News Update :

சர்ச்சைக்குரிய சிறிலங்காவின் இராணுவ அதிகாரியின் உரைக்கு அமெரிக்க தமிழர்கள் எதிர்ப்பு

Penulis : Antony on திங்கள், 31 ஜனவரி, 2011 | 6:56 AM

திங்கள், 31 ஜனவரி, 2011


தேவாலய வளாகத்தின் குறிப்பிட்ட இந்த இடம் வாடகைக்குப் பெறப்பட்டபோது அது அரசியல் ரீதியிலான கலந்துரையாடலுக்குப் பயன்படுத்த இருப்பது தமக்குத் தெரியாது என தேவாலய நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.

இவ்வாறு 'The MetroWest Daily News' என்ற அமெரிக்க மாநில ஊடகத்தின் உத்தியோகபூர்வ செய்தியாளர் Brad Petrishen/Daily News staff தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்கா மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அந்த செய்திக்குறிப்பின் விபரமாவது,

போர்குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம்சுமத்தப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரியும் அந்த நாட்டினது இராசதந்திரியுமான ஒருவர் நேற்றையதினம் பேர்மிங்கம்மிலுள்ள எட்வேட் தேவாலயத்தில் உரையாற்றியபோது தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட போர்க் குற்றங்களை மறுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதியாக சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் சவேந்திர டீ சில்வா கடந்த ஓகஸ்ட்டில் நியமிக்கப்பட்டிருந்தார்.

2009ம் ஆண்டு போர் அதன் இறுதிக்கட்டத்தினை அடைந்திருந்த வேளையில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவதில் மிகவும் முதன்மையான பங்கினை வகித்தவர் இவர் எனக்கூறி மனித உரிமை அமைப்புக்கள் இந்தத் தீர்மானத்தினை எதிர்த்தன.

சிறிலங்கா இரண்டு பிரதான இனங்களைக் கொண்டது. சிங்கள இனத்தவர்கள் பெரும்பான்மையினராகவும் தமிழர்கள் சிறுபான்மையினராகவும் இருக்கிறார்கள். சிறிலங்காவில் வாழும் தமிழர்களுக்கு நாட்டினது வடக்குக் கிழக்குப் பகுதியில் சுதந்திரத் தனிநாட்டினை அமைக்கும் எண்ணத்தில் 1983ம் ஆண்டுமதல் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதமேந்திப் போராடி வந்தார்கள்.

அரசாங்கத்தின் தகவலின்படி பலநூறு விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் அந்த அமைப்பினது முதன்மைத் தலைவர்களும் கொல்லப்பட்டுவிட மே 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தனிநாடு நோக்கிய போராட்டம் இடைநின்று போனது.

வின்சிஸ்ரர் பகுதியில் வசித்துவரும் தமிழரான சுபா சுந்தரலிங்கமும் ஏனைய பலரும் இணைந்து சவேந்திர டீ சில்வாவின் வருகைக்கு எதிராக தேவாலயத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பில் தேவாலய அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசியல் தேவையொன்றுக்காகவே தங்களது வளாகம் பயன்படுத்தவிருந்தது என்பது தமக்குத் தெரியாது என்கிறார்கள்.

தாங்கள் 'மனிதாபிமானப்' படைநடவடிக்கையினை மேற்கொண்டு புலிகளின் பிடியில் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்தோம் என சவேந்திர சில்வா கூறியபோது 'அனைத்துமே சுத்தப் பொய்' என்றார் சுந்தரலிங்கம்.

விடுதலைப் புலிகளுடனான போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா அரச படையினர் தமிழ்ப் பொதுமக்களை வேண்டுமென்றே இலக்குவைத்தனர் என்ற குற்றச்சாட்டினை இங்கு உரைநிகழ்த்திய சவேந்திர சில்வா முற்றாக மறுத்தார்.

"பயங்கரவாதிகளின் கொடுங் கரங்களிலிருந்து அப்பாவித் தமிழ் பொது மக்களை மீட்பதற்கான படை நடவடிக்கையிலேயே நாங்கள் ஈடுபட்டிருந்தோம்" என மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ உரைநிகழ்த்திய சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

போரின் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகள் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்ததாகவும் தங்களைப் பாதுகாப்பதற்கான மனிதக் கேடயங்களா ப் புலிகள் மக்களைப் பயன்படுத்தியதாகவும் சில்வா கூறுகிறார்.

இறுதியில் தங்களது கடுமையான முயற்சியின் பயனாக புலிகளின் பிடியில் இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் இந்த முயற்சியின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் அது அவர்கள் விடுதலைப் புலிகளிடமிருந்து தப்பிவர முற்பட்டபோது புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களாகத்தான் இருக்கவேண்டும் என்றும் சில்வா கூறுகிறார்.

எவ்வாறிருப்பினும் போரின் இறுதி நாட்களில் சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு சிறிலங்கா அரசாங்கமும் அதனது இராணுவமும்தான் முழுப்பொறுப்பு என வாதிடுகிறார் சுந்தரலிங்கம். சரணடையவந்த விடுதலைப் புலிகளையும் சிறிலங்கா அரச படையினர் தயவுதாட்சண்யமின்றி சுட்டுக்கொலை செய்ததாக சுந்தரலிங்கம் தொடர்ந்தார்.

"வெள்ளைக்கொடியுடன் புலிகளின் உறுப்பினர்கள் சரணடைய முற்பட்டார்கள். அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லுமாறு கட்டளையிட்டவர் வேறு யாருமல்ல இந்தச் சவேந்திர சில்வாதான்" எனச் சுந்தரலிங்கம் கூறினார்.

சவேந்திர சில்வா தனது உரையினை நிறைவுசெய்த பின்னர் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது மேற்குறித்த இந்தக் கேள்வியினைச் சுந்தரலிங்கம் சவேந்திர சில்வாவிடம் நேரடியாகவே கேட்டார்.

"இதுபோன்ற கேள்விகளைத் துணிந்து கேட்பதை நான் வரவேற்கிறேன். உங்களைப் போலவே எதனையும் துணிந்து பேசும் இலங்கையர்களாக இருப்பதையிட்டு மகிழ்வடைகிறேன்" என்றார் அவர்.

பொதுமக்கள் மீது துப்பாக்கியப் பிரயோகம் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு சில படையினர் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழர்களை மீட்கவேண்டும் என்ற உறுதியுடனேயே சிறிலங்கா இராணுவத்தினர் செயற்பட்டனர் என்றார்.

"இதன்போது இராணுவ வீரர்கள் உண்மையில் தவறிழைத்திருந்தால்...... அது நிச்சயம் ஒருநாள் வெளியே வரும். அப்போது இதற்குப் பொறுப்பானவர்கள் யாரோ அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" எனத் தொடர்ந்து தெரிவித்தார் சவேந்திர சில்வா.

"அவ்வாறே நீங்கள் கூறுவதைப்போல நான் போர்க் குற்றங்களில் ஈடுபட்டிருந்தால் பின்னொரு நாளில் நானும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவேன்... எனக்கும் தண்டனை வழங்கப்படும்" என கூறுகிறார் சவேந்திர சில்வா.

தான் ஒரு அப்பாவி என்பதாலேயே 2009ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல் முயற்சியிலிருந்து தான் தப்பிப் பிழைத்ததாகக் கூறுகிறார் இவர்.

"நீங்கள் கூறுவதைப்போல நான் ஒரு கொலையாளி இல்லை என்பது எனது உள் மனத்திற்கு நன்கு தெரியும். இந்தத் தாக்குதலில் இருந்து நான் தப்பக் காரணம் இதுதான்". என்றார் அவர்.

அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஊடாக தற்போது முன்னெடுக்கும் செயன்முறை முடிவுக்கு வரும் வரைக்கும் அமைதியுடன்
இருங்கள் என சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிக கரிசனை செலுத்துபவர்கள் யாரோ அவர்களிடம் சவேந்திர சில்வா கோரினார்.
ஆனால் இந்த ஆணைக்குழுவானது பக்கச்சார்பின்றியும் சுதந்திரமாகவும் செயற்படவில்லை எனக்கூறி அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைக் கண்காணிப்பகம் போன்ற அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்கள் சிறிலங்கா அமைத்திருக்கும் ஆணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளிப்பதற்கு மறுத்திருக்கின்றன.

சிறிலங்காவினது போரின் இறுதி நாட்களில் இடம்பெற்றதாகக் கூறுப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா சுதந்திர விசாரணையினை மேற்கொள்ளுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது எனக் கூறுpயிருந்தது.

குறிப்பிட்ட இந்த நிகழ்வு இடம்பெறுவதற்கு தேவாலய வளாகத்தினை வழங்கியமைக்காக சுந்தரலிங்கம் எட்வேட் தேவாலய நிர்வாகத்தினைக் குறைகூறினார்.

தேவாலய வளாகத்தின் குறிப்பிட்ட இந்த இடம் வாடகைக்குப் பெறப்பட்டபோது அது அரசியல் ரீதியிலான கலந்துரையாடலுக்குப் பயன்படுத்த இருப்பது தமக்குத் தெரியாது என தேவாலய நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.

அரசியல் அல்லாத தியானச் செயற்பாடுகளுக்காக முன்னர் இந்த இடத்தினைப் பலமுறை பெற்றிருக்கும் ஒரு பௌத்த துறவிக்காகவே இந்த இடம் ஒதுக்கப்பட்டிருந்தாக தேவாலய நிர்வாகம் கூறுகிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தேவாலயத்தின் முன்னாள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் வரைக்கும் அங்கு சவேந்திர சில்வா வந்திருப்பது தொடர்பாகத் தமக்குத் தெரியாது என்கிறார்கள் இவர்கள்.

"தேவாலய வளாகத்திற்குச் சவேந்திர சில்வா வருகிறாரா எனக்கோரி நேற்றையதினம் கலிபோர்ணியா, பென்சில்வேனியா, மேரிலாண்ட், மசசூசெற்ஸ் மற்றும் ஒக்கியோ ஆகிய
பகுதிகளிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் எமக்கு வந்தன.

சவேந்திர சில்வாதான் இந்த நிகழ்வுக்கு வருகிறார் என எமக்குத் தெரிந்திருந்தால் இந்த இடத்தினை நாங்கள் வழங்கியிருக்கமாட்டோம். அரசியல் கூட்டங்கள் தேவாலய வளாகத்தில் இடம்பெறுவதை நாங்கள் அனுமதிப்பதில்லை" என தேவாலயத்தின் பேச்சாளர் ஒருவர் கூறுகிறார்.

நேற்றைய சம்பவத்திற்குப் பின்னர்தான் இதுபோல சவேந்திர சில்வா அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் சென்று மக்கள் மத்தியில் உரைநிகழ்த்துவது தமக்குத் தெரியும் என்றும் அவர் தொடர்ந்தார்.
கருத்துகள் | | Read More...

ஈபிடிபி உறுப்பினர் ‘கொல்லப்பட்ட‘ விவகாரம் - முழுமையான விசாரணையைக் கோருகிறார் டக்ளஸ்


பருத்தித்துறையில் தமது கட்சியின் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து முழுமையான காவல்துறை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஈபிடிபி செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈபிடிபியின் மருதங்கேணி அமைப்பாளரான இரத்தனசிங்கம் சதீஸ் நேற்று முன்தினம் காலை வல்லிபுரக் கோவிலுக்கு அருகே உள்ள ஆனைவிழுந்தான் மயானப் பகுதியில் இறந்து கிடந்தார்.

மரணமான நிலையில் உந்துருளியுடன் வீதியில் விழுந்து கிடந்த அவர் இனந்தெரியாத நபர்களால் தலையில் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால் பின்னர் நடத்தப்பட்ட காவல்துறை விசாரணைகளின் போதும், பிரேத பரிசோதனையின் போதும் அவர் சுடப்படவில்லை என்பது உறுதியானதாக தகவல் வெளியிடப்பட்டது.

உந்துருளி விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குருதிப்பெருக்கினால் ஏற்பட்ட மரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது கட்சி உறுப்பினர் கொல்லப்பட்டது குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.

“ உண்மையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக முழுமையான காவல்துறை விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விபத்து மரணம் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு கோரியுள்ளது சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
கருத்துகள் | | Read More...

கமல் ஹாசன் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம்

Penulis : Antony on ஞாயிறு, 30 ஜனவரி, 2011 | 12:56 PM

ஞாயிறு, 30 ஜனவரி, 2011


மன்மதன் அம்பு படத்துக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன், டைரக்டர் செல்வராகவனிடம் கதை கேட்டுள்ளார்.
சினிமாவில் பரிசோதனை முயற்சியாக படமெடுக்க திட்டமிட்டிருந்த கமல், தற்போது'புது தலைமுறை இயக்குனர்களுடனும் இணைந்து பணியாற்ற தயங்குவதில்லை.

டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் 'வேட்டையாடு விளையாட்டு' படத்தில் நடித்தார்.

படமும் பரபரப்பாக பேசப்பட்டு, வெற்றியடைந்தது. தனுஷ்-ஆண்ட்ரியா நடிப்பில் 'இரண்டாம் உலகம்' படம் வெளியான பின்,மே மாதம் முதல் உலகநாயகனின் படத்தில் கவனம் வைப்பாராம்.

இன்றைய சினிமா ரசிகனின் ரசனையை புரிந்து வைத்துள்ள, வித்தியாசமாக படம் பண்ணும் டைரக்டரிடம் பணியாற்ற உலகநாயகனும் தயாராக உள்ளாராம்.

செல்வா படத்தின் ஸ்கிரிப்ட் முழு வடிவம் பெற்ற பிறகு,கணிசமான பட்ஜெட்டில், ஆறு மாதத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக கோலிவுட் சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றது.
கருத்துகள் | | Read More...

குவைத்தில் நெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள்


குவைத்தில் மாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வித்யாசாகர் அவர்கள் படித்தார்கள். தொடர்ந்து தோழர்.கலையழகன் “முத்துக்குமாரே முத்துக்குமாரே வீரவணக்கம்” என்ற தேனிசை செல்லப்பாவின் பாடலை பாடினார்.

தொடர்ந்து, அனைவரும் கைகளில் சுடரேந்தி தமிழர் இன எழுச்சி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நிகழ்வினிடையே தோழர்கள் பகலவனும் வித்யாசாகரும் உணர்வுமிகுந்த கவிதைகளை படிக்க, தோழர்கள் அன்பரசன், சிவ்சங்கரன், அறிவழகன், கலையழகன், மகிழன், பட்டுக்கோட்டை சத்யா ஆகியோர் எழுச்சிமிகு உரையாற்றினர்.

வழ.நல்லதுரை தயாரித்து பிரகதீசுவரன் இயக்கிய மாவீரன் முத்துக்குமார் ஆவணப்படமான ”சனவரி-29” என்ற இறுவட்டினை தோழர்.ஆரணி இரமேசு அவர்கள் வெளியிட தோழர் தேனி இரமேசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

தோழர்.பொள்ளாச்சி இராசேந்திரன் அவர்கள், மதிமுக பொ.செயலாளர் திரு.வைகோ அவர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்ட ”ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என்ற ஆவணப்பதிவினை வெளியிட்டு உரையாற்றினார்கள். அதனை ஓவியர் கொண்டல்ராசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் இறுதியில், ”என்ன செய்யலாம் இதற்காக?”என்ற நூலினை தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.

நிகழ்வினை தோழர் விருதை பாரி அவர்கள் எழுச்சியோடும் கருத்துக்களோடும் தொகுத்து வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் | | Read More...

பெப்பிரவரி 4இல் உரிமைக்கான போராட்டம் – கனடித்தமிழர் தேசிய அவை அறைகூவல்


1948, ஈழத்தமிழர் வாழ்வில் கரிநாள். தமிழர் தேசம் தன் இறைமையை சிங்கள தேசத்திடம் இழந்த நாள். தொடரும் தமிழர் தேச ஆக்கிரமிப்புக்கும், தமிழர் வாழ்வியல் சிதைப்புக்கும் மீண்டும் புதிய முகவரி எழுதிய நாள். சிங்களம் ஆக்கிரமிப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தமிழர் தேச ஆக்கிரமைப்பை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த நாள்.
63 ஆண்டுகள், 1லட்சத்து 50ஆயிரத்திற்கு மேற்பட்ட இழப்புக்கள், இன்றும் எமது இழப்புக்கள் தொடர்கதையே. தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கினமே போராடும் இப்பூமிப்பந்தில் நாம் மட்டும் அழிந்துபோவதா?

முதலில் இக்கரிநாளில், சிங்களத்துடன் சேர்ந்து கூடிக்களிப்பதை தவிர்ப்போம், புறக்கணிப்போம். அதேநாளில் தமிழர் நாம் சேர்ந்து எமது நிலையை சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம். தென் சூடானின் மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் அதிசயமும் இந்த ஆண்டில் தான் நடந்தது. நாமும் எமக்கு உரித்தான உரிமையைவேண்டி தொடந்தும் ஓர்மத்துடன் யாசிப்போம்.

தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும், ரொரன்ரோவில் 30 St. Clair Avenue West, (St. Clair & Yonge) இல் அமைந்துள்ள சிறீலங்கா துணைத்தூதுவராலயம் முன்பாக கனடிய தமிழர் தேசிய அவையினால் வெள்ளிக்கிழமை, பெப்பிரவரி 4, 2011, பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 6 மணிவரை உரிமைக்கான சர்வதேச கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.

தமிழீழ தேசத்தின் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்ட இத்தமிழரின் கரிநாளில் பெருமளவில் கலந்து கொண்டு இச்சர்வதேச கவனயீர்ப்புக்கு வலுச்சேர்க்குமாறு அனைத்து கனடா வாழ் தமிழ் மக்களையும் கனடியத் தமிழர் தேசிய அவை உரிமையுடன் வேண்டிக் கொண்டுள்ளது.

வாருங்கள்…. தமிழர் வாழ்வை நிமிரவைக்க வாருங்கள்…. வீழ்ந்தோம் என்பது வரலாறல்ல… எழுந்தோம் என்பதே வரலாறு… என அது மேலும் அறைகூவல் விடுத்துள்ளது.

மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையுடன் 1-866-263-8622 என்ற தொலைப்பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்
கருத்துகள் | | Read More...

உப்புக்கும் தண்ணீருக்கும் கூட நாதியற்றுப் போய்விட்ட யாழ்ப்பாணம்

Penulis : Antony on வெள்ளி, 28 ஜனவரி, 2011 | 11:57 AM

வெள்ளி, 28 ஜனவரி, 2011


கடும் யுத்த காலமாக இருந்த கடந்த 30 ஆண்டுகளில் கூட யாழ்ப்பாணம் குடிதண்ணீருக்காகக் கொழும்பை நம்பி இருந்ததில்லை.
ஆனால் தற்போது டசின், டசினாகத் தண்ணீர்ப் போத்தல்களை வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யும் நாதியற்ற நிலையினை யாழ்ப்பாணம் அடைந்து வருகின்றது என்று தெரிவித்தார் யாழ். வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன்.

யாழ். நகரில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யினை முன்னிட்டு யாழ்.பொது நூலகக் கேட்போர் கூடத்தில் "வடக்கு மாகாணத்தில் பொருளாதார வர்த்தகச் சூழல்" எனும் தலைப்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.

இதனை யாழ்.வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் தலைவர் பூரணச்சந்திரன் ஆரம்பித்து வைத்தார்."ஆனையிறவில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பினை இலங்கையின் எல்லா மாவட்டங்களுக்கும் விநியோகித்து வந்த யாழ்ப்பாணம், தற்போது இந்தியாவில் இருந்து உப்பை இறக்குமதி செய்து நுகருகின்ற நிலைக்கு வந்துள்ளது. இது யாழ்ப்பாணத்தின் நாதியற்ற நிலையினை வெளிப்படுத்துகின்றது'' என்றும் தெரிவித்தார் பூரணச்சந்திரன்.

இலங்கையில் முதலீடு செய்யத் திட்டமிடுவோர் யாழ்ப்பாணத்தை விரும்புவது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்த அவர், "எடுத்துக்காட்டாக பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் கூட சுமார் 150 காட்சிக்கூடங்கள் வரையிலேயே அமைக்கப்படும். ஆனால் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வர்த்தகக் கண்காட்சியில் சுமார் 300 வரையான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை முதலீட்டாளர் கவனம் யாழ்ப்பாணத்தை நோக்கித் திரும்பியிருப்பதைக் காட்டுகின்றது'' என்றார்.தனது உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் யாழ்ப்பாண உற்பத்திகளை அதிகமாக விரும்புகின்றனர். அரிசிமா, பழவகைகள் போன்றவற்றை சிறப்பான உணவுப் பதனிடல் தொழில் நுட்பத்தை கையாண்டு இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.ஆனால் அதற்கான சிறந்த வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் உட்கட்டுமானங்களில் அரசின் அவதானம் போதாமலே உள்ளது. பிரதானமாக யாழ்ப்பாணத்துக்குள் நுழைவதற்காகக் காணப்படும் வீதியின் தரம் பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப மாறும் தன்மையுடையதாக இருப்பதும் முதலீட்டாளரின் ஆர்வத்தை பாதிக்கின்றது என்றார்.
கருத்துகள் | | Read More...

மீண்டும் யாழ்ப்பாணத்தில் வீதிச் சோதனைகள்


யாழ்ப்பாணத்தில் மீண்டும் சிறீலங்காப் இராணுவத்தினரால் வீதிச்சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் பல அசௌகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அண்மைக் காலமாக யாழில் இடம்பெற்று வரும் மர்மக் கொள்ளைகள், கொலைகள் மற்றும் ஆள்கடத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கோடு இராணுவத்தினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த கத்துருசிங்க அறிவித்திருந்ததோடு, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஆனால் இது வரை காலமும் தமது கெடுபிடிகளைக் குறைத்திருந்த படைச் சிப்பாய்களுக்கு இதுவொரு சந்தர்ப்பம் கிடைத்தது போல சோதனை என்ற பெயரில் பொது மக்களைப் பல கெடுபிடிகளுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

இன்று அதிகாலை முதல் நல்லூர் ஆலயச் சூழலில் படையினர் தேவையற்ற முறையில் வீதியால் போவோர் வருவோரை மறித்து உடற்பரிசோதனைக்கும் உட்படுத்தியுள்ளனர்.

வாகனங்களில் இருந்து பொது மக்கள் இறக்கப்பட்டு பெயர், அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம் போன்ற விவரங்கள் பதியப்பட்ட பின்னரே தொடர்ந்து செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் கூட இராணுவத்தினரின் சோதனைகளில் இருந்து தப்பவில்லை.

இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் வழமையை விட அதிகமான மக்கள் ஆலயத்துக்குச்சென்று வந்ததையும், அவர்கள் இராணுவத்தினரின் சோதனைக் கெடுபிடிகளுக்கு ஆளானதையும் காணக்கூடியதாகவிருந்தது.
கருத்துகள் | | Read More...

பாகிஸ்தான் வீரர்கள் சச்சினிடமிருந்து பாடம் கற்க வேண்டும்: ஜாவிட் மியாண்டாட்

Penulis : Antony on செவ்வாய், 25 ஜனவரி, 2011 | 11:19 AM

செவ்வாய், 25 ஜனவரி, 2011


பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்திய அணி வீரர் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்க வேண்டும் என அவ்வணியின் முன்னாள் தலைவரும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் பணிப்பாளருமான ஜாவிட் மியாண்டாட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் ஊடகங்களில் வாய்ச் சவால் விடுப்பதை விடுத்து போட்டிகளில் தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சச்சின் டெண்டுல்கர் ஒரு திறமையான வீரர். அவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி சதங்களை குவித்து வருகின்ற நிலையிலும் அவற்றைப் பற்றி ஊடகங்களில் பெரிதாக பாராட்டிக்கொள்வதில்லை. அவரிடம் இருந்து பல விடயங்களை நமது நாட்டு அணி கற்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் | | Read More...

ஆஸ்கார் விருது : ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை


கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர். ரகுமான் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அந்த விருது ரகுமானுக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது பெயர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் டேனி பாய்லியின் '127 ஹவர்ஸ்' படத்துக்கு சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய 2 பிரிவுகளில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே டேனி பாய்லியின் இயக்கத்தில் வெளியான 'ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு ஏ.ஆர். ரகுமானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் | | Read More...

40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - ஐ.நா. பதிலளிப்பதைத் தவிர்க்கிறது: இன்னர் சிற்றி பிரஸ்

யுத்தத்தின் இறுதிப் பகுதியில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஊடகங்கள் பல வாரங்களாக எழுப்பிவரும் கேள்விகளுக்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்டின் நெஸ்கி பதிலளிப்பதைத் தவிர்த்து வருகின்றார் என்று "இன்னர் சிற்றி பிரஸ்' இணை யத்தளம் குற்றஞ்சாட்டி உள்ளது.
கருத்துகள் | | Read More...

இலங்கை உறவு இந்தியாவிற்கு எதற்கு? - சீமான்


தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் இலங்கையுடனான உறவை இந்தியா துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் தெரிவித்தார்.

வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமாரை இலங்கை கடற்படையினர் படுகொலை செய்ததை கண்டித்து நெல்லை சந்திப்பு முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.

இதில் கலந்து கொண்டு இயக்குனர் சீமான் பேசியது:

"கடந்த 60 ஆண்டுகளாக ஈழ மண்ணிலுள்ள தமிழர்களையும், இங்குள்ள தமிழர்களையும் சக மனிதர்களாகக் கருதாமல் சிங்கள ராணுவத்தினர் கொன்று குவிக்கின்றனர். இந்திய அரசு கரம் நீட்டி தடுப்பதற்கு பதிலாக கரம் கொடுத்து உதவுகிறது.

இதுவரை 538 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கொலைகளைத் தடுத்து நிறுத்தத் துடித்தால் என்னை தேச துரோகி என்கின்றனர். இந்த நாட்டின் குடிமகனான மீனவன் கொல்லப்படுவதை கடற்படை தடுக்க வேண்டாமா? இங்கு வந்த மத்திய அமைச்சர் பிரனாப் முகர்ஜி பேசும்போது கூட இலங்கை நட்பு நாடு என்கிறார்.

எல்லை தாண்டினால் மீனவர்களை சுடுவோம் என்னும் நாடு எப்படி நட்பு நாடு ஆகும்? பகை நாடாக கருதப்படும் பாகிஸ்தான் கூட இதுவரை ஒரு இந்திய மீனவர்களையும் கொல்லவில்லை. எனவே இலங்கையுடான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்.

கூட்டுப்படை பயிற்சியில் ஈடுபடக் கூடாது. எந்த உதவியும் செய்யக்கூடாது. திமுக எத்தனை இடங்கள் கொடுத்தாலும் அத்தனை இடங்களிலும் காங்கிரசை தோற்கடிப்போம்," என்றார்.
கருத்துகள் | | Read More...

இயக்குநர் செல்வராகவனுக்கு பாமக பிரமுகர் மிரட்டல்

Penulis : Antony on திங்கள், 24 ஜனவரி, 2011 | 1:31 PM

திங்கள், 24 ஜனவரி, 2011


இயக்குநர் செல்வராகவன் தனது தம்பி தணுசை வைத்து இரண்டாம் உலகம் படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு பாமக பிரமுகர் மிரட்டல் விடுத்துள்ளார்.


வடிவேலு 25 வித்யாசமான ‌ரோல்களில் நடிக்கும் புதியபடம் "உலகம்". இப்படத்தை புதுமுக இயக்குநர் ஆதம் பாவா என்பவர் இயக்குகிறார். ஒரு வருடத்திற்கு முன்பே இப்படத்தின் தலைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தை பா.ம.கா.வை கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் தயாரிக்கிறார்.

சமீபத்தில் இப்படத்திற்கான போட்டோசேஷன் நடைபெற்றது. போட்டோக்களை பார்த்து வடிவேலு பிரமித்து போனாராம்.

மேலும் இயக்குநர் ஆதம் பாவாவின் கற்பனையை வெகுவாக பாராட்டினாராம். இதற்கிடையில் செல்வராகவன் "இரண்டாம் உலகம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இதை கேள்விபட்ட "உலகம்" படத்தின் தயாரிப்பாளரும், பா.ம.க., முக்கிய பிரமுகரும், செல்வராகவனை நேரில் சந்தித்து என்னுடைய படத்திற்கு ஏற்கனவே "உலகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்போது நீங்களும் உங்களது படத்திற்கு "இரண்டாம் உலகம்" என்று பெயரிட்டுள்ளீர்கள். இதனால் மக்கள் மத்தியில் இருவரது படத்தின் பெயர்களும் குழப்பத்தை ஏற்படுத்தும். ஆகையால் உங்கள் படத்தலைப்பை மாற்றிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால் செல்வாவோ, இதற்கு மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பா.ம.க., முக்கிய புள்ளி படத்தில் பேசுவது போல, நான் யார் தெரியு‌மா, உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

தமிழக மீனவர்கள் கைகளில் ஆயுதம் தந்தால்தான் பிரச்சினை தீரும்-நெடுமாறன்


இலங்கைக் கடற்படைக் கூட்டம் இதுவரை 400 தமிழக மீனவர்களைக் கொன்றுள்ளது. இதற்கு முடிவு கட்ட மீனவர்களிடம் துப்பாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்று இல‌ங்கை‌‌த் த‌மிழ‌ர் பாதுகா‌ப்பு இய‌க்க ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர் பழ.நெடுமாற‌ன் கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1983 ஆ‌ம் ஆ‌ண்டி‌லிரு‌ந்து 27 ஆ‌ண்டுகளாக த‌‌மிழக ‌மீனவ‌ர்களை ‌சி‌‌ங்கள‌க் கட‌ற்படை தொட‌ர்‌ந்து வே‌ட்டையாடி வரு‌கிறது. இதுவரை 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌மீனவ‌ர்க‌ள் படுகொலை செ‌ய்ய‌‌ப்‌ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்‌க‌ள். நூற்றுக்கணக்கான‌மீனவ‌ர்க‌ள் ‌சிறை‌ப் ‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

ந‌ம்முடைய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள்ளாகவே ‌சி‌ங்கள‌க் கட‌ற்படை அ‌த்து‌மீ‌றி நுழை‌ந்து ‌மீனவ‌ர்களை‌‌த் தா‌க்‌கி வரு‌‌கிறது. ஆனா‌ல் இ‌ந்த 27 ஆ‌ண்டுகால‌த்‌தி‌ல் ஒருமுறைகூட இ‌ந்‌திய‌க் கட‌லோர‌க் காவ‌ல் படை ‌சி‌ங்கள‌க் க‌ட‌ற்படையை எ‌தி‌ர்‌த்து‌ச் சு‌ட்ட‌தி‌ல்லை. மீனவ‌ர்களை‌க் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கு‌ம் மு‌ன் வர‌‌வி‌ல்லை.

உலக‌த்‌தி‌ன் ஐ‌ந்தாவது பெ‌ரிய கட‌ற்படை இ‌ந்‌திய‌க் கட‌ற்படை என‌ப் பெருமை‌ப் பேச‌ப்படு‌கிறது.

பல ஆ‌யிர‌ம் மை‌ல்களு‌க்கு அ‌ப்பா‌ல் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா‌வி‌ல் இரு‌க்கு‌ம் சோமா‌லியா நா‌ட்டி‌‌ன் கட‌ற்பகு‌தி‌யி‌ல் கட‌ற்கொ‌ள்ளைகார‌ர்க‌ளி‌ன் அ‌ட்டூ‌ழிய‌ங்களை ஒடு‌‌க்குவத‌ற்கு இ‌ந்‌திய‌க் கட‌ற்படை ‌விரை‌ந்து செ‌ன்று நடவடி‌க்கை எடு‌க்‌கிறது. ஆனா‌ல் நமது கட‌‌ல் பகு‌தி‌யி‌ல் நமது ‌மீனவ‌ர்க‌ள் அ‌ண்டை நாடு கட‌ற்படை‌யா‌ல் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்படுவதை‌த் தடு‌க்க மு‌ன்வராம‌ல் இ‌ந்‌திய‌க் கட‌ற்படை வேடி‌க்கை‌ப் பா‌ர்‌‌க்‌கிறது.

குஜரா‌த் மாநில‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் கட‌‌லி‌ல் எ‌ல்லை தா‌ண்டி பா‌கி‌ஸ்தா‌ன் பகு‌தி‌யி‌‌‌ல் புகு‌ந்து ‌வி‌ட்டாலோ, மே‌ற்கு வ‌ங்க‌த்தை‌ச் சே‌ர்‌ந்த ‌மீனவ‌ர்க‌ள் எ‌ல்லை‌த்தா‌ண்டி வ‌ங்கதேச‌ம், ‌மியா‌ன்ம‌ர் கட‌ற்பகு‌தி‌யி‌ல் புகு‌ந்து‌வி‌ட்டாலோ அவ‌ர்களை அ‌ந்த‌ந்த நா‌ட்டு அரசு‌க‌ள், கட‌ற்படைக‌ள் சு‌ட்டு‌க் கொ‌‌ல்வ‌தி‌ல்லை.

த‌மிழக ‌மீனவ‌ர்களு‌க்கு ஆயுத‌ப் ப‌யி‌ற்‌சி‌க் கொடு‌த்து அவ‌ர்களு‌க்கு து‌ப்பா‌‌க்‌கிகளு‌ம் வழ‌ங்க‌ப்ப‌ட்டா‌ல் ஒ‌ழிய இ‌ப்‌பிர‌ச்சனை‌க்கு மு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க வேறுவ‌ழி‌யி‌ல்லை என்றார் அவர்.
கருத்துகள் | | Read More...

விடுதலைப்புலிகள் இயக்க தடை நீக்க வைகோ நாளை வாதாடுகிறார்


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்தியஅரசு தடை விதித்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலர் வைகோ நாளை நேரில் ஆஜராகி வாதாடுகிறார்.

இது குறித்து மதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

’’புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்ததை தில்லி தீர்ப்பாயம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தி்ல வழக்குத் தொடரப்பட்டது.

இதுதொடர்பான விசாரணை நாளை நடைபெறுகிறது. இதில், வைகோ நேரில் ஆஜராகி வாதாடுகிறார்.

பின்னர், மாலை 6 மணியளவில் புதுச்சேரி மாநிலத்தில், சிங்காரவேலர் சிலை அருகே நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் வைகோ சிறப்புரை ஆற்றுகிறார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

திண்டுக்கல் :பதற்றம்; பலத்த போலீஸ் பாதுகாப்பு

Penulis : Antony on ஞாயிறு, 23 ஜனவரி, 2011 | 6:03 AM

ஞாயிறு, 23 ஜனவரி, 2011


திண்டுக்கல் மலைக்கோட்டையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்து மக்கள் கட்சி சார்பில் மூன்றரை அடி உயர அபிராமி அம்மன் கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொல்லியல் துறை சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி அச்சிலையை அதிகாரிகள் அகற்றினர். அகற்றிய சிலையை மீண்டும் நிறுவக்கோரி இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக சிலையை பிரதிஷ்டை செய்த இந்து மக்கள் கட்சி மாவட்டத்தலைவர் தர்மர் உள்பட 5 பேரை திண்டுக்கல் தெற்கு போலீசார் கைது செய்தனர். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தர்மரை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் இன்று சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்போவதாக இந்து அமைப்புகள் அறிவித்தன.


இதனையடுத்து எஸ்பி தினகரன் அறிவுரையின்பேரில் மலைக்கோட்டை அடிவாரம், உச்சியில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மலைக்கோட்டை பகுதிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் | | Read More...

பொருளாதாரத்தைச் சீர்குலைக்க விடுதலைப் புலிகளும் மேற்கு நாடுகளும் முயற்சி


வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகள் வளம்மிக்க மேற்கு நாடுகளுடன் இணைந்து சிறிலங்காவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முயற்சிகளிலும், அரசாங்கத்தின் மீது போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ள போதும் வெளிநாடுகளில் உள்ள உறுப்பினர்கள் சிறிலங்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முனைகின்றனர்.

அத்துடன் வளம்மிக்க மேற்கு நாடுகளுடன் இணைந்து சிறிலங்கா அரசு மீது போர்க் குற்றச்சாட்டுகளை சுமத்த முனைகின்றனர்.

அவர்களின் பிரதான இலக்கு சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை தடுப்பதாகும்.

விடுதலைப் புலிகளின் இந்த முயற்சிகளைத் தோற்கடிக்கின்ற பொறுப்பு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள சிறிலங்காவின் துறைசார் வல்லுனர்களிடம் இருக்கிறது.

போர் முடிவடைந்து விட்டது. விடுதலைப் புலிகள் அனைத்து வழிகளிலும் தோற்கடிக்கப்பட்டு விட்டனர்.

அதுபோன்ற நெருக்கடியான நிலைக்கு நாம் இனிமேல் முகம் கொடுக்க வேண்டியதில்லை.

ஆனால், அதற்காக அச்சுறுத்தல் முற்றாக நீங்கி விட்டதாக கருதக் கூடாது.

விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் சிறிலங்காவுக்கு எதிராக அனைத்துலக ரீதியாக பாரிய போர் ஒன்றைத் தொடுத்துள்ளனர்.

இது பொருளாதாரப் போர்.

இதற்கு ஆட்டிலறிகளையோ குண்டுகளையோ, ஜெட் போர் விமானங்களையோ நாம் பயன்படுத்த முடியாது.

பொருளாதார ரீதியாக சிறிலங்காவைத் தனிமைப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை மற்றும் மேற்குலக நாடுகள், கனடா, அமெரிக்கா போன்றன முற்படுகின்றன.

சிறிலங்காவில் வெளிநாடுகள் முதலீடு செய்வதைக் கெடுக்கும் வகையிலும், சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தடுக்கும் வகையிலும், வெளிநாடுகளில் சிறிலங்கா சந்தை வாய்ப்புகள் பெறுவதைத் தடுக்கும் வகையிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் சிறிலங்கா மீதான போர்க்குற்ச்சாட்டுகளைச் சுமத்தும் செய்திகளை வெளியாகின்றன.

எமது நாட்டின் தலைவர்களையும் முப்படைகளின் தளபதிகளையும் அனைத்துலக போர்க்குற்றத் தீர்ப்பாயம் முன்பாக கொண்டு செல்வதற்கு சதித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

கனடாவின் ரொரன்ரோவில் புலிகள் ஆதரவு சக்திகள் பாரிய நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிதி எமது நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

நாம் இதற்கு எதிராகப் போராடத் தயாராக இருக்க வேண்டும்.

அதற்கு அனைத்து துறைசார் வல்லுனர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்“ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் | | Read More...

குச்சவெளி பிரதேசத்தில் பாரிய நிலவெடிப்பு சம்பவம்


திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் இன்று அதிகாலை நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி, கலப்பையாறு சுனாமி வீடமைப்பு திட்டத்துக்கு பின்னால் அமைந்துள்ள களப்பு பகுதிலேயே இச்சம்பவம் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

அப்பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தினை காணச்செல்லும் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதனால் குறித்த பிரதேசத்திற்குள் பொதுமக்கள் பிரவேசிக்காதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் திருகோணமலைக்குப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தினால் பிரதேச மக்கள் ஒருசிலர் நகரப் பகுதிகளில் உள்ள தங்கள் உறவினர்களது வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் | | Read More...

ஐரோப்பாவில் மிக மோசமான படுகொலை: 16 வருடங்களின் பின்னர் சந்தேகநபர் கைது

Penulis : Antony on வெள்ளி, 21 ஜனவரி, 2011 | 1:09 PM

வெள்ளி, 21 ஜனவரி, 2011

பொஸ்னியாவில் 1995 ஆம் ஆண்டுப் பகுதியில் சுமார் 8,000 முஸ்லிம்களின் கொலையுடன் சம்பந்தப்பட்டவராக கருதப்படும் முன்னாள் பொஸ்னிய சேர்பிய இராணுவ வீரர் ஒருவர் இஸ்ரேலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அலெக்ஸாண்டர் வெட்கோவிச் என்ற அந் நபரை தமது நாட்டுக்கு நாடுகடத்தும் படி பொஸ்னியா கேட்டுக்கொண்டுள்ளது.

பொஸ்னிய நகரான ஸ்ரெப்ரெனிகாவில் 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற இனஒழிப்பு நடவடிக்கையில் இவர் நேரடியாக தொடர்புபட்டிருந்ததாகவும் பல முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கொலைக்கு காரணமாக இருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குறித்த காலப்பகுதியில் 8 பேரைக் கொண்ட படையணியில் இவர் ஒருவராக இருந்துள்ளார்.

மேற்படி சம்பவமானது இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மிக மோசமான அழிவாகக் கருதப்படுகின்றது
கருத்துகள் | | Read More...

அனில் அம்பானிக்கு கொலை மிரட்டல்

தொழிலதிபர் அனில் அம்பானியின் இ - மெயில் முகவரிக்கு, ஒரு கொலை மிரட்டல் கடிதம் வந்தது.

இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து, ஜார்க்கண்ட் மாநிலம், தன்பத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (17) என்ற இளைஞரை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பெயரில், அனில் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரிந்தது.

இதுகுறித்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் | | Read More...

கப்பலில் கனடா சென்றவர்களில் 15 பேர் வெளியேற்றப்படுவர் - கனேடிய அதிகாரிகள் தகவல்

சன்சீ‘ கப்பல் மூலம் கடந்த ஓகஸ்ட் மாதம் கனடாவை சென்றடைந்தவர்களில் 15 பேர் போர்க்குற்றங்கள், தீவிரவாத செயல்கள் அல்லது ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கனேடிய அரசஅதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கனேடிய எல்லை சேவைகள் முகவரகத்தின பேச்சாளர் மெலிசா அன்டர்சன் தகவல் வெளிடுகையில்,

“ ‘சன் சீ‘ கப்பலில் வந்த 15 ஆண்களின் அடைக்கலக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் 14 பேர் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களிலும் தொடர்புபட்டுள்ளார்.

மற்றொருவர் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டுள்ளார்.“ என்று தெரிவித்தார்.

‘சன் சீ‘கப்பலில் கனடாவுக்குச் சென்ற 492 அகதிகளில் 307 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

136 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 12 பேர் பெண்களாவர்.

அதேவேளை இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள எல்லை சேவைகள் முகவரகத்தின் பெண் பேச்சாளரான சகிலா மன்சூர் கனேடியர்களின் பாதுகாப்பு குறித்து தமது அமைப்பு மிகவும் கவனமாக இருக்கும், அதற்கே முன்னுரிமை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளையில், ‘சன் சீ‘ கப்பல் மூலம் அகதிகளை கனடாவுக்கு அனுப்பி வைத்த சந்தேக நபர்களில் ஒருவரை தாய்லாந்து அதிகாரிகள் கைது செய்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நடேசன் ஜெயானந்தன் என்ற 48 வயதான ஈழத்தமிழரே தாய்லாந்து குடிவரவுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் மேலும் ஏழு பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பான் கென் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் கைது செய்யபட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 200 அகதிகளுடன் கப்பல் ஒன்றை கனடாவுக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட எட்டுப் பேர் மீதும் சட்டவிரோதமாக தாய்லாந்துக்குள் நுழைந்த குற்றசாட்டு அல்லது தாய்லாந்தில் மேலதிக காலம் தங்கியிருந்த குற்றச்சாட்டே சுமத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேவேளை, தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட நடேசன் ஜெயானந்தன் ‘சன் சீ‘ கப்பலை அனுப்பிய சந்தேக நபர்களில் ஒருவர் என்ற போதும் பிரதான ஒருங்கிணைப்பாளர் அவர் அல்ல என்று கனேடிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கருத்துகள் | | Read More...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா????????

Penulis : Antony on வியாழன், 20 ஜனவரி, 2011 | 8:43 AM

வியாழன், 20 ஜனவரி, 2011


விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது" என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்" என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள்.

இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர… உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்தஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள்.

பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற் கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா" அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணி களின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித் தது” என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தி னோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது.

ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்தார்.

அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப் பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன் "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் சென்றுகொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்" என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார் என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை.

கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும் போது தலைவர் வெளியே வருவார்" என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தப் பட்டுக்கொண்டார்கர்.

அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின் போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.

  • தலைவர் பிரபாகரன் உயிருடன்??? : இந்தியா ஊடாக கசியும் தகவல்கள்.



  • கருத்துகள் | | Read More...

    ஊமைப்பெண்ணை வல்லுறவுக்குட்படுத்திய கடற்படையின் கொடூரம்: திருகோணமலை


    வாய்பேச முடியாத ஊமைப் பெண்ணொருவர் திருகோணமலை மாவட்டத்தின் கிராமமொன்றில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    திருகோணமலையின் ரொட்டவெவ பிரதேசத்தில் அமைந்திருக்கும் எத்தாபெந்திவெவ எனும் கிராமத்தைச் சோ்ந்த ஊமைப்பெண்ணொருவரே கடற்படைச்சிப்பாய் ஒருவரால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

    வல்லுறவுக்குட்பட்ட பெண் தற்போது திருமலை அரசினர் பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறியப்படுகின்றது.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை கொடுத்த முறைப்பாட்டின் பே ரில் சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படைச்சிப்பாய் நேற்று ரொட்டவெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    வில்லன் கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் கபீர்

    Penulis : Antony on செவ்வாய், 18 ஜனவரி, 2011 | 6:00 AM

    செவ்வாய், 18 ஜனவரி, 2011


    இந்திய - ஹாலிவுட் நடிகரான கபீர் பேடி 'அரவான்' படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார்.
    சர்வதேச அளவில் பெரிதும் புகழ்பெற்ற முதல் இந்திய நடிகரான கபீர் பேடி, 'அரவான்' படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

    'அங்காடித் தெரு' படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கும் இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்க, ஆதி, பசுபதி, தன்ஷிகா, அர்ச்சனா கவி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

    பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்கும் இப்படத்தின் கதை 18ஆம் நூற்றாண்டு தமிழர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், காதல் ஆகியவற்றை சொல்லும் படமாக உருவாகிறது.

    இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இந்தி நடிகர் கபீர் பேடியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் கதையைக் கேட்ட கபீர் பேடி, கண்டிப்பாக நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார்.

    அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறுகிறது.
    கருத்துகள் | | Read More...

    விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வு: நால்வர் அடங்கிய குழு நாளை பூசா விஜயம்


    இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வது தொடர்பாக ஆராய்வதற்கென நால்வரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

    கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கான உறுப்பினர்களை நியமித்துள்ளார். தடுப்புக் காவலில் இருக்கும் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பான விடயங்களை அவர்கள் சிபாரிசு செய்யவுள்ளனர்.

    அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக நாளை அவர்கள் பூசா தடுப்பு முகாமிற்கு விஜயம் செய்யவுள்ளனர். அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் மற்றும் சந்தேக நபர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.

    பிரஸ்தாப நால்வர் குழுவின் தலைவராக பிரதி சட்டமா அதிபர் சவீந்திர பொ்ணான்டோ செயற்படவுள்ளார். சிரேஷ்ட அரச வழக்கறிஞர் குமாரத்னம், சேத்திய குணசேக்கர, தினால் இரத்நாயக்க ஆகியோர் அதன் ஏனைய உறுப்பினர்களாவர்.
    கருத்துகள் | | Read More...

    நல்லிணக்க ஆணைக்குழுவை புறக்கணிக்கும் சந்திரிக்கா: மஹிந்த மீதான கடுப்பை வெளிப்படுத்துகின்றாரா?


    கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அலட்சியம் செய்து வருவதாக ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
    சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் அது தொடர்பில் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் அவர் பதிலளிக்கவோ, சாட்சியமளிக்க முன்வரவோ தயாராக இல்லை என்பதாக சந்திரிக்காவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதைத் தடுப்பதற்காக தான் சர்வாதிகாரியாக நடந்து கொண்டிருந்தால் கூட நன்றாக இருக்கும் என்று அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்த சந்திரிக்கா, இலங்கை போன்ற பல்லின மக்கள் வாழும் நாட்டுக்கு மஹிந்த போன்றோர் ஜனாதிபதியாக இருப்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது என்று அவர் அண்மையில் கடுமையாகச் சாடியிருந்தார்.

    அவ்வாறான நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டதன் காரணமாகவே அதன் அழைப்பை அவர் புறக்கணித்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
    கருத்துகள் | | Read More...

    சிறிலங்கா கடற்படையால் சுடப்பட்ட விவகாரம் - மகிந்தவின் மறுப்பை இந்திய கடற்படை நிராகரிப்பு


    தமிழ்நாட்டு மீனவரை தமது கடற்படையினர் சுட்டுக் கொல்லவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள போதும் இந்தியக் கடற்படை அதிகாரிகள் அதை ஏற்கவில்லை.

    சிறிலங்கா கடற்படையினரே மீனவரை சுட்டுக் கொன்றதாக அவர்கள் கூறியுள்ளனர்.

    கடந்த புதன்கிழமை பாக்கு நிரிணையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் சிறிலங்கா கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

    அவரைத் தாம் சுடவில்லை என்று சிறிலங்கா கடற்படையினர் கூறியிருந்தனர்.

    பின்னர் கடந்த வெள்ளியன்று சிறிலங்கா அதிபரும் அதையே கூறியிருந்தார்.

    ஆனாலும் இந்திய கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினரே அவரைச் சுட்டதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

    இந்தியக் கடற்படையின் கிழக்குப் பிராந்திய நடவடிக்கைப் பணிப்பாளர் தாக்கரே இதுகுறித்து செய்தியாளர்களிடம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

    அதேவேளை சிறிலங்கா கடற்படைத் தளபதியாக கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க, முடிந்தால் இதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கட்டும் என்று சவால் விடுத்திருந்தார்.

    இந்தநிலையில் இந்திய கடலோரக் காவல்படை முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

    மண்டபம் கடலோரக் காவல்படையின் கட்டளை அதிகாரி கொமாண்டர் சைனி இதுகுறித்து தகவல் வெளியிட்டுகையில் “அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    சம்பவம் நடந்த இடம், நேரில் கண்ட சாட்சிகள், சுடப்பட சரியான நேரம், இதற்கு முன்னரும் பின்னருமாக நடந்த சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக இந்த விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.

    காவல்துறையினரின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

    அதன் முடிவுகளின் படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    படகில் இருந்து ஒரு கல்லும், ரவையும் மீட்கப்பட்டுள்ளன.

    இவையும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    கரையில் இருந்து 25 - 30 கடல்மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி சூட்டச் சம்பவம் இந்தியக் கடல் எல்லைக்குள் நடைபெறவில்லை.

    ஆரம்பகட்டத் தகவல்களின் படி மீனவர்கள் தொலைத்தொடர்புக் கருவியையோ அல்லது புவிநிலைகாட்டி போன்ற கருவிகளையோ கொண்டு சென்றிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    புலிகளின் Sea Scooter இல் உல்லாச உலா வந்த மஹிந்த ராஜபக்ஸ!


    சங்குப்பிட்டி பாலத்தைத் திறந்து வைத்த பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்றைய இரவை வட பகுதியில் கழிக்கத் தீர்மானித்தார்.

    அடுத்த நாள் காலை வழமைபோல் அதிகாலையிலேயே விழித்துக் கொண்ட ஜனாதிபதி காங்கேசன்துறை கடற்கரையில் தனது வழமையான உடற் பயிற்சிகளை மேற்கொண்டார்.

    பின் யுத்தத்தின் போது கடற்படையினரால் கைப்பற்ற்பட்ட புலிகளின் sea scooter இல் கடலிலும் ஒரு வலம் வந்தார்.

    கடும் கொந்தளிப்பு மிக்க கடல் அலைகளின் மத்தியில் ஜனாதிபதி கடலில் sea scooter மூலம் வலம் வருவதைப் படத்தில் காணலாம்.
    கருத்துகள் | | Read More...

    உறவுக்கு கை கொடுக்கும் யாழ்.மக்கள்

    Penulis : Antony on வெள்ளி, 14 ஜனவரி, 2011 | 3:12 PM

    வெள்ளி, 14 ஜனவரி, 2011


    வெள்ளத்தால் பாதிப்படைந்த கிழக்கு மாகாண மக்களுக்காக யாழ்ப்பாண செயலக ஊழியர்களினால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களைக் கொண்ட தொகுதி ஒன்று இன்று கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    யாழ்ப்பாண செயலக ஊழியர்களின் ஒரு நாள் வேதனமான சுமார் 16 லட்சம் ரூபா நிதியின் மூலம் பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களே அரச அதிபர் இமேல்டா சுகுமாரின் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

    இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று மாலை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
    கருத்துகள் | | Read More...

    தென்னாப்பிரிக்கா 135 ஓட்டங்களால் அபார வெற்றி

    Penulis : Antony on வியாழன், 13 ஜனவரி, 2011 | 11:20 AM

    வியாழன், 13 ஜனவரி, 2011

    இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 135 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

    டர்பனில் இரவு பகல் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 289 ஓட்டங்களை பெற்றது.

    துடுப்பாட்டத்தில் வில்லியர்ஸ் 76 ஓட்டங்களையும், டுமினி 73 ஓட்டங்களையும், அமலா 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

    இந்திய அணியின் பந்து வீச்சில் சகீர் கான், பட்டேல் மற்றும் சர்மா ஆகியோர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர்.

    290 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 154 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் ஒரு ஓட்டத்துடனும், டெண்டுல்கர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லி 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சர்மா 11 ஓட்டங்களுடனும், யுவராஜ் சிங் 2 ஓட்டங்களுடனும், டோனி 25 ஓட்டங்களுடனும், ரெய்னா 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா பந்து வீச்சில் லோன்வபோ சொட்சோபே 4 விக்கட்டுகளை அதிரடியாக கைப்பற்றினார்.

    போட்டியின் ஆட்டநாயகனாக லோன்வபோ சொட்சோபே தெரிவுசெய்யப்பட்டதோடு, 5 தொடர் கொண்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது.

    அடுத்த ஒருநாள் போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதி ஜொகனஸ்பேர்கில் நடைபெற உள்ளது.
    கருத்துகள் | | Read More...

    நிதியுதவி செய்த :நடிகை சினேகா

    போலியோ ஒழிப்புக்காக நிதி திரட்டும் ரோட்டரி கிளப்பின் பாண்டிச்சேரி மாவட்ட கருத்தரங்கம் எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

    இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போலியோவை ஒழிக்க நிதியுதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார் நடிகை சினேகா.உலகமெங்கும் போலியோ ஒழிப்பு முழுமையடைந்தாலும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இந்தியா மற்றும் நைஜீரியாவில் மட்டும் இன்னும் முழுமையடையவில்லை.

    இந்த நாடுகளில் போலியோவை ஒழிக்க ரூ 825 கோடியைத் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது ரோட்டரி கிளப். இதன் ஒரு பகுதியாக பாண்டிச்சேரி மாவட்ட ரோட்டரி கிளப் சார்பில் நிதி திரட்டும் நிகழ்ச்சி சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அரங்கில் நடந்தது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகை சினேகா. விழாவில் பேசிய சினேகா "போலியோ ஒழிப்பு என்பது இன்றைக்கு மிக முக்கியமான ஒரு விஷயம். என்னுடைய அப்பாவும் ஒரு ரொட்டேரியன்தான். அந்த வகையில் இந்த விழாவுக்கு வந்ததை பெருமையாகக் கருதுகிறேன். போலியோ ஒழிப்பு என்ற நோக்கத்துக்கு ஒவ்வொருவரும் தம்மாலான தொகையை நன்கொடையாக வழங்க வேண்டும்.." என்றார்.

    இதில் தானே முதல் நபராக ரூ 15000 கொடுத்து போலியோ ஒழிப்புக்கான நிதி திரட்டலைத் தொடங்கிவைத்தார் சினேகா.மேலும் "போலியோ ஒழிப்பு போன்ற நல்ல நோக்கங்களுக்காக பாடுபடும் ரோட்டரி கிளப்பில் என்னையும் ஒரு உறுப்பினராக இன்று முதல் (ஜனவரி) இணைத்துக் கொள்கிறேன்" என்று அறிவித்தார் சினேகா.

    ரூ 5000-க்கும் அதிகமாக நன்கொடை வழங்கியவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு சினேகாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பல்வேறு ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சினேகாவிடம் நன்கொடை வழங்கினர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ரொட்டேரியன் செல்வநாதன் மற்றும் ரொட்டேரியன் சக்கரபாணி ஆகியோர் செய்திருந்தனர்.


    கருத்துகள் | | Read More...

    தமிழ் அரசியல் கட்சிகளும் கடத்தல்களில் ஈடுபட்டன

    கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல், காணாமல் போதல் மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களுக்கு அரசாங்கத்தை மட்டும் குறைகூற முடியாது எனவும், இந்தச் சம்பவங்களுடன் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
    அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக் கொண்ட தமிழ் அரசியல் கட்சிகள் கடத்தல்களில் ஈடுபட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    போரில் வெற்றியீட்டுவதற்கு இந்த தமிழ் அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு பாரியளவு ஆதரவினை வழங்கியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

    தற்போது வெள்ளை வான் கடத்தல் மற்றும் கப்பம் கோரல் போன்ற பிரச்சினைகள் கிடையாது எனவும், அரசாங்கத்துடன் இணங்கி செயற்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு தமக்கு வாக்களித்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே தமது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

    அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் வடக்கில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளான்று (2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் திகதி) நடைபெற்ற விருந்துபசார நிகழ்வுகளில் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

    இந்த விருந்துபசார நிகழ்வுகளின்போது தலைவரின் பூரண ஆசீர்வாதத்துடன், ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக தாம் வாக்குறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

    இவ்வாறான பின்னணியில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த குற்றத்திற்காக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்துவது கேலிக்கூத்தாக அமைந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
    கருத்துகள் | | Read More...

    மானிப்பாய் பகுதியில் வயோதிபப் பெண்மணியின் சடலம் மீட்பு

    யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள மிகவும் பாழடைந்த கிணற்றிலிருந்து இன்று காலை மணியளவில் பெண் ஒருவரின் சடலம் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
    சுதுமலை தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த சின்னராஜ நாகரத்தினம் (வயது 76 ) என்ற வயோதிபப் பெண்மணியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

    இவர் இன்று அதிகாலை எழுந்து வீட்டிற்கு வெளியே சென்றபோது தவறி கிணற்றில் வீழ்ந்து இறந்துள்ளதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டனர்.
    கருத்துகள் | | Read More...

    தென் தமிழீழ மக்களிற்கு உதவ முன்வாருங்கள் - பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

    Penulis : Antony on புதன், 12 ஜனவரி, 2011 | 2:29 PM

    புதன், 12 ஜனவரி, 2011


    தென் தமிழீழத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
    இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அவசர அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

    தாயகத்தில் தென் தமிழீழத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகள், பொது நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பாதுகாப்பான இடங்கள் நோக்கி தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

    இவர்களுக்கு மிக அத்தியாவசியமாக அவசர உணவுப்பொருட்கள்/ உலர் உணவுப்பொருட்கள் குழந்தைகளுக்குரிய பால்மா வகைகள், மற்றும் பாலுட்டும் உபகரணங்கள் பெண்களுக்குரிய மிக அத்திய அவசியப்பொருட்கள் தேவைப்படுகின்றன.

    தொடர்ச்சியான மழையினால் தென் தமிழீழத்தில் பல பகுதிகளில் மழை வெள்ளம் வடிந்தோடாமல் உள்ளதால் அப் பிரதேசங்கள் வெள்ளக்காடாக உள்ளன.

    இதனால் கடைகள், சந்தைகள், பாடசாலைகள் மற்றும் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

    மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தியாக்குவதற்கே சிறு வள்ளங்களை பாவிக்கவேண்டி உள்ளது.

    இம் மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு புலத்தில் உள்ள அனைத்து மக்களும் முன் வாருங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.

    இவர்களுக்கு தாயகத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள அமைப்புக்கள் உதவி செய்துவருகின்றன.

    உதவிகள் செய்ய விரும்புகின்றவர்கள் எம்முடன் தொடர்புகள் மேற்கொள்ளும் இடத்து அவர்களின் உதவி தென் தமிழீழத்தில் கடும் மழையினால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்படும்.

    "தென் தமிழீழ மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுங்கள்"

    தொடர்புகளுக்கு.
    பிரித்தானிய தமிழர் பேரவை
    அலுவலகம்: 020 8808 0465
    074 0475 9029
    மின்னஞ்சல்: btfneedhelp@gmail.com




    கருத்துகள் | | Read More...

    பொதுமக்கள் திட்டியதால் ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை

    Penulis : Antony on செவ்வாய், 11 ஜனவரி, 2011 | 3:18 PM

    செவ்வாய், 11 ஜனவரி, 2011


    பொதுமக்கள் திட்டியதால் ஆத்திரப்பட்டு பெண் ஊராட்சி மன்றத்தலைவர் தற்கொலை செய்துகொண்டார்.

    விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மன்றத்தலைவர் செல்வக்கன்னி. இவரது கனவர் ராமச்சந்திரன்.

    ஊரில் நடக்கும் குறைகளை அடிக்கடி மக்கள் இவரிடம் முறையிடுவதுண்டு. அப்படித்தான் இன்றும் முறையிட்டுள்ளார்கள்.

    தண்ணீர் பிரச்சனை, மோட்டார் பிரச்சனை என்று சத்தம் போட்டு தங்களது குறைகளை ஊர்ப்பொதுமக்கள் சொல்லியுள்ளனர்.

    ஊரார் திட்டியதை தாங்கிக்கொள்ளமுடியாத செல்வக்கன்னி இன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    கருத்துகள் | | Read More...

    உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை யாழ்.அலுவலகத்தில் சரணடைந்த நபர்

    யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் ஒருவர் நேற்று சரணடைந்துள்ளார்.

    32 வயதுடைய குடும்பஸ்தரான மேற்படி நபர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி நேற்று மனித உரிமை யாழ்.அலுவலகத்தில் சரணடைந்துள்ளார். மனித உரிமை ஆணைக்குழு தற்போது இவரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
    கருத்துகள் | | Read More...

    2ம் இணைப்பு சுவிஸில் புலிகளின் முக்கியஸ்தர்கள் கைது


    தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஷ் கிளையின் முக்கிய செயற்பாட்டாளர்களான ரகுபதி,குலம்,ஆல்பேர்ட்,அப்துல்லா,மற்றும் சிலர் சுவிஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுவிஷ் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது.


    Basel-Stadt, Bern, Freiburg, Genf, Graubünden, Luzern, Solothurn, St. Gallen, Waadt und Zürich statt,போன்ற 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் சுவிஷ் பொலீசாரால் நடத்தப்பட்ட தேடுதலின் போதே குறிப்பிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமான சிலர் மட்டுமே இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் விசாரணையின் பின்பு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் நாம் அறிகிறோம்.
    தமிழீழ விடுதலை வேட்கையை வென்றெடுப்பதற்காக அரசியல் வழியில் போராட ஆரம்பித்துள்ள புலம்பெயர் மக்களை திசை திருப்புவதற்காகவும்,தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களை நெஞ்சில் இருத்தி தமிழீழ தனி நாட்டை மீட்டெடுப்பதற்காகவும் புலம்பெயர் தேசத்தில் அயராது பாடுபட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கும் செயற்பாட்டாளர்களை கைது செய்வதன் மூலம் தமிழீழ தனிநாட்டிற்கான அரசியல் போராட்டத்தையும் நசுக்கி விடலாம் என்று உலகநாடுகள் கருதுவதை கடந்த சில மாதங்களாக ஜரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவரும் மனிதாவிமான செயற்பாட்டாளர்களின் கைதுகள் நிரூபித்துள்ளன.

    உறுதிப்படுத்தப்பட்ட விரிவான செய்தியை விரைவில் எதிர்பாருங்கள்................



  • தொடர்பு பட்ட செய்தி

  • கருத்துகள் | | Read More...

    ஜெனீவா மாநாட்டில் இலங்கைப் பிரச்சினை எழுப்பப்படும்

    Penulis : Antony on திங்கள், 10 ஜனவரி, 2011 | 8:26 AM

    திங்கள், 10 ஜனவரி, 2011

    ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் விடயமும் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஏற்கனவே கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் முறியடிக்கப்பட்டிருந்தது.

    எனினும் இந்த தடவை இலங்கையின் மனித உரிமைகள் மீறல் விடயங்களும் போர்க்குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் அமைத்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    கடந்த முறையை போலன்றி இந்த தடவை, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, அழுத்தங்களை பிரயோகிக்கலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
    கருத்துகள் | | Read More...

    எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய போர் விமானத்தைத் தயாரித்தது சீனா

    ஸ்டெல்த் எனப்படும் ரேடார் உள்ளிட்ட எந்த கழுகுப் பார்வையிலும் சிக்காமல் பறக்கக் கூடிய அதி நவீன போர்விமானத்தை உருவாக்கியுள்ளதாம் சீனா. இந்த விமானம் குறித்த படங்கள் சீன இணையதளங்களில் வெளியாகியுள்ளது. இது தற்போது சோதனைக் கட்டத்திற்குத் தயாராகி வருவதாகவும் அச்செய்தி கூறுகிறது. stealth எனப்படும் யார் கண்ணிலும் (ரேடார், சோனார், அகச்சிவப்பு கதிர்) படாமல் செயல்படும் தொழில்நுட்பம், 2வது உலகப் போரின்போதுதான் முதல் முறையாக நடைமுறைக்கு வந்தது. இத்தகைய தொழில்நுட்பத்தில் இயங்கும் போர் விமானங்களை எதிரிகளால் கண்டுபிடிக்கவே முடியாது. இதனால் இவற்றுக்கு மாயாவி விமானங்கள் என்றும் செல்லப் பெயர் உண்டு. இத்தகைய விமானத்தைத்தான் இப்போது சீனா உருவாக்கியுள்ளதாம். இந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் தற்போது வெளியாகியுள்ள படங்களைப் பார்க்கும்போது அது சோதனை ரீதியான விமானமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள முதல் பக்கச் செய்தியில், ஜே20 என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த போர் விமானம், சோதனைக் கட்டத்திற்கு முந்தைய கட்டமான ஹை ஸ்பீட் டாக்சி டெஸ்ட் நிலையில் இருப்பதாக தெரிகிறது. இந்த போர் விமானத் தயாரிப்பு உண்மையாக இருக்குமானால், சீனாவின் அதிவேக வளர்ச்சியை இது நிரூபிப்பதாக அமையு்ம். ஏற்கனவே விண்வெளித்துறையிலும், ரயில்வே துறையிலும் மிகப் பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது சீனா. இந்த நிலையில் மாயாவி போர்விமானங்களை அது வெற்றிகரமாக தயாரித்து விட்டால் மிகப் பெரிய வல்லரசாக அது உயரும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இப்போதைக்கு ஒரே ஒரு மாயாவி போர்விமானம்தான் செயல்பாட்டில் உள்ளது. அது அமெரிக்காவின் எப்-22 போர் விமானமாகும். அந்த விமானத்துக்குப் போட்டியாக சீனாவின் ஜே20 உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் அதிகரித்துள்ளது. ஆனால் இதை மறுக்கிறார் சீன பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர். இதுகுறித்து சீனாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக நிபுணர் லி டகுவாங் கூறுகையில், இந்த செய்திகள் வெறும் யூகச் செய்திகளே. எப்22 விமானத்தைப் பொறுத்தவரை அது ஒரு ஆக்கிரமிப்பு போர் விமானம். உலகத்தை தனது கையில் வைத்துக் கொள்ள நினைக்கும் ஒரு சக்தியின் கையில் இருக்கும் அபாயகரமான ஆயுதம். ஆக்கிரமிப்பு மனோபாவத்தில் வளர்ந்தது அமெரிக்காவின் ஆயுத பலம். ஆனால் சீனாவின் ராணுவ வளர்ச்சி என்பது இயற்கையானது, சுய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொண்டது. எனவே எங்களுக்கு மிகப் பெரிய அளவிலான போர் விமானங்கள் தேவை இல்லை என்கிறார் அவர். இவர் இப்படிச் சொன்னாலும் கூட ஸ்டெல்த் போர் விமானத் தயாரிப்பில் சீனா படு மும்முரமாக இருப்பது உண்மைதான் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பல சீன இணையதளங்களில் ஜே20 போர் விமானம் ரன்வேயில் செல்வது போன்றும், அதன் முன்பக்கத்தில் பாராசூட்கள் விரிவது போன்றும் உள்ள செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. சீனாவின் இந்த மாயாவி விமானத்தால் அமெரிக்கா பயப்படுகிறதோ இல்லையோ நிச்சயம் இந்தியா கவனமுடன் இருந்தாக வேண்டும் என்பதில் சந்தேகமில்லை
    கருத்துகள் | | Read More...

    புலிகளினால் முதல் வெள்ளோட்டம் விடப்படும் உலங்குவானூர்தி

    கருத்துகள் | | Read More...

    மாணவர்களுக்கு கட்டாய ராணுவப் பயிற்சி


    இலங்கை பல்கலைக்கழக மாணவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாட்டின் உயர்கல்வி அமைச்சர் திசநாயகா அறிவித்துள்ளார். இலங்கையில் ராணுவத்தில் சிங்களர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளார். ராணுவத்தில் தமிழர்களுக்கு அனுமதி இல்லை. இதுபோன்று பல்வேறு துறைகளிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு 2-ந்தர குடிமக்களாக நடத்தப்பட்டதால்தான் அங்கு பிரச்சினை உருவானது. இந்த நிலையில் இலங்கையில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் திசநாயகா அறிவித்துள்ளார். பல்கலைக் கழகத்தில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று 3 வாரம் பயிற்சி அளிக்கப்படும். இது மாணவர்களின் போர்த் திறமையை அபிவிருத்தி செய்யும் பயிற்சியாக கருத வேண்டும். ராணுவப் பயிற்சியாகக் கருதக்கூடாது,
    கருத்துகள் | | Read More...

    வெள்ளத்தில் மயிரிழையில் உயிர் தப்பினார் அரியநேத்திரன் எம்.பி.

    Penulis : Antony on ஞாயிறு, 9 ஜனவரி, 2011 | 4:43 PM

    ஞாயிறு, 9 ஜனவரி, 2011

    மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்துக்கு வெள்ள நிலைமைகளை பார்வையிட பட்டிருப்பு ஊடாக சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படவிருந்தவேளையில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
    இந்தச்சம்பவம் பற்றி தெரியவருவதாகவது

    இன்று காலை மட்டக்களப்பில் இருந்து மோட்டார்சைக்கிளில் களுவாஞ்சிகுடிக்கு வந்த அவர் அங்கு தனது நண்பர் ஒருவரின் பிக்கப் வாகனத்தை பெற்றுக்கொண்டு படுவான்கரைக்கு சென்றுள்ளார்.

    அங்கு வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட வெள்ளத்தினால் மூழ்கியுள்ள வேற்றுச்சேனை மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் பணிக்கு அங்கு வந்திருந்த களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி மாரப்பனவுடன் இணைந்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

    அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை பழுகாமத்தில் உள்ள பாடசாலைகளில் தங்கவைத்துவிட்டு படுவான்கரை பிரசேத்க்குட்பட்ட அரசடித்தீவு முதலைக்குடா வில்லுக்குளம்போன்ற பகுதிகளுக்குச்சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் பார்வையிட்டுள்ளார்.

    அதனைத்தொடர்ந்து பட்டிப்பளை பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு நிலைமைகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராசாவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியுள்ளார்.

    படுவான்கரையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நீர் ஆறு அடிக்கும் மேல் பாய்ந்துசெல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

    ஆதன் பின்னர் அங்கிருந்து பழுகாமம் வைத்தியசாலையில் இருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக அழைத்துச்செல்லவிருந்த கர்ப்பிணிப்பெண்னையும் ஏற்றிக்கொண்டு பிக்கப் வாகனத்தில் பின்புறத்தில் நின்றவாறு பாராளுமன்ற உறுப்பினர் வந்துள்ளார்.

    இந்த நிலையில் தாங்கள் செல்லும்போது குறைவான தண்ணீர் ஓட்டத்தில் இருந்த பட்டிருப்பு கோஸ்வையில் தாங்கள் திரும்பிவரும்போது தண்ணீர் அதிகமாக இருந்ததாகவும் சுமார் ஆறு அடிக்கு தண்ணீர் ஓட்டம் இருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

    இதன்போது தண்ணீருக்குள் தமது வாகனம் வரும்போது அவ்வாகனம் ஆற்றை நோக்கு இழுத்துச்செல்லப்படுவதை அவதானிக்ககூடியதாகவிருந்தது.

    எனினும் சாரதியின் சமயோசிதம் காரணமாக அவர் அந்த வாகனத்தை சிறப்பான முறையில் செலுத்தி எம்மைக்காப்பாற்றினார் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

    இதனைத்தொடர்ந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட எருவில் ஓந்தாச்சிமடம் கோட்டைக்கல்லாறுகளுதாவளைகுறுக்கள்மடம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் அங்கு வெள்ள நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.






    கருத்துகள் | | Read More...
     
    Company Info | Contact Us | Privacy policy | Term of use | Widget | Advertise with Us | Site map
    Copyright © 2011. welvom . All Rights Reserved.
    Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger