கள் பட்ட பேரவலங்களை சர்வதேசம் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தமக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என்று மருத்துவரான தமிழ்வாணி தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியேறி இதுவரை காலமும் வவுனியா அகதி முகாமில் தங்கியிருந்து தற்போது பிரித்தானியாவிற்கு வந்திருக்கும் அவர் ‘த கார்டியன்’ பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் இறுதிக்கட்ட வன்னி யுத்தத்தின்போது தாம் கண்ட, அனுபவித்த அவலங்களை விவரித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்தவை இங்கே…வன்னியில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு வலயத்தில் வாழ்ந்த மக்கள் செய்த தவறு என்ன? அவர்கள் ஏன் இந்த அவலங்களைச் சந்திக்கின்றனர்? சர்வதேச சமூகம் அவர்களைக் கைவிட்டது ஏன்? பாதுகாப்பு வலயம் என அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் ஜனவரிக்குப் பின்னர், எறிகணை மழை பொழிந்தது. வீதிகளில் எங்கு திரும்பினாலும் குருதி வழிந்தோடிக் கொண்டிருந்தது. இறந்தவர் யார்? உயிருடன் இருப்பவர் யார் என அடையாளம் காண்பதற்கு எவரும் இல்லாமையால் உடல்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டன.
மோதல்கள் தீவிரமடைந்த பின்னர் நாளொன்றுக்கு 500 பேருக்கு இரு அறைகளில் வைத்து சிகிச்சையளித்தோம்.மருந்துகளுக்கு பற்றாக்குறை இருந்தன. எனினும், மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். இறுதி இரு வாரங்களில் அனைத்து மருந்துகளுக்கும் பற்றாக்குறை நிலவியது. இரத்தத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. மயக்க மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.ஆறு வயதுச் சிறுவன் ஒருவனின் கையையும் காலையும் அகற்ற வேண்டியிருந்தது. ஆனால் அதற்கான உரிய சாதனங்கள் இல்லை.
இறைச்சி வெட்டும் கத்தி மாத்திரம் இருந்தது. அந்தச் சிறுவனின் காலையும் கையையும் கதறக் கதற அகற்றினோம். எறிகணை மற்றும் குண்டு வீச்சிலிருந்து தப்புவதற்காக மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். ஆனாலும், ஒரு கட்டத்திற்கு அப்பால் அவர்கள் அனைவரும் இனிமேலும் ஓட முடியாது, தாங்கள் அனைவரும் மரணிக்கப்போகிறோம் என்ற நிலைக்கு வந்தனர். நாங்கள் இனி மேலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்தோம்.
எறிகணை மற்றும் குண்டு வீச்சிலிருந்து தப்ப முடியாது, நாங்கள் உயிர்தப்புவோம் என்று நினைக்கவேயில்லை. நான் இறந்து விடுவேன் என நினைத்தேன். ஒருநாள் நான் சத்திரசிகிச்சை நிலையத்திற்குள் இருந்தவேளை, அதற்கு அடுத்த அறை குண்டு வீச்சிற்கு இலக்கானது. சிகிச்சை அளிக்கப்பட்ட பலர் அந்த அறையில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் எறிகணை வீச்சில் மரணித்தனர். சிறீலங்காப் படையினர் மீண்டும் அந்த வைத்தியசாலை மீது தாக்குதலை மேற்கொண்டனர்.
அதன் போது வைத்தியர் ஒருவர் மரணித்தார்.ஒரு நாள் தாயயாருவர் குழந்தை ஒன்றைக் காயமடைந்த நிலையில் கொண்டு வந்தார். தாய்க்கும் பலத்த காயம். அவரது குழந்தை இறந்துவிட்டது. தனது குழந்தை இறந்தது அவருக்குத் தெரியாது. குழந்தை இறந்தது குறித்து வைத்தியர்கள் தாயிடம் எதுவும் சொல்லவில்லை. அதனைச் சொன்னால் அவர் கதறத் தொடங்கி விடுவார். அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போய்விடும். அவரைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக நாங்கள் அவரிடமிருந்து குழந்தையை வாங்கினோம்.
தாய்க்கு சிகிச்சை அளித்த பின்னரே உண்மையைச் சொன்னோம்.தற்போது இதனை சுலபமாகச் சொல்லலாம். ஆனால், அந்த நிமிடம் அது மிகவும் வேதனையளிப்பதாக அமைந்தது. தாய் தனது பிள்ளை உறங்குவதாகவே நினைத்துக் கொண்டிருந்தார். இதுபோல் பல சம்பவங்கள் உள்ளன. தாய் இறந்தது தெரியாமல் குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்த சம்பவங்களும் உள்ளன. மோதல் நெருங்கி வந்துகொண்டிருந்தது. கிடைத்ததை சாப்பிட்டோம். எப்போதும் ஓடுவதற்குத் தயாராக இருக்கவேண்டியிருந்தது. நித்திரை கொள்ளமுடியாது.
மே 13ம் திகதி புதுமாத்தளன் வைத்தியசாலை மீண்டும் தாக்குதலுக்குள்ளானது. 50ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எனக்கு அருகில் இருந்த பதுங்குகுழியின் மீது எறிகணை விழுந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். திடீரென மக்கள் கதறியழுவதைக் கேட்டோம். மிக அருகில் ஏதோ நடந்திருக்க வேண்டும் என நினைத்தோம். வெளியில் வந்து பார்த்தபோது எங்கும் இரத்தமயமாகக் காணப்பட்டது. என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
எங்கும் இரத்தமும் உடல்களின் சிதறல்களும் காணப்பட்டன.இறுதி ஐந்து நாள்களில் 20 ஆயிரம் பேர் இறந்திருக்கலாம். இராணுவப் பகுதியை நோக்கிச் சென்ற வேளை எங்கும் மனித உடற் பாகங்களைக் கண்டோம். இறுதிக் குண்டுவீச்சைத் தொடர்ந்து பல ஆயிரக்கணக்கானவர்களுடன் சேர்ந்து இராணுவப் பகுதியை நோக்கி நடக்கத் தொடங்கினோம். ஒரு மணித்தியாலத்துக்குப் பின்னர் இராணுவத்தைக் கண்டோம். அங்கு, எங்கு பார்த்தாலும் உடல்களும் உடற் பாகங்களும் காணப்பட்டன. அதனைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. தாய் ஒருவர் தனது இறந்த குழந்தையுடன் திண்டாடிக்கொண்டிருந்தார்.
சிலர் உடல்களைப் பதுங்கு குழிகளுக்குள் போட்டு மண்ணால் மூடினர். அவ்வேளையில் அது மாத்திரமே அவர்களால் செய்ய முடிந்தது. இவ்வளவு இன்னல்பட்டு அகதிகளாக வந்து வவுனியா செட்டிக்குளம் பகுதியிலுள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டோம். முகாமின் நிலைமை அதிர்ச்சியளிப்பதாகக் காணப்பட்டது. எங்கு சென்றாலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். எதற்கும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. மலசலகூடங்கள் மோசமாக இருந்தன. அதனை என்னால் வர்ணிக்க முடியாது.
எங்கும் நுளம்புகள், கொசுக்கள் என்ற சுகாதாரமற்ற நிலைமை காணப்பட்டது. மக்கள் தமது குடும்பத்தவர்களை இழந்திருந்தனர், குடும்பங்களைப் பிரிந்திருந்தனர். அவர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியிருந்தனர். மக்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். ஆசிரியை ஒருவர் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தார்.முகாமில் இராணுவ புலனாய்வாளர்கள் சுற்றிவந்துகொண்டிருந்தனர். அது திறந்த வெளி சிறைச்சாலை போன்று காணப்பட்டது. நீங்கள் நடமாடலாம்.
ஆனால் சிறைக்குள்ளேயே நடமாடவேண்டும். உங்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. போக முடியாது. எங்கும் இராணுவத்தினரும் சோதனைச் சாவடிகளும் தென்பட்டன. பிரித்தானிய தூதரகம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகத் தொடர்புகொண்ட பின்னர் ‘த கார்டியன்’ பத்திரிகை ஊடாக எனது பெற்றோரும் அழைப்பு விடுத்தனர். இதன் பின்னர் மக்களால் நிரம்பி வழிந்த வலயம் 1இல் இருந்து வலயம் 2க்கு மாற்றப்பட்டேன். வெளிநாட்டவர்களுக்குக் காண்பிப்பதற்காக இது நடந்திருக்கலாம்.
ஐ.நா.செயலாளர் நாயகம் விஜயம் மேற் கொண்டவேளை நான் அங்கேயே இருந்தேன். அவர் வெறுமனே 10 நிமிடங்கள் மாத்திரம் அங்கே நின்றார். அவர் ஏன் முகாமிற்குள் சென்று மக்களுடன் பேசவில்லை? சிறிது நேரத்தைக் கூடச் செலவிடவில்லை. அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்கவில்லை. அவருக்கு அதற்கான பொறுப்பு இருந்தது. அவரிடமிருந்து மக்கள் அதனை எதிர்பார்த்தனர். வெறுமனே 10 நிமிடங்கள் தங்கியிருப்பதற்கு அப்பால் மக்கள் அவரிடமிருந்து அதிகளவு எதிர்பார்த்தனர்.
நான் மூன்று மாதங்களுக்கு மேலாக முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஐந்து தடவை விசாரணை செய்தனர். என்ன செய்தாய்? வைத்தியசாலையில் என்ன செய்தாய்? எனக் கேட்டனர். கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டேன். ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவைச் சந்தித்தேன். அவர் நீங்கள் விடுதலை செய்யப்பட்டு விட்டீர்கள். நிறையச் சந்தித்துவிட்டீர்கள்.
இனி பிரித்தானியா சென்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்றார். நான் உயிருடன் தப்புவேன் என்றோ, முகாமிலிருந்து கூட வெளியே வருவேன் என்றோ எதிர்பார்த்திருக்கவில்லை என்றார் மருத்துவர் தமிழ்வாணி. இதேவேளை, இறுதிக்கட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.
அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக தமிழ்வாணி ஞானகுமார் ‘பிபிசி’க்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

வன்னி ரெக் தலைவர் படுகொலை


வன்னியில் இயங்கிவந்த வன்னி ரெக் நிறுவனம் ஒரு அரசசார்பற்ற நிறுவனமாகப் பதிவுற்று இயங்கிவந்தது. இந் நிலையில் இதன் தலைவர் கதிர்வேல் தயாபரராஜா சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு, சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர், வாரிவளவைச் சொந்த இடமாகக் கொண்டுள்ள தயாபரராஜா, 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் நாள் பிறந்தவர் ஆவார். சிறிலங்காவில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் துறையில் கல்வி கற்று பட்டம் பெற்ற இவர், 'வன்னி ரெக்' நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றி வந்திருக்கின்றார். சிறிலங்கா குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 13 ஆம் நாள், சட்டவிரோதமான முறையில் சுடப்பட்டதாகத் தெரிகின்றது. கடுமையான காயங்களுடன் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட இவர், செப்ரெம்பர் மாதம் 15 ஆம் நாள் மரணமடைந்தார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் | | Read More...

கோத்தபாயவை கைதுசெய்ய கோரிக்கை


அமெரிக்காவுக்கு சென்றுள்ள பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை போர்க் குற்றம் தொடர்பில் உடனடியாக கைதுசெய்யுமாறு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்ய அங்குள்ள தமிழ் அமைப்பொன்று நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ சில தினங்கள் தங்கிருக்கும் நோக்கில், வோசிங்டன் சென்றுள்ளார். கோத்தபாய ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் துபாயில் இருந்து நியூயோர்க் சென்ற விமானத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் பயணித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கிளின்டன் நிதியத்தின் உத்தியோபூர்வ பணிக்காகவும், அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் அமெரிக்க சென்றனர். எனினும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எதற்காக அமெரிக்க சென்றுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதுவர் நேற்று முன்தினம் நடத்திய இராபேசனத்திலும் கோத்தபாய கலந்துகொண்டுள்ளார். எனினும் அவர் இது வரை இலங்கை அரசாங்கம் சார்பிலான உத்தியோபூர்வ பணிகள் எதிலும் ஈடுபடவில்லை. எவ்வாறாயினும் கே.பி என்ற குமரன் பத்மநாதனினால் வெளியிடப்பட்டுள்ள வங்கி கணக்குகள் பற்றித் தேடிப்பார்க்கும் நோக்கில் கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவர் இன்னும் சில தினங்களில் நாடு திரும்புவார் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு விருது


20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு மற்றுமொரு சர்வதேச ஊடக விருது வழங்கப்பட்டுள்ளது. ஊடகவியலளார்களை பாதுகாக்கும் பேரவையினால் திஸ்ஸநாயகம் கௌரவிக்கப்பட்டுள்ளார். சோமாலியா, டுயுனிசியா, அஸர்பய்ஜான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளது ஊடகவியலாளர்களுக்கு 2009ம் ஆண்டுக்கான சர்வதேச ஊடக சுதந்திர விருது வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் வைபவத்தில் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக தங்களது உயிரை பணயமாக வைத்து கருத்துக்களை வெளியிட்ட ஊடகவியலாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்ட இந்த ஊடகவியலாளர்களின் அர்ப்பணிப்பு முன்னுதாரணமாக அமைந்துள்ளதென ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் பேரவையின் தலைவர் போல் ஸ்டிகர் தெரிவித்துள்ளார். அச்சுறுத்தல்கள், சித்திரவதைகள், அடக்குமுறைகள் போன்றவற்றினால் குறித்த ஊடகவியலாளர்களின் கருத்து சுதந்திரத்தை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு உடந்தையாக செயற்பட்ட காரணத்திற்காக ஊடகவியலாளர் திஸ்ஸ நாயகத்திற்கு இருபதாண்டுகால கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

புலிகள் 10 விமானங்கள் கொள்வனவு


விடுதலைப் புலிகளால் கொள்வனவு செய்யப்பட்ட 10 சிலின் ரக விமானங்கள், பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிலங்காவுக்கு எடுத்துவரப்பட்டது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் புலிகள் எரித்திரியாவில் இருந்து இந்த விமானங்களை பாகம் பாகமாகப் பிரித்து அவற்றை கடல்வழியாக இலங்கையின் வடகிழக்கு கரையோரம் கொண்டுசெல்ல முயன்றதாகவும், இருப்பினும் இவ் விமானங்களை தரையிறக்கம் செய்ய முடியாமல் போனதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தவேளையும் இப்படியான ஒரு தரையிறக்க முயற்சிக்கு விடுதலைப் புலிகள் முயன்றதாகத் தெரிவித்த அவர், அக்கப்பலில் ஆயுதங்களும் வந்ததாகத் தெரிவித்துள்ளார். மலேசியாவிலும், இந்தோனேசியாவிலும் பயிற்றுவிக்கப்பட்ட சுமார் 12 விமானிகள் விடுதலைப் புலிகளிடம் தயார் நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கும் அவ் அதிகாரி, இறுதி நேரத்தில் பாரிய தாக்குதல் ஒன்றிற்கு விடுதலைப் புலிகள் தயாராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகள் இப் போர் சற்று நீடிக்கும் எனக் கணக்கிட்டிருந்ததாகவும், இருப்பினும் அது மிக விரைவாக முடிவுக்கு வந்தது எனவும் தெரிவிக்கும் இராணுவ அதிகாரி, கே.பி தேசியதலைவரின் மகன் சாள்ஸ் அன்ரனியுடன் செய்மதித் தொலைபெசியில் உரையாடியதைத் தாம் ஒட்டுக்கேட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அப்படியாயின் விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களையும் இந்திய அரசு ஒட்டுக்கேட்டு இலங்கை அரசிற்கு அத் தகவல்களை வழங்கியுள்ளமையும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இறுதிப் போர்க்காலங்களில் தானியங்கித் துப்பாக்கிகள் குறைவாக இருப்பதால் அதனை விநியோகிக்குமாறு சாள்ஸ் அன்ரனி செய்மதித் தொலைபேசியூடாக கே.பியிடம் கூறியதை தாம் ஒட்டுக்கேட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த இந்திய இராணுவ அதிகாரி கூறியிருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடையமாகும்.
கருத்துகள் | | Read More...

நியூயோர்க்கில் கண்டனப் போராட்டம்

Penulis : Antony on புதன், 23 செப்டம்பர், 2009 | 2:09 PM

புதன், 23 செப்டம்பர், 2009

நேற்றைய தினம் அமெரிக்கா நியூயோர்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா தலைமைச் செயலகம் முன்பாக தமிழர்கள் கண்டன போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பான் கீ மூனின் வருகையை ஒட்டி அங்கு திரண்ட தமிழ் மக்கள் இறுதிப்போரில் 20,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டது ஐ.நா சபை மற்றும் பான் கீ மூனினால் தடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினர். இலங்கை இராணுவத்தினர் கனரக ஆயுதங்களைப் பாவித்தது மற்றும் யுத்தம் முடிவடைந்த பின்னரும் படைச்சேர்ப்பில் ஈடுபட்ட இலங்கை அரசு தனது படைப்பலத்தை 3 லட்சமாக உயர்த்தியதற்கு ஐ.நா ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை எனக் கேள்வியும் எழுப்பினர்.தற்போது அடைத்துவைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களையும் விடுவிக்கக்கோரி அமெரிக்க தமிழர்களால் இப் போராட்டம் முன்னெட்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

குடும்பஸ்தர்மீது காவற்துறை சூடு


தென்மராட்சிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 29 வயதுடைய சின்னராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொடிகாமம் பாலாவிப் பகுதியில் ட்ரக்ரர் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இவர் மீது காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைமந்த நிலையில் மீட்கப்பட்ட சின்னராசா சுதர்சன் கொடிகாமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர் 2 பிள்ளைகளின் தந்தையாவார்.

குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி நீதிமன்றம் மேற்கொள்கின்றது.
கருத்துகள் | | Read More...

போரை நேரில் கண்ட சிவரூபன்


வேறொரு இராணுவக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள். இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட்டத்தினர் மீது கேவலச் சிரிப்புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலாமை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போனவர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக்காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், “பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ’ என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண்ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந்தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள். வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக்குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட “புலிகள்’ என்று கை நீட்டிக் காட்ட இராணுவத்தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனையோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, “”நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்” என்பது. இன்னொன்று “”எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்” என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான். அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள். உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரிசோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே௧8 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது. எங்கு கொண்டுபோகிறார்களோ, என்னவெல்லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக்கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (ஈம்மிக்ரடிஒன்) மற்றும் சுங்கம் (Cஉச்டொம்ச்)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது. இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம்பித்தது. “”புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்”, “”ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்”, “”எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்”, “”எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்” என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள். பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து “சதுரங்கம் 1,2,3 (ஓபெரடிஒன் Cகெcக்மடெ) என பெயரிட்டு நின்றபோது மணலாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. “உயிரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது’ என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக்கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார். சர்வதேசமே, ஐ.நா.சபையே, தமிழுலகே… எப்போது வேண்டுமானாலும் என்னைக் கூப்பிடுங்கள். நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். இன அழித்தலுக்கு சாட்சி சொல்ல வருகிறேன். (சிவரூபன் வருவான்.)
கருத்துகள் | | Read More...

முகாம்கள் மூடப்பட வேண்டும்


சட்டவிரோதமான முறையில் வன்னி மக்களை சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ள வதைமுகாம்களை இழுத்துமூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உலக சமூகத்திற்கு நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திற்கும், G-20 நாடுகளின் தலைவர்களுக்கும் அவசர மனுக்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்துள்ளது.ஏற்கனவே யுத்தத்தாலும், உள்ளக இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ள வன்னி மக்கள் தன்னுரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும், இவர்களின் முழுமையான சுதந்திர வாழ்வை உறுதிசெய்வது உலகத் தலைவர்களின் கடப்பாடு என்றும், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிறட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

மகிந்த அரசு பிடிவாதம் நெதர்லாந்து


நெதர்லாந்தில் “டென் காக்” இலுள்ள வெளிவிவகார அமைச்சகத்திற்கு முன்பாக, சிறீலங்கா அரசால் தடுப்புமுகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை உடன்விடுவிப்பதற்கு உதவுமாறுகோரி கவனயீப்பு போராட்டம் நடாத்தப்பட்டது. இதன்போது நெதர்லாந்துத் தமிழ்அமைப்புக்களின் பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சகத்தில் சிறீலங்காவிற்குப் பொறுப்பான நெதர்லோப் அம்மையாரைச் சந்தித்து நெதர்லாந்தின் பலஇடங்களிலும் சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகளை இவ்அம்மையாரிடம் ஒப்படைத்து, முகாம்மக்களை விடுவிக்கஉதவுமாறு உரையாடினர். இதன்போது கருத்துத்தெரிவித்த அம்மையார், மகிந்தஅரசானது இவ்விடயத்தில் பிடிவாதமாக உள்ளதாகவும் ஆனால், இம்மக்களை விடுவிக்க ஐரோப்பியஒன்றியம் மூலமாக தாங்கள் தொடர்ந்தும் முயற்சிசெய்வதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

நீதியமைச்சரின் கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது: மனோ கணேசன்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் அர்த்தமற்றது என்றும், இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது என்றும் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
பிரதி நீதி அமைச்சரின் குறித்த கூற்றுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறைச்சாலைகளில் இன்று உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் தடுப்புக்காவல் கைதிகள் ஆடுகளையும், கோழிகளையும் திருடிய குற்றங்களுக்காகவோ அல்லது போதைவஸ்து குற்றங்களுக்காகவோ கைதானவர்கள் இல்லை என்பதையும், இந்நாட்டின் பேரினவாதம் ஆரம்பித்து வைத்த யுத்தத்துடன் தொடர்புடைய அரசியல் வன்முறையாளர்கள் அல்லது வன்முறைகளுக்கு உதவியவர்கள் என்ற அடிப்படைகளிலேயே கைதாகி சிறைவாசம் அனுபவிக்கின்றவர்கள் என்பதையும் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி புரிந்துக்கொள்ளவேண்டும்.
1971, 1989 ஆகிய ஆண்டுகளில் மிக மோசமான வன்முறைகளில் ஈடுபட்டு தென்னிலங்கையை எரித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திய ஜேவிபி யினர் இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றார்கள்.
தமிழ் தேசிய போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி வன்முறைகளில் ஈடுபட்ட திருவாளர்கள் டக்ளஸ் தேவானந்தாவும், விநாயக மூர்த்தி முரளிதரனும் இன்று மத்திய அரசாங்கத்திலே கௌரவ அமைச்சர்களாக இருக்கின்றார்கள்.
அதேபோல் கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் போராளி பிள்ளையான் சந்திரகாந்தன் இருக்கின்றார். இவை மகிழ்ச்சிக்குரிய மாற்றங்களாகும்.
இதேபோல் மிகச் சமீபத்தில் விடுதலை புலிகளின் பிரபலஸ்தர்களான தயா மாஸ்டரும், ஜோர்ஜ் மாஸ்டரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். இவையும் மகிழ்ச்சிக்குரிய நடவடிக்கைகளாகும்.
ஆனால் புலிகள் இயக்கத்தின் கீழ்மட்ட உறுப்பினர்களாக இருந்தவர்களும், உறுப்பினர்களுக்கு உடுதுணி மற்றும் உணவு கொடுத்து உதவியவர்களும் இன்று வரையிலும் சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள். ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்விகள் இன்று தமிழ் மக்கள் மனங்களிலும், குறிப்பாக இந்த தமிழ் தடுப்புக்காவல் கைதிகளின் குடும்பத்தவர்கள் மனங்களிலும் கொந்தளித்துக்கொண்டிருக்கின்றன.
அவர்கள் சரணடைந்தார்கள், இவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்ற வாதங்களை அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர்கள் மிலிந்த மொரகொடவும், புத்திரசிகாமணியும் எடுத்துவைப்பது நியாயமாகாது.
ஜேவிபியினருக்கும், புலிகளின் மேல்மட்டத்தினருக்கும் காட்டப்பட்டுள்ள கவனிப்பு அனைத்து அரசியல் வன்முறை கைதிகளுக்கும் காட்டப்படவேண்டும் என்ற எமது கருத்து இன்று நாடுமுழுக்க வாழ்கின்ற தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாகும்.
கொழும்பு, யாழ்ப்பாணம், அநுராதபுரம், மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலும், பூசா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் வடக்கையும், கிழக்கையும், மலையகத்தையும், மேற்கையும் சார்ந்த தமிழர்கள் என்பதை அரசாங்கத்திலுள்ள தமிழ் அமைச்சர்கள் புரிந்துக்கொண்டு அவர்களது உடனடி விடுதலைக்கு வழி ஏற்படுத்தவேண்டும்.
உண்ணாவிரதம் அர்த்தமற்றது எனவும், இவர்களது விடுதலையை ஒரே இரவில் சாத்தியமாக்க முடியாது என்றும் பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி கூறியிருப்பது கண்டனத்திற்குரியதாகும்.
என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ள எழுத்து மூலமான தகவல்களின்படி 18, 16, 14, 13, 11, 09 ஆகிய வருடங்களாக நீண்ட சிறைவாசம் அனுபவித்துவரும் தமிழ் கைதிகள் கணிசமாக இருக்கின்றார்கள்.
18 வருடங்களிலே எத்தனை இரவுகள் இருக்கின்றன என்பதை பிரதி நீதியமைச்சர் புத்திரசிகாமணி எண்ணிப்பார்க்கவேண்டும். சிறைக்கைதிகளை தவிர வெறுமனே சந்தேகத்தின் பெயரிலே கைது செய்யப்பட்டு பூசா முகாமிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள பெருந்தொகை தமிழர்களும் இருக்கின்றார்கள்.
இவர்களுக்குள்ளே ஆண்களும், பெண்களும் இருக்கின்றார்கள். வயோதிபர்களும், நோயாளிகளும் இருக்கின்றார்கள். குழந்தைகளை பிரசவித்த பெண்களும் இருக்கின்றார்கள்.
திருமணமான உடனேயே சிறைப்பிடிக்கப்பட்டு நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இருக்கின்றார்கள். சமூகத்திலே உயர்ந்த அந்தஸ்தைகொண்ட படித்தவர்கள் இருக்கின்றார்கள். இந்து, கத்தோலிக்க மதகுருமார்கள் இருக்கின்றார்கள்.
ஜேவிபியினருக்கும், இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களுக்கும் வழங்கியதைபோல் தமிழ் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள். இது சாத்தியமாகாவிட்டால் தயா மாஸ்டருக்கும், ஜோர்ஜ் மாஸ்டருக்கும் வழங்கியதைபோல் சட்ட ரீதியான பிணை வழங்குங்கள்.
இதுவும் சாத்தியமில்லாவிட்டால் அடையாளங் காணப்பட்டுள்ள புலி போராளிகளுக்கு வழங்கப்படும் புனருத்தாபன வேலைத்திட்டங்களில் அரசியல் வன்முறை கைதிகளையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
மேற்கண்ட மூன்று முறைமைகளின் அடிப்படையில் இவர்களுக்கு சிறைகளிலிருந்தும், தடுப்பு முகாம்களிலிருந்தும் விடுதலையை பெற்றுக்கொடுங்கள்.
அரசாங்கத்திலே அமைச்சர்களாக இருக்கும் தமிழ் அரசியல் வாதிகளிடமிருந்து இந்நாட்டிலே வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்கள் குறைந்தபட்சமாக எதிர்பார்ப்பது இதுதான்.
கருத்துகள் | | Read More...

திறந்தவெளி சிறைச்சாலையை" ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை பிரதிநிதி இன்று சிறீலங்கா வருகிறார்

திறந்தவெளி சிறைச்சாலை" என மனித உரிமை ஆர்வலர்களால் வர்ணிக்கப்படும் சிறீலங்கா அரசின் இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலையை ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை பிரதிநிதி வோல்டர் காலின் இன்று சிறீலங்கா வருகிறார்.
இடம் பெயர்ந்தோர் முகாம்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழர்களை சொந்த ஊர்களுக்கு இடம் பெயர வைக்கும் முயற்சிகள் மிக மிக மந்தமாக நடப்பதாக சமீபத்தில் அங்கு சென்று திரும்பிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லின் போஸ்கோ கூறியிருந்தார்.
இதையடுத்து "இடம் பெயர்ந்தோர்" முகாம்களின் நிலையை ஆய்வு செய்ய ஐ.நா. முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.நா. மனித உரிமைப் பிரிவைச் சேர்ந்த இணைச் செயலாளர் வோல்டர் காலின் சிறீலங்கா விரைகிறார்.
இன்று கொழும்பு வரும் அவர் அதிகாரிகளை சந்தித்துப் பேசுவார் எனவும் பின்னர் "இடம் பெயர்ந்தோர்" முகாம்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்வார் எனவும் அறியப்படுகின்றது.
இதுகுறித்து சிறீலங்காவுக்கான ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் கூறுகையில், "இடம் பெயர்ந்தோர்" முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலையை முழுமையாக ஆய்வு செய்து, நிலைமைகள் குறித்து அவர் ஐ.நா.வுக்கு அறிக்கை சமர்பிப்பார் என்றார். கடந்த ஏப்ரல் மாதமும் காலின் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கையில் போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போதும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தியிருப்பதாக இந்தியப் பிரதமர் கூறினார். தமிழக முதலமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால் இறுதிவரை போர் நிறுத்தம் செய்யப்படவேயில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்திய அரசின் கபட நாடகம் இதன்மூலம் அம்பலமாயிற்று.
இப்போது முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் தமிழர்களை விடுவிக்கவேண்டுமென தமிழக மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடருகிறதே தவிர அம்மக்களுக்கு விடிவு பிறக்கவில்லை. அய்.நா.வின் சார்புச் செயலாளர் லின் பாஸ்கோ கடந்த மாதம் நேரில் சென்று முகாம்களைப் பார்வையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சில ஆயிரம் தமிழர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வெவ்வேறு இடங்களில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தியும் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது, இந்தியா முன்னின்று அந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்து இராசபக்சே அரசைக் காப்பாற்றியது. அதற்கு கழுவாய்த் தேடும் வகையில் இந்திய அரசு இப்போது அய்.நா. பேரவையில் முகாமில் உள்ள அனைத்து தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் தவறினால் இலங்கைக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பு நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும் அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
உயிர் வாதைப்படும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என ஓலமிடும் ஒருவரைத் தமிழகம் முதலமைச்சராகப் பெற்றிருப்பதைக் குறித்து உலகத்தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் வேதனையை முதலமைச்சருக்குச் சுட்டிக்காட்டியதற்காக என்மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைச் காட்டி மிரட்டுகிறார். தமிழர்களின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்கு ஆபத்து என்ற கூக்குரலை எழுப்பி பிரச்சினையைத் திசை திருப்ப முயல்வது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும். இது போன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள மக்களை மீட்பதற்கு உரிய உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.
கருத்துகள் | | Read More...

ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சண்டித்தனத்தை காட்ட வேண்டும்:லக்ஸ்மன்

இலங்கைக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சிகள் இடம்பெறுமாயின் அது குறித்து தக்க ஆதாரங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சர்வதேச சமுகத்தின் மத்தியில் வெளியிடுவதற்கான சந்தர்ப்பத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் தவிர்த்து கொண்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வி எழுப்பியுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.ஜனாதிபதி மாளிகைக்கு ஆசிரியர்களையும், வைத்தியர்களையும், நடிகர் நடிகைகளை அழைத்து விரிவுரை நடத்தி, எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மீது குற்றம்சுமத்துவதால் என்ன பலம் கிடைக்கப் போகிறது எனவும் லக்ஸ்மன் கிரியல்ல கேள்வியெழுப்பினார்.நாட்டின் கௌரவம், சுயாதீனம், இறையாண்மை தொடர்பில் நாட்டிற்குள் சண்டித்தனத்தைகாட்டாது, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று சண்டித்தனத்தை காட்ட வேண்டும். சர்வதேச, உள்ளுர் சூழ்ச்சிகள் குறித்து தொடர்ந்தும் பேசி வரும் அரசாங்கம், அந்த சூழ்ச்சிக் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதும், மேற்குல நாடுகள் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. விடுதலைப்புலிகளை தோற்கடித்து, இலங்கை பெற்ற வெற்றியினை மழுங்கடிக்க முயற்சிப்பதாக அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது.அரசாங்கம் கூறுவது போல் இலங்கைக்கு எதிராக சர்வதேச சூழ்ச்சியொன்று இருக்குமாயின் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று அது குறித்து சர்வதேச சமூகத்திற்கு தெளிவுப்படுத்தும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இருக்கிறது. அவ்வாறான சூழ்ச்சிகள் இருக்குமாயின் ஜனாதிபதி ஏன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்திற்கு சென்று அந்த விடயங்களை ஏன் வெளியிடவில்லை.உள்ளுர், சர்வதேச சூழ்ச்சிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீதும் ஐரோப்பிய சமூகத்தின் மீதும் குற்றம்சுமத்தும் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று அது குறித்த தெளிவான அறிக்கையை வெளியிடம் சந்தர்ப்பத்தை ஏன் புறந்தள்ளினார்? நாட்டுக்கு எதிராக சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் இடம்பெறுமாயின் அது குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று தகவல்களை வெளியிடுவது அரச தலைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.ஐக்கிய நாடுகள் சபையில் உலகில் உள்ள நாடுகள் அங்கம் வகிப்பதால், இலங்கை குறித்து மேற்கொள்ளப்படுமு,சூழ்ச்சிக் குறித்து பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையே சிறந்த இடம். மனித உரிமை மீறல், போர் குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்தக் காரணங்களின் அடிப்படையாக வைத்து இலங்கைக்கு கிடைத்து வந்த வெளிநாட்டு உதவிகள் 86 வீதமாக குறைந்துள்ளன.இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு சென்று நாட்டின் நிலைமைகள் பற்றி சர்வதேசத்திற்கு தெளிவுப்படுத்தியிருக்கலாம். நாம் அனைவரும் நாட்டை நேசிக்கின்றோம் அதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் தேவை எமக்கில்லை. இதனடிப்படையில் எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலே ஊழல், மோசடி மற்றும் அடக்குமுறைகளை கொண்ட இந்த அரசாங்கத்தை நாம் கவிழ்ப்போம் எனவும் லக்ஸ்மன் கிரியல்ல மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

நளினியை விடுதலை செய்ய வேண்டும்: வைகோ

மற்ற கைதிகளை விடுவித்தது போல வேலூர் சிறையிலிருக்கும் நளினி, ராபர்ட் பயஸ் ஆகியோரின் கோரிக்கையையும் பரிசீலித்து அவர்களை விடுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று மதிமுக பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
வேலூர் மத்திய சிறையில், 18 ஆண்டுகளாக வாடிவதங்கும் சிறை வாசிகளான ராபர்ட் பயஸ், நளினி ஆகியோர், தங்களை விடுவிக்கக் கோரி, காலவரையற்ற உண்ணா நிலை அறப்போர் மேற்கொண்டு உள்ளனர்.
ஏழு ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருப்பவர்களையெல்லாம் தமிழக அரசு விடுவித்து வருகிறது. ஆனால், நளினி, பயஸ் இருவரையும் 18 ஆண்டுகளாக அடைத்து வைத்து இருப்பது அவர்களுடைய வாழ்க்கையை நரக வேதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது.
வேறு பல வழக்குகளில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை, கருணை அடிப்படையில் ரத்துச் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்புகையில், அதே மனிதாபிமான அணுகுமுறை, வேலூர் மத்திய சிறையில் மனத்துன்பத்துக்கு ஆளாகி உள்ள மரண தண்டனைக் கைதிகளுக்கு காட்டப்பட வேண்டும்.
விடுதலை எப்போது என்று தெரியாமல் சிறைக்கு உள்ளே கிடந்து துன்பப்படுவதை விட மரணமே மேல் என்று உள்ளம் உடைந்து, நளினி, ராபர்ட் பயஸ் இருவரும், காலவரையற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தை மேற்கொண்டு உள்ளனர்.
மற்ற கைதிகளை விடுவித்தது போல, அதே அடிப்படையில் இவர்களின் கோரிக்கையையும் மனித நேயத்துடன் பரிசீலித்து விடுவிக்க அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

ரோகித மீது தயான் ஜயதிலக்க மறைமுகத் தாக்குதல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முன்நின்று நடத்தியவர்களைப் போல சிறிலங்காவின் வெளிநாட்டு உறவுகளைக் கையாள்பவர்களும் தகுதியானவர்களாக இருக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவை அந்தப் பதவியிலிருந்து மாற்ற வேண்டும் என்பதையே இவ்வாறு மறைமுகமான வார்த்தைகளில் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டிருக்கின்றார் என இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. கொழும்பிலிருந்து வெளிவரும் 'டெய்லி மிரர்' நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியொன்றில், "எமது படைத்துறை வெற்றியைப் பலப்படுத்துவதற்குத் தேவையாகவுள்ள வெளிநாட்டுப் போரை நடத்தக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளவர்கள் எம்மிடம் உள்ளார்களா என்பதை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார். போரில் வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த ஆளுமையைக் கொண்டுள்ளவர்களை பயன்படுத்தியதைப்போல அதேபோன்ற சிறப்பான தகுதியைக் கொண்டுள்ளவர்களை அனைத்துலக உறவுகள் தொடர்பான சிறிலங்காவின் போருக்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். "இது ஒரு தனிப்பட்ட விடயமல்ல. இது கொள்கை ரீதியானது. இந்த போரை நாம் நடத்தியபோது எம்மிடம் இருந்தவர்களில் சிறப்பானவர்களை நாம் கொண்டிருந்தோம். முன்னைய அரச தலைவர்கள் எவருமே செய்யாத நிலையில் தற்போதைய அரச தலைவர் முப்படைகளின் தளபதி என்ற முறையில் செயல் ஈடுபாடுடைய பாத்திரம் ஒன்றை வகித்தார். பாதுகாப்புச் செயலாளரும் அரச தலைவருக்கும் முன்னாள் தரைப்படைத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இணைப்பை ஏற்படுத்துபவராக சிறப்பான பணியைப் புரிந்துள்ளார்" எனவும் தயான் ஜயதிலக்க தெரிவித்தார். "ஆற்றல் மிக்கவர்களைக் கொண்டுள்ள தொழில்சார் திறமை மிக்க படையினர் ஒன்று எம்மிடம் உள்ளது. மிகவும் பலம்வாய்ந்த எதிரியை வெற்றிபெற்றதன் மூலமாக அதுதான் இன்று உலகின் சிறப்பான சண்டையிடும் படைப்பிரிவு என என்னால் சொல்ல முடியும். இந்தப் பணியைச் செய்வதற்காக நாம் மிகவும் சிறப்பானவர்களைத் தெரிவு செய்திருந்தோம்" எனவும் தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டினார். தற்போதைய அமைச்சரவையில் ஆற்றல் மிக்க அமைச்சர்கள் பலர் இருப்பதை தன்னால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த இலக்கை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானவர்கள் அமைச்சரவையில் இருக்கின்றார்கள். சரத் அமுனுகம மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் சிறப்பான வெளிவிவகார அமைச்சர்களாகச் செயற்படக் கூடியவர்கள்" எனத் தெரிவித்த தயான் ஜயதிலக்க, இவர்களில் ஒருவரை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதன் மூலம் சிறிலங்காவின் வெளிவிவகாரப் பிரச்சினைக்கு நாளைக்கே தீர்வைக்காண முடியும்" எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் அரசியலில் பிரவேசிக்கும் உத்தேசமோ அல்லது வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் எண்ணமோ தனக்கு இல்லை எனத் தெரிவித்த தயான், வெளிவிவகார அமைச்சர் பதவியை சிறப்பாகச் செய்யக்கூடிய பலர் அமைச்சரவையில் தற்போதிருப்பதாகவும் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

ஐ.நா அமர்வில் தமிழரின் மனித உரிமை அறிக்கை

Penulis : Antony on செவ்வாய், 22 செப்டம்பர், 2009 | 3:40 PM

செவ்வாய், 22 செப்டம்பர், 2009


தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டுவரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 12வது கூட்டத் தொடருக்கு பிரான்சை தளமாக கொண்டு கடந்த இருபது வருடங்களாக சர்வதேச ரீதியாக மனித உரிமைச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரினால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் இலங்கை தீவில் வாழும் தமிழ் மக்களின் மனிதாபிமான, மனித உரிமை நிலைகளுடன் இடம்பெயர்ந்தோர் பற்றிய புள்ளிவிபரங்கள் இணைக்கப்பட்டள்ளது. இவ் அறிக்கை தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தினரால் மனித உரிமைச் சபையில் பங்கு கொள்ளும் அங்கத்துவ நாடுகளுக்கும், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களிற்கும் முக்கிய புள்ளிகளுக்கும் விநியோகித்துள்ளனர்.
அம் மனுவில், கடந்த ஓகஸ்ட் மாதம் 25ம் திகதி பிரித்தானியா சனல்-4 தொலைக்காட்சி – சிறீலங்கா இராணுவத்தினரினால் கைது செய்யப்பட்ட தமிழர் எதுவித விசாரணைகளுமின்றி மிகக் கொடுரமான முறையில் சுட்டுக் கொல்லப்படுவது ஒரு போர்க் குற்றமெனவும் அது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, வதைமுகங்கங்களில் மிருகங்கள் போல் அடைக்கப்பட்டு மோசமான அவலங்களை அனுபவிக்கும் மூன்று இலட்சம் தமிழ் மக்களை உடன் மீழ் குடியேற்றம் செய்வதற்கு சிறீலங்கா உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வேண்டப்பட்டுள்ளது. அத்துடன் பத்தாயிரத்திற்கு மேலதிகமான போர் கைதிகள், பல இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இரவு பகலாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதுடன், அவர்களில் பலர் தினமும் காணமல் போகின்றனார் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊடக சுதந்திரம் பற்றியும் இவ்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர் மனிதர் உரிமை மையத்தின் அறிக்கையில், இலங்கையில் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற 2004ம் ஆண்டு முதல் இன்றுவரை படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலும் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனுவில் சிறீலங்கா அரசின் ஊதுகுழல்கள் உண்மைக்கு மாறான பல கட்டுக்கதைகளையும் பொய்களையும் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பரப்பி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் ஊடக ஊழியரும்2004 ஏப்ரல்
முதல் – மார்ச் 2009 வரை
2004
1. ஐயாத்துரை அ. நடேசன் – பத்திரிகையாளார் – 31 மே
2. கந்தசாமி ஐயர் பாலேந்திரரா – எழுத்தாளர் – 16 ஆகஸ்ட்
3. லங்கா ஜெயசுந்தரா – புகைப்பட பத்திரிகையாளார் – 11 டிசம்பர்
2005
4. தர்மரட்ணம் சிவராம் – ஆசிரியர் – 28 ஏப்ரல்
5. கண்ணமுத்து அரசகுமார் – ஊடக ஊழியர் – 29 யூன்
6. றிலாஞ்சி செல்வராஜ் – பத்திரிகையாளார் – 12 ஆகஸ்ட்
7. டி.செல்வராட்னம் – ஊடக ஊழியர் – 29 ஆகஸ்ட்
8. யோககுமார் கிருஷ்ணபிள்ளை – ஊடக ஊழியர் – 30 செப்டம்பர்
9. எல்.எம்.பலில் (நெற்பிற்ரிமுனை) – எழுத்தாளர் – 02 டிசம்பர்
10. கே. நவரட்ணம் – ஊடக ஊழியர் – 22 டிசம்பர்
2006
11. சுப்ரமணியம் சுகிர்தராஐன் – பத்திரிகையாளார் – 24 ஐனவரி
12. எஸ்.ரி.கணநாதன் – பத்திரிகை உரிமையாளர் – 01 பெப்ரவரி
13. பஸ்ரியான் ஜென் சகயதாஸ் – ஊடக ஊழியர் – 03 மே
14. ராஐரட்ணம் ரஞ்சித் குமாரா – ஊடக ஊழியர் – 03 மே
15. சம்பத் லக்மல் டி சில்வா – பத்திரிகையாளார் – 02 யூலை
16. மரியதாசன் மனேஜன்ராஜ் – ஊடக ஊழியர் – 01 ஆகஸ்ட்
17. பத்மநாதன் விஸ்வநாதன் – பாடகர், இசைவாணர் – 02 ஆகஸ்ட்
18. சதாசிவம் பாஸ்கரன் – ஊடக ஊழியர் – 15 ஆகஸ்ட்
19. சின்னத்தம்பி சிவமகாராஜா – பத்திரிகை உரிமையாளர் -20 ஆகஸ்ட்2007
2007
20. எஸ். ராவீந்திரன் – ஊடக ஊழியர் – 12 பெப்ரவரி
21. சுப்ரமணியம் ராமச்சந்திரன் – ஊடகவியலாளர் – 15 பெப்ரவரி
22. சந்திரபோஸ் சுதாகர் – பத்திரிகையாளார் – 16 ஏப்ரல்
23. செல்வராஜா ரவிவர்மன் – பத்திரிகையாளார் – 29 ஏப்ரல்
24. சகாதேவன் நீலக்சன் – பத்திரிகையாளார் – 01 ஆகஸ்ட்
25. அந்தோனிப்பிள்ளை சிந்தராஞ்சன் – ஊடக ஊழியர் – 05 நவம்பர்
26. வடிவேல் நிர்மலராஜ் – ஊடக ஊழியர் – 17 நவம்பர்
27. இசைவிழி செம்பியன் (சுபாஜினி) – ஊடக ஊழியர் – 27 நவம்பர்
28. சுரேஸ் லிம்பியோ – ஊடக ஊழியர் – 27 நவம்பர்
29. ரி. தர்மலிங்கம் – ஊடக ஊழியர் – 27 நவம்பர்
2008
30. பரநிரூபசிங்கம் தேவகுமார் – பத்திரிகையாளார் – 28 மே
31. ரஸ்மி முகமட் – பத்திரிகையாளார் – 06 ஒக்டோபர்2009
32. லசந்தா விக்கிரமதுங்கா – ஆசிரியர் – 08 ஜனவரி
33. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி – பத்திரிகையாளார் – 12 பெப்ரவரி
34. சசி மதன் – ஊடக ஊழியர் – 06 மார்ச்
கருத்துகள் | | Read More...

போராட்டம் புலம்பெயர் தமிழரிடம்

தமிழ்மக்களின் விடிவுக்கான புதிய போராட்டம் எவ்வாறெல்லாம் அமையவேண்டும் என்பது தொடர்ச்சியாக விமர்சனத்துக்கு உட்பட்டுவரும் இக்காலகட்டத்தில்,முப்பது வருடங்களாக கட்டியெழுப்பப்பட்ட ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு புதிய முலாம் என்ற பெயரில் பல எதிர்வினைகள் மக்கள் மத்தியில் பரப்பிவிடப்படுகின்றன.பன்னெடுங்காலமாக ஒரு இறுக்கமான - கட்டுக்கோப்பான - கட்டமைப்பிற்குள் தமது போராட்டத்தை முன்னெடுத்துவந்த தமிழ்மக்கள், இன்று அந்த கட்டுக்கோப்பும் இறுக்கமும் இல்லை என்று உணரத்தலைப்பட்டு இப்படியான பல்வேறு சில்லறை சிந்தனைகளாலும் ஆட்கொள்ளப்படும் அபாயம் நிலவ ஆரம்பித்திருக்கிறது.இந்த இடத்தில் ஈழத்தமிர் விவகாரம் இன்று மூன்று முனையில் கையாளப்பட்டுவருவதை காணலாம். அதாவது1) ஈழத்தமிழரின் விடுதலைப்போராட்ட வடிவத்தில் இன்று பாரிய பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. தாயகத்தில் அதற்கு ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு நேருக்கு நேர் சரிக்கு சமன் நின்று பேரம் பேசும் வலுவை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கண்டிருக்கும் பின்னடைவின் பின்னணியில், தமிழ் மக்கள் இழந்திருக்கிறார்கள். இவ்வாறான ஒரு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம்தான் தமது தாயக உறவுகளுக்கு விடிவினைப்பெறுக்கொடுக்கும் மிகப்பெரிய சக்தியாக வியாபித்திருக்கிறது. இந்த யதார்த்தத்தை சர்வதேசமே இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறது.ஆனால், இந்த பலம்பொருந்திய புலம்பெயர்வாழ் தமிழர் சமூகத்தின் மத்தியில் பிளவினை ஏற்படுத்தவேண்டும் என்றும் விடுதலைப்புலிகளுக்கு மீள உயிர்கொடுக்கும் வேலைகளில் ஈடுபட்டுவரும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளை கைதுசெய்யவேண்டும் என்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களை தனது ஏக எதிரிகளாக நோக்கிவருகிறது சிறிலங்கா அரசு.2) இவை இவ்வாறு இருந்துகொண்டிருக்க, தாயகத்தில் தொடர்ந்தும் தனது அரசியல் பணிகளை முன்னெடுத்தவாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காக சிறிலங்கா அரசுடன் பேச்சுக்களை நடத்தி அல்லல்படும் அந்த மக்களை அவலத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தம்மால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.3) மறுபுறத்தில், தமிழ்மக்களின் அரசியல்வாழ்வுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக அனுசரணை வழங்க முன்வந்த சர்வதேச சமூகம் இன்றைய நிலையில் ஒரு தீர்வினை நிச்சயம் பெற்றுக்கொடுத்தேயாக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குள் விடுதலைப்புலிகளால் தள்ளப்பட்டுள்ளார்கள். அந்தவகையில், சர்வதேச சமூகம் முதற்கட்டமாக மனிதாபிமான விவகாரம் என்ற விடயத்தின் ஊடாக சிறிலங்கா விவகாரத்திற்குள் நுழைந்து தற்போது தனது முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் - சர்வதேச சமூகம் - சிறிலங்கா அரசு - தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆகியவை இன்றைய கால கட்டத்தில் முக்கிய பங்காளிகளாக தமிழர் விவகாரத்தில் பார்க்கப்படுகின்றன.இந்தமாதிரியாக சூழ்நிலையில், சிறிலங்காவில் சிங்கள சிறைகளில் அகப்பட்டுள்ள மூன்றுலட்சம் மக்களை மீட்கவேண்டும். சரணடைந்த போராளிகளை மீட்கவேண்டும். சரி. இவர்களை மீட்கவேண்டுமாயின் சிறிலங்கா அரசுடன் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு தரப்பு பேச்சு நடத்தவேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதனை மேற்கொள்வதற்கு சிறிலங்காவை தளமாக கொண்டு இயங்கும் ஒரு தரப்பே மிக சரியான தெரிவாக இருக்கமுடியும்.ஆனால், சிறிலங்கா அரசு தமிழ்மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் மேற்கொண்டு மனித உரிமை மீறல்களையோ போர்குற்றங்களையோ அரசியல் தீர்வு ஒன்றை விரைவாக தமிழர்களுக்கு வழங்கவேண்டும் என்ற அதீதமான அழுத்தத்தை - தற்போது சிறிலங்காவில் காணப்படும் சூழ்நிலையில் - அங்கிருந்தவாறு எந்த ஒருதரப்பும் வழங்கமுடியாது. குறிப்பிட்ட அழுத்தத்தை சர்வதேசத்தின் ஊடாக வழங்கினால் மாத்திரமே அதற்கு பலன் கிடைக்கும் என்பது அடுத்தவிடயம்.ஆகவே, அந்த விடயத்தை சிறிலங்காவை தளமாக கொண்டு இயங்கும் தமிழர் சார்பான தரப்பு மேற்கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. சிறிலங்கா அரசுக்கு அழுத்தத்தை மேற்கொள்ளும்வகையிலான புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் அரசியல் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசு திட்டம் சிறிலங்கா அரசுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், அதனை ஆதரித்து சிறிலங்காவிலிருந்து எந்த தரப்பும் குரல் கொடுப்பது தற்கொலை செய்துகொள்வதற்கு சமம்.ஆகவே, இந்த ஒரு ஒழுங்கு சிக்கலை இலகுவாக தீர்ப்பதற்கான வாய்பாடு மிகச்சுலபமான ஒன்றேயாகும். அதாவது, சிறிலங்கா அரசுடன் களத்திலே நின்று தமிழர் தரப்பு நியாயப்பாடுகளை எடுத்துக்கூறி தொடர்ந்தும் அதனுடன் பேச்சுக்களை நடத்தி உள்நாட்டில் ஒரு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுப்பதற்கு - நடைபெற்று முடிந்த தேர்தல்கள் மூலமும் தமது பலத்தை நிரூபித்துள்ள - தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தனது முயற்சிகளை மேற்கொள்ள -தமிழ்மக்களின் நியாயமான கோரிக்கைகளை தொடர்ந்தும் சர்வதேச அளவில் எடுத்துக்கூறி தமது உறவுகளுக்கு விரைவில் ஒரு விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஊடாக புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் சிறிலங்கா அரசுக்கு வெளி அழுத்தத்தை பிரயோகிக்க -ஈழ விடுதலைப்போராட்டத்தின் புதிரான புதிய பாதை என வர்ணிக்கப்படுவது மிகச்சுலபமான ஒரு களத்தை ஏற்படுத்தி தருகிறது. இந்த பாதையில் பயணம் செய்வதற்கு இலட்சியப்பற்றும் கொள்கைப்பிடிப்பும் வழுவாத இலக்கும் இருந்தால் போதுமானது. இதனை வெளியில் பறைசாற்றித்தான் செயலில் இறங்கவேண்டும் என்ற நோக்குடன், சிறிலங்கா அரசு தனது ஏக எதிரியாக பார்க்கும் புலம்பெயர்வாழ் தமிழர் தரப்பு தமிழ்க்கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முயற்சித்து, களத்திலே பணிபுரியும் கூட்டமைப்பினருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக அங்கு தமிழ்மக்களுக்காக ஒலிக்கும் அந்த ஒரு குரலையும் அடங்குவதற்கு இன்னொரு தமிழர் தரப்பே உடந்தையாகிவிடக்கூடாது.களத்தில் நின்று அரசியல் நடத்தும் கூட்டமைப்பினருக்கு எத்தனையோ நடைமுறைச்சிக்கல்கள் இருக்கின்றன. சிங்கத்தின் குகைக்குள் நின்றுகொண்டு அதன் பிடரி மயிரை பிடித்து உலுப்புவது போன்ற மரணப்போராட்டத்தை நடத்திக்கொண்டு தமிழ்மக்களின் விடிவுக்காக போராடுபவர்கள் அவர்கள். அவர்கள் சிங்கள தேசத்திடம் தமது கொள்கைகளை அடகுவைத்துவிட்டு, கேட்பார் யாருமில்லை என்ற மமதையில் நாற்காலி கனவுகளில் மயங்கி கிடக்கவில்லை. பதவி மற்றும் பணத்துக்காக இனத்தின் இலட்சியத்தை விற்கவில்லை. மூன்று உறுப்பினர்களை காவுகொடுத்தும் ஒரு உறுப்பினர் சிறைவாசம் அனுபவிக்கவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றும் தனது கொள்கை தவறாத அரசியல் பாதையில் தமிழ்மக்களின் விடுதலைக்காக போராடிவருகிறது.இன்றைய நிலையில், ஈழத்தமிழன் ஒவ்வொருவனுக்கும் தனது இலக்கு எது என்பது தெரியும்.அவ்வாறான அரசியல் புரிதல் நிலையை மிகத்தெளிவாக ஏற்படுத்தி,அடுத்த கட்டப்போராட்டத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள கூடிய பலமாக அடித்தளத்தையிட்டு,சுலபமாக காரியத்தையே புலம்பெயர்ந்துவாழும் தமிழ் சமூகத்திடம் ஒப்படைத்துள்ளார்கள் விடுதலைப்புலிகள். இதில் குழப்பம் தேவையில்லை.இந்த அரசியல் சதுரங்கத்தை நேர்த்தியாக ஆடுவதற்கு தெளிவான பார்வையும் தொடர்ச்சியான முயற்சியும் உறுதியான முடிவுகளுமே பெரும் பக்கபலமாக அமையப்போகின்றன. அதனையே தற்போது, ஈழத்தமிழினம் எதிர்பார்த்து நிற்கிறது.இதற்குரிய சரியான அரசியல் அணிவகுப்பில் இணைந்து புலம்பெயர்வாழ் சமூகம் பரஸ்பர புரிதலுடன் தனது பயணத்தை மேற்கொள்கிறது. மிகுதியை களத்தில் பார்ப்போம்.
கருத்துகள் | | Read More...

ஐ.நா கோரிக்கை அரசு நிராகரிப்பு


ஐக்கிய நாடுகள் அமைப்பின் அரசியல் விவகாரப் பிரதிச் செயலாளர் லின் பாஸ்கோவினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்நாட்டு பணியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த இரண்டு பணியாளர்களையும் விடுதலை செய்யுமாறு லின் பாஸ்கோ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.எனினும், இந்த இரண்டு பணியாளர்களுக்கும் இராஜதந்திர சலுகை வழங்கப்பட முடியாது எனவும், இதனால் இவர்களை விடுதலை செய்ய முடியாது எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை படுகொலை செய்யும் முயற்சி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த இரண்டு இலங்கைப் பணியாளர்களுக்கும் எதிராக அடுத்த வாரமளவில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.
கருத்துகள் | | Read More...

சுட்டுக் கொல்வது காட்டுமிராண்டி


தமிழர்களை கௌரவமாக நடத்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இலங்கையில் நடக்கும் சமூக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழுல் ஏற்படும் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை ராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்ப தாக உள்ளன. கைபேசியின் மூலம் இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினரின் காட்டுமிராண்டித் தனமாக கொடுமைகளுக்கு ஆட் படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது. இந்த ரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப் படங்கள் பெரும்பாலான பத்திரிகை களில் வெளியிடப்படும். இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை. தீவிரவாதத்திற்கோ அல்லது தீவிரவாத அமைப்புகளுக்கோ ஆதரவாக அதிமுக ஒரு போதும் இருந்ததில்லை. தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தமிழ் மக்களுக்காக போராடுகிறோம் என்று கூறி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களை கொலை செய்து வருகின்ற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் என்றைக்கு மாறியதோ, அன்றிலிருந்து இந்த இயக்கத்தை நான் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றேன். இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப் படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப்புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத் தன்மையற்றது, நாகரிக கோட்பாடுகளுக்கு எதிரானது. போரின் போது சிறைபிடிக்கப்பட்ட வர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல் துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.இருப்பினும் உலகத்தில் பரவியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை தவிர்த்து அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடை பெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

தமிழர் சொத்து ராணுவம் திருட்டு


வன்னியின் தொல்பொருள் தளங்களிலிருந்து ராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதிமிக்க பண்டைக்காலப் பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள்,பெறுமதிவாய்ந்த சிலைகள் ஆகியவை கொழும்பு தொல்பொருள் சந்தையில் வைத்து விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. போர் நடைபெறுவதற்கு முன்னர் இவ்வாறான பொருட்களை விடுதலைப்புலிகள் மதித்து பேணி, காத்தும் வந்தனர். இதற்கென புத்த சிலைகள் உட்பட பெருந்தொகையான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வன்னி மியூசியம் அங்கு அமைக்கப்பட்டிருந்தது.1990 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய ராணுவத்தினர் அங்கிருந்த பண்டைக்கால பொருட்களைத் திருடி விற்றுள்ளனர். போரிற்கு அடுத்தபடியாக தமிழ் மக்களின் தொன்மைக்காலச் சின்னங்களை அழிப்பதும் கொள்ளையிடுவதும் கூட நீண்ட காலமாக நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் இலங்கை ராணுவத்தால் 1982 இல் யாழ் நூலக எரிப்பு, யாழ் பல்கலைக்கழகத்தின் மியூசியம் இந்திய ராணுவத்தால் எரிப்பு என்பவற்றைக் கூறலாம்.ஆக மொத்தத்தில் ஈழத் தமிழனின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொன்மை என்பனவற்றை அழித்து ஒரு இனத்தை நாசம் செய்துகொண்டிருக்கும் ஒரு கொடிய அரக்கன் சிங்களவன்.
கருத்துகள் | | Read More...

சனல்-4 வீடியோ விசாரணை திருப்தியில்லை:ஜ.நா.சபை


இலங்கை இராணுவத்தினர் இளைஞர்கள் சிலரைச் சுட்டுக் கொல்கின்றமையைக் காண்பிக்கும், "சனல்4" தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோக் காட்சி உண்மையானதாஎன்பதைக் கண்டறிவதற்காக இலங்கை அரசு மேற்கொண்ட விசாரணை ஆய்வு திருப்தியானதாக இல்லை; பக்கச்சார்பானது என ஐ.நா.சபை மீண்டும் விசனம் தெரிவித்துள்ளது. இந்த வீடியோக் காட்சி போலியானது என்று விசாரணைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், அந்த விசாரணை பக்கச்சார்பானது என்று ஐக்கிய நாடுகள் சபையின், சட்ட விரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்டொன் அழுத்தமாகக் கூறியிருக்கின்றார். இலங்கையில் மோதல் முடிவடையும் தறுவாயில் பல படுகொலைகள் இடம்பெற்றன என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை குறித்த விசாரணை செய்வதற்காக இலங்கைக்குச் செல்வதற்கு அனுமதி கோரினேன். எனினும், இதற்கான அனுமதி வழங்கப்பட வில்லை.'' எனத் தெரிவித்துள்ள அல்ஸ்டொன், இக்குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கான விருப்பம் இலங்கை அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: இலங்கை அரசு மிக சமீபத்தில் நான்கு நிபுணர்களின் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் போது, இக்குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான பக்கச் சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது சர்வதேச சட்டத்தின் கீழ் அவசியமான நடவடிக்கையாகும். இலங்கை அரசு என்ன செய்துள்ளதென்றால், தனது இராணுவத்தைச் சேர்ந்த இருவர் மேற்கொண்ட ஆய்வு ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதாவது, குறிப்பிட்ட குற்றத்தை மேற்கொண்டவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைப்பைச் சேர்ந்தவர்களே அது குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்த இரு இராணுவ அதிகாரிகளும் "சனல் 4" வீடியோ நம்பக்கூடியதல்ல எனத் தாம் கருதுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னர் இலங்கை அரசுக்காகப் பணியாற்றிய கல்விமான் ஒருவரும் வீடியோ குறித்த ஆய்வுக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். சுயாதீன பக்கச்சார்பற்ற விசாரணை உண்மையில் நடைபெற்றதா என்பதைப் பார்க்கும்போது இது திருப்தியளிக்கவில்லை. இறுதியாக அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கைப் பிரஜை ஒருவரின் ஆய்வையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். அவருக்கு இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப ஆற்றல் உள்ளது போலத் தோன்றுகிறது. "சனல் 4" வீடியோ போலியானது எனத் தெரிவித்து அவர் இலங்கை செய்தித்தாள் ஒன்றில் தனது கருத்தை எழுதினார். தனது ஆய்வுகளை அடிப்படையாக வைத்தே அவர் இந்த முடிவுக்கு வந்தார். அரசு அவரை அழைத்து மேலும் தெளிவான அறிக்கையைத் தயாரிப்பதற்கான பணியை வழங்கியுள்ளது. இலங்கை அரசு இந்த நான்கு அறிக்கைகளில் எவற்றையும் எமக்கு முழுமையாகக் காண்பிக்கவில்லை; வழங்கவில்லை. அவர்கள் இந்த அறிக்கைகளின் சுருக்கத்தை மாத்திரமே காண்பித்துள்ளனர். இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், உங்களுக்கு எதிராக மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அரசுக்கு மிகவும் நெருக்கமான சிறிய எண்ணிக்கையிலான நிபுணர்கள் இதனை ஆய்வு செய்யுமாறு கூறுகிறீர்கள். இது பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெற்றதற்கான அர்த்தமல்ல. சுயாதீன நிபுணர்களைக் கொண்ட விசாரணைக்குழு தேவை இவ்வாறான சூழ்நிலைகளில் வழமையாக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறதென்றால், சில சுயாதீன நிபுணர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுகின்றது. அரசோ, ஐ.நாவோ அல்லது வேறொரு மூன்றாம் தரப்போ வீடியோவை ஆராய்ந்து மதிப்பிடுவதற்கான நிபுணர் குழுவை அமைப்பது வழமை. இலங்கை அரசு திட்டமிட்ட வகையில் இதனைச் செய்வதற்கு மறுத்து வருகின்றது. இவ்வாறான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எனக்கோ அல்லது வேறு ஐ.நா. அதிகாரிகளுக்கோ அவர்கள் அழைப்பு விடுக்கவில்லை. வீடியோ குறித்து விசாரணை செய்வதற்கு இலங்கைக்குச் செல்வதற்கான அனுமதி இன்னமும் எனக்கு கிடைக்கவில்லை. அரசு இது குறித்து ஆர்வம் காட்டவில்லை.இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அரசு எவ்வித சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதிலும் அக்கறை கொள்ளவில்லைப் போலத் தென்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கடத்தல்!

சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் தொகுதியான அம்பாந்தோட்டையில், அரசாங்க அமைச்சர் ஒருவரால் ஜே.வி.பி உறுப்பினர்கள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர்.அம்பாந்தோட்டையில் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த பொழுது இவர்களை இடைமறித்த அரசாங்க அமைச்சர் ஒருவர், இருவரையும் தனது மெய்ப்பாதுகாவலர்களின் வாகனத்தில் பலவந்தமாகப் பிடித்துச் சென்றுள்ளார்.இவர்கள் இருவரும் வாகனத்தில் வைத்து அமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் அம்பாந்தோட்டை சிறீலங்கா காவல்துறை நிலையத்தின் வாயிற்புறத்தில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் | | Read More...

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையின்றி வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் மண்டபம்,பாம்பன் பகுதியிலிருந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றன.
மண்டபம் கோயில்வாடி பகுதியிலிருந்து நேற்று வழக்கம்போல் 120க்கும் அதிகமான விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச்சென்றன.
இப்பகுதி மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து தங்களது கப்பல் மூலம் மீனவர்களின் படகுகளில் மோதியுள்ளனர்.
பின் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த இறால்களை பறித்து சென்றனர்.
கருத்துகள் | | Read More...

அமைச்சர்கள் குழுவை அனுப்ப நடவடிக்கை

பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக - காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் எம்.பிக்களும் சந்தித்து இலங்கைக்குத் தமிழக எம்பிக்கள் குழு ஒன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன், கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் மற்றும் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்களும், காங்கிரஸ் எம்பி்க்களும், விடுதலைச் சிறுத்தை கட்சி எம்பியான திருமாவளவனும் சந்தித்தனர்.அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் உடனிருந்தார். இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியமர்த்த அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும்-இலங்கைக்குத் தமிழக எம்பிக்கள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்-தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்-என்ற கோரிக்கைகளை அவர்கள் பிரதமரிடம் முன்வைத்தனர்.கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தாக எம்பிக்கள் பின்னர் தெரிவித்தனர்.
கருத்துகள் | | Read More...

இலங்கை போர் தொடர்பான அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தாமதம்

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான அறிக்கை இராஜாங்கத் திணைக்களத்தால் நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருந்தது. ஆனால், பணிகள் முடியாத காரணத்தால் திட்டமிட்டபடி அதனை நேற்று தாக்கல் செய்ய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பில் விரிவான தகவல்கள் இந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், அறிக்கை தொடர்பில் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் பணியாற்றி வருவதால் திட்டமிட்டபடி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போய்விட்டது என திணைக்களப் பேச்சாளர் இயன் கெலி இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் என்ன உள்ளடக்கப்பட்டிருக்கின்றது என்பது தொடர்பாக தன்னிடம் எந்த விபரமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் இந்த அறிக்கை இலங்கை போர் தொடர்பான உண்மை நிலவரத்தை ஒரளவிற்கு வெளியே கொண்டுவரும் என மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சிறிலங்காவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் இவர்கள் அமெரிக்க அறிக்கை அது தொடர்பில் பலமான ஆதாரமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சிறிலங்கா அரசையும் கடும் சீற்றத்திற்கு உள்ளாக்கி இருந்தது.
இலங்கை தொடர்பாக அத்தகைய அறிக்கை எதனையும் வெளியிடும் தகுதி அமெரிக்காவிற்கு இல்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் தொனியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இத்தனைக்கும் அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்தவர்.
கருத்துகள் | | Read More...

சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. ஜெயலலிதா

இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை இராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களை கௌரவமாக நடத்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், இலங்கையில் நடக்கும் சமூக மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட காட்சிகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. இளைஞர்களின் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கி அவர்களுடைய கைகளாலேயே கண்களை மூடி விட்டு கால்களை இழுத்துக்கட்டி, ஈவு இரக்கமின்றி சீருடை அணிந்த இலங்கை இராணுவத்தினர் அவர்களை காலால் உதைத்து, பின்னிருந்து தலை வழியாக துப்பாக்கிகளால் சுடுகின்ற காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. கைபேசியின் மூலம் இராணுவ வீரரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த கோரமான வீடியோ படக்காட்சி, இலங்கையில் மக்களுக்கான விடுதலையுரிமை இல்லை என்பதும் அங்குள்ள தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தினரின் காட்டுமிராண்டித் தனமாக கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள் என்ற என்னுடைய கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக உள்ளது. இந்த இரத்தம் உறைந்த காட்சிகள் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும், சில புகைப்படங்கள் பெரும்பாலான பத்திரிகைகளில் வெளியிடப்பட்டும், இலங்கை அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசுக்கோ அல்லது தமிழக அரசுக்கோ ஏற்படாதது வியப்பை அளிக்கிறது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்றும், அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் இலங்கை அரசு தெரிவிக்கின்றது. மனித தன்மையை வேண்டுமென்றே காலால் போட்டு மிதிக்கக்கூடிய இது போன்ற ஒட்டுமொத்த கொடுமையை எந்த ஜனநாயகமும் அனுமதிக்கவில்லை.
இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பப்படும் காட்சிகளில் வருபவர்கள் விடுதலைப்புலிகளாக இருந்தாலும், வழக்கு விசாரணையே இல்லாமல் அனைவரையும் சுட்டுக் கொல்வது என்பது காட்டுமிராண்டித்தனமானது, மனிதத் தன்மையற்றது, நாகரிக கோட்பாடுகளுக்கு எதிரானது. போரின் போது சிறைபிடிக்கப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளது. வழக்குகள் விசாரணைக்கு வந்தால் அதில் உள்ள அரசியல் தொடர்பு வெளிப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், காவல்துறையின் கண்காணிப்பில் இருப்பவர்களை கொலை செய்வது, தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் 25 மைல் தொலைவில் உள்ள இலங்கைத் தீவில் நிகழ்த்தப்படும் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் குறித்து திமுக அரசு சிறிய அளவிலாவது குரல் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவுக்கு இல்லை.இருப்பினும் உலகத்தில் பரவியுள்ள லட்சக்கணக்கான தமிழர்களை தவிர்த்து அதிமுகவும், தமிழக மக்களும் இலங்கையில் நடைபெறும் தமிழர்கள் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அருவருக்கத்தக்க சூழ்நிலையில் மறுவாழ்வு முகாம்களில் வாடிக் கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மற்றும் மதிப்பை புதுடெல்லியில் உள்ள இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இலங்கை அரசின் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறலை சர்வதேச அமைப்புகளில் எழுப்பி, இலங்கை அரசாங்கம் அங்குள்ள தமிழர்களை கௌரவத்துடன் நடத்த வேண்டும். இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அனைத்து நாடுகளும் நிர்ப்பந்திக்கும் வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கையில் நடைபெறும் கொடூரமான சமூக தன்னுரிமை மீறல்களுக்கு எதிராக அதிமுக ஒத்த கட்சிகளுடன் இணைந்து மாபெரும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் | | Read More...

அரசாங்கம் ‘தங்க’ இருப்புகளை விற்பனை செய்ய முயன்றமை நிரூபிக்கப்பட்டுள்ளது: ரணில் விக்கிரமசிங்க

தங்க இருப்புகளை விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டமை நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர் சண்டேலீடர் பத்திரிகையில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டார்.
அரசாங்கம் தமது இருப்பில் உள்ள தங்கங்களை விற்பனை செய்வதற்காக முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதனை கொள்வனவு செய்வதற்காக வெளிநாட்டவர்கள் இருவர் இலங்கைக்கு வந்து ஹொலிடே இன் ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
எனினும் இதனை மறுத்த அரசாங்கத்தரப்பினர் இது பிழையான செய்தி எனக்குறிப்பிட்டனா
கருத்துகள் | | Read More...
 
Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
Copyright © 2011. welvom . All Rights Reserved.
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger