News Update :

'விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்"- அலரி மாளிகையில் புத்தக வெளியீடு (பட இணைப்பு)

Penulis : Antony on வெள்ளி, 31 டிசம்பர், 2010 | 10:58 AM

வெள்ளி, 31 டிசம்பர், 2010


விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் | | Read More...

ஆபாச இணையத்தளங்களைத் தடை செய்யும் சீனா

ஆபாச இணையத்தளங்களை தடைசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ள சீனா சுமார் 60இ000 இணையத்தளங்களை தடைசெய்துள்ளது.

மேலும் இதனுடன் தொடர்புடையவர்கள் என கருதப்படும் 5000 பேரை கைது செய்துள்ளனர்.

ஆபாச இணையத்தளங்களால் சிறுவர்கள் உளரீதியாக பாதிக்கப்படுவதாக இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சீனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சுமார் 1.79 மில்லியன் இணையத்தளங்கள் பரீசிலிக்கப்பட்டுள்ளதுடன் 350 மில்லியன் ஆபாச புகைப்படங்கள்இ வீடியோக்கள்இ கட்டுரைகள் என்பன அழிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களின் பேரில் சீனாவில் யூடியூப், டுவிட்டர், பிளிக்கர் மற்றும் பேஸ்புக் ஆகிய இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

வாழ்வும் வரலாறும் - சமகால ஆய்வு

வரலாற்றை நிராகரிக்கவோ அழிக்கவோ முடியாது. அதைச் செய்ய நினைப்பது தவறு. புலிகள் ஆட்சி வடக்கு கிழக்கில் நிலவியது. அதை மறைக்க முடியாது. ஏன் மறைக்க வேண்டும். மறைப்பதால் என்ன பயன். இந்த யோசனை அரசுக்கு வரவில்லை. புலிகளின் தடயங்களை இல்லாதொழிப்பதில் அரசு முனைப்புக் காட்டுகிறது.
சிங்கள் அரசின் காட்டுமிராண்டித் தனம் மாவீரர்களின் துயிலும் இல்ல அழிப்பில் மையம் கொண்டுள்ளது. 27.11.1982 தொடக்கம் 31.06.2009 வரை 18 மாவீரர் இல்லங்களைப் புலிகள் அமைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சிங்கள இராணுவம் 1995ல் கைப்பற்றிய பின் துயிலும் இல்ல அழிப்பு தொடங்கிவிட்டது. இன்று முற்றுப்பெற்று விட்டது.

இதற்கு ஒரு சில சிங்கள அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். பெல்ஜியம் போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கைத் தூதுவராகப் பதவி வகித்த கே.கொடகே என்பவர் பத்திரிகை வாயிலாகத் துயிலும் இல்ல அழிப்பைக் கண்டித்தார்.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பெல்ஜியம் நாட்டை ஆக்கிரமித்த ஜேர்மன் படையினரின் கல்லறைகளைப் பெல்ஜியன் அரசு தனது செலவில் பராமரித்து வரும் முன்னுதாரணத்தை அவர் எடுத்துக்காட்டினர். இது செவிடன் காதில் ஊதிய சங்குபோல் சிங்களப் பேரினவாதிகளின் காதில் ஒலித்தது.

துட்டகெமுனுவால் வஞ்சகப் போரில் கொல்லப்பட்ட எல்லாளனை இராஜ மரியாதையுடன் அடக்கம் செய்து அந்த இடத்திற்கு மரியாதை செய்யும்படி துட்டகெமுனு கட்டளை இட்டதாக மகாவம்சம் பெருமையாகக் கூறுகிறது. அதே சிங்களவர்கள் துயிலும் இல்லங்களை அழித்ததை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 19ம் நூற்றாண்டு முற்பகுதியில் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றியபின் கண்டிச் சிங்களத் தலைவர்களைச் சிறைப்பிடித்து கொழும்பு கொண்டு சென்றதாகப் பிற்கால வரலாறுகள் தெரிவிக்கின்றன.

அப்படிக் கொண்டு செல்லப்பட்ட ஒருவர் எல்லாளனின் சமாதி என்று சொல்லப்பட்ட இடத்திற்கு முன்னால் தான் சென்ற பல்லக்கில் இருந்து இறங்கிக் கால் நடையாகச் சென்றதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. எல்லாளனின் சமாதிக்கு முன்னால் இசைக்கருவிகள் ஒலிப்பதில்லை என்றும் அப்பகுதியால் செல்வோர் தலை வணங்குவார்கள் என்றும் அதே நூல்கள் தெரிவிக்கின்றன.

மிகவும் வியப்பூட்டும் தகவல் என்னவென்றால் பிரிட்டிஷ் ஆட்சியில் எல்லாளன் சமாதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது அது டாகொபா எனப்படும் புத்தமதக் கட்டிடம் என்று அறியப்பட்டது. இதன் மூலம் எல்லாளனுக்குச் சமாதி எழுதப்படவில்லை என்பது புலனாகின்றது.

தமிழர்களுடைய நினைவுச் சின்னங்களை அழிப்பது சிங்கள தேசம் தன்னைத் தான் தரம் தாழ்த்தும் செயலாகும். 2002ம் வருடத்திற்குப்பின் புலிகள் வன்னியில் அமைத்த நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்தும் இன்று அழிக்கப்பட்டுவிட்டன.

1995-96ல் தொடங்கிய யாழ் இடப்பெயர்வுக்குப் பிறகு புலிகள் தமது சிவில் நிர்வாகக் கட்டமைப்பு விரிவாக்கத்தை வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் தொடங்கினர். 2002 ல் தமக்குக் கிடைத்த சர்வதேச அங்கீகாரத்தின் பயனாய் கட்டமைப்பு விரிவாக்கத்தை மென்மேலும் பெருக்கினர்.

புலிகள் அமைத்த சிவில் நிர்வாக அடித்தளமான தமிழீழ வைப்பகம் (BANK OF TAMIL EELAM) யாழ் நகரின் கன்னாதிட்டி என்ற பகுதியில் 1994 மே மாதம் 23ம் நாள் தொடங்கப்பட்டது. புலிகளின் நிதிப்பொறுப்பாளரான பிரிகேடியர் தமிழேந்தி (சபாரத்தினம்.செல்லத்துரை) தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அனுசரணையோடு வைப்பகத்தைத் திறந்து வைத்தார்.

வன்னியின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழீழ வைப்பகம் ஆற்றிய பங்களிப்பு பற்றி முழுமையான ஆய்வுரை எழுத வேண்டியது மிகவும் அவசியம். நவீன வங்கிச் சேவைகளை அடியொற்றித் தமிழ் மக்களின் விவசாய, வர்த்தக, ஏற்றுமதி இறக்குமதித் தேவைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளைத் தமிழீழ வைப்பகம் மேற்கொண்டது.

இலங்கை வங்கி (BANK OF CEYLON) உலக வங்கி (WORLD BANK) போன்றவற்றில் பணியாற்றி இளைப்பாறிய தமிழ் அதிகாரிகள் தமிழீழ வைப்பக இயக்குநர் சபையில் இடம் பிடித்தனர். இதனால் உலக தரத்திற்கு ஒப்பான சேவையை அதனால் வழங்க முடிந்தது.

கொழும்பில் தலைமைச் செயலகங்களைக் கொண்ட இலங்கை வங்கி, வர்த்தக வங்கி (COMMERCIAL BANK) போன்றவை தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தின. தமிழீழ வைப்பகத்துடன் நிதிக் கொடுக்கல் வாங்கல் தொடர்புகளை மேற்கொள்வதை அனுமதிப்பதாக இலங்கை வங்கி ஒரு உள்ளகச் சுற்றறிக்கையை (IN HOUSE CIRCULAR) வெளியிட்டது.

இலங்கையின் பாராளுமன்றதில் இந்த சுற்றறிக்கை பெரும் புரளியைக் கிளப்பியது. தினேஸ் குணவர்த்தனா என்ற பாரளுமன்ற உறுப்பினர் சுற்றறிக்கையைச் சாட்டாக வைத்து தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிரான படுமோசமான உரையை நிகழ்த்தினார். அதற்குப் பின்பும் மேற்கூறிய வங்கிகள் தமிழீழ வைப்பகத் தொடர்பைத் துண்டிக்காமல் தொடர்ந்தன.

தமிழீழ வைப்பகத்தின் வளர்ச்சியின் அங்கமாக பளை, விசுவமடு, புதுக்குடியிருப்பு, ஆகிய பெருநகரங்களில் கிளைகள் திறக்கப்பட்டுக் கருமபீடங்கள் அமைக்கப்பட்டன. கிளிநொச்சியில் வைப்பகத்திற்கு சொந்தமான நிலத்தில் மாடிக்கட்டிடங்கள் அமைக்கப்பட்டு முழுவதும் கணனி மயப்படுத்தப்பட்ட வைப்பகத் தலைமைச் செயலகம் இயங்கியது.

வைப்பகத்திற்குச் சொந்மான நிதி ஆதாரங்களை ஆக்கிரமிப்புப் படைகள் கைப்பற்றியுள்ளன. பெருந்தொகைப் பணத்தைச் சிங்களப் படைகள் கையகப்படுத்தியுள்ளன. நிதி செயற்பாட்டுகளுக்கு ஆதாரமாக வைப்பில் இருந்த 200 கிராம் தங்கத்தை படையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு என்ன நடந்ததென்று இதுவரை தெரியவில்லை.

புலிகளின் ஆட்சியில் மாற்று அரசியல் கட்சிகளுக்கு இடமளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு விமர்சகர்களால் சுமத்தப்படுகிறது உலக வரலாற்றில் புரிந்து கொண்டவர்கள் இந்த நியாயமற்ற வாதத்தை முன்வைக்க மாட்டார்கள். சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் ஆகியவற்றில் மாற்றுக் கட்சிகள் கிடையாது.

தேசியத் தலைவர் அவர்கள் அரசியல் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார். மக்களின் துயரங்களில் பங்குகொண்டு அவர்களுடைய கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவது தான் உண்மையான அரசியல் வேலை.

அரசியல் சாக்கடையின் நாற்றத்தை சுவாசிக்க வேண்டுமாயின் தழிழகம் செல்ல வேண்டும. ஏன் புதுடில்லியில் ஏதோ புனிதம் காணப்படுகிறதா. நிதி ஊழல்களும் பதவி கவிழ்ப்புக்களும் பாலியல் முறைகேடுகளும்தான் அரசியலாக இடம்பெறுகின்றன. புலிகள் ஆட்சியில் இவை இடம்பெறவில்லை.

போராட்ட வாழ்வைக் கைவிட்டபடி மைய நீரோட்ட அரசியலுக்கு வந்து விட்டதாகப் தம்பட்டம் அடிக்கும் டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் நடத்திய அரசியல் சுயவடிவத்தை அண்மையில் அம்பலமாக்கிய அமெரிக்க இராஜதந்திரத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.

இரு ஆயுதக் குழுக்களுக்குள் தலைமை தாங்கிய மேற்கூறிய இனத் துரோகிகள் இருவரும் சிங்கள அரசு வழங்கிய ஆணைக்கு அமைவாக வடக்கு கிழக்கில் படுகொலைகள், கப்பம் வசூலித்தல், ஆட்கடத்தல், சிறுவர்களை படையில் சேர்த்தல், தமிழ்ப் பெண்களைப் படையினரின் பாலியல் தேவைக்கு வழங்குதல் போன்ற ஏராளமான வன்செயல்களைப் புரிந்தார்கள். என்று மேற்கூறிய குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் கட்டளை பிறப்பித்தார். 2004ம் ஆண்டிற்குப் பிறகு வடக்கு கிழக்கில் பெருமளவு படுகொலைகள் நடந்தன. 2009 ல் போர் முடியும் வரை இது தொடர்ந்தது.

டக்ளஸ் தேவானந்தாவின் பயங்கரவாத ஆட்சியில் யாழில் தினமும் 1-6 பேர் வரை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது எப்படி நடத்தப்பட்டது என்பதை முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார். இதற்காக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

யார் யார் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்பதை டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்து பட்டியல் தயாரிப்பாராம். பின்பு தனது கொழும்புச் செயலகத்திற்கு இந்தப் பட்டியலை அனுப்பி கொழும்பில் வாழும் கொலையாளிகளை இராணுவ விமானத்தில் வரவழைப்பார். அவர்கள் இராணுவ முகாம்களில் தங்கி படுகொலைகளை நடத்திய பின் கொழும்புக்குச் சென்று விடுவார்கள்.

கொலையாளிகளின் பெயர் விபரங்களைக் வெளியிடப்போவதாகப் பாராளுமன்றத்தில் விரட்டிய மகேஸ்வரனை சுடும்படி டக்ளஸ் உத்தரவிட்டார். இதுதானா சர்வதேச சமூகம் எதிர்ப்பார்க்கும் மாற்றுக் கட்சி அரசியலா? புலிகள் சகோதர யுத்தம் புரிந்தார் என்று வாய்க்கு வந்தபடி புலம்பும் கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்?

படையினரின் பாலியல் தேவைக்குப் தமிழ்ப் பெண்களைப் பிடித்துக் கொடுத்தார்கள் என்ற நேரடிக் குற்றச்சாட்டை அமெரிக்க தூதரகம் டக்ளஸ், கருணா ஆகியோர் மீது திட்ட வட்டமாக சுமத்துகிறது இப்போது அமைச்சர் பதவி வகிக்கும் இருவரையும் கைவிட இலங்கை அரசு தயாராகி விட்டது.

தந்திரசாலியான இருவரும் தமது இருப்பை உறுதி செய்வதற்கு பாதுகாப்புச் செயலர் கோத்தபாயா மீது பலியைச் சுமத்த துணிந்து விட்டனர். அவருடைய பணிப்புரைக்கு அமைவாக நாம் செயற்பட்டோம். என்று வாதிட தயாராகிவிட்டனர். இதனால் இவர்களைப் பாதுகாக்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு இருக்கிறது.

கோத்தபாயாவுடன் நெடுங்காலமாக இருக்கும் இந்திய நடுவண் அரசு அவரை சர்வதேச குற்றவியல் விசாரணைகளில் இருந்து விலக்குவதற்காக பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கிறது. அவரைப் பயன்படுத்திப் பல அனுகூலங்களைப் பெற இந்தியா திட்டமிடுகிறது.

பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை விரிவாக புனரமைத்தல் என்ற திட்டத்தின் கீழ் இந்திய அரசு நிரந்தரமாக வடக்கில் காலூன்ற எத்தனிக்கின்றது. இதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பம் இடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குளத்தைக் கலக்கிப் பிராந்தின் கையில் கொடுப்பது போல் இலங்கையின் பிரச்சினை திசைமாறி செல்கிறது. இந்த வரலாற்று சுழற்சியில் ஈழத்தமிழர் வாழ்வும் தாழ்வும் மாட்டிக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயாவை புதுடில்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.

அப்போது பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் பற்றிய ஆவணங்கள் உத்தியோகபூர்வமாகப் கைச்சாத்திடப்படலாம் என்று அறியப்படுகிறது. இராமேஸ்வரம் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கிவிட்டன. ஆனால் இந்திய அரசும் இந்திய கடற்படையும் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

மத்திய அரசின் அங்கமான கருணாநிதி அரசும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டுவதில்லை அவர்கள் நடத்தும் அரசியல் வரலாறு தமிழர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைக்கு இடமளிப்பதில்லை.

இரத்தத்தால் எழுதப்படும் எமது இனத்தின் விடுதலை வரலாறு மனித குலத்தின் விடுதலை எழுச்சிக்கு ஒரு உன்னத எடுத்துக்காட்டாக விளங்கும். காலத்திற்கு காலம் தமிழர் மத்தியில் தோன்றும் புல்லுருவிகளால் தமிழர் வரலாற்றை திசை திருப்பி விட முடியாது. சுதந்திரம் வேண்டிப் போராடும் இனத்தால் மாத்திரமே காத்திரமான வரலாற்றைப் படைக்க முடியும்.
கருத்துகள் | | Read More...

மருத்துவமனையில் கடமை நேரத்தில் மது அருந்திப் பாட்டி - நோயாளியைக் கொண்டுசெல்ல முடியாது என கூறிய அம்புலன்ஸ் சாரதி

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்தியசாலையில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு குறித்த வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டிச் சாரதி மது அருந்தியதனால் வரமுடியாது என கூறியுள்ளாராம்.
இது பற்றி தெரியவருவதாவது:

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 29.12.2010 ஆம் திகதி அன்று இரவு 8.00 மணியளவில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் நோயாளி அனுமதிக்கப்பட்டு பின்பு இவரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டி ஏற்பட்டது.

அந்த நேரத்தில் குறித்த வைத்தியசாலையில் ஒரு பிரியாவிடை பாட்டி நடைபெற்றதாம். இதனால் அம்புலன்ஸ் வாகன சாரதியும் அந்த பாட்டியில் மது அருந்திக்கொண்டிருந்தாராம். இதனால் தன்னால் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வர முடியாதென கூறினாராம்.

இதனால் நோயாளியின் உறவினர்கள் மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன் அவர்களை தொடர்பு கொண்டு விடயத்தை சொல்ல அரியநேத்திரன் அவர்கள் தனது வாகனத்தை அனுப்பி குறித்த நோயாளியை மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்த்திருக்கிறார்.

குறித்த இந்த விடயமாக பா.அரியநேத்திரன் அவர்களிடம் கருத்து கேட்டபோது மேற்படி சம்பவம் நடைபெற்றதை தான் உறுதிசெய்வதாகவும் அத்துடன், வைத்தியசாலையில் கடமை நேரத்தில் ஒரு அலுவலர் மது அருந்திவிட்டு தனது கடமையை செய்யமுடியாதென கூறுவதானது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமாகும் எனவும் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் எனவும் கூறினார்.
கருத்துகள் | | Read More...

நவாலியில், சேற்றுக்குள் தலையை அமிழ்த்தி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட முயற்சி! அயலவர்கள் திருடனை மடக்கிப் பிடித்தனர்


யாழ்ப்பாணம், நவாலி பிரதேசத்தின் வழுக்கையாற்று வயல்வெளியில் பெண் ஒருவரை சேற்றுக்குள் தலையை அமிழ்த்தியும் தொண்டையைத் திருகியும், கடித்தும் நகைகளைக் கொள்ளையிட திருடன் ஒருவன் எடுத்த முயற்சி அயலில் நின்ற ஒருவரின் செயற்பாட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அயலில் நின்றவர் கூக்குரலிட்டதனால் வயல்வெளியில் நின்றவர்கள் ஒன்றுதிரண்டு கொலை முயற்சியை தடுத்து நிறுத்தியதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட நபரையும் மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் நவாலி தெற் கிலுள்ள வழுக்கையாற்று ஆயம்பிட்டி இந்து மயான வயல் வெளியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

கால்நடைகளுக்கு புல்வெட்டுவதற்காக தினமும் மாலை வேளைகளில் தனியாகச் சென்று வருபவர் திருமதி சந்திரகுமார் செல்வராணி (வயது 50).

இவர் நேற்று மாலை 5.30 மணியளவில் ஆயம்பிட்டி இந்து மயானத்திற்கு அருகில் புல் அறுக்கும் போது திடீரெனப் பாய்ந்த திருடன், பிரஸ்தாப பெண்மணியின் தொண்டையைத் திருகி கடித்து வயல் வெளியில் உள்ள சேற்று நீரில் தலையை அமிழ்த்திக் கொலை செய்ய முயற்சித்தான்.

இவ்வேளையில், அலறல் சத்தமிட்ட பெண்ணின் குரலைக் கேட்ட ஒருவர் சம்பந்தப்பட்டவனை மடக்கிப்பிடிக்க முயல்கையில் அயலில் நின்றவர்களும் உதவிக்கு வரவே திருடன் வகையாக மாட்டிக்கொண்டான்.

சம்பந்தப்பட்ட திருடன் கொக்குவில் கிழக்கு தலையாழி ஒழுங்கையைச் சேர்ந்த குலதீஷ்வரன் தனுசன் (வயது 20) என அவரது அடையாள அட்டையில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறுகாயங்களுக்கு உள்ளாகிய நான்கு பிள்ளைகளின் தாயாராகிய திருமதி செல்வராணி சந்திரகுமார் தொண்டையிலும், கையிலும், காதிலும் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மனப்பீதிக்கும் பாதிப்புக்கும் உள்ளாகியுள்ளார்.

சம்பந்தப்பட்ட இளைஞனை நவாலிப் பிதேசத்தில் நிலை கொண்டுள்ள படையினரும் மானிப்பாய் பொலிஸாரும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இதேவேளை, நவாலியில் அண்மையில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு பின்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டதும் தெரிந்ததே.
கருத்துகள் | | Read More...

சிலோன் என்ற சொல் வழக்கில் இருக்காது: அரசின் அடுத்த அறிவிப்பு!

Penulis : Antony on வியாழன், 30 டிசம்பர், 2010 | 2:09 PM

வியாழன், 30 டிசம்பர், 2010

இலங்கைத்தீவிலுள்ள ­­­­­­­”சிலோன்” அல்லது ”இலங்கை” என ஆரம்பிக்கும் அனைத்து பொதுநிறுவனங்களின் பெயர்களும் ”சிறிலங்கா” என மாற்றப்படவுள்ளதாக சிறிலங்கா அரசின் தகவற்றுறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது அந்நாட்டில் இலங்கை வங்கி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை சுற்றுலாச்சபை என்றே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பண்டைக்காலத்தில் கிரேக்கர்களால் தப்ரோபேன் என்றும் அரபுக்களால் செறண்டிப் எனவும் அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, 1505 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர்கள் அத்தீவுக்கு வந்தபோது ”சிலோ” என பெயரிட்டனர். இதனை ஆங்கிலத்தில் ”சிலோன்” என எழுதப்பட்டது.

பிரித்தானியாவின் ஆதிக்கத்துக்குள் இத்தீவு முழுவதும் வந்தபோது, தீவு முழுவதையும் ஒரே ஆளுகைக்குள் கொண்டுவந்த பிரித்தானியர் ”சிலோன்” என்ற ஒரு ஆளுகைபிரதேசமாக நிர்வகித்தனர்.

சிங்களத்தில் சிறிலங்கா எனவும் தமிழில் இலங்கை எனவும் அந்நாட்டை குறிக்கும் வழக்கு இருந்துவருகின்றபோதும், தமிழர்களை பொறுத்தவரை இலங்கை என்பது இரண்டு தேசங்களின் ஒன்றியமாகவும் சிறிலங்கா என்பது சிங்கள தேசம் எனவும் கொள்ளப்பட்டுவருகின்றது.

1972 ஆம் ஆண்டு யாப்பின்படி சிலோன் என்பதிலிருந்து சிறிலங்கா என மாற்றம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிலங்கா என்பது அன்னியப்பட்ட பெயராக தமிழ் மக்களால் பார்க்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தமது பெயரில் அதுவரை இருந்த இலங்கை என்பதை சிறிலங்கா என மாற்றுவதா என்ற குழப்பத்தில் இருந்துவந்தனர்.

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு முன்னோடியாக தனது கட்சியின் பெயரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என மாற்றம் செய்தது.

தற்போது தமிழ் கட்சிகளாகவுள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை இம்மாற்றத்திற்கு எவ்வாறான எதிர்வினையாற்றப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்கின்றனர் நோக்கர்கள்.

கடந்த வருடம் தமிழ் கட்சிகளின் பெயர்களில் தமிழ் என்ற வார்த்தை பிரயோகம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவருவது பற்றி யோசனை செய்யப்பட்டது. ஆனால் கடும் எதிர்ப்பினார் அம்முடிவு கிடப்பினில் போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

ஏழு மாத கர்ப்பிணியான 15 வயது சிறுமி: 64 வயதுடைய நபர் கைது

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திலகவதியார் இல்லத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதைக் அறிந்து, அதற்கு காரணமாக இருந்த 64 வயதுடைய நபர் ஒருவரை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற சுகாதாரவைத்தியர் பிரிவில் புத்தக கட்டுனராக இருந்த ஒருவரே குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், குறித்த நபர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தும்பங்கேணி திக்கோடையைச் சேர்ந்த குறித்த சிறுமி செட்டிபாளையத்தில் கல்வி கற்று வந்துள்ளார். கடந்த 10ஆம் மாதம் இவர் குழப்படி அதிகம் என்ற காரணத்தினால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் அவர் தும்பங்கேணியில் பாடசாலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது இவருடைய வயிறு பெரிதாக இருப்பது கண்டு வைத்தியரிடம் சோதனை நடத்திய போது இவர் கர்ப்பிணி என்பது தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்டந்து சிறுமியிடம் விசாரணை செய்த வேளை குறித்த சந்தேக நபர் தன்னுடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
கருத்துகள் | | Read More...

துணைக் குழுக்களை பயன்படுத்தி அரசே படுகொலைகளில் ஈடுபட்டது: அமெரிக்கா

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு துணை இராணுவக்குழுக்களான ஈ.பி.டி.பி, பிள்ளையான் குழு உட்பட பல குழுக்களை பயன்படுத்தி படுகொலைகளில் ஈடுபட்டுவந்ததை விக்கிலீக்ஸ் இணையத்தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் 2007 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலில், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா இந்த கொலைக் கும்பலை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, கொழும்பின் பாதுகாப்புக்கும் மகிந்தா இந்த குழுக்களை பயன்படுத்தி வந்துள்ளார். கொழும்பில் தங்கியிருப்பவர்களில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்கள் என கருதப்படுபவர்களை இந்த குழுக்களே கடத்தி படுகொலை செய்துள்ளன.

சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கையால் கொழும்பு நகரம் கடும் பதற்றத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்தது. துணைஇராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சா யாழ் மாவட்ட கட்டளைத்தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்.

துணை இராணுவக்குழுவினரே பெருமளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர். துணை இராணுவக்குழுக்களுடன் இணைந்து செயற்பட்ட இராணுவப் புலனாய்வுப்பிரிவினரின் நடவடிக்கைகளிலும் தலையிடவேண்டாம் என இராணுவ உயர் அதிகாரிகள் பணிக்கப்பட்டிருந்தனர்.

டக்களஸ் தேவானந்தாவின் உதவியுடன் கருணாவே 2005 ஆம் ஆண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்திருந்தார். மகிந்தா ராஜபக்சா பதவியேற்ற பின்னர் ஒரு வாரத்தில் இது மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதே குழுவினரே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் என்பவரையும் படுகொலை செய்திருந்தனர்.

தமிழ் வர்த்தகர்களை பயமுறுத்தி பணத்தை சேகரிக்கும்படி கோத்தபாயாவே ஈ.பி.டி.பி மற்றும் கருணா குழுக்களை பணித்திருந்தார் என றொபேட் ஓ பிளேக் மேலும் தெரிவித்துள்ளதாக அதில் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
கருத்துகள் | | Read More...

பதுளையில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைது: முக்கிய பிரமுகர்களை இலக்கு வைத்துக் காத்திருந்தாரா?

Penulis : Antony on புதன், 29 டிசம்பர், 2010 | 3:48 PM

புதன், 29 டிசம்பர், 2010

பதுளையில் விடுதலைப் புலிகளின் முக்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இரகசியப் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவருக்கும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக புலனாய்வுத்துறையினரின் விசாரணைகளின் போது தகவல்கள் வெளிவந்துள்ளன.

கைது செய்யப்பட்டுள்ளவர் மல்லாகம் பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் கடந்த 2006ம் ஆண்டு முதல் பதுளையில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். பதுளையில் காளி கோயிலின் அர்ச்சகராகவும் கடமையாற்றியுள்ளார். ஆனாலும் இவருடைய பெயரை இன்னமும் வெளியிடவில்லை.

பதுளையில் உள்ள முக்கியஸ்தர்கள் அல்லது பதுளைக்கு வரும் முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துத் தாக்குதலொன்றை மேற்கொள்ளும் திட்டத்துடனேயே அவர் பொட்டம்மானால் பதுளைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் | | Read More...

கே.பியின் யாழ் விஜயம்: மர்மம் என்ன? (காணொளி இணைப்பு)


தன்னை இலங்கை புலனாய்வுத்துறையினர் மலேசியாவில் இருந்து கைதுசெய்து கூட்டிவந்தனர் என்றும் தான் சிறையில் இருப்பதாகவும் கூறிவரும் கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாபன் கடந்த 21ம் திகதி ரகசியமாக யாழ்ப்பாணம் சென்று அங்கு அவருக்காகவே நடாத்தப்பட்ட சில பிரத்தியேக நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். தான் நடத்திவரும் நெரடோ என்னும் அமைப்பினூடாக உதவிகளைச் செய்யவே தான் யாழ் விஜயம்செய்ததாக அவர் செய்திகளைக் கசியவிட்டாலும், முந் நாள் புலிகளின் உறுப்பினர்களில் சிலரை இவர் அங்கு சந்தித்ததாகவும் அறியப்படுகிறது. புலிகளின் முந் நாள் ஊடகப் பொறுப்பளர் தயா மாஸ்டரைச் சந்தித்த கே.பி மேற்படி சில நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட சில முந் நாள் புலிகளின் உறுப்பினர்களையும் இவர் யாழில் சந்தித்ததோடு, தமது உறவினர்கள் வீட்டில் மதிய உணவு அருந்தியதாகவும் யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழில் ஏழைகளுக்கு உதவச் சென்றதாக இவர் பரப்பிவரும் கதைகளுக்கு பின்னணி என்ன என்பதே தற்போது புலப்படாத விடையமாக உள்ளது. அவர் யாழ் வந்துசென்ற ஆதரங்களுக்கான வீடியோவும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் | | Read More...

எம்ஜிஆரை இழிவுபடுத்திய வைரமுத்து?


இறந்தபின்பும் வாழ்ந்து கொண்டிருப்பவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். "அவர் எவ்வளவு பெரிய மனிதர் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்" என்று உருகி உருகி பேசுகிறார் சீமான். இப்படி எதிர்கருத்து கொண்டவர்களையும் வியக்க வைத்தவர் அவர். திரையுலகில் சாகா வரம் பெற்ற ஒரு மனிதரை என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் கொச்சை படுத்தியிருக்கிறார் வைரமுத்து. சற்று தாமதமாகவே இந்த செய்தி வெளியே எட்டியிருக்கிறது. இதனால் கொதித்துப் போயிருக்கிறார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள்.

நடிகர் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளிவந்த ஆண்பாவம் படத்தின் 25 வது வருட வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வைரமுத்து. இந்த நிகழ்ச்சியில் திரையுலகத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். பாண்டியராஜன் கைகளை நடிகர் கரண் முத்தமிட்டார். இது எம்ஜிஆர் முத்தமிட்ட கை. அதனால்தான் நானும் முத்தமிட்டேன் என்றார் அவர்.

பின்னாலேயே பேச வந்தார் வைரமுத்து. அப்போது அவர் பேசியதுதான் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. 1965ல் எங்கள் ஊருக்கு மக்கள் திலகம் வந்தார். அதில் சரியான கூட்டத்தில் வேட்டி, சட்டை கிழிய ஒருவர் முண்டியடித்துக் சென்று எம்ஜிஆரை தொட்டுவிட்டு வந்தார். அவரிடம், ஏன் இப்படி? என்றேன். அதற்கு அவர், அந்த கால முன்னணி நடிகையின் பெயரை குறிப்பிட்டு அந்த நடிகையை எம்ஜிஆர் தொட்டார். நான் எம்ஜிஆரை தொட்டேன். அது அந்த நடிகையையே தொட்ட மாதிரி என்றார் மகிழ்ந்து போய். அதுபோல இங்கு பாண்டியராஜனை தொடுவது எம்ஜிஆரை தொடுவது போல என்று பேசினார்.

அவரது இந்த பேச்சு வேறு என்னென்ன எதிர்ப்புகளை தூண்டிவிடுமோ, இனிமேல்தான் தெரியும்!
கருத்துகள் | | Read More...

திரையுலக கிரிக்கெட்டீம்க்கு புலிகள் என்று வைக்க முடியாது ஏன் ? பின்னனி என்ன ?


இந்தி,தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகினர் தங்களுக்குள் கிரிக்கெட்டீம் உருவாக்கி அவற்றுக்குள் போட்டிகள் வைத்து வெற்றி பெறுகிறவர்களுக்குப் பரிசுகள் கொடுக்கிறார்கள். அங்கெல்லாம் நடந்து கொண்டிருப்பதைப் போல தமிழ்த்திரையுலகிலும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார் ராதிகா. சிம்பு,ஜெயம்ரவி,அப்பாஸ்,ஷாம்,ஜீவா,ரமேஷ்,கார்த்தி,நரேன்,ரமணா,அம்சவிர்தன் போன்றோரை வைத்து ஒரு கிரிக்கெட்டீமை உருவாக்கியிருக்கிறார்கள். ஜனவரி மாதத்தில் இந்தி,தெலுங்கு,கன்னடம் ஆகிய குழுக்களோடு தமிழ்த்திரையுலகத்தினரும் மோதும் உண்மையான கிரிக்கெட்போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்காக சர்வதேச கிரிக்கெட்டில் இருப்பதுபோன்றே உடைகள் வடிவமைப்பு தொடங்கி பல விசயங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அணிகளுக்குப் பெயர்
  • ... Read More
  • கருத்துகள் | | Read More...

    தேசிய கீதம் சிங்கள மொழியில்தான் செவிடன் காதில் ஊதிய சங்கானது

    சிறிலங்காவில் பல்லாயிரக்கணக்கானவர்களின் உயிர்களைக் காவுகொண்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 6 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு கடந்த 26ம் நாளன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

    சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டினை எதிர்த்துத் தமிழ்ச் சமூகத்தினர் தொடரான போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்ற போதும் குடாநாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட்டிருக்கிறது.

    இந்திய ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரசில் P K Balachandran எழுதிய செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஆழிப்பேரலையினை நினைவுகூரும் வகையில் இடம்பெற்ற இந்தப் பிரதான நிகழ்வில் சிறிலங்காவினது அதிபர் டீ.எம் ஜெயரத்தின பங்குபற்றியதால் தேசிய கீதத்தினைச் சிங்கள மொழியில் பாடுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியிருந்ததாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

    தேசிய கீதம் சிங்கள மொழியில்தான் பாடவேண்டும் என இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும் அரச அதிகாரிகளும் படைத்தரப்பினரும் கூட்டாக வலியுறுத்திய அதேநேரம் தேசிய கீதத்தினைச் பாடுமாறு பணிக்கப்பட்ட தமிழ் மொழிமூலப் பாடசாலையான இந்து மகளிர் கல்லூரியின் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இதனைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள்.

    இருந்தும் மாற்றுத் தேர்வுகள் எதுவுமின்றி இவர்கள் சிங்கள மொழியிலே தேசிய கீதத்தினைப் பாட நேர்ந்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் இது தொடர்பான செய்திகள் பரவலாக வெளிவந்திருந்தன.

    சிங்கள மொழி தமக்குத் தெரியாது என்பதால் அந்த மொழிச் சொற்களை உச்சரித்துப் பாடுவதற்குத் தங்களால் முடியாது என இந்த மாணவிகள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

    தாங்கள் தமிழ் மொழியிலேயே தேசிய கீதத்தினைப் பாடிப் பழக்கப்பட்டவர்கள் என வாதாடியிருக்கிறார்கள். ஆனால் இவர்களது எதிர்ப்புகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கானது.

    குறிப்பிட்ட இந்தச் சம்பவம் தொடர்பாக குடாநாட்டினைச் சேர்ந்த ஒரேயொரு தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகமொன்று கேவ்வியெழுப்பியபோது, நாட்டினது அதிபர் மற்றும் பிரதமர் போன்ற உயர் மட்டத் தலைவர்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளில் தேசிய கீதத்தினைச் சிங்கள மொழியில் பாடுவதுதான் வழமை என்றிருக்கிறார்.

    குறிப்பிட்ட இந்த நிகழ்வானது கொழும்பு அரசாங்கத்தினால் நேரடியாக ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்விது எனக் குறிப்பிட்ட யாழ் மாவட்ட அரச அதிபர் எமில்டா சுகுமார், அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு அமையச் செயற்படுவதைத் தவிர தமக்கு மாற்றும் தேர்வேதும் இல்லை என்றிருக்கிறார்.

    'சிறிலங்கா மாதா' எனத் தொடங்கும் சிறிலங்காவினது தேசிய கீதமானது பெரும்பான்மை இனத்தவர்களின் மொழியான சிங்களத்திலேயே எழுதப்பட்டபோதும் 1952ம் ஆண்டு முதல் அதன் உத்தியோகபூர்வ தமிழ் மொழிபெயர்ப்பான 'சிறிலங்கா தாயே' என்ற வடிவமே தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளிலும் பாடசாலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அண்மையில் சிறிலங்காவினது அமைச்சரவையில் சிங்கள மொழியில் மாத்திரம்தான் தேசிய கீதம் பாடப்படவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை உருவெடுத்திருந்தது.

    இதனைத் தொடர்ந்து தமிழ் ஆர்வலர்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த வாதத்தினை முற்றாக எதிர்த்த அதேநேரம் சிங்களத் தேசியவாதிகள் இதற்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள்.

    குறிப்பிட்ட இந்த விடயம் தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்மும் எடுக்கப்படாதபோதும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற படைக்கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்படவேண்டும் என படையினர் வலியுத்துவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
    கருத்துகள் | | Read More...

    கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட மீசாலை இளைஞர் சடலமாக மீட்பு

    தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
    கடந்த திங்கட்கிழமை மீசாலை கனகம்புளியடியில் உள்ள வீட்டிற்குச் சென்ற இருவர் மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

    இவர் ஒரு வாகனப் புறோக்கர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அழைத்துச் சென்றவர்கள் செல்வத்தின் நண்பர்கள் என தாம் நம்பியதாக அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக அவர் காணமல் போயிருந்தார். எனினும் நேற்றிரவு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பில் தனது மகன் மகேந்திரன் செல்லம் கடத்தப்பட்டு இருப்பதாகவும் 80 லட்சம் ரூபா கப்பம் வழங்கினால் மட்டுமே அவரை விடுவிக்க முடியும் என கடத்தல்காரர்கள் கோரியதாக தந்தையார் தெரிவிக்கிறார்.

    கப்பத்தை கொடுக்க மறுத்த குடும்பத்தினர் பொலிசாரின் உதவியை நாடியிருந்தனர். ஆயினும்; அவரது சடலம் இன்று இரவு மீசாலையில் மீட்கப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட சடலம் தற்போது யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    கருத்துகள் | | Read More...

    தமிழ் பொறியியலாளர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை


    இலங்கை வவுனியாவைச் சோ்ந்த தமிழ் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா கலிபோர்னியா மாநகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
    குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக வவுனியாவில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு கொலையுண்டவர் 25 வயதையுடைய அமரசிங்கம் சுஜன் என தெரியவந்துள்ளது. இவர் கடந்த வருடம் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா சென்றிருந்தூர்.

    இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவுக் கடமையாற்றிய வேளையில் அங்கு வந்துள்ள கொள்ளையர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

    குறித்த பொறியியலாளரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தூதரகங்களினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
    கருத்துகள் | | Read More...

    ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற மனித உரிமை அமர்வுகளில் இலங்கைக்குத் தலைக்குனிவு

    ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற மனித உரிமை அமர்வில் இலங்கை எழுப்பிய ஆட்சேபனையை அந்தச் சபை ஏற்றுக் கொண்டுள்ளது.
    ஐரோப்பிய யூனியனுக்கான இலங்கைத் தூதுவர் எழுத்துமூலம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தார்.

    கடந்த ஆறாம் திகதி மோதல்களுக்குப் பிந்திய இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றபோது,அதில் பங்கேற்றவர்கள் முழுக்க முழுக்க இலங்கைக்கு எதிரான கருத்துக்களைப் பிரதிபலித்தனர்.

    அப்போது அந்த அமர்வுக்கு தலைமை தாங்கியவர் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டுக்கு விளக்கமளிப்பதற்கான நேரத்தை வழங்கவில்லை. அது முற்றிலும் பாரபட்சமானது என்று பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதுவர் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

    இலங்கைக்கு விளக்கமளிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டு பெல்ஜியத்திலுள்ள இலங்கைத் தூதுவர் ரவினாத ஆரியசிங்கவுக்கு, ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமை உப குழுவின் தலைவர் ஹேடி ஹடுவாலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    தனது கருத்துக்களை எழுத்துமூலம் அறிவிக்கும்படியும்,அதற்கு உரிய முக்கியத்துவம் அளித்து மனித உரிமை உப குழு உறுப்பினர்களிடையே அது விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    தமிழ்ப் பெண்களுக்கு இலங்கை அரசு கொடுமை: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு

    இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து கொடுமைகளை செய்து வருகிறது என, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகார அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் கூறியுள்ளதாக இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மேலும், இதுதொடர்பான விவரங்களை மனித உரிமை அமைப்புகளுக்கு உரிய ஆதாரங்களுடன் சமர்பிப்போம் என்றும் பாலாம்பிகை முருகதாஸ் அந்த செய்தியில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது, காலங்காலமாக இலங்கை அரசும் அதன் முப்படைகளும் தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுவந்துள்ள இன அழிப்பு முயற்சிகளை மிகக் கொடூரமாகச் சந்தித்து வந்தவர்கள் தமிழ்ப் பெண்கள், சிறுவர், முதியோர் ஆகியோரே. இலங்கை படைகள் சென்ற ஆண்டு நடத்திய போரின்போது அப்பாவிப் பொதுமக்களைக் குறிவைத்து மேற்கொண்ட குண்டு வீச்சுக்கள், கொலைகளின் போது கூடுதலாகப் பாதிப்புக்குள்ளானவர்களும் இவர்களே.

    அண்மைக்காலமாக ஊடகங்கள் வழியாக ஈழப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பயங்கரக் கொடுமைகள், சித்ரவதைகள், படுகொலைகள் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இக்காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளெல்லாம் கொடூரமான கதையொன்றின் சிறுபகுதி மட்டுமே.

    இளம்பெண்கள் எத்தனையோ பேர் இலங்கை அரசின் பிடியில் சிக்கி பாலியல் துன்புறுத்தலுக்கு தினமும் உள்ளாகின்றனர். ஊடகவியலாளராகப் பணியாற்றிய இசைப்பிரியா, உசாலினி மற்றும் பலரது கொடூரம்மிக்க அனுபவங்கள் இலங்கை அரசின் கைகளில் தமிழ்ப் பெண்கள் வயது வேறுபாடின்றிக் கொடுமைக்குள்ளாவதைத் தெளிவாக்குகிறது.

    எமது அமைச்சகமானது பெண்கள் சிறுவர் முதியோர்களுக்கு எதிராக இலங்கை அரசால் இழைக்கப்பட்ட, இழைக்கப்படும் கொடுமைகளை சர்வதேச அளவில் இயங்கும் பெண்களுக்கான இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கு ஆவணங்கள் மூலமாகவும்; நேரடித் தொடர்புகள் ஊடாகவும் கொண்டு வந்து அவர்களின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பிரிட்டன் பெண்கள் அமைச்சகம், நிழல் அமைச்சகம் போன்றவற்றுடனும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பாலாம்பிகை முருகதாஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தை பார்க்க முண்டியடிக்கும் சிங்கள சுற்றுலாப் பயணிகள்

    வடக்கிற்கு தினமும் வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தை பார்க்க முண்டியடிக்கின்றனர். இதனால் நாள்தோறும் கிளிநொச்சிப் பகுதியில் சிங்கள மயமாக காணப்படுகிறது.
    விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் மற்றும் அரசியல்துறை நடுவப் பணியகம் போன்ற முக்கிய பகுதிகள் அமைந்த பகுதியை கைப்பற்றிய இராணுவத்தினர் அவற்றை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

    தமிழ் மக்கள் எவரையும் அந்தப் பகுதிகளுக்கு உள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் அண்மைய நாட்களாக தெற்கிலிருந்து வரும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் சமாதான செயலக வீதியின் முன்னால் நிறைந்து நிற்கின்றனர்.

    அவர்களில் சுமார் நூறு பேர் வரையில் ஒவ்வொரு தடவையும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். படையினரால் வெற்றி கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் தளங்களை பார்வையிட தம்மாலான முழுமையான ஒத்துழைப்பை மக்களுக்கு வழங்கி வருவதாக படையினர் தெரிவிக்கின்றனர்.

    இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் அங்கு மீளக் குடியமரவோ குறித்த பகுதிகளில் தங்கள் வீடு வளவுகள் எப்படி உள்ளன என்று பார்வையிடவோ அனுமதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
    கருத்துகள் | | Read More...

    நிர்வாக சேவைக்கான தெரிவில் தமிழர்கள் எவருமில்லை

    Penulis : Antony on செவ்வாய், 28 டிசம்பர், 2010 | 3:20 PM

    செவ்வாய், 28 டிசம்பர், 2010


    சிறிலங்கா நிர்வாக சேவைகளில் [Sri Lanka Administrative Service - SLAS] இணைத்துக்கொள்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 135 பேருக்குமான நியமனக் கடிதங்களைக் கடந்தவாரம் அதிபர் ராஜபக்ச வழங்கியிருந்தார்.

    நாட்டினது அனைத்துச் சமூகத்திலிருந்தும் சிறிலங்காவினது நிர்வாக சேவைக்கான ஆட்கள் திரட்டப்படுவதுதான் வழமை.

    ஆனால் புதிதாக நியமனம் பெற்றிருக்கும் 135 பேரில் தமிழர்கள் எவரும் இல்லாத அதேநேரம் ஒரேயொரு முஸ்லீமுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

    இவ்வாறு 'லக்பிம நியூஸ்' செய்தித்தளத்தின் Ranga Jayasuriya எழுதியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

    நேர்காணலுக்காக தெரிவுசெய்யப்பட்ட 257 விண்ணப்பதாரிகளில் ஒரு தமிழர்கூட இல்லை. பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு விவகார அமைச்சர் பி.பி அபயக்கோன் கூட இந்த அநீதியினை உறுதிப்படுத்துகிறார்.

    இருப்பினும் நிலைமையினைச் சீர்செய்வதோடு தமிழர்களுக்கும் வாய்ப்புக் கொடுப்பதற்கான சந்தர்ப்பங்கள் அரிதாகவே காணப்படுகின்றன.

    பொதுவான போட்டிப் பரீட்சையின் ஊடாகவே இதற்கான ஆட்தெரிவு இடம்பெற்றதாகவும் தமிழ் மொழிமூலம் தோற்றிய பரீட்சார்த்திகள் எவரும் போதிய புள்ளிகளைக் பெறவில்லை என இந்த அமைச்சர் விளக்கமளிக்கிறார்.

    தமிழ் மொழிமூலக் கல்விமான்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சினால் இந்த பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்பட்டபோது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்திகள் போதிய புள்ளிகளைப் பெறுவதற்குத் தவறியமையினால் அமைச்சினால் எதுவும் செய்யமுடியாதுள்ளது என அமைச்சின் செயலாளர் கூறுகிறார்.

    எது எவ்வாறிருப்பினும் தாம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டதாகவே தமிழ் மொழிமூலப் பரீட்சார்த்திகள் கருதுகிறார்கள். தமிழர்கள் இன ரீதியில் ஓரங்கட்டப்படுவதையே இது காட்டுக்கிறது என அம்பாறை மாவட்ட பொது நிர்வாக அதிகாரியான கலாநிதி ஏ.எல் பாறூக் கூறுகிறார்.

    அண்மைய அம்பாறை மாவட்டச் செயலகத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் 29 பணியாளர்களில் ஒரேயொருவர் மாத்திரம்தான் தமிழ் பேசுவார் என அவர் கூறுகிறார்.

    "அம்பாறை மாவட்டத்தில் வழபாபிட்டி [Valapapitty] போன்ற தனித் தமிழர்களைக் கொண்ட கிராமங்களுக்கு இதுபோல சிங்கள மொழியினை மாத்திரம் பேசும் அலுவலர்கள் பணிக்கமர்த்தப்பட்டிருப்பதானது அரச அதிகாரிகளுடன் மக்கள் தொடர்பு கொள்ளமுடியாததொரு நிலையினை ஏற்படுத்தியிருக்கிறது" என அவர் தொடர்ந்தார்.

    இன்றைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முல்லீம் சமூகத்தவர்கள் சம அளவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இன ரீதியிலான பரம்பலினை அடிப்படையாகக் கொண்டே அரச நியமனங்கள் வழங்கப்படவேண்டும் என பாறூக் கூறுகிறார்.

    "நாட்டினது பெரும்பான்மைச் சமூகம் எதுவோ அதற்குச் சாதகமாகவே அனைத்து முனைப்புக்களையும் மேற்கொள்ளும் அதேநேரம் ஏனைய இரண்டு சமூகங்களையும் ஒதுக்கும் வகையில் செயற்படுவதானது அவர்கள் மத்தியில் கசப்புணர்வு வலுப்பெறுவதற்கும் இன ரீதியிலான வெறுப்பு அதிகரிப்பதற்குமே வழிசெய்யும்" என அவர் தொடர்ந்தார்.

    இந்த நிலையில் நாட்டினது சிறுபான்மையினைரையும் உள்வாங்குவதற்குத் தேவையான வினைத்திறன்கொண்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வாதிடும் பாறூக் நீண்டபல காலமாக போர் இடம்பெற்றுவந்தமையினாலும் தமிழர்களுக்குக் கல்விக்கான வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக்கொடுக்கப்படாததும்தான் இந்தப் போட்டிப் பரீட்சையில் தமிழ் மொழி மூல பரிட்சார்த்திகள் அதிக புள்ளிகளைப் பெறாதமைக்கான காரணம் என்கிறார்.

    இத்தகைய போட்டிப் பரீட்சைகளின் போது இன ரீதியிலான ஒதுக்கீடு வழங்கப்படுவதானது இதுபோன்ற பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் என அவர் கூறுகிறார்.

    எவ்வாறிருப்பினும், "இன அடையாளத்தின் அடிப்படையில் நியமனங்களை வழங்கவேண்டாம்" என சட்டமா அதிபர் தமக்கு அறிவுறுத்தியிருக்கிறார் என பொதுநிர்வாக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அபயக்கோன் கூறுகிறார்.

    உயர் நீதிமன்றில் தொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றின் மீதான விசாரணையின் போதே சட்டமா அதிபர் இந்த அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார்.

    நாட்டினது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொதுச்சேவையில் பணியாற்றுவதற்காக பணியாளர்களை உள்வாங்கும்போது இந்த மாகணாங்களுக்கு உட்பட்ட போட்டிப்பரீட்சையே மேற்கொள்ளப்படும் என செயலாளர் அபயக்கோன் தொடர்ந்து தெரிவித்தார்.

    1991ம் ஆண்டு முதல் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை வடக்குக் கிழக்கில் இந்தப் போட்டிப் பரீட்சை இடம்பெற்றுவருகிறது.

    2001ம் ஆண்டு இறுதியாக இந்தப் பரீட்சை இடம்பெற்றது. 2011ம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தப் போட்டிப் பரீட்சையின் பின்னர் பொதுச்சேவைகளில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதற்காக 79 தமிழர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

    இவர்கள் ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வடக்குக் கிழக்கில் பணிசெய்வார்கள்.

    1980ம் ஆண்டு தான் அரச சேவையில் இணைந்தபோது கூட இதற்குத் தமிழர்கள் உள்வாங்கப்படும் வீதம் குறைவாகவே இருந்ததாகவும் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் நான்கு அல்லது ஐந்து தமிழர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

    சிறிலங்கா சுதந்திரமடைந்த வேளையிலும் அதற்கு முன்னான காலப்பகுதியில் சிறிலங்காவினது அரச சேவைகளில் தமிழர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள்.

    19ம் நூற்றாண்டில் சிறிலங்காவினது வடக்குப் பகுதியில் கிறீஸ்தவக் கல்லூரிகளில் அதிகமிருந்ததும் இலங்கைத் தீவில் வாழ்ந்த மக்களை பிரித்தானிய ஆட்சியாளர்கள் பிரித்தாழும் தந்திரத்தினைக் கையாண்டதும்தான் இதுபோல அரச சேவைகளில் தமிழர்கள் மேலோங்கிக் காணப்பட்டமைக்கான காரணம்.

    பொதுச்சேவைகளில் மாத்திரமில்லாது வேறுபல துறைகளிலும் பறங்கியர்களும் தமிழர்களும் ஆதிக்கம் செலுத்தினர்.

    சிறிலங்கா கொலணித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலப்பகுதியில் சிறிலங்காவினது ஆயுதப் படையில் 40 சதவீதமான பறங்கியர்களும் 20 சதவீதமான தமிழர்களும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

    சுதந்திர இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதியாக அன்ரன் முத்துக்குமார் என்ற தமிழரே இருந்தார். சுதந்திர இலங்கையின் இரண்டாவது கடற்படைத் தளபதியாக இருந்த ரஞ்சன் கதிர்காமர் சிறிலங்காவின் வரலாற்றில் அதிக காலம் பதவியில் இருந்த கடற்படைத்தளபதி ஆவார். இவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் சகோதரர்.

    எவ்வாறிருப்பினும், சிறிலங்கா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து நிலைமைகளில் படிப்படியான மாற்றம் ஏற்பட்டது.

    சிங்களவர்களின் தலைமையிலான தொடர்ந்துவந்த அரசுகள் தமிழர்களை இன ரீதியாக ஓரங்கட்டும் முனைப்புக்களில் ஈடுபட்டன. சிறிலங்கா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து நாட்டினது பொதுநிர்வாக சேவைகளில் தமிழர்களது விகிதம் வெகுவாகக் வீழ்ச்சிகாணத் தொடங்கியது.

    1970-77ம் ஆண்டு காலப்பகுதியில் சிறிலங்காவினது நிர்வாக சேவையில் 11.1 வீதமான தமிழர்கள் பொறுப்புநிலையில் இருந்தார்கள். ஆனால் 1978-81க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்தத் தொகை 5.7 வீதமாக வீழ்ச்சிகண்டது.

    1948ம் ஆண்டு சிறிலங்காவினது தமிழர்களினது மொத்த சனத்தொகையில் 24.7 சதவீதமான தமிழர்கள் அரச சேவைகளில் இருந்தார்கள். ஆனால் 1985ம் ஆண்டு இந்தத் தொகை 12.6 சதவீதமாக வீழ்ச்சி கண்டிருந்தது.

    பல்கலைக்கழக அனுமதியில் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதும் வெட்டுப்புள்ளி முறைமை கொண்டுவரப்பட்டதும் தமிழர்களது கல்விக்கு, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களது கல்வியினைப் பெரிதும் பாதித்தது.

    பல்கலைக்கழக அனுமதி வழங்கும்போது இதுபோன்ற புதிய முறை கைக்கொள்ளப்பட்டமையினால் அதிக புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்களுக்குப் பல்கலைக்கழக வாய்ப்பு மறுக்கப்பட்ட அதேநேரம் குறைந்த புள்ளிகளைப் பெற்ற கிராமப்புறச் சிங்களவர்கள் பலரும் பல்கலைக்கழகம் சென்றனர்.

    சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரினால் இந்தப் பகுதிகளில் கல்விக்கான வசதிவாய்ப்புக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

    வடக்குக் கிழக்குப் பகுதிகளைக் சேர்ந்த தமிழர் மாணவர்கள் இடப்பெயர்வுக்கு மேல் இடப்பெயர்வினை சந்தித்த அதேநேரம் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் அவர்களது பாடசாலை வளாகங்கள் அபகரிக்கப்பட்டமையினால் பாடசாலைகள் தற்காலிக கூடாரங்களில் இயங்கும் நிலை தோன்றியது.

    போர் முடிவுக்குவந்த இந்த நிலையிலும் வடக்குக் கிழக்கினது கல்வியினை சீர்செய்யும் வகையில் அரசாங்கம் உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கல்விமானும் பத்திரிகையாளனுமான சகாதேவராசா கூறுகிறார்.

    உதாரணமாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் 147 துணைக் கல்விப் பணிப்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகள் பணியாற்றிய போதிலும் அவர்கள் இன்னமும் தற்காலிகமாகவே பணிசெய்து வருகிறார்கள்.

    ஆனால் நாட்டின் ஏனைய பாகங்களில் இதுபோல ஒருவர் துணைக் கல்விப் பணிப்பாளராக இரண்டு ஆண்டுகளுக்குத் தற்காலிகமாகப் பணிசெய்தால் அவர் நிரந்தரமாக்கப்பட்டு விடுகிறார். இதுவும் ஒருவகைப் பாகுபாடுதான் என்கிறார் அவர்.

    "கொடிய போரிலிருந்து தற்போதுதான் மெல்ல மீண்டுவரும் இந்தப் பிராந்தியத்தில் கல்வியின் தன்மை மேம்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்" என அவர் தொடர்ந்தார்.

    அண்மையில் அம்பாறை மாவட்டச் செயலகத்திற்கு நியமனங்கள் வழங்கப்பட்டபோது தமிழர்கள் எவரும் இடம்பெறாதமை தொடர்பாக தாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு அம்பாறை மாவட்ட மத அமைப்புக்களில் கூட்டமைப்பு முறையிடப்போவதாக அம்பாறை மாவட்டத்திலுள்ள உதவி அரசாங்க அதிபரும் குறித்த இந்த அமைப்பின் ஊடக இணைப்பாளருமான சகாதேசராசா கூறுகிறார்.

    எதிர்வரும் தை மாதம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு கிழக்கில் தனது அமர்வுகளை நடாத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
    கருத்துகள் | | Read More...

    இந்திய இளைஞரை கொன்ற இரு நண்பர்கள் பிடிபட்டனர்

    ஹூஸ்டன் : அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய இளைஞர் படுகொலையான வழக்கில், அப்பகுதி போலீசார் இரண்டு பேரை கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில், பசடெனா நகரில் உள்ள ஒரு கடையில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா அருகிலுள்ள எலப்ரோலு என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரா (22) என்ற இளைஞர் பகுதி நேர ஊழியராகப் பணியாற்றி வந்தார்.அவர் பணிக்கு சேர்ந்து மொத்தம் மூன்று வாரங்களே ஆகியிருந்த நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று, அதிகாலையில் முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் திடீரென கடைக்குள் நுழைந்து, ஜெயச்சந்திராவை சுட்டுக் கொன்று விட்டு, அங்கிருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான்.இதுகுறித்து, அக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகளை அப்பகுதி போலீசார், பத்திரிகைகளுக்கு அனுப்பி விசாரித்து வந்தனர். இந்நிலையில், இப்படுகொலை தொடர்பாக, டேனியல் ஜேக்கப் ஸ்டினர்(22) மற்றும் மிக்கேல் ரேய் மோரிஸ்(29) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களில் ஸ்டினர், நேற்று முன்தினம் போலீசில் சரண் அடைந்தார். அவர் தான் முகமூடி அணிந்து வந்து ஜெயச்சந்திராவைக் கொன்றவர், கொள்ளையடித்தவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. தான் திருடிய 19 ஆயிரம் ரூபாயைத் திரும்ப ஒப்படைப்பதாக அவர் கூறியுள்ளார்.சம்பவம் நடந்த போது, தான் அங்கு தவறுதலாக மாட்டிக் கொண்டதாக மோரிஸ் கூறியுள்ளார். இவ்வழக்கில் தன்னைச் சிக்க வைக்க முயற்சி நடப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால், அவர் அங்கு உளவு பார்க்க வந்ததாக, சி.சி.டி.வி.,யில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கருதுகின்றனர்.ஸ்டினர் மற்றும் மோரிஸ் இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் தற்போது போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
    கருத்துகள் | | Read More...

    புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்

    Penulis : Antony on ஞாயிறு, 26 டிசம்பர், 2010 | 5:53 AM

    ஞாயிறு, 26 டிசம்பர், 2010

    விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பெரியார்-எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சீமான் தெரிவித்தார்.
    சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான செந்தமிழன் சீமான் பேசியதாவது:

    மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக் கொண்டு வர போராடியவர் பெரியார். அவரது கருத்துக்களை சினிமா பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர்.

    வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க. உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”, திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது” என்பது போன்ற பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னார் எம்.ஜி.ஆர்.

    ஈழத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர். போல உதவி செய்த தலைவர்கள் யாரும் கிடையாது.

    கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்தீர்கள். 5 மாதம் சிறையில் அடைத்தீர்கள். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.

    1 லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். சிறையில் இருந்து எனது தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னை சந்தித்து விடக் கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருந்தனர். ஓடும் தண்ணீரை 5 மாதம் தேக்கி வைத்து விட்டு பின்னர் திறந்து விட்டால் அது காட்டாற்று வெள்ளமாக ஓடும்.

    அதைப் போல நானும் வேகத்துடன் செயல்படுவேன். தற்போது எனது தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை, இன்னொன்று சிறையில் இருக்கும் எனது தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன்.

    தனி ஈழத்தை வென்றே தீருவோம்.

    இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையில் தொடங்கி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது வரை காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அது வரை சீமான் ஓயமாட்டான்.

    இன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஊழல், இதற்கு முன்பு போபர்ஸ் ஊழல் என காங்கிரஸ் கட்சியின் ஊழலை அடுக்கி கொண்டே செல்லலாம். இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது தற்போது வீண்பழி சுமத்த தொடங்கி உள்ளனர்.

    விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா? விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா? விடுதலைப்புலிகள் ஒரு போதும் கோழைகளை கொல்ல மாட்டார்கள். விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள்.

    விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா?

    நாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்காக போராடவில்லை. அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல போராளிகள், சீர்திருத்தவாதிகள் அல்ல, லட்சியவாதிகள். எனது பேச்சை கேட்பதற்காக என் முன்னால் கூடியிருக்கும் நீங்கள் எல்லாம் எனது பின்னால் அணிவகுத்து வாருங்கள்.

    பிரபாகரனின் தம்பி என்ற உரிமையில் உங்களிடம் இதனை கேட்கிறேன். இந்தியாவுக்கு என்று இறையாண்மை, பண்பாடு எதுவும் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழிகளின் பண்பாடே இந்திய பண்பாடு. தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன்'' இவ்வாறு சீமான் பேசினார்.

    இக் கூட்டத்தில் புகழேந்தி தங்கராஜ், திரைப்பட தயாரிப்பாளர் கோட்டை குமார், சாகுல் அமீது, இயக்குனர் செல்வபாரதி, ராஜீவ்காந்தி, ஆ.சி.ராசா, அமுதா நம்பி, ரேவதி நாகராஜன், வக்கீல் கயல்விழி, அன்புத்தென்னரசன் உட்பட பலர் பேசினர்.

    இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கராசு, அதியமான், அமுதாநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.





    கருத்துகள் | | Read More...

    மட்டக்களப்பில் சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான 6ம் ஆண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனை


    மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 2004 ம்ஆண்டு சுனாமிப் பேரலை அனர்த்தத்தில் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனையுடனான யாகம் மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை நடைபெற்றது.

    மாவட்டத்தின் பிரதான நிகழ்வாகவும் அமைந்த இந் நிகழ்வு நாவலடியிலுள்ள சுனாமி நினைவுத் தூபி அருகில் காலை முதல் நடைபெற்றது.

    நாவலடி சுனாமி நினைவுப் பணி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரார்த்தனையாக, திதியுடன் கூடிய நினைவு விசேட பிரார்த்தனை சோதிடர் சிவ ஸ்ரீ சி.சா.ராமதாஸ குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

    இவருடன் சிவஸ்ரீ முரசொலி மாறக் குருக்கள், சிவஸ்ரீ விக்கினேஸ்வர குருக்கள், சிவஸ்ரீ ஸ்ரீரங்க சர்மா குருக்கள், சிவஸ்ரீ பரமானந்த குருக்கள், சிவஸ்ரீ பகீரத சர்மா குருக்கள், சிவஸ்ரீ தயாபர குருக்கள், சிவஸ்ரீ அனோஜ சர்மா குருக்கள் ஆகியோரும் கிரியைகளை மேற்கொண்டனர்.

    மட்டக்களப்பில் அதிகமான மக்கள் பலியான நாவலடியில் வருடா வருடம் பிதிர் கடமை நடைபெற்று வருகின்றது.அந்த வகையில் இவ்வருடமும் மட்டக்களப்பில் உயிரிழந்த, இலங்கையில், உலகத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் நடைபெற்றது.

    இப் பிரார்த்தனையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது இடங்களில் பிதிர் கடமைகளை நிறைவேற்ற முடியாதவர்களும் கலந்து கொள்வது வழக்கமாகும்.

    இம்முறை இந்நிகழ்வில், மட்டக்களப்பின் பல இடங்களிலிருந்தும் பொது மக்கள் கலந்து கொண்டு தமது உறவனர்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.

    இதில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெத்தினம், ஏ.கிருஷ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், ரி.எம்.வி.பி. அமைப்பின் செயலாளர் நாயகம் கைலேஸ்வரராஜா ஆகியோரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாவலடியில் மாத்திரம் 925 பேர் சுனாமியில் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    இதேவேளை மட்டக்களப்பு நகரில் மாத்திரம் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

    அந்தவகையில், திருச்செந்தூர், டச்பார், உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில் மட்டு.திருமலை மறைமாவட்ட துணை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை, அருட்திரு. யோசப் மேரி ஆகியோர் கலந்து கொண்டு பிரார்த்தனைகளை நடத்தினர்.

    இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுனாமி நினைவுப் பிரார்த்தனைகள், மத அனுஸ்டானங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.












    கருத்துகள் | | Read More...

    சுனாமி அனர்த்தத்தில் மரணமடைந்தோருக்காக சமய கிரியைகள்

    சுனாமி அனர்த்தத்தில் மரணமடைந் தோருக்காக சமய கிரிகைகள் இடம் பெற்றன.

    கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதி இடம் பெற்ற சுனாமி அனர்த்தம் காரணமாக சுமார் 45000 பேர் மரணமடைந்தனர்.

    இதனை நினைவு கூறும் முகமாக ஜப்பானைச் சேர்ந்த பௌத்த மத குரு ஒருவர் சமய கிரிகைளை மேற்கொண்டார்.

    காலியில் மஹகால்ல என்ற இடத்தில் ஒளிவிளக்கேற்றியும் மற்றும் சமய சடங்குகள் பலவற்றையும் அவர் மேற்கொண்டார்
    கருத்துகள் | | Read More...

    புலிகளின் தாக்குதல் குழுவொன்று இலங்கைக்குள் ஊடுருவல்?

    தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் கும்பலொன்று இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் எனவும் அக்குழு இலங்கையின் பொருளாதார மையங்கள் மீது தாக்குதல் நடத்தலாம் எனவும் சந்தேகித்து, இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக ரிவிர, லக்பிம ஆகிய சிங்கள பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

    இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய பிரபுக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த விடுதலைப்புலிகளின் சூழ்ச்சித் திட்டம் அம்பலமானதைத் தொடர்ந்து இந்தக் குழு இலங்கைக்குள் ஊடுருவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டு இந்திய புலனாய்வுப் பிரிவான றோ இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

    ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய பிரபுக்களின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு றோ உளவுப் பிரிவு இலங்கைப் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
    இந்தியாவில் மேற்கொள்ளவிருந்த தாக்குதல் சூழ்ச்சித் திட்டம் அம்பலமாகியதனைத் தொடர்ந்து, குறித்த கும்பல் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கலாம் என றோ உளவுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவிலிருந்து பெருமளவிலான இலங்கை அகதிகள் நாடு திரும்பி வரும் சந்தர்ப்பத்தில், அகதிகள் என்ற போர்வையில் இவர்கள் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, இலங்கைப் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த புதிய முயற்சியை முறியடிக்கும் நோக்கில் மேற்குலக நாடுகளின் தூதுவராலயங்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்னர்.

    இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்ய புலிகள் சூழ்ச்சித் திட்டம் தீட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் இழக்கப்படுவதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பின் சூழ்ச்சித் திட்டமே பிரதான காரணி என புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

    இலங்கை போர்க் குற்றச் செயல் தொடர்பான, பான் கீ மூனின் ஆலோசனைக் குழு ஏதேனும் காரணங்களுக்காக சில வேளைகளில் இலங்கைக்கு விஜயம் செய்தால், போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக சர்வதேச ரீதியில் பிரச்சாரங்களை மேற்கொள்ள புலிகளின் சர்வதேச வலையமைப்பு ஏற்கனவே திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

    இவை எல்லாவற்றையும் தொகுத்துப் பார்க்கையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமது அரசியல் நலன்களுக்காக பாவித்து, புலிகளைச் சாட்டாக வைத்தே காலத்தை கடத்தப்போகின்றது அரசாங்கம். அதற்கான உத்தியே புலிகளின் மீள் எழுச்சிக்கான கட்டுக்கதைகள் என புலம்பெயர் ஆய்வாளர்கள் வர்ணித்திருக்கின்றனர்.
    கருத்துகள் | | Read More...

    தனியார் சொத்துக்களை திமுகவினர் அபகரிக்கின்றனர் : ஈ.வி.கே.எஸ்

    காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர், ‘’சென்னை, திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை அரசு அதிகாரிகளின் உதவியோடு தி.மு.க.வினர் அபகரித்து வருகின்றனர். அதற்கான விவரங்கள் என்னிடம் உள்ளது. அதனை உரிய நேரத்தில் வெளியிடுவேன்’’என்று தெரிவித்தார்.

    அவர் மேலும், ’’ தி.மு.க.வினரின் ஊழல்கள், குடும்ப அரசியல் காரணமாக வர உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும். இதனால் தி.மு.க., உடன் கூட்டணி தொடரக்கூடாது என்பது ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

    இது குறித்து கட்சி மேலிடத்திற்கு எடுத்து கூறிவருகிறோம். தமிழகத்தில் காமராஜ் ஆட்சி அமைக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது’’என்று தெரிவித்துள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைப் போட்டுத் தள்ளிய மனைவி!

    கள்ளக்காதலனுடன் கூட்டுச் சேர்ந்து கணவனைக் கொன்று பாழடைந்த கிணற்றில் வீசியுள்ளார் இந்தக் கொடூர மனம் படைத்த மனைவி.

    தனது 55 வயதான கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து 7 வருடங்களுக்கு முன்னர் கொன்று வீசிவிட்டு அந்த இடத்தில் தேயிலைச் செய்கையும் மேற்கொண்டு வந்துள்ளார்.


    குறித்த நபரின் சடலத்தை வதுரம்ப பொலிஸார் மீட்டுள்ளனர். கள்ளக் காதலனையும், கள்ளக் காதலியையும் பொலிஸார் கைது செய்து பத்தேகம நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

    தற்போது நீதவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் கள்ளக் காதலர்கள்.
    கருத்துகள் | | Read More...

    வெந்த மண்ணில் விடுப்புப் பார்க்கும் சிங்களவர்கள்

    வன்னி இறுதி யுத்தம் முடிவடைந்த பிற்பாடு 2010 ஆம் ஆண்டில் மட்டும் தென்னிலங்கையைச் சேர்ந்த 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலா மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.



    இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் இரண்டு இலட்சம் பேர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.



    பாடசாலை விடுமுறைக் காலங்களான ஏப்ரல், ஒகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களிலேயே அதிகளவான மக்கள் யாழ்ப்பாணத்தைத் தரிசித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.



    யாழ்ப்பாணத்திலுள்ள கடற்கரைகள், போர் இடம்பெற்ற பகுதிகள், மத வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைப் பார்வையிடும் நோக்கிலேயே அதிகளவான தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் இங்கு வருவதாக கூறப்படுகின்றது.
    கருத்துகள் | | Read More...

    மகாவம்ச வரலாறு மீண்டும் எழுதப்படவுள்ளது: கலாசார அமைச்சின் கீழ் தனியான செயற்திட்டம்

    Penulis : Antony on சனி, 25 டிசம்பர், 2010 | 5:55 AM

    சனி, 25 டிசம்பர், 2010

    மகா வம்ச வரலாற்றை மீண்டும் எழுதுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கலாசார அமைச்சின் தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
    ஆரம்ப காலங்களில் மகாவம்சமானது விகாரைகளின் மரபுக்கேற்ப பௌத்த மதகுருக்களால் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அதன் பின் காலத்துக்குக் காலம் அதிகாரத்துக்கு வந்த அரசர்கள் அதன் பிற்சோ்க்கைகளை எழுதியிருந்தனர்.

    ஆயினும் மிக நீண்ட காலமாக இலங்கையின் வரலாற்றுத் தொடர் விடுபட்டுப் போயுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னான அரசாங்கங்கள் மகாவம்சத்தின் வரலாற்றுத் தொடரை தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதில் காட்டிய அசிரத்தையே அதற்கான காரணமாகும்.

    இவ்வாறான நிலையில் தன்னையும் முன்னைய கால அரசர்களைப் போன்று கருதிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மகாவம்சத்தின் பிற்சோ்க்கையை இணைக்கத் தீர்மானித்துள்ளார்.

    அதற்கென தற்போதைக்கு கலாசார அமைச்சின் கீழ் தனியானதொரு உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் மகாவம்சத்தின் பிற்சோ்க்கை ஆவணப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
    கருத்துகள் | | Read More...

    தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை: டக்ளஸ்

    ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம், அதில் தவறிருப்பதாக கூறமுடியாது என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்.

    அந்த வகையில் நாளை யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.

    அதற்கு மேலாக அவ்வாறு சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் எதுவிதமான உள்நோக்கங்களும் இருப்பதாக கூறமுடியாது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

    ஆயினும் எதிர்வரும் காலங்களில் தமிழ்ப் பிரதேசங்களில் தேசிய வைபவங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு தான் அமைச்சரவையிடம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வதாக வர்த்தக சமூகம் குற்றச்சாட்டு

    Penulis : Antony on வெள்ளி, 24 டிசம்பர், 2010 | 11:49 AM

    வெள்ளி, 24 டிசம்பர், 2010


    திருட்டு நகையை கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் விடயத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக யாழ்.வர்த்தக சமூகம் குற்றம் சாட்டியிருக்கின்றது.
    நேற்று முன்தினம் யாழ்.மாவட்ட வர்த்தகர்கள் மூவர் திருட்டு நகைகளை கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின் பெயரில் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

    இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி யாழ்.நகைத்தொழில் ஊழியர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு வர்த்தக சங்க பிரதிநிதிகளை நேற்று காலை சந்தித்தனர். இதன்போது வர்த்தகர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே வர்த்தகர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

    ஆவர்கள் மேலும் குறிப்பிடும்போது. யாழ்.குடாநாட்டிhல் தற்போதுள்ள நிலைமை நாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றாகவேயிருக்கின்றது. இதற்காக நாம் எதனையும் செய்யமுடியாது. எனவே பணப்பிளக்கம் மற்றும் பெறுமதியான பொருட்களை வைத்து வியாபாரம் செய்வோர் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    வவுனியாவில் இருந்து கூட்டிவரப்பட்ட திருடன் ஒருவன் யாழ்.நகரில் மூன்று வர்த்தகர்களை காட்டிக்கொடுத்துள்ளார். அவரிடம் இருந்து இந்த மூன்று வர்த்தகர்களும் கொள்வனவு செய்த பவுண் பொலிஸாரினால் மீளப்பெறப்பட்டுள்ளது.

    ஆனால் அதற்கான கடிதங்கள் எதனையும் கொடுக்கவில்லையென வர்த்தகர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் கைது செய்யப்பட்டவர் முக்கால் பவுண் நகையே கொள்வனவு செய்ததாகவும் பொலிஸாரினால் கூட்டிவரப்பட்ட திருடன் இவர் 25 பவுண் நகை வாங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளான்.

    வர்த்தகர் தான் வாங்கிய பவுணுக்கான விபரத்தை பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருப்பதாகவே தோன்றுகின்றது. மேலும் பொலிஸாருக்கு முன்னாலேயே திருடன் தான் இரண்டு கொலைகள் செய்ததாகவும் வர்த்தகர்களை மிரட்டியுள்ளார்.

    இதுதான் இன்றுள்ள நிலைமையாகவுள்ளது. மேலும் குறித்த வர்த்தகர் நேற்று மாலை 7 மணிக்கெல்லாம் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால் 10 மணிக்கே பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அது வரைக்கும் எங்கு கொண்டு செல்லப்பட்டார். என்பதெல்லாம் கேள்விக்குறியாகியுள்ளது.

    மேலும் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டபோது பொலிஸார் சீருடை அணிந்திருக்கவில்லை. சிவில் உடையிலேயே வந்துள்ளனர். எனவே பொலிஸார் தாங்கள் வேறு இனத்தவர் என்பதை காட்ட முனைகிறாரர. இவ்வாறான செயற்பாடுகள் எமக்கு மனவேதனையளிப்பதாகவிருக்கின்றது எனவும் கூறியிருக்கின்றனர்.

    இதேவேளை நேற்று நண்பகலுடன் நகரில் வழமைபோல் கடைகள் மீளவும் திறக்கப்பட்டன. அண்மைக்காலமாக யாழ்.வர்த்தக சமூகத்தின் மீது தனது அடாவடித்தனத்தை கட்டவிழ்த்து விடுவதில் பொலிஸார் கண்ணும் கருத்துமாக உள்ளது.

    இதற்குமேல் கைது செய்யப்பட்ட வர்த்தகர்களிடம் பொலிஸார் கையூட்டல் பெற முற்பட்டதாகவும் வர்த்தகர்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.


    கருத்துகள் | | Read More...

    விடுதலைப்புலிகளுக்கு அரசியல் தீர்வில் நாட்டம் இருக்கவில்லை - ரவூப் ஹக்கீம்

    தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கைக் காலப்பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது அரசியல் தீர்வு குறித்தே அதிகமாக பேசப்பட்டது. எனினும் புலிகளுக்கு அரசியல் தீர்வில் நாட்டம் இருக்கவில்லை என்று நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
    சமாதான காலப் பகுதியில் அவர்கள் தம்மை பலப்படுத்திக் கொள்வதில் குறியாக இருந்தமையாலேயே பேச்சுக்கள் கைவிடப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

    அம்பாறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    இங்கு அவர் மேலும் கூறுகையில்,

    நாட்டில் யுத்தமொன்று இல்லாத காலப் பகுதியில் நீதியமைச்சின் பொறுப்பினை ஜனாதிபதி எனக்கு வழங்கியிருக்கின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.

    பொறுப்புள்ள அரசு என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் புலிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மனத்தை இன்று நாட்டின் சகல தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    விடுதலைப் புலிகளுடனான சமாதான உடன்படிக்கையின் காலப் பகுதியில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுக்களின் போது கலந்து கொண்ட அரசியல் தலைவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

    அந்த சந்தர்ப்பத்தில் அதிகமாக அரசியல் தீர்வு குறித்தே பேசப்பட்டது. ஆனாலும் விடுதலைப் புலிகளுக்கு சமாதானப் பேச்சுக்களிலும் அரசியல் தீர்விலும் நாட்டம் இருக்கவில்லை. மாறாக புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருந்தனர்.

    காவல்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை என சகல மட்டத்திலும் தம்மை பலப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை சமாதானப் பேச்சுக்களையும் கைவிட்டனர். இதன் பின்னரே அதன் முன்னெடுப்புகள் கைவிடப்பட்டன.

    இதனையடுத்து பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு அது மாவிலாற்றில் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

    ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை இன்று நாட்டு மக்கள் அங்கீகரித்துள்ளனர். ஜனாதிபதியையும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றார்.
    கருத்துகள் | | Read More...

    இந்திப்பட வாய்ப்பை மறுக்கும் சூரியா


    ரத்த ச‌ரித்திரத்தை வழக்கம் போல இந்தி ஊடகங்கள் கிழித்துவிட்டன. ராம் கோபால் வர்மா மீதான கோபத்தை வேறு எப்படி தீர்த்துக் கொள்வது?
    ரத்த ச‌ரித்திரம் மோசம் என்று எழுதிய ஊடகங்கள் அனைத்தும் ஒரு விஷயத்தை மட்டும் ஆகா ஓகோ என்று புகழ்ந்தன. அது சூர்யாவின் நடிப்பு.

    சில இணையதளங்கள் சூர்யாவுக்காக ரத்த ச‌ரித்திரத்தை பார்க்கலாம் என்று எழுதின. இன்னும் சில வாட் அன் ஆக்டர் என வியந்தன.

    ரத்த ச‌ரித்திரத்தை தொடர்ந்து இந்தியில் நடிக்க சூர்யாவுக்கு அழைப்புகள் குவிகின்றன. ஆனால் 7ஆம் அறிவு, ஹ‌ரி, கௌதம், கே.வி. ஆனந்த் படங்கள் என தமிழில்தான் ஆர்வம் காட்டுகிறார் சூர்யா. இந்திப் படங்களுக்கு ஒரே வார்த்தையில் அவர் சொல்வது, நோ.

    இந்தியில் ஒரு படம் நடித்தால் அப்படம் தமிழ், தெலுங்கிலும் ஓட வேண்டும். அப்படியான கதை அமைந்தால் மட்டுமே இந்தியில் நடிப்பேன் என தனது மறுப்புக்கு விளக்கம் அளித்துள்ளார் சூர்யா.
    கருத்துகள் | | Read More...

    நாய்களுக்கு 1000 வார்த்தைகள் புரியும்!


    வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணி நாய்கள் எஜமானர்கள் இடும் கட்டளையை புரிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன. பொதுவாக நாய்கள் 1000-க்கும் மேற்பட்ட வார்த்தைகளை புரிந்து கொண்டு அதன்படி நடக்கும் தன்மை உடையவை என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
    லண்டனை சேர்ந்த மனோதத்துவ நிபுணர்கள் ஆலிஸ்டன் ரெய்டு, ஜான் பில்லி ஆகியோர் பார்டர் கர்லஸி என்ற இனத்தைச் சேர்ந்த ஷாசெர் வகை நாயிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த நாய் 1022 பொம்மைகளின் பெயரை புரிந்து கொண்டது. பந்து மற்றும் பொம்மை வடிவிலான விலங்குகளின் பெயர்கள் போன்றவை இதில் அடங்கும். இந்த நாய் 3 வயதுடையது. மனோதத்துவ நிபுணர் பில்லிக்கு சொந்தமானது.

    அந்த நாயின் மனப்பாட திறனை அதிகரிக்க 838 தடவை பயிற்சி சோதனை நடத்தப்பட்டது. அதில் 20 வார்த்தைகளில் 18 வார்த் தைகளுக்கு அந்த நாய் சரியான முறையில் நடந்து கொண்டது. இதே சக்தி மற்ற நாய்களுக்கும் இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
    கருத்துகள் | | Read More...
     
    Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
    Copyright © 2011. welvom . All Rights Reserved.
    Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger